பொதுநலவாய நாடுகளின் 55 ஆவது பாராளமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்தன தலைமையிலான அமைச்சர்கள் குழு தன்சானியாவுக்கு பயணமானது.
‘எதிர்கால உலக சவால்கள்’ என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இலங்கை சார்பாக பிரதி சபாநாயகர் பிரியங்க ஜெயரத்ன, வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் கருணாரத்ன, சமன்சிறி ஹேரத், எட்வட் குணசேகர அடங்கலான குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டில் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்தன விசேட உரையாற்றவுள்ளார்.