வட மாகாணத்தில் இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு இன்னும் சில வாரங்களில் அப்பிரதேசங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான பயிற்சியளிக்கும் நிலையம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சேமநல அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கேகாலை மாவட்ட பயிற்சி நிலையத்தை 27ம் திகதி திறந்து வைத்துப் பேசும் பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார். யாழ்ப்பாணத்தில் முதலாவது பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்படுவதுடன் அதனை அடுத்து மன்னார், கிளிநொச்சி ஆகிய இடங்களிலும் இவ்வாறான பயிற்சி நிலையங்களை அமைச்சு ஏற்படுத்தும்.
Thakshan
கிளிநொச்சியில யாருக்கடாப்பா ஒபிஸ் திறக்கிறான்கள்? ஆமிக்காரருக்காயிருக்குமோ??