புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிங்கப்பூரின் பிரபல அரசியல்வாதியும் கோடிஸ்வர வர்த்தகருமான பால்ராஜ் நாயுடு என்பவர் சிங்கப்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்தவாரம் தமது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் உத்தியோகபூர்வமாக தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் மீதான வழக்கு எதிர்வரும் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின்பேரில் பால்ராஜ் நாயுடு அமெரிக்கா, பிரித்தானிய பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட பால்ராஜ நாயுடுவை தம்மிடம் கையளிக்குமாறு அமெரிக்கா சிங்கப்பூரை கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது
சட்டம் பிள்ளை
குறித்த பால்ராஜ் நாயுடு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் மிக முக்கிய நண்பர் என்று தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட பெருந் தொகை ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றதனை அடுத்து புலனாய்வுப் பிரிவினர், சிங்கப்பூர் இரகசிய காவல்துறையினருக்கு இது குறித்து அறிவித்துள்ளனர்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் பால்ராஜ் நாயுடு அந்நாட்டு இரகசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பால்ராஜ் நாயுடு சிங்கப்பூர் அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது