கிழக்கில் இடம் பெயர்ந்து நலன்புரிக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் அனைவரையும் அவர்களது சொந்த இடங்களில் அரசாங்கம் மீள்குடியர்த்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 35,000க்கும் அதிகமான குடும்பங்கள் 112 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் படிப்படியாக மீள்குடியர்த்தப்பட்டனர். இவர்களுள் இறுதியாக கொக்குவில் நலன்புரி கிராமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 91 குடும்பங்கள் நேற்று அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.
சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.