இத்தாலி நாட்டு தயாரிப்பு பிஸ்டலுடன் சந்தேக நபர் ஒருவரை கொழும்பு, கிரான்ட் பாஸில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆயுத விற்பனை நடைபெறுவதாக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.
மொடல 85 ஒடோநெல் ரகத்தைச் சேர்ந்த இத்தாலி நாட்டு தயாரிப் பான 8 மி.மீ. பிஸ்டல் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.