ஐக்கிய நாடுகள் சபை தீர்மானப்படி ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி உலக அகிம்சை தினம் அனுட்டிக்கப்படுகின்றது. இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி அடிகளின் பிறந்த தினமே அக்டோபர் 2ம் திகதியாகும்.
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியை உலக அகிம்சை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று கோரி இந்தியாவின் சார்பில் ஜூன் 15, 2007 இல் ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அத்தீர்மானம் பொதுச் சபையில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 2ம் தேதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.
காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை தினமாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தை சர்வதேச மட்டத்தில் கொண்டாட வேண்டுமென எல்லா அரசாங்கங்களையும், ஐ.நா. விற்கு உட்பட்ட கழகங்களையும், அரசு சாரா நிறுவனங்களையும், தனி நபர்களையும் ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளதுடன் இத்தினத்தை பாடத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்ச்சித் திட்டங்கள் மூலமாகவும் அனுசரிக்குமாறும் கோரியுள்ளது.
வன்முறையாலும், போராலும் மட்டுமே உரிமைகளை பெற முடியும் என உலகம் நினைத்திருந்த கட்டத்தில் அது பிழையானது என நிரூபித்த காந்திஜி உலகத்தையே கைகளுக்குள் அடைக்க நினைத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆயுதமெடுக்காமல் நாட்டை விட்டு விரட்டிக் காட்டினார். இவரின் நடைமுறைகளால் கவரப்பட்ட மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அகிம்சை வழியிலேயே சென்று வெற்றி பெற்றுக் காட்டினர். ‘அகிம்சை என்பது வலிமையற்றவர்களின் ஆயுதமல்ல, வலிமையற்றவர்கள் வன்முறையை தான் தேர்வு செய்வார்கள் வலிமையானவர்களால் மட்டுமே அகிம்சையின் பாதையில் நடக்க முடியும். எதிரியை எழ முடியாமல் அடித்து வீழ்த்த வலிமை தேவையில்லை எந்த தாக்குதலையும் சமாளித்து எழுந்து நிற்கவே வலிமை தேவை” என்று காந்திஜி கூறிய வாசகங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியதொரு கருத்தே.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கமைய முதலாவது அகிம்சை தினம் 2007 அக்டோபர் 2ம் திகதி கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின் போது ‘சகிப்புத்தன்மை இன்மையாலும், மோதல்களாலும் உலகம் முழுவதும் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், எண்ணற்ற மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திர இந்தியா பிறப்பதற்குக் காரணமான மாகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைகளை மீண்டும் நாம் சிந்திக்க வேண்டியது அவசியமானதாகும்”. என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்திருந்தார்.
அந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் ”அதிகரித்துவரும், கலாசாரக் கலப்பால் ஏற்படும் பதற்றத்தையும், சகிப்புத்தன்மை இன்மையால் ஏற்படும் மோதல்களையும் உலகம் உணர்ந்து வருகிறது. இதனால் தீவிரவாதத்தின் ஆதிக்கமும், வன்முறையைத் தூண்டும் கருத்துக்களும் பலமடைந்து வருகின்றன. மியான்மரில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைத் தாக்குதல்களைக் குறிப்பிட்ட அவர்: மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்றி அகிம்சை முறையில் ஆயுதங்களைத் தொடாமல் போராடுபவர்களின் மீது ஆயுதப் படைகள் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். உலகம் முழுவதும் சுதந்திரம் மற்றும் குடியுரிமைகளுக்காக மிகப்பெரிய இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் மகாத்மா காந்தி. அவர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய வாழ்வில் அகிம்சையைப் பின்பற்றினார், அதன் மூலம் எண்ணிலடங்கா மனிதர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தார்.” என்றார்.
அக்கால கட்டத்தில் காந்திஜியின் அகிம்சை வழி போராட்டங்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியிலும் கூட பலத்த எதிர்ப்பு எழுந்தது. எனினும் கடைசிவரை தனது கொள்கையிலிருந்து அவர் விலகவேயில்லை. அவரின் மன அழுத்தத்தினால் அகிம்சை முறையில், எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்ய முடியும் என்பதை உணர்த்தினார். இன்றைய சூழலிலும் காந்திஜியின் அகிம்சை கொள்கைகள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளில் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருவதால், காந்தியக் கொள்கைகளை பின்பற்றி அகிம்சை கல்வியை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்ப்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி ‘குஜராத்தி”. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இத்தம்பதியினர் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.
தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு ‘பாரிஸ்டர் (barrister)” எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்று தன் படிப்பை வெற்றிகரமாக முடித்த பின் தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்பு ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் அவ்வேலையும் பறிபோனது. அச்சமயத்தில் தென்னாபிரிக்காவில் தன் தகுகிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி அங்கு பயணமானார்.
அச்சமயம் தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாபிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. தென்னாபிரிக்காவில் இருந்த காலத்தில் காந்தி ஆங்கிலேயரின் நிறவெறி அடாவடித்தனத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்.
தனது ஒப்பந்தக்காலம் (1906) முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவை நடவடிக்கை எடுப்பது பற்றி அறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, ‘தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லை” எனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு அத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
1906ஆம் ஆண்டு ‘ஜோகார்னஸ்பேக்” நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாக்கிரகம் எனப்படும் அறவழிப் போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். ஆரம்பத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாபிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார். தாயகத்தில் மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தென்னாபிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். இதனால் கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தலைமையை ஏற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். சத்தியாகிரக வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
அகிம்சைப் போராட்டத்தின் பலம் எத்தகையது என்பதற்கான ஒரு உதாரணமாக இந்தியாவில் 1930 இல் காந்தி மேற்கொண்ட ‘உப்பு பேரணி” காணப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட “உப்பு சட்டங்களையும்” பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் சீர்குலைக்கப்போவதாக காந்தி கூறியபோது, அவரது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூட சந்தேகப்பட்டனர். ஆனால், தான் தீர்மானித்தபடி, கடலுக்குள் 247 மைல்கள் தூரம் காந்தி பவனி சென்றார். காந்தியின் இந்த செய்கை மக்களின் மனதை உலுக்கியது. இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டதுடன் உப்புச் சட்டத்திற்கெதிராக எதிர்ப்பு செய்தனர். இது பிரிட்டிஷ் அரசாங்கத்தை அதிரவைத்தது. 1942ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு!” என்ற போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.
இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. 1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் காந்தி நாதுராம் கோட்ஸே என்பவனால் புது டில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தியின் அகிம்சை போராட்டம் நான்கு அடிப்படைகளைக் கொண்டன. அவை சத்தியாக்கிரகம் (ஆத்ம வலிமை), சர்வோதயா (யாவர்க்கும் நன்மை), சுவராஜ் (சுய ஆளுகை) மற்றும் சுவதேஷி (இது எனது நாட்டுப் பொருள்) என்பவையே அவை.
இங்கு சத்தியாக்கிரகம் பின்வரும் கருத்துக்களைப் புலப்படுத்துவதாக இருக்கும்.
1. இது தைரியசாலிகளின் ஆயுதம். ஒருபோதும் கோழைகளின் ஆயுதம் அல்ல.
2. எத்தகைய துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் ஒருபோதும் பழிவாங்க முயலாதே.
3. எதிரியையும் ஆதரி. ஆனால், தீய செயலுக்கு வெறுப்பை காட்டிக்கொள்.
4. எதிரியை தோற்கடிக்காமல் அல்லது புண்படுத்தாமல், காயப்படுத்தாமல் அல்லது இழிவுபடுத்தாமல், அன்பினூடாக எதிரியை வெற்றி கொள்வதன் மூலம் முரண்பாட்டை தீர்ப்பதில் உறுதியாக இரு.
5. துன்பத்தை ஏற்படுத்தாமல் துன்பத்தை ஏற்றுக்கொள்;.
என்பவையே அவை.
சத்தியாக்கிரகத்தின் இந்த அம்சங்கள் இன்றைய யதார்த்தத்திற்கு முரண்பட்டவை என்று நோக்கப்படக் கூடும். ஆனால், இன்று உலகிலே அநேகமான முரண்பாடுகள் இதன் அடிப்படையில் தீர்க்கப்பட்டிருக்கிறது. 2000 ஆம் ஆண்டு சேர்பியாவில் ஒட்போர் புரட்சி மூலம் மிலோசெவிக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், “வன்முறையற்ற முரண்பாட்டுக்கான சர்வதேச நிலையமானது, அகிம்சை செயற்பாடுகள் மற்றும் உபாயங்களின் முன்னேற்றத்திற்கான நிலையம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்ததை இங்கு குறிப்பிட வேண்டும். மேலும், ஜோர்ஜியா, உக்கிரைன், லெபனான்இ கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் அகிம்சைப் பாணியிலான வன்முறையற்ற மாபெரும் வெகுஜன இயக்கங்கள் ஜனநாயக மலர்ச்சிக்கும் அமைதிக்கும் வித்திட்டிருக்கின்றன.
1999 இல் சான்பிரான்ஸிஸ்கோவை அடிப்படையாகக் கொண்ட சிவில் உரிமையாளரும் சமாதான செயற்பாட்டாளருமான டேவிட் ஹார்ட்சோ மற்றும் சென் போல் சமூக அமைப்பாளர் மெல் டுன்கன் ஆகியோர் ஹேக் நகரில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டு பின்னர் மேற்கொண்ட முயற்சியால், உலகம் பூராவும் தொண்டர்களை ஏற்படுத்தி, ஒரு அஹிம்சை வழித் தலையீட்டு படைக்கான தொடக்கத்தை இட்டனர். வன்முறையில் இருந்து உலகத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். ஒரு சமாதான இராணுவத்தை’ (சாந்தி சேவா) ஸ்தாபிக்கும் மகாத்மா காந்தியின் கனவின் நிறைவேற்ற ஆரம்பம் என்று இதனைக் கொள்ளலாம்.
காந்தியின் அகிம்சை போராட்டத்தின் அடுத்த அம்சம் சர்வோதய’ ஆகும். பெரும்பான்மையினருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் நன்மை பெறுதலை இது குறிக்கிறது. இதனை மனதிற்கொண்டு தான், வினோபா பாவே மூலம் மகாத்மா காந்தி சர்வோதய இயக்கத்தை’ ஸ்தாபித்தார். தொண்டர் படைகளை அமைத்த காந்தி, ஆச்சிரமங்களில் இருந்து அவர்களை கிராமங்களுக்கு அனுப்பி சமூக சேவையில் ஈடுபடுத்தினார். வினோபா பாவே காந்தியின் வழிகாட்டியால் அமைத்த ‘சர்வோதய இயக்கம்” இன்றும் இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் தொடர்கிறது. இந்தியா முழுவதிலும் ஆச்சிரமங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, கிராமப்பகுதிகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் குடிமனை வசதிகள் வழங்கப்படுகின்றன.
‘சுவராஜ்” என்பதற்கு ஹிந்தி மொழியில் ‘சுதந்திரம்” என்று பொருள். ஆனால், காந்தியைப் பொறுத்தவரையில் ‘சுவராஜ்” கோட்பாடானது, சுதந்திரம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை விடவும் கூடுதல் அர்த்தத்தை கொடுக்கிறது. “எம்மை நாமே ஆளுவதற்கு கற்றுக் கொள்ளுதல் சுவராஜ் ஆகும். சுவராஜ் (சுதந்திரம்) என்ற எனது கனவானது. ஒரு ஏழை மனிதனின் சுவராஜை குறிக்கிறது” என்று காந்தி கூறினார். அதனால், காந்தி கிராமிய பொருளாதாரம், உள்ளூர் பொருளாதாரம் என்பவற்றை ஊக்கப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் தொழில் செய்வதற்கு வசதியளிக்கப்படுகிறது. இதனால், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு முடிகிறது.
தனிநபர்களையும் சமூகங்களையும் அவற்றின் அடி மட்டங்களில் பலப்படுத்தும் பொழுது, தமது சமூகங்களில் பிரதான அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் காத்திரமான முறையில் ஈடுபடுவதற்கும் பங்குபற்றுவதற்கும் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முரண்பாட்டு மாற்றத்தைப் பொறுத்தவரையில் இது மிக அவசியமானது. இதனை மகாத்மா காந்தி அப்போதே கூறிவிட்டார்.
காந்தியின் சுவதேசி கோட்பாட்டினை நோக்குமிடத்து உள்ளூர் பொருளாதாரம், தேசிய மற்றும் இன உணர்வு, ஒருவருக்கொருவர் உதவுவதை ஊக்கப்படுத்துதல் மற்றும் உள்ளூர் வளங்கள், திறமைகளை கட்டியெழுப்புதல் என்பதையே வெளிப்படுத்துகின்றது. மக்கள் தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்துவதற்கான திறமை மற்றும் மக்களின் பொருளாதாரம் என்பவற்றின் அடிப்படையிலானது இது. சுவதேசி, அதாவது பொருளாதார விவகாரங்களில் சுய ஒழுங்குபடுத்தலை இது குறிக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் பார்த்தால், காந்தியின் கொள்கைகள் ஹமுரண்பாடுகளுக்கான தீர்வு’ என்ற நவீன மேலைத்தேய கோட்பாட்டின் அடிநாதமாக இருக்கிறது. காந்தியைப் பொறுத்தவரையில், ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளினூடாக வெறுமனே தீர்வைக் காணுவது அன்றி, சுய புரிதலை எய்துவதும் தான். ஹவாழ்க்கையில் ஒருமைப்பாடே’ அவரது அடிப்படை.
அகிம்சையானது மிகவும் பலம்மிக்கதொன்று. இந்த பலத்தின் பின்னால் இருப்பது ஆயுதம் அல்ல, அது மக்களாதரவு. முரண்பாடு பற்றிய மரபு சார்ந்த சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு அடிப்படை விலகலை சமூக போராட்டத்திற்கான அகிம்சை அணுகுமுறை’ பிரதிநிதித்துவப் படுத்துகிறது. பொது மக்களின் அங்கீகாரத்தின் மீதே ஆட்சியாளர்களின் அதிகாரம் சார்ந்திருக்கின்றது என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலேயே அகிம்சைப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. சமூக போராட்டத்திற்கான ஒரு தொழில்நுட்பமான, அகிம்சையுடன் தொடர்புபட்ட ஒத்துழையாமையானது, மகாத்மா காந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் பரிச்சயமானது. “மனித குலத்தின் பயன்பாட்டிற்காக கிடைப்பவைகளில் உயர்வானது அகிம்சை. மனிதனின் புத்தி சாதுரியத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட அழிவு ஆயுதங்களின் பலத்தை விடவும் இது பலமானது” என்று காந்தி அகிம்சை பற்றிக் கூறியிருந்தார்.
chandran.raja
வழிமுறையும் லட்சியங்களும் ஒன்றுடன்ஒன்று துண்டிக்கப்பட்ட நிலை இருக்கும்வரை அமைதி என்பது உலகில் இருக்கமுடியாது. வழிமுறைஎன்பது லட்சியங்களின் வரைபடப்பாதை. இறுதிலட்சியத்தின் உருவாக்கமே வழிமுறை. மோசமான வழிமுறைகளை கைகொண்டு உயர்ந்த லட்சியங்களை அடையமுடியாது. வழிமுறைதான் விதை. லட்சியமே மரம். இனநீதியை அடைய வன்முறையைக் கைகொள்வது நடைமுறைக்கு ஒவ்வாதது.
ஒழுக்கமற்றதும்கூட. அது ஏன் ஒழுக்கமற்றது என்றால் வன்முறையின் சுழல்படிக்கட்டு எல்லோரையும் கீழேதள்ளிவிடும்.
கண்ணுக்கு கண் என்று பழிவாங்கத் தொடங்கினால் உலகமே குருடாகிவிடும். வன்முறை ஏன் ஒழுக்கமற்றது என்றால் எதிரியை அவமானபடுத்த முயல்கிறதே தவிர எதிரியின் புரிந்து கொள்ளலை வளர்ப்பதில்லை. வன்முறை ஏன் ஒழுக்கமற்றது என்றால் அது அன்பினால் அல்ல வெறுப்பினால் கட்டப்படுகிறது. அது சமூகத்தை அழித்து சகோதரத்துவத்தை முறியடித்துவிடுகிறது.சமூகத்தில் உரையாடல் நடப்பதற்கு பதிலாக அதுஒரே ஒருவரின் பேச்சாகிவிடுகிறது. வன்முறையின் முடிவு அதனில் தோல்வியாகி முடிகிறது.போராட்டத்தில் பிழைத்திருதிருப்பவர்களிடம் கசப்புணர்சியையும் அடக்குமுறையாளர்களிடம் மிருகயுணர்சியும்தான் மிஞ்சுகிறது.
-மாட்டின்லூதர்கிங்-
இந்தவாசகங்கள் மேமாதம் 19 ம்திகதிக்கு முன்பும் “தேசம்நெற்றில்” பதிவுக்கு என்னால் பதிவுக்கு விடப்பட்டது தான். தமிழ்மக்களை பொறுத்தவரை சிலை எழுத்தாகிவிட்டது போலிருப்பதால் திரும்பவும் வாசகர்களின் கவனத்திற்கு..
பல்லி
//வன்முறை ஏன் ஒழுக்கமற்றது என்றால் எதிரியை அவமானபடுத்த முயல்கிறதே தவிர எதிரியின் புரிந்து கொள்ளலை வளர்ப்பதில்லை. வன்முறை ஏன் ஒழுக்கமற்றது என்றால் அது அன்பினால் அல்ல வெறுப்பினால் கட்டப்படுகிறது//
அருமை அருமை; என்வீட்டு சுவரில் அலங்கரிக்கும் இந்த வாசகம்;
Kulan
சந்திரன் ராஜாவின் கருத்துடன் ஒரு கருத்து- வெற்றி என்பது எதிரியை அழிப்பதல்ல. எதிரின் மனத்தை வெல்வதுதான் பாரிய வெற்றி. அடுத்து மகாத்மாவின் கொள்கைப்படி கொண்டது விடாமை எனும் விரதமும் வெற்றியே. அதாவது வெள்ளையரின் கடவுச்சீட்டை எரித்தபோது பொல்லாங்கட்டையாலும் பூட்ஸ்காலாலும் மகாத்மா இம்சிக்கப்பட்டார். ஆனால் கடசி மூச்சு இருக்கும் வரையும் கடவுச்சீட்டை எதிப்பதை நிறுத்தவில்லை. மனிதனின் உடலை வதைப்பதாலும் உயிரை எடுப்பதாலும் ஆனால் அவன் சரணடையாது செத்தால் கூட அவன் வெற்றியாளனே. காரணம் அவனின் கொள்கையில் இருந்து அவனை மாற்ற எதிரியால் முடியவில்லை. தான் கொண்ட கொள்கையில் மாறாதவன் வெற்றியாளன் தான். எதிரியின் கருத்தை மாற்றுவதற்கு ஆயுதம்; இரத்தம் நிச்சம் தேவை என்றில்லை. அன்பு; இராஜதந்திரம்; எதிரியின் பலவீனம்; யதார்த்தம்; விளங்கப்படுத்தும் திறன் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
chandran.raja
கல்லெறிபட்டு முள்முடிதரித்து மரணத்தை ஏற்றுக் கொண்டவர்தான் தமது பிதாமகனாக ஒருபகுதி உலகமக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
காந்தியும் தனியொரு மனிதனின் நடைமுறைமூலம் வியப்பிழ் ஆழ்தினார். தோழர் கால்மாக்ஸ் வறுமையில் பிள்ளைகளையும் சாகவிட்டு தான் கண்ட அறிவொளியை உலகபாட்டாளி வர்கத்திற்கு உரிமையாக்கி விட்டு மறைந்து போனார்.
மனிதஉலகத்திற்கு அவர்கள் அளித்த பங்களிப்புகள் எம்மை குழப்பத்திள் ஆழ்தியுள்ளது மானிடத்தின் மூவேந்தரும் தமக்கென எதையும் சேகரித்து வைத்தவையல்ல. சேகரித்து வைத்தவை தமது தேவைக்காக சுயநலப்படுத்தி விட்டார்கள். இன்றைய மேதாவிகள். தேசம்நெற் இந்த மூவரை பற்றிய கலந்துரையாடலுக்கு களம்அமைத்து தரவேண்டுமென்றே ஆசைப்படுகிறேன்.
பல்லி
ஆனாலும் பல்லிக்கு ஒரு கவலை இதே காந்தியால்தான் இதுவரை சுபாஸ் சந்திரபோஸ்க்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை, அதை எண்ணி காந்தியும் தனது காலத்தில் கவலை கொண்டதாய் வரலாறு இல்லை;
சந்திரபோஸ்க்கு பயத்தில் சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்ததா? அல்லது காந்தியின் சத்தியாகிரகத்துக்கு வெள்ளையன் பயந்தானா? லண்டன் வாழ் மக்கள் கேட்டுதான் சொல்லுஙளேன்;
santhanam
பல்லி அவர்களே உமது பின்னோட்டத்தில் இன்றுதான் சரியான ஆய்வுக்கு வந்துள்ளீர் சுபாஷ் காந்தியா இதுதான் இலங்கையின் அடுத்த கட்டம்.
Sarana
சந்திரன் ராஜாவுக்கு சராசாp அறிவு மந்தமாகிவிட்டதா? இரண்டும் கெட்டான் காந்தியை கார்ல்மாக்ஸ் உடன் ஒப்பிட? மார்க்ஸ்க்கு நிகர் மார்க்ஸ்சே தான்.
chandran.raja
ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம் என்ற விளம்பரங்களை தாங்கள் பார்கவில்லையா? ஒன்றுவாங்கினால் ஒன்று இலவசம் என்பதும் பழைமையானதே!
சுபாஸ் சந்திரபோஸ் இந்தியதேசத்தில் பற்றுவைத்திருந்தார். நாட்டை பிரிஷ்சார்ரிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என கனவுகண்டார் இதை நடைமுறைப்படுத்தினார். இரண்டாம் உலகமாகயுத்தத்தின் உக்கிரமான காலப்பகுதி தேசிய இராணுவத்தை வழிநடத்துவதற்காக யப்பானுக்கும் ஜேர்மனிக்கும் தொடர்புகளை ஏற்படுத்தினார். ஆலாய் பறந்தடித்தார். இடைநாடுவில் மாயமாக மறைந்து விட்டார்.மறைக்கப்பட்டார்.
மறைந்தவர்ரையும் மறைக்கப்பட்டவரையும் தேடியலைவது பயன் இல்லாதது ஏன்னெனில் அந்தகாலகட்டத்தில் இவரின் வேலைதிட்டம் யப்பானுக்கோ ஜேர்மனிக்கோ இந்தியாவை தாரைவார்த்து கொடுப்பதாக இருந்திருக்கும். இதற்கு அப்பால் காந்தி எந்தநாட்டின் உதவியையும் எதிர்பாராது நாற்பது கோடிமக்களது தலைவிதியை தன்விதியாக்கி இந்தியமக்கள் அனைவரையும் ஒரு நோக்கத்திற்காக கால்நடை பயின்று கொண்டிருந்தார். இறுதியில் வெற்றியும் கண்டார். இதில்வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் காந்தியவாதிகள் துன்பங்களை தாங்களே ஏற்றுக்கொண்டார்களே ஒழிய யாரையும் பலிகொடுக்கவில்லை. இதுதான் அகிம்சையின் பலமும் மகத்துவமோ!
இவரை பின்தொடர்ந்து வந்தவர்கள் தான் மாட்டின்லூதகிங் நெல்சன் மண்டேலா போன்றவர்கள். மனிதபிறவியின் விம்பமாக இன்றும் காட்சி தருகிறார்கள். காந்தி என்பவர் ஒருதனிமனிதன் அல்ல அது பலஆயிரம்ஆண்டு வரலாற்றை உள்ளடிக்கிய இந்தியஞானமரபின் வெளிப்பாடே என்கிறார்கள் ஜெயமோகன் போன்ற அறிஞர்கள். இதைதான் நான் விரும்புவதும். இதைநம்பியே எவரையும் பலிகொடுக்காத உலகத்தை நோக்கி பயணிப்போம் என துணிகரமாக பின்னோட்டம் விட காரணமாக இருந்தது. மிகுதியை காத்திருந்து பார்ப்போம்.
செல்வன்
ஐ.நா. மகாத்மா காந்தியின் பிறந்த நாள் உலக அகிம்சை தினமாக கொண்டாடப்படுவதைக் குறிக்கும் வகையில், அவரது நினைவாக தபால் முத்திரை ஒன்றை ஐ.நா. வெளியிட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் உலக அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று(02.10.09) நடந்த நிகழ்ச்சியில், ஐ.நா தபால் பிரிவு, ஒரு டாலர் மதிப்பிலான தபால் முத்திரை ஒன்றை வெளியிட்டது. அதில் மியாமியைச் சேர்ந்த பெர்டி பச்சேகா என்பவர் வரைந்த காந்தியடிகளின் ஓவியம் இடம் பெற்றிருந்தது.
chandran.raja
துப்பாக்கி குழலில்லிருந்து தான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்பதை அசட்டை செய்யாதது ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இந்த மாவோவாதி விரும்புகிறார். இவரின் நோக்கம் எப்படியாவது மாவோவாதிகளை நியாப்படுத்துவதே. நியாயங்கள் இருந்தால் நியாயப்படுத்துவதில் தப்பில்லை. 2009 திற்கு பிறகும் ஏதாவது மாவோவாதிகளில் நியாயம் இருந்தால் அதை நாங்கள் புரிந்து கொள்ளமறுத்தால் யாருக்கு தப்பு இருக்க வேண்டும்? சரணாக்கா? எங்களுக்கா?
BC
//சந்திரன் ராஜா – இதில்வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் காந்தியவாதிகள் துன்பங்களை தாங்களே ஏற்றுக்கொண்டார்களே ஒழிய யாரையும் பலிகொடுக்கவில்லை. இதுதான் அகிம்சையின் பலமும் மகத்துவமோ!
..எவரையும் பலிகொடுக்காத உலகத்தை நோக்கி பயணிப்போம்..//
மிக சரியாக கூறினீர்கள். சந்திரன் ராஜா வாழ்த்துக்கள். நன்றி.
jeeva
இவ்வாறான புகழ்பெற்ற காந்தியவாதிகள் ஏன் பிரிவினையின் போது காந்தி உயிருடன் இருந்தபோதே 1 மில்லியன் உயிர்களை கொன்றனர்?
அவ்வாறான் காந்தியுடன் ஒன்றாக வாழ்ந்த இந்திராகாந்தி ஏன் அணுகுண்டு சோதனை செய்தார்? அகிம்சையை உலகுக்கு அளித்த இந்தியாவுக்கு ஏன் அணுகுண்டு?
poor themulu
THIS TRUE NO ONE CAN NOT BELIVE
இதே காந்தியால்தான் இதுவரை சுபாஸ் சந்திரபோஸ்க்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை, அதை எண்ணி காந்தியும் தனது காலத்தில் கவலை கொண்டதாய் வரலாறு இல்லை;
சந்திரபோஸ்க்கு பயத்தில் சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்ததா? அல்லது காந்தியின் சத்தியாகிரகத்துக்கு வெள்ளையன் பயந்தானா? லண்டன் வாழ் மக்கள் கேட்டுதான் சொல்லுஙளேன்;
பல்லி
பூர் தெமுலு இது என்ன கிண்டலா அல்லது பல்லியை ஏற்று கொள்வதா?
mano
அகிம்சை என்றால் என்ன? காந்தி சொன்னதுதான் அகிம்சை என்றால்> அது அவரின் அடையாளம். மனிதத்துவத்தின் அடையாளம் அதுவல்ல.
உயிர் ஒன்றை அழிப்பதை எதிர்த்தது அகிம்சை. ஆயுதவழியில் போராடுவதை எதிர்த்தது அகிம்சை.
ஆனால் மனித இனம் என்பது ஒன்றுதான் என்பதை அகிம்சை ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதனே மனிதனை கீழ்ப்படுத்தி உயிருடனே இம்சை செய்ததற்கு எதிராக அகிம்சை என்ன செய்தது? இழிவுபடுத்தப்பட்ட மக்களை அவர்களும் மனிதர்கள் தான் என்பதை நிலைநிறுத்தப் போராடிய அம்பேத்கார்> பெரியார் போன்றவர்களுடன் இந்த அகிம்சை இணங்கிப் போக முடிந்ததா? எந்த இடத்தில் வைத்துப்பார்த்தாலும் நீதியாக இருக்கும் ஒரு விடயம் தான் உயர்ந்ததாக இருக்க முடியும். மகாத்மா என்ற சொல் காந்திக்குப் பொருந்துமா?
சுபாஸ் சந்திரபோசை மறந்துவிட்டு காந்தியை சுதந்திரத்தின் சிற்பியாகக் கொண்டாடும் இந்தியர்கள் இப்போது அணுகுண்டு விஞ்ஞானியை இந்தியாவின் தவப்புதல்வனாக வரித்திருக்கிறார்கள்.
Kusumbo
மனோ! உங்கள் புரிதலில் தவறுள்ளது. அகிம்சை என்பது கிம்சை இல்லாதது. நீங்கள் மேல் குறிப்பிட்டதே கிம்சை தான். மனதைக் காயப்படுத்துவதும் வன்முறைதான். நீங்கள் எழுதியது போல் எதிர்பது அல்ல அகிம்சை சரியாக நடப்பதே அகிம்சை. மகாத்மாவுக்கு மகாத்மா என்ற பெயர் என்றும் பொருந்தும். தன்னைச் சுட்டவனைக்கூட தண்டடிக்கப்படாது என்று வேண்டிக் கொண்டவர் காந்தி. நான் யேசுவை விட காந்தியையே மகாத்மாவாகப் பார்க்கிறேன். யேசு கூட தேவாலயத்துள் சவுக்கடி கொடுத்தார். இது வன்முறை. //ஆனால் மனித இனம் என்பது ஒன்றுதான் என்பதை அகிம்சை ஏற்றுக் கொள்ளவில்லை. மனிதனே மனிதனை கீழ்ப்படுத்தி உயிருடனே இம்சை செய்ததற்கு எதிராக அகிம்சை என்ன செய்தது? // எப்படி ஏற்றக் கொள்ளவில்லை என்று உங்களால் சொல்லமுடியும் எதிரியாகத் கருதிய தாழ்தவனாய் வர்ணிக்கப்பட்டு முஸ்லீமின் பிள்ளை எடுத்து வள என உத்தரவு போட்டவர் காந்தி.
தயவுசெய்து காந்தியைப்பற்றி எழுதமுன்பு அவருடைய சரித்திரத்தை படித்துப் பாருங்கள். எதிரியான வெள்ளையன் கூட வன்முறைக்கு உள்ளாக்கப்படக் கூடாது என்ற மகா மனம் யாருக்கு உண்டு. மக்களின் ஆத்ம பலத்தை உண்மையாக உணர்ந்து நேசித்தவர் காந்தி. அதனால் தான் மக்களைத் திரட்டிப் போராடினார். மக்கள் மனங்களை வென்றார். சுபாஸ் சந்திரபோஸ் ஆயுதத்தை நம்பினார். அவர் மானசீகமான சீடன் பிரபாகரனும் அவர்களியிலேயே அழிந்தார். உண்மையும் நேர்மையும் மக்கள் பலமுமே வெல்லும் என்பதை எமது சகாப்தத்தில் வாழ்ந்து காட்டியவர் மகாத்மா காந்தி. மகாத்மா என்ற பெயர் காந்தியைத்தவிர எவருக்குமே பொருந்தாது. பொருந்தப் போவதுமில்லை.
பல்லி
காந்தி நல்லவரா கெட்டவரா எனக்கு தெரியாது; ஆனால் சுபாஸ் சந்திரபோஸ் மிகமிக நல்லவர் என்பது அவருடன் பணிபுரிந்த பலருடன் பேசும்போது தெரிந்தது, இன்று பிரபாகரன் போல்தான் அன்று சுபாஸ்ம் காணாமல் போனார், ஆனாலும் கூட இன்றுவரை 95;98 வயதில் இருப்பவர்கள் கூட அவருடன் இருந்தவர்கள்) சுபாஸை தமது தலைவனாகவே வாழ்கின்றனர், என்னும் சொல்லபோனால் இவர்கள் சிலருக்கு இன்றுவரை ஓவூதியம் கிடைக்கவில்லை, இருந்த போதிலும் வறுமையிலும் தமது நேர்மையான தலமையை குறை சொல்லவில்லை, இவர்களுக்கு ஏன் ஓய்வூதியம் வழஙபடவில்லை என எந்த காந்தியவாதியும் கேட்டதாய் நான் கேள்வி படவில்லை, ஆனால் காந்தி நேருவிடம் கொடுத்துவிட்டு போன நாட்டை இன்றுவரை நேரு குடும்பம் மற்றவர்களிடம் போகாமல் பாதுகாப்பதில் காந்தியம் தனது கடமையை திறம்படவே செய்கிறது, காந்தியவாதிகளே பலர் இன்று இந்திய பணக்காரர்ன், ஆனால் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காரைகுடி, ராமனாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, அறம்தாங்கி பொன்னமராவதி, திருப்பத்தூர் இப்படி பல ஊரை உதாரனம் சொல்லலாம்: வீட்டுக்கு ஒருவர் தன்னும் சுபாஸ்சுடன் வாழ்ந்துள்ளனர், அவர்கள் பட்ட கஸ்ரத்தில் ஒருதுளி கூட காந்தியம் படவில்லை என்பது பல்லியின் கருத்து, அப்படியாயின் எப்படி காந்தியிடம் நாடு போச்சு??
தொடரும் பல்லி;
Kusumbo
அன்புள்ள பல்லி!
காந்தி நல்லவரா கெட்டவரா? சுபாஸ் நல்லவரா கெட்டவரா? என்பதற்கு அப்பால் இவர்கள் தெரிவுசெய்த, நம்பிய, விரும்பி ஏற்றுக்கொண்ட போராட்ட வடிவமே தோல்வியையும் வெற்றியையும் தந்தது. காந்தி தெரிவு செய்தது மக்கள் போராட்டம். ஒன்று திரட்டப்பட்ட மக்கள். சுபாஸ் தெரிவு செய்தது ஆயுதப் போராட்டம். இவை இரண்டையும் இவர்கள் இருவரும் முழுமையாக நம்பினர். பிரபாகரனின் ஆயுதப் போராட்டமும் தோல்வியே. எந்தவழியில் போராடினாலும் எதிரியின் மனங்களை வெல்லாத போர் தோல்விதான். பிரபாகரன் கூட நல்லவர்தான். நானும் தனிப்பட்ட முறையில் தம்பியை நன்கறிந்தவன் என்ற முறையில் தம்பி உண்மையில் நல்லவர்தான். அவர் கொண்ட கொள்கையும் கோட்பாடுமே தான் நாம் வெளியேறுவதற்குக் காரணமாக இருந்தது. பிரபாகரனைச் சந்தித்தவர்கள் எவரும் பிரபாகரனைக் கூடாதவர் என்று சொன்னது கிடையாது. சுபாஸ் நிச்சயமாக நல்லவராகத்தான் இருக்க முடியும். ஒரு இனத்தை தேசத்தை நேசிப்பவன் என் கண்ணில் என்றும் நல்லவன் தான்.
காந்தியையும் காந்தியத்தை ஏற்றுக் கொண்டவர்களுடன் ஒப்பிட இயலாது. மதம் சொல்வது ஒன்று அதை காவித்திரிபவர்கள் சொல்வது ஒன்று. செய்வது ஒன்று. காந்தியிடம் தூய்மையும்; மக்கள் மேல், மக்கள் பலம்மேல் நம்பிக்கையும் இருந்தது. இதைத்தான் அன்று நாம் சுந்தரத்துடன் பிரிந்து வரும்போது சொன்னோம். ஆயுதம் உடன் பலன்காட்டும் ஒரு மாயைதான். இதைக் கருவியாகப் பாவிக்கலாமே தவிர அதுவே முழுமையாகாது. மக்கள் என்பது முழுமை. மக்கள் தம்பசிக்கு அவர்கள் தான் சாப்பிட வேண்டுமேதவிர மற்றவர்கள் அல்ல.
நட்புடன் குசும்பு
பல்லி
குசும்பு மிகநிதானமான கருத்து இதில் பல்லியால் எதிர்வாதம் செய்யவும் முடியாத கருத்து, ஆனால் நான் இங்கே சுட்டி காட்டியது காந்திவர்க்கத்தால் சுபாஸ் தரப்பினர் பழிவாங்க படுகின்றனர், அதுவே எனது குற்றசாட்டு, இதில் காந்தி சம்பந்த படாவிட்டாலும் அவரது நிர்வாகம் கூட கருனானிதியின் நிர்வாகம் போல் ஒரு வட்டத்தில் அமைந்து விட்டதோ என நினைக்கிறேன், இன்று புலிகள் அனாதரவாய் இருப்பதால் அவர்களை ஆட்ச்சிக்கு வருபவர்கள் துன்புறுத்தவோ அல்லது ஒதுக்கவோ நினைப்பார்களேயானால் அவர்கள்தான் மிகமிக கோளைகள்,
ஆக எடுத்து கொண்டவடிவம் ஆயுதமா? அல்லது அகிம்ச்சையா என்பதைவிட போரில் தோத்தவர்களையும் (சகபோராளியை) சேர்த்துதான் நிர்வாகம் செய்யவேண்டும் என்பது கூடவா அன்று காந்திக்கு தெரியாமல் போச்சு; புலியை நாம் எதிர்த்தோம் விமர்சித்தோம் கிண்டல் செய்தோம், காரனம் எம்மினத்தின் விடுதலையாளர்கள் இவர்கள் அல்ல என தெரிந்த பின் இது கூட ஒரு பழிவாங்கல்தான் நேரம் வரும் போது பார்ப்போம்; ஆனால் திலீபன் புலியாக இருந்தாலும் காந்தியின் பாதையை தேர்வு செய்து காந்தியின் ஆட்ச்சியாளரிடமே நியாயம் கேட்டபோது அது தவறியது ஏன், அங்கே காந்தியம் தூங்கிவிட்டதா அல்லது ஆயுதகாரரிடம் விலை போய்விட்டதா? எனது கேள்வி திலீபனின் கோரிக்கையை ஏற்றுகொள்ள வேண்டுமென்பதல்ல; ஆனால் ஒரு காந்திய போராட்டம் சாவில் முடியாமல் ஏதாவது செய்யகூட முடியாத காந்திய கோள்பாடுகள் எனக்கு உடன்பாடு இல்லை; இப்படி பல உண்டு
நட்புடன் தேடுவோம்;;
mano
எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. ஒன்றைச் சொல்கிறேன். சுபாஸ் சந்திரபோஸுடன் பிரபாகரனை ஒப்பிடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பிரபாகரன் சரியான நல்லபிள்ளை அவருடன் இருந்த மற்றவர்கள்தான் சரியில்லை என்பது போலல்லவா இருக்கிறது உங்கள் எண்ணம்.
BC
பிரபாகரனுக்கு வெள்ளை சாயம் அடிக்க காந்தி பிறந்த தினம் உதவுகிறது.
guru
பிரபாகரனை நல்லவனாக்கினால்த்தானே கோயில் பிழைப்புகளுக்கு வசதியாயிருக்கம். இயக்கம் கொலை செய்தது. அவருக்கு எதுவும் தெரியாதென சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காந்திக்கு நிகரானவர் என அடுத்தமுறை குசும்பு எழுதினாலும் எழுதுவார்
பல்லி
//எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. ஒன்றைச் சொல்கிறேன். சுபாஸ் சந்திரபோஸுடன் பிரபாகரனை ஒப்பிடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பிரபாகரன் சரியான நல்லபிள்ளை அவருடன் இருந்த மற்றவர்கள்தான் சரியில்லை என்பது போலல்லவா இருக்கிறது உங்கள் எண்ணம்.//
நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் தப்பில்லை, ஆனால் எமது பின்னோட்டங்களையும் கவனித்து எழுதுங்கோ; உங்கள் வாதபடி பார்த்தால் சுபாஸை கெடுத்தது அவருடன் இருந்த கிராமத்து வாலிபர்களா??? சரி அதை விடுவோம் பிரபாகரன் செய்த கொலையில் பின்னனியில் யாருமே (யாவற்றிலுமல்ல) இல்லையா?? அதுக்காக யாருமே பிரபாகரனை னியாயபடுத்த முடியாது முயலவும் இல்லை; தனிப்பட்ட முறையில் நல்ல மனிதனாக இருந்தவர் இந்த தேசிய தலைவர் பதவிக்காய் கேவலமான கொடூரமான வேசத்தை போட்டார் என்பது உன்மைதான், பிரபாகரனுடன் சுபாஸை எப்படி ஒப்பிடலாம் என தேடுவோம்; பிரபாகரனையல்ல கருத்தை;
santhanam
கோட்சே: வயது 37. முழுப்பெயர் நாதுராம் விநாயக் கோட்சே. இவனுடைய தந்தை, தபால் துறையில் மாதம் 15 ரூபாய் சம்பளம் பெற்று வந்தவர். கடவுளுக்கு பயந்தவர். இந்து மத கோட்பாடுகளை, சம்பிரதாயங்களை அணுவளவும் பிசகாமல் கடைப்பிடித்தவர். கோட்சேயின் தாயார், உத்தமி என்றும், சாந்த சொரூபி என்றும் பெயரெடுத்தவர்.
கோட்சேக்கு மூன்று சகோதரர்கள்; இரண்டு சகோதரிகள். தென் மராட்டியத்தில் உள்ள சாங்லி என்ற இடத்தில் கோட்சே பிறந்தான். சிறு வயதிலேயே கட்டுப்பாடுகளுடன் வளர்ந்தான். ரிக் வேதம், பகவத் கீதை முதலிய நூல்களும், சமஸ்கிருதமும் கற்பிக்கப்பட்டன. சிறு வயதிலேயே இந்து மதத்தின் மீதும், இந்து மதக்கடவுள்கள் மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். புனாவில் படித்த கோட்சே, பத்தாம் வகுப்பைக்கூட பூர்த்தி செய்யவில்லை. படிப்பில் நாட்டம் இல்லாமல் துறைமுகத்தில் வேலை பார்த்தான். பின்னர் பழ வியாபாரம், கார் டயர்களை பழுதுபார்த்தல்… இப்படி பல வேலைகளைப் பார்த்துவிட்டு, கடைசியில் தையல் வேலை கற்றுக்கொண்டு தையல் கடை வைத்தான்.
படிப்பு அதிகம் இல்லையென்றாலும், ஆங்கிலத்தில் நன்றாக எழுதவும், பேசவும் தெரியும். கார் ஓட்டுவதிலும் சூரன். “அரசியலில் தீவிரமாக ஈடுபடவேண்டும். இந்துக்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடவேண்டும். எனவே திருமணம் செய்து கொள்ளக்கூடாது. பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்” என்று தீர்மானித்த கோட்சே, அந்த முடிவை உறுதியாகக் கடைப்பிடித்தான். தாயைத்தவிர வேறு பெண்களை தலை நிமிர்ந்தும் பார்க்க மாட்டான். கோட்சே திருமணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டதால், அவன் பெற்றோர், இளையவன் கோபால் கோட்சேக்குத் திருமணம் செய்து வைத்தனர். தம்பி மனைவியைப் பார்ப்பதையும், அவளுடன் பேசுவதையும் தவிர்க்க விரும்பிய கோட்சே, தையல் கடையின் முன்புறத்தில் ஒரு அறையில் தங்கி வந்தான்.
ஆரம்ப காலத்தில் கோட்சே, மகாத்மா காந்தி மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான் என்பது வியப்பளிக்கும். வெள்ளையருடன் ஒத்துழைக்கக் கூடாது என்று மகாத்மா காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவன், கோட்சே.
1937_ம் ஆண்டில் முதன் முதலாக வீரசவர்க்காரை சந்தித்தான். சுதந்திரப் போராட்டத்தின் போது, வீர தீரச்செயல்கள் புரிந்தவர் வீர சவர்க்கார். அவர் மீது கோட்சேக்கு மிகுந்த பற்று ஏற்பட்டது. சவர்க்கார் தொடங்கிய இந்து மகா சபையில் சேர்ந்தான். சிறு வயதில், ரத்தத்தை கண்டாலே கோட்சேக்கு “அலர்ஜி” என்றால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் அது உண்மை. 1947 ஜுலை முதல், “தி ஹிந்து ராஷ்டிரா” என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து வந்தான்
பல்லி
கோட்ச்சேயின் வரவு பல்லியின் வாதத்துக்கு வலுசேர்க்குமென நினைக்கிறேன்,
Kusumbo
காந்தியின் சீடர்களால் இல்லை இல்லை பக்தர்களால் சுபாசின் சீடர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்றால் அவர்கள் காந்தியின் சீடர்களாகவோ பக்தர்களாகவோ இருக்க இயலாது. மக்களுக்காகப் போராடுபவர்கள் பிரிந்து போராடலாம். மக்கள் எனும் மையப்பொருள் இருக்கும் போது எப்படி குழுக்காய் அடிபட முடியும். அப்படி அடிபட்டு கொல்லுப்படும் போது மையப்பொருள் சிதறிவிடுகிறதே. மாற்றுக் குழுவிலிருப்பவனும் எம்இனத்தவன் தானே. எனது கேள்வி ஒரே இனம் ஒரே மொழிகொண்ட எம்மாற்றுக் கருத்துடையவர்களுடன் எம்கருத்துகளைச் சரியாகப் பகிர்ந்து போராட முடியாத நாம் எப்படி வேற்று மொழியில் உள்ள எதிரிக்கு எமது போராட்டத்தையும் அதன் தார்பரியங்களையும் எம்மக்களின் தேவையையும் எடுத்துரைக்க முடியும்.
மனோ!//பிரபாகரன் சரியான நல்லபிள்ளை அவருடன் இருந்த மற்றவர்கள்தான் சரியில்லை என்பது போலல்லவா இருக்கிறது உங்கள் எண்ணம்.// கடசிகாலங்களில் பிரபாகரனைச் சந்தித்து வந்தவர்கள் கருத்துப்படி தலைவர் நல்லவர். இதைத்தான் பிரபாரன் விரும்பினார். புலிகளின் போராட்டம் ஷோ வில் வளர்ந்து ஷோ ஆகவே முடிந்தது. இந்தச் சினிமாவில் பிபாகரன் எனும் பாத்திரம் கடசிகாலத்தில் நல்லபிள்ளைப் பெயர்வாங்கத் துடித்தது என்பதை யாவரும் அறிவர்.
Senthan
காந்தி ஒன்றும் மாகாத்மா இல்லை. வர்ணாசிரமத்தை இறுகப்பிடித்தவர். அவர் உண்ணாவிரதம் இருந்ததே ஒடுக்கப்பட்டோருக்கு தனி அரசியல் தொகுதி கொடுக்கக் கூடாது என்று தான். தன் சத்திய சோதனையில் கஸ்தூரிபாயின் உணர்வுகளை மதிக்காத ஆணாதிக்கவாதி.
ஒரு கவிதை சொல்கின்றது…..
காந்தி நீ எளிமையாக இருக்க
எனது தேசம் எவ்வளவு செலவு
செய்துவிட்டது.
பல்லி
சபாஸ் சந்தானம், இவைகளே பல தலமைகளின் மறைக்கபட்ட பக்கத்தை பல்லி தேட காரணம்;
மீண்டும் நன்றி சந்தானம்;
பல்லி
//காந்தியின் சீடர்களால் இல்லை இல்லை பக்தர்களால் சுபாசின் சீடர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்றால் அவர்கள் காந்தியின் சீடர்களாகவோ பக்தர்களாகவோ இருக்க இயலாது//
அப்படியாயின் காந்தியின் சீடர்களும்; பக்த்தியாளர்களும் எங்கே? இடையில் எப்படி காங்கிறஸ் என ஒரு நாட்டாண்மை தலைதூக்கியது,? அந்த நாட்டாண்மைகூட ஏன் சிலரை வித்தியாசமாய்ப் பார்த்தது?
Kusumbo
// தன் சத்திய சோதனையில் கஸ்தூரிபாயின் உணர்வுகளை மதிக்காத ஆணாதிக்கவாதி.//Senthan
ஏதோ ஒன்றைக் கொடுத்துத்தான் ஏதாவது ஒன்றைப் பெற முடிகிறது. உலகத்தில் தியாகி எனப்பட்டவர்கள் யாராவது ஒருவரைச் சொல்லுங்கள் எதையாவது கொடுக்காது எதையாவது பெற்றார்கள் என்று. எதிலும் விதண்டாவாதம் செய்யலாம். உள்நோக்கம் என்ன என்பது தான் முக்கியம். தியாகம் என்று வருபோது அதையும் இழக்க வேண்டியிருக்கும்.
கால்மாக்ஸ் கொடுத்த விலை பிள்ளைகள் குடும்பம்…. இன்னும் இன்னும். காலமாஸ் செய்தால் சரி காந்தி செய்தால் பிழையோ? காந்தியின் மனதில் தூய்மை இருந்தது. ஆண்டவனின் குழந்தைகள் என்று ஆததரித்தவர் அவர். சாதிகளாய் கூடுவதற்குச் சந்தர்பம் தேடாதீர்கள். சாதியை அழியவே விடமாட்டீர்களா. இன்று சாதி வேண்டும் என்று போராடுவது மட்டுமல்ல சாதிக்கு அங்கிகாரம் வேண்டி நிற்பதும் சாதி வளர்ப்புத்தான். இதை காந்தி செய்யவில்லை. நீங்கள் தான் செய்கிறீர்கள். மனித இனக் கூர்ப்பில் பாவிக்காத பயன்படுத்தாத உறுப்புக்கள் மறைந்து விடுகிறன்றன. இது வாழ்க்கைக்கும் பொருந்தும்.
Kusumbo
//அப்படியாயின் காந்தியின் சீடர்களும்; பக்த்தியாளர்களும் எங்கே? //
காந்தியுடனே காந்தியம் செத்தது என்பதை நீங்கள் உணரவில்லையா? காந்தியம் இருந்திருந்தால் காந்தியை மாதிரி ஒரு சின்னக்காந்தி உருவாகியிருப்பார்கள். செல்வநாயகத்தையும் ஈழத்துக்காந்தி என்றார்கள்.வேடிக்கையானது தான். காந்தியுடன் நின்றுழைத்த நேருவிடம் காந்தியின் நேர்மை இருந்ததா? காந்தி தன் குடும்பத்துக்கு எனச்சேர்த்து வைத்தது என்ன? நேரு தன் பரம்பரைக்கு செய்து விட்டுப் போனது என்ன? இந்தியனே இல்லாத ஒரு குடும்ப ஆட்சியை இந்தியாவுக்குத் தந்தவர் நேரு. நேர்மையற்ற நேரு. வெள்ளையனிடம் இருந்து இரத்தம் சிந்திப் பெற்ற விடுதலையை மீண்டும் வெள்ளையனிடம் கொடுத்துவர் யார்? நல்லகாலம் சுபாஸ் விரையில் போய்விட்டார். இல்லையென்றால் அவரும் நாறடிக்கப்பட்டிருப்பார்.
சந்தானம்! எமக்குத் தேவை குற்றச்சாட்டுகள் அல்ல உடன்பாடுகளுடனான மனிதமுன்னேற்றம். நீங்கள் காந்தியின் வாழ்கையில் எந்த ஒரு நல்லவிடயத்தையும் படிக்கவில்லையா? ஒரு மனிதன் 100வீதம் நல்லவானாக இருக்க முடியாது. அப்படி அவன் இருப்பானாயின் அவன் மகா நடிகனாகவே இருக்க முடியும். அவனிடன் உண்மை நேர்மை இருக்க முடியாது. இவ்வளவும் எழுதும் உம்மால் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியுமா? முடியாது. உம்மைத்தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்? ஆனால் காந்தியைத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்? நல்லதைத் தேடுங்கள். ஒரு புது மொழியை மனிதன் படிக்கும் போது முதன் முதலில் அறிவது தூசன வார்த்தைகளையே. நல்லதைத் தேடுங்கள். மக்கள் போராட்டம் தான் வெற்றியழிக்கும் என்பதற்கு காந்தியின் வரலாறு சான்று. ஆயுதப்போராட்டமானாலும் மக்களுக்காக ஆயுதமே தவிர ஆயுதங்களுக்காக மக்கள் இல்லை.
Kusumbo
ஈழப்போராட்டம் 3.5 அல்லது 4 மில்லியன் மக்களுக்காக போராட்டம் நடந்தது. அதுவும் ஒரு சிறுஇராணுவத்துடன். காந்தியின் போராட்டம் எமது மக்கள் தொகையுடனும்: எதிரி சூரியன் மறையாத் தேசத்தின் பிரதிநிதிகள். ஒப்பிட்டுப்பாருங்கள். வீதாராரத்தைப் பாருங்கள்? சரி புலிகளுக்குக் கிடைத்த பணம் ஒரு தலைக்கு எவ்வளவு என்று பாருங்கள். பெரும்பணச் செலவின்றி: ஆயுதமே எடுக்காது ஒரு பெரிய ஆங்கிலேயச் சாம்பிராச்சியதை வென்ற அல்லது ஒப்பீட்டு ரீதியாக வென்ற ஒரு போராட்டத்தை யாராவது சொல்ல இயலுமா? அன்று பிரசாரத்தில் சொன்ன அதே வார்த்தைகளை இங்கே எழுதுகிறேன். போராட்டம் புரட்சி என்பது மக்களின் மனத்தில் வெடிக்கவேண்டுமே தவிர துப்பாக்கிகளில் அல்ல. வெற்றி என்பது மனங்களை வெல்வதே தவிர மண்ணை வெல்வதல்ல. சொந்த மக்களின் மனங்களை வெல்லாத போராளிகள் எப்படி எதிரியை வெல்வார்கள். போராட்டத்தில் மட்டுமல்ல மனித வாழ்க்கையிலும் வெற்றியும் தோல்வியும் மனித மனங்களிலேயே தங்கியுள்ளது. என்க்கு கோவம் வரச் செய்யும் ஒரு செயல் மற்றவனுக்கு சாதாரண ஒன்றாக இருக்கிறது. இங்கே இங்கே செயல் ஒன்று மனங்கள் தானே வித்தியாசம். எல்லாம் வெளியில் அல்ல உன்னுள்ளான் இருக்கிறது. கண்டு பிடி
yaro
வென்றதாக சொல்லப்படுவதுற்கு வியாக்கியானம் செய்யவும், தோற்றுப்போனதை துவம்சம் செய்யவும் உங்கள் வாதங்கள் எந்த வழியில் வகை தேடுகிறது? ……
santhanam
//எமக்குத் தேவை குற்றச்சாட்டுகள் அல்ல உடன்பாடுகளுடனான மனிதமுன்னேற்றம்//காந்தி ஏகாதிபத்தியங்களின் பொம்மை
இந்தியாஇ பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் இரு நாடுகளிலும் கலவரங்கள் நீடித்தன. பாகிஸ்தானில் இருந்து சொத்து சுகங்களை இழந்து லட்சக்கணக்கான இந்துக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு ஓடிவந்தனர். பாகிஸ்தானில் இருந்து அகதிகள் வந்த ரெயில்களும் நடுவழியில் தாக்கப்பட்டன. வாஹ் என்ற இடத்தில் இருந்து வந்த அகதிகள் ரெயில் அடித்து நொறுக்கப்பட்டது. 200க்கும்மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
பஞ்சாப் எல்லையில் இருந்த கூஜ்ராத் என்ற ரெயில் நிலையத்துக்கு வந்த பல ரெயில்கள் தாக்கப்பட்டுஇ 500 பயணிகள் கொல்லப்பட்டனர். 1948 ஜனவரி 1_ந்தேதி குவெட்டாவில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த “குவெட்டா மெயில்”இ நடுவழியில் தாக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 850 அகதிகள் படுகொலை செய்யப்பட்டனர். பம்பாயில் நடந்த இந்துக்கள் கூட்டம் ஒன்றில்இ மாஸ்டர் தாராசிங் பேசுகையில்இ “முஸ்லிம்கள் எவரும் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள். எனவே முஸ்லிம்களை இந்தியாவை விட்டே விரட்டவேண்டும்” என்று கூறினார்.
இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் உள்ள ராவல் பிண்டியில் இந்துக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். ஏராளமான பெண்கள் கற்பை காப்பாற்றிக் கொள்ள தீக்குளித்து மாண்டனர். 1947 நவம்பர் 30_ந்தேதி நடந்த இந்த சம்பவம் “ராவல்பிண்டி கற்பழிப்பு” என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்தது முதலேஇ அவரை கோட்சேயும்இ ஆப்தேயும் வெறுத்து வந்தனர்.
“ஹிந்து ராஷ்டிரா” பத்திரிகையில் 9.7.1947 இதழில் கோட்சே எழுதியிருந்ததாவது:_ “சகோதரர்களே! நம் தாய்நாடு கூறுபோடப்பட்டுவிட்டது. கழுகுகள் அவள் சதையை துண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு விட்டன. இந்துப் பெண்களின் மானம் நடுத்தெருவில் பறிக்கப்படுகிறது. எவ்வளவு நாட்கள் இதை சகித்துக்கொண்டிருப்பது? இந்துக்களின் நாட்டில் இந்துக்கள் லட்சக்கணக்கில் அகதிகளாக வசிப்பது எவ்வளவு கொடுமை? இந்துப் பெண்கள் கற்பழிக்கப்படுவது என் மனதைச் சுடுகிறது.” _இவ்வாறு கோட்சே எழுதியிருந்தான்.
“காந்திஜி! பாகிஸ்தான் பிரிவினைக்கு நீங்கள் ஒப்புதல் அளித்ததன் மூலம் தேசத்தை கத்தியால் குத்தியிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எங்கள் தாய் நாட்டைத் துண்டு போடுகிறவர்களை தேசத்துரோகிகள் என்று கருதுகிறோம்” என்று காந்திக்கு எச்சரிக்கை விடுத்தான்.
கல்கத்தாவில் நவகாளியில் கலவர பகுதிகளில் பாத யாத்திரை செய்துவிட்டு டெல்லி திரும்பிய மகாத்மா காந்திஇ டெல்லியிலும் கலவரங்கள் நடப்பதைக்கண்டு மனம் வருந்திஇ மீண்டும் அமைதி ஏற்பட “சாகும் வரை உண்ணாவிரதம்” தொடங்கினார். டெல்லியில் பிர்லா மாளிகையில் 1948 ஜனவரி மாதம் 13_ந்தேதி பகல் 11.55 மணிக்கு இந்த உண்ணாவிரதம் ஆரம்பம் ஆயிற்று. உண்ணாவிரதத்தை நிறுத்த வேண்டுமானால் (1) சமீபத்தில் டெல்லியில் நடந்த கலவரத்தின்போது கோவில்களாகவும்இ அகதிகளின் குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட மசூதிகளை மீண்டும் மசூதிகளாக மாற்ற வேண்டும்.
(2) பாகிஸ்தானுக்கு ஓடிய முஸ்லிம்கள் இந்தியாவுக்கு திரும்ப விரும்பினால் அவர்களை இந்துக்கள் அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 7 நிபந்தனைகளை விதித்திருந்தார். இந்த உண்ணாவிரதத்தின்போதுஇ காந்தியின் உடல் நிலை கவலைக்கிடமாகியது. சிறுநீரகம் பழுதடையத் தொடங்கியது. இன்னும் சில நாட்கள் உண்ணாவிரதம் நீடித்தால்இ காந்தி உணர்வு இழந்து “கோமா” நிலைக்குப் போய்விடுவார்இ அதன் பிறகு பிழைக்க மாட்டார் என்று டாக்டர்கள் கூறினர்.
“காந்தி ஒருவேளை உயிர் பிழைத்தாலும் அவர் செயல்பட முடியாதபடி உடல் உறுப்புகள் நிரந்தரமாக பாதிக்கப்படலாம்” என்றும் கவலை தெரிவித்தனர். பிரதமர் நேருவும்இ பட்டேலும் மற்றும் பல தலைவர்களும் கேட்டுக்கொண்டும்இ உண்ணாவிரதத்தை நிறுத்த காந்திஜி மறுத்துவிட்டார். “என் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றால்தான் உண்ணா விரதத்தைக் கைவிடமுடியும்” என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
7 அம்ச கோரிக்கைகளுடன் இன்னொரு நிபந்தனையையும் விதித்தார் காந்தி. இந்தியா _ பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்கு இந்தியா ரூ.75 கோடி தரவேண்டும். இதில் உடனடியாக ரூ.20 கோடி தரப்பட்டது. மீதமுள்ள 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு தந்தால் அதை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தும் என்று இந்திய அரசாங்கம் நினைத்தது. அதனால் பணத்தை அனுப்பாமல் நிறுத்தி வைத்திருந்தது.
“பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்கவேண்டிய ரூ.55 கோடியை உடனே தந்துவிட வேண்டும். தயக்கம் காட்டக் கூடாது” என்று காந்தி வலியுறுத்தினார். அவருடைய உயிரைக் காப்பாற்றஇ வேறு வழியின்றி இந்தக் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றது. “பாகிஸ்தானுக்கு சேரவேண்டிய ரூ.55 கோடியை உடனே அனுப்பி வைப்போம்” என்று துணைப்பிரதமர் வல்லபாய் பட்டேலும்இ நிதி மந்திரி ஆர்.கே.சண்முகம் செட்டியாரும் அறிவித்தனர்.
அமைதி காப்பதாக அனைத்து மதத்தலைவர்களும் கையெழுத்திட்டு உறுதிமொழி அளித்தனர். அதன் பிறகு ஜனவரி 18_ந்தேதி பகல் 12.45 மணிக்கு காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். காந்தியடிகள் தமது கடைசி உண்ணாவிரதத்தை தொடங்கியபோதே (ஜனவரி 13) அவரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் புனாவில் உருவாகத் தொடங்கியது. “பாகிஸ்தானுக்கு ரூ.55 கோடி கொடுக்கக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி விட்டார் மகாத்மா காந்தி” என்ற செய்தி “ஹிந்து ராஷ்டிரா” அலுவலகத்தில் இருந்த டெலிபிரிண்டரில் வந்தபோதுஇ அதை கோட்சேயும்இ ஆப்தேயும் பார்த்தனர்.
“காந்தியின் போக்கு இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது. இந்துக்கள் மானத்துடன் வாழவேண்டும். காந்தி உயிரோடு இருக்கும்வரை அது நடக்காத காரியம். எனவே இந்துக்களின் நலனுக்காக அவரை கொலை செய்வது ஒன்றுதான் வழி” என்று கோட்சே கூறினான். அதை ஆப்தே ஆமோதித்தான். காந்தியைக் கொலை செய்வது எப்படி என்று இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினார்கள்.
“இனியும் காலம் கடத்தக்கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் காந்தியின் கதையை முடித்துவிட வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தார்கள். “டெக்கான் கெஸ்ட் அவுஸ்” ஓட்டலை நடத்தி வந்த விஷ்ணு கார்கரே ஆப்தேயின் நண்பன். இந்து தீவிரவாதி. அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வந்தவன். கோட்சேஇ ஆப்தே ஆகியோர் தங்கள் சதித்திட்டத்தை அவனிடம் கூற அவன் உடனே அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
பிறகு மதன்லால் பாவாவுடன் கோட்சேயும்இ ஆப்தேயும் பேசினார்கள். பாகிஸ்தானில் இருந்து அகதியாக ஓடிவந்தவன் பாவா. பாகிஸ்தான் பிரிவினையில் பல இன்னல்களை அனுபவித்தவன். அவனும் காந்தியை ஒழிப்பதற்கு உதவி செய்ய முன்வந்தான். “காந்தியை எந்த முறையில் கொலை செய்வது?” என்று இவர்கள் ஆலோசித்தார்கள்.
“துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதே உசிதமானது” என்றான் ஆப்தே. “ஒரு துப்பாக்கியும்இ கொஞ்சம் பணமும் இருந்தால் போதும். வெகு சீக்கிரம் காந்தியை தீர்த்துக்கட்டி விடலாம்” என்றான் அவன். துப்பாக்கிக்கு எங்கே போவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது ஆப்தே மனக்கண்ணில் தோன்றியவன் திகம்பர பாட்ஜே. புனாவில் “புத்தக வியாபாரம்” என்ற பெயரில் புரட்சிக்காரர்களுக்கு ஆயுதங்களையும்இ வெடிகுண்டுகளையும் சப்ளை செய்து வந்த போலிச்சாமியார்.
பல்லி
::// உம்மைத்தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்? ஆனால் காந்தியைத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்க முடியும்?//
இது சரியான வாதம் அல்ல இன்று பிரபாகரனை தெரியாத தமிழனே இருக்க முடியாது, அதுக்காக அவரது அருமை பெருமைகளை நாம் பேசாமலா இருக்க முடியும்; இன்று உலகத்திலேயே அனைவரும் அறிந்த தாடிகாரன் பின்லாடன் அதனால் அவருக்கு சிலை எழுப்பமுடியுமா?
நாம் இங்கே காந்தியின் தனிபட்ட வாழ்வை பேசவில்லை, அது சத்திய சோதனையிலேயே கிழிந்து தொங்கி விட்டது, எமக்கு தேவை ஏதோ தனது பட்டினி போரால்தான் நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது என எண்ணிய மகானின் நிர்வாக சீர்கேடு? ஒரு நாட்டை நிர்வகிக்க தெரியாதவர் நிர்வாகிகளை தன்னுடன் இனைத்து கொள்ளாதது ஏன்? நேருவின் குடும்ப சொத்தாக இந்தியா போக யார் காரணம்; காந்திக்குகூட தான் தாக்கபட்ட பின்புதான் விடுதலை உனர்வு வந்ததாம், ஆனால் சுபாஸ் அப்படியா? ஏன் அவரது ஆதரவாளர் சிலரையாவது அன்று காந்தி தனது நிர்வாகத்தில் ஏற்று கொள்ளவில்லை, அவர்கள் இந்தியர் இல்லையா?
இதில் சுபாஸின் தோழர்கள் கூடியபாகம் தென் இந்தியாவை சேர்ந்தவர்கள், காந்தியின் போரட்டத்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்பதை என்னால் இன்றுகூட ஏற்றுகொள்ள முடியவில்லை, அன்று காந்தி வெள்ளையரிடன் லண்டனில் சொன்னாராம் தான் மேல்சட்டை போடுவதானால் இந்தியாவில் எல்லோருக்கும் துணி கிடைக்கும் நிலை வர வேண்டுமென; இது சொல்லியது 1948ல் (சரியோ தெரியவில்லை) இன்று 61 வருடமாகியும் இந்தியாவின் சேரிவாழ்வு போய் விட்டதா? உலகத்தின் மிக கேவலமான சேரியாக பம்பாயில் உள்ள தாராவி இருக்கிறது, இதுக்கு யார் காரணம், காந்தி இல்லையா? அவரது ஆரம்பகால நிர்வாகிகள் காரனம் இல்லையா? அந்த குடும்பத்தில் வாழ்க்கை பட்டதால் இன்று ஒரு வெளிநாட்டு பெண்மணியும் காந்தியாகி விட்டார், இவை அனைத்துக்கும் ஒரே காரணம் காந்தியின் அன்றய நிர்வாக சீர்கேடுதான்,
Kusumbo
பல்லி! உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. நான் கூடவந்த விடயம் நாம் 4பேருக்கு மட்டும் தெரிந்த மனிதர்களாக இருந்தும் எம்மால் அந்த 4 பேருக்குமே நல்லவராக இருக்க முடியவில்லை. கோடிக்கணக்கு மக்களை அகிம்சையில் அதுவும் பலாற்காரத்துக்கு எதிராக வழிநடத்துவது என்பது சாதியமானதா? இருப்பினும் முயன்றிருக்கிறார்கள் ஒரளவாவது வெற்றி வெற்றிருக்கிறார்கள் என்பது உண்மையே. காந்தியின் அகிம்சைப் போரால்தான் இந்தியா வெற்றி வெற்றது என்பதை விட இந்தியாவின் ஆத்மபலமே வெற்றி வெற்றது எனலாம். எதிரி எம் உயிரை எடுக்கலாம். நான் சாகும்போது கூட எதிரி என்மனதை வெல்லவில்லை என்றால் எதிரி என்றும் தோல்வியாளனே.
புலிகள் அழியலாம் போராட்டம் அழியலாம். அரசு வெற்றியைக் கொண்டாடலாம். ஈழத்தமிழர்களின் மனங்களை வெல்லாத வரை இராஜபக்ச தோல்லியாளனே. இரண்டாவது உலகயுத்தமே உண்மையில் ஆங்கிலேயனை வெளியேறச் செய்தது என்பது பலர்கருத்து. அப்படி ஒரு இக்கட்டை ஆங்கிலேயனுக்கு ஏற்படுத்தியது இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் போராட்டங்கள் ஆத்மீக ரீதியாக இருந்தமையே என்பது ஆத்மீகவாதிகளின் கருத்து. மனதில் தூய்மை> கொண்டது விடாமை எனும் விரதம்> உண்மை மனிதநேயம்> மக்களுக்காக மக்களின் போராட்டம் என்றும் தோல்வியடையாது. தோல்வியடைந்ததும் இல்லை. ஒத்துழையாமை என்பது பெரிய ஆயுதம். இதை இப்ப சன்சோசன் என்று ஆங்கிலத்தில் அலம்புகிறார்கள். இந்த ஆயுதத்தை முதலில் தூக்கியவர்கள் மகாத்மாவும் இந்தியருமே. ஒரு 5பேர் கொண்ட குடும்பத்தில் ஒருவர் சரியாக ஒத்துழைக்காமல் போனால் குடும்பம் அவ்வளவுதான்.
ஒரு நாடே ஒத்துழைக்காமல் போகும் போது ஆயுதங்களினால் ஆளமுடியாது. பல்லியின் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சிக்கிறேன் ஆனால் நான் காந்தியல்ல அவர் பக்தனும் அல்ல ஆயுதம் தூக்கிய அயோக்கியன்தான். காந்தி கொண்ட கொள்ளை வேறு சுபாஸ் கொண்ட கொள்கை வேறு. எதிரியாக நின்ற முஸ்லீம்களையும் தாழ்த்தப்பட்டவர்களாக நின்றவர்களை கரிஜனம் என்று ஏற்ற காந்தியால் சுபாசையோ அவர்களின் சீடர்கயோ ஏற்க முடியாது என்று இல்லை. காரணம் அது திலீபன் சத்தியாக்கிரகம் இருந்த மாதிரியும் லண்டனில் பரமேஸ்வரன் பட்டிணிப் பேராட்டம் செய்த மாதிரியுமே ஆகும். காந்தி கொண்ட கொள்கை வேறு ஆனால் காந்தி அவர்களை எதிர்கவில்லை என்பதை ஒத்துக் கொள்வீர்களா? பல்லி! எல்லோருக்கும் எல்லாத்திறமையும் இருக்க முடியாது. அதை காந்தி நன்குணர்ந்திருந்தார். பிரபாகரன் மாதிரி எல்லாம் நானே என்றால் புலிகள் மாதிரித்தான் முடியும் போராட்டம். மக்களைத் திட்டுட்டிப் போராடும் திறமையுடைய காந்திக்கு ஆழும் தன்மையும் அதிகாரம் செலுத்தும் தன்மையும் இல்லாமல் இருந்திருக்கலாம். அவரது வயதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்திய சுதந்திரப்பிரகடனம் வரும் போது காந்தியின் கையில் எல்லாம் இருக்கவில்லை என்பதை யாவரும் அறிவர்;
நான் காந்தியை நேசிப்பதற்கு ஒரே ஒரு காரணம் ஆத்ம பலமும் மக்களை ஒன்று திரட்டி மக்கள் போராட்டத்தை உருவாகியது. பட்டிணிப் போராட்டம் மட்டும் வெற்றியழித்தது என்பது வெறும் பொய்யே அது ஒரு மக்கள் போராட்டமாய் வடிவமைக்க உதவியது என்பது தான் உண்மை. இந்திய மக்களை அதுவும் 500 ஆண்டுகால அடிமை உணர்வேறிய மக்களை ஆங்கிலேயன் எனும் ஆதிக்க சக்திக்கு எதிராக பிடித்து வைத்திருப்பது என்பதே ஒரு பெரிய போராட்டம்? பல்லி நான் விதண்டாவாதம் செய்யவில்லை நிச்சயமாக சுபாஸ் சந்திரபொஸ்சையும் மக்களை மனதில் கொண்டு போராடிய போராட முனைந்த அனைவரையும் நேசிக்கிறேன் அதே போல்தான் காந்தியையும் நேசிக்கிறேன். அது மட்டுமல்ல ஆயுதத்துக் கெதிராக ஆயுதத்தைத்தான் பாவிக்கலாம் என்று எண்ணுபவர்கள் மத்தியில் இப்படி ஒரு ஒத்துழையாமை போராட்டதை முன்னெடுக்கால் என்று முன்னெடுத்து வெற்றி பெற்றவர் காந்தி. இது மாற்றுக்கருத்தியல் மட்டுமல்ல மாற்றுப் போராட்ட வடிவமுமே.
பல்லி
குசும்பு எனக்கும் காந்திமீது கோபம் இல்லை; என்னும் சொல்லபோனால் காந்தியின் வழி நடக்க முயல்பவனும் கூட, எனது ஆதங்கம் கிடைத்த கனியை (சுதந்திரத்தை) சரியான நிர்வாகதிறன் இல்லாமல் காந்தி கோட்டை விட்டதுக்கு என்ன காரனம் என யோசிக்கும்போது நாட்டுக்காய் பாடுபட்ட போராளிகளை விட்டு தனக்கு சாதகமானவர்களிடம் நாட்டை கொடுத்து விட்டு சென்று விட்டாரே என்பதுதான், அத்துடன் 200 மேற்பட்ட சுபாஸின் தோழர்களை பல்லி சந்திக்கவும் பழகும் வாய்ப்பும் கிடைத்தது, அதில் சிலர் இன்றுவரை பல்லியுடன் தொடர்புள்ளனர், அவர்கள் பட்ட கஸ்ற்றம் எல்லாம் கழகத்தினர் (தோழர்கள்) பட்டது போல் ஆகைவிட்டதே என்னும் ஏமாற்றம், இத்தனை வளர்ந்த புலி அடிமாடாய் போனதுக்கு காரனம் அவர்களது நிர்வாகிகளே; ஆக தலமை சரியான நிர்வாகிகளை தெரிவு செய்யவிடில் இந்தியாவின் சுதந்திரமும் முள்ளிவாய்க்காலும் ஒன்றுதான்; இருப்பினும் பல்லியும் முடிந்த மட்டும் காந்தியின் கொள்கையான அகிம்சையையே ஆதரிக்க முயல்கிறேன்;
நட்புடன் பல்லி,
Senthan
காந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி?]
October 11, 2009 – 12:08 am
அரசாங்க ஆவணங்களில் மகாத்மா என்றும் மற்றவர்களால் மோகன்தாஸ் என்றும் அழைக்கப்படும் காந்தி பிற்பாடுவந்த பல காந்திகளில் காந்தி அல்லாதவர்களை வடிகட்டிவிட்டால் எஞ்சுபவர். வாசிக்கும் பழக்கம் இல்லாதவராதலால் இவர் ஏராளமாக எழுதி சிந்தனையாளராக ஆனார். இந்தியாவுக்குச் சுதந்திரம் பெறுவதற்காக முப்பதாண்டுக்காலம் பலவகையிலும் போராடி சம்பந்தமில்லாத வேறு ஒருவகை சுதந்திரத்தைப் பெற்று சம்பந்தமில்லாதவர்களின் கையில் கொடுத்தமையால் இவரை தேசப்பிதா என்றும் அழைக்கிறார்கள்……………
http://jeyamohan.in/?p=4431
Kusumbo
நல்லது பல்லி உங்கள் ஆதங்கம் எனக்கு விளங்குகிறது. காந்தி ஒரு நல்ல போராளியாகவும் தியாகியாகவும் இருந்தாரே தவிர நல்ல அட்மினிஸ்ரேட்டராக இருக்கவில்லை. அதே வேளை பதவியாசையும் இந்ததில்லை. இந்தியா சுதந்திரமடைவேண்டும் இந்தியன் தன்னைத்தானே ஆளவேண்டும் என்று நினைத்தாரே தவிர கிடைத்த கனியைக் காப்பாற்றும் அளவுக்கு எதிர்காலம் சுபீட்சமாகத் தெரிந்திருக்க வில்லை என்பது என் எண்ணம். ஒன்றாய் போராடி ஒன்றாகவே இருப்பார்கள் பாக்கிஸ்தானியர்கள் என்று அவர் எண்ணிய கோட்டை ஜின்னாவால் உடைக்கப்பட்டது. எண்ணை திரண்டு வரும் வேளை பானையை உடைத்தார்கள் இஸ்லாமியார்கள். காந்தியிடம் நேர்மையும் தன்கொள்ளையிலான பிடிவாதமும் இருந்ததே தவிர அட்மினிஸ்ரேசன் பவர் இருக்கவில்லை.நேருவினூடாக மீட்டும் வெள்ளையர் கையில்தானே ஆட்சி வந்துள்ளது.