”300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் : த ஜெயபாலன்

David_Milliband_LP_Conferenceஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒக்ரோபர் 1ல் நிறைவுபெற்ற தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் உள்ள பிரதான கட்சிகளின் வருடாந்த மாநாடு நடைபெற்று வருகின்றது. அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் இம்மாநாடுகள் மிகவும் முக்கியத்துவமானவையாக உள்ளது. குறிப்பாக தொழிற்கட்சி கடந்த மூன்று தேர்தல்களிலும் ஆட்சியைத் தக்க வைத்துள்ள நிலையில் இத்தேர்தலில் கடுமையான போட்டியைச் சந்திக்க வேண்டியுள்ளது. பிரித்தானிய பொருளாதாரம் மட்டுமல்ல சர்வதேசப் பொருளாதாரமே வீழ்ச்சி கண்டுள்ளதுடன் ஏற்கனவே 12 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சியினால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் மாற்றம் அவசியம் என்ற சிந்தனையை பிரித்தானிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

”இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் சிவில் யுத்தம் உயிர்களையும் உரிமைகளையும் பறித்துள்ளது” எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ”அரசாங்கங்கள் பிரஜைகளின் சிவில் சமூக அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

பிறைற்றனில் இடம்பெற்ற இம்மாநாட்டில் குரொய்டன் மிச்சம் பகுதி பா உ சியொபெய்ன் மக்டொனா பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைச் சுட்டிக்காட்டி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்து இருந்தார்.

இந்த விவாதங்களின் இறுதியில் இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு வழங்கிய 180 நாள் காலக்கெடுவிற்கு இன்னும் இரு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் இக்கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை இலங்கை அரசு முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதற்கான அழுத்தத்தை மேலும் வலியுறுத்தி உள்ளதாகவே கணிக்கப்படுகிறது.

இலங்கை அரசு முட்கம்பி வேலிக்குள் வன்னி மக்களை அடைத்து வைத்து மீண்டும் மீண்டும் தன் முகத்திரையைக் கிழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய அமெரிக்க உள்துறை அமைச்சுச் செயலர் கிலரி கிளின்டன் இலங்கை பர்மா பல்கன் நாடுகள் பாலியல் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டி உள்ளார். சர்வதேச அரங்கில் இலங்கை தனது மனிதவுரிமை விடயங்கள் தொடர்பில் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகின்றது. கிலரி கிளின்டனின் குற்றச்சாட்டு தொழிற்கட்சியின் தீர்மானம் என்பன சர்வதேச அரங்கில் இலங்கையை மதிப்பிழக்கச் செய்து வருகின்றது.

தொழிற்கட்சியின் மாநாட்டுக்கு முன்னதாக லிபிரல் கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெற்றது. அங்கு இலங்கை தொடர்பான குறிப்பான கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக உள்ள பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேடிவ்கட்சியின் மாநாட்டில் இலங்கை தொடர்பான குறிப்பான விவாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்கட்சியுடன் ஒப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான நிலைப்பாட்டைடேயே எடுத்து வருகின்றது. தமிழ் மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் உள்ள ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான போக்கையே கொண்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் லண்டனில் தமிழர்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் வல்லமையைக் கொண்டிருந்த போதும் அவ்வாக்குகள் முழுமையாக ஒரு குறிப்பிட்ட கட்சியை நோக்கிச் செல்லும் நிலையில்லை. இத்தேர்தலில் தொழிற்கட்சியின் கோர்டன் பிரவுணா? கொன்சவேடிவ் கட்சியின் டேவிட் கமரூனா? “நந்திக் கடலில்” கரையொதுங்குவார்கள் என்பதனை பிரித்தானிய மக்கள் இன்னும் சில மாதங்களில் தீர்மானிப்பார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 Comments

  • பல்லி
    பல்லி

    கருத்து முரன்பாடு இன்றி இவர்கள் தீர்மானத்துக்கு வலுசேர்க்கலாம், அது நம்மால் கண்டிப்பாக முடியும்; புலியும் தமிழரும் ஒன்றல்ல என்பதை பலர் புரிந்துகொள்ள வேண்டும்; அத்துடன் எம்மவர்க்கு யாரிடம் இருந்து நீதி பெற்றுதரபடுமாயினும் அவர்களுக்கு துணையாக நாம் அனைவரும் செயல்படவேண்டும், எமக்கிருக்கும் பக்கவாத நோயை உதவவருபவர்களிடம் புலியோ அல்லது புலியில்லாத அரசியவாதிகளோ திணிக்க கூடாது, சிலவேளை இந்த தீர்மானம் தொழில் கட்ச்சி தமது சுயலாபத்துக்காகவோ அல்லது கிளறி கிலிண்டன் தனது புகழுக்காகவோ பேசி இருந்தாலும் அதை எண்ணி நாம் ஏன் ஆராயவேண்டும், தமிழரை பலவழியில் பலர் தமது அரசியலுக்கு பாவித்துள்ளனர் என சொல்லுகிறார்கள், அதையே பாடமாக வைத்து வரும் சந்தர்ப்பங்களை நாம் தகுதியானவர்களை ஏற்று செயல்படலாமே என்பது பல்லியின் ஆதங்கம், இது பல்லியின் கருத்தே;;

    Reply
  • மாயா
    மாயா

    இப்படியான அழுத்தங்களும் குரல்களும் உலக அரங்கில ஒலிக்க வேண்டும்.
    அது அந்த மக்களது விடுதலையை தீவிரப்படுத்தும்.

    Reply
  • V Kumar
    V Kumar

    ஆயுதத்தை நம்பிய தம்பி,
    தம்பியை நம்பிய புலத்துப் புலிகள்,
    தமிழக அரசியல்வாதிகளின் பேச்சில் மயங்கும் தமிழர்

    இவர்களால் கம்பிவேலிக்குள் தவிக்கும் ஈழத்தமிழர்.
    எல்லோரையும் ஏமாற்றிப் பிழைக்கும் தமிழீழ கொள்ளையர் கூட்டமும் ஊடகங்களும்.

    சினிமாவை அரசியலாக்கிய தமிழகம்.
    அரசியலை சினிமாவாக்கியவர்கள் புலத்துத் தமிழர்கள்.// thurai on Sep 25

    இது பயங்கரவாதத்திற்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியே. தமிழரின் உருமைகளிற்கான் போராட்டத்திற்கல்ல். இந்த இழப்புகள் தமிழரிற்கு என்ன சொல்லி நிற்கின்றன என்பதை முதலில் யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்.இது உங்களுக்கு புரியுது ஆனல் நம்மா ஜனநாயகவாதிகலுகு புரியிதில்லையே.

    Reply
  • sanki
    sanki

    Hello Kumar

    “V Kumar on October 2, 2009 3:02 pm

    ஆயுதத்தை நம்பிய தம்பி,
    தம்பியை நம்பிய புலத்துப் புலிகள்,
    தமிழக அரசியல்வாதிகளின் பேச்சில் மயங்கும் தமிழர்”

    DID YOU see the heading before you write comment. Can you come for decent discussion?

    Please see you are no different to LTTE supporters same line on different side.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    காற்றடிக்கும் திசையைபார்த்து பாயைக்கட்டி பயணிப்பவர்கள் மேற்குலக அரசியல்வாதிகள். இதன் பின்புலத்தில் பஞ்சமாபாதகர்களும் மறைந்திருக்கிறார்கள் என்பதை கவனத்தில் எடுத்தால் மட்டுமே வெற்றிகரமாக காரியங்களை ஆற்றமுடியும். முகாம்களில்லிருந்து மக்களை வெளியேற்றி தங்கள் வீடுகளுக்கு செல்வதற்காண சகலஒத்துழைப்பையும் வரவேற்போம். அதே நேரத்தில் இலங்கைப் பிரச்சனையை இலங்கையன்தான் முடிவெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இலங்கைப் பிரச்சனையை இலங்கையன்தான் முடிவெடுக்க வேண்டும்//

    அதில் யாருக்கும் கருத்து முரன்பாடு இருக்காது; ஆனால் அதுக்கான அழுத்தத்தை யார் கொடுப்பது; எந்த தமிழ் அமைப்பும் இதுக்கு முன்வராது, அப்படி வந்தால் அவர்களது பொருளாதாரம் சீர்குலைந்து விடும்; அதனால்தான் சர்வதேசம் தமிழர்க்கு நியாயமான தீர்வையும் சிறையில் இருக்கும் மக்களையும் விடுவிக்க கோரி மகிந்தா குடும்பத்துக்கு அழுத்தம் கொடுக்க வெண்டும் என நாம் கருதுகிறோம், இதுவே சாத்தியமும் கூட; புலியை அழிக்கமட்டும் அரசு அயல்நாடுகளின் உதவியை நாடியதை யாரும் மறந்துவிட முடியாது, ஆகவே சர்வதேசம்தான் தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு பெற்றுதர உதவ முடியும்;

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    பல்லி நன்றி அருமையான விளக்கம்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தீர்மானமும் அழுத்தமும் வரவேற்கப்பட வேண்டிய விடயமே. ஆனால் இதே தீர்மானமும் கண்டிப்பும் ஏன் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் விடயத்தில் வரவில்லை. மாமியார் உடைத்தால் மண்குடமென்பது இதைத் தானோ??
    ஆப்கானிஸ்தானில் நடந்த தேர்தலில் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதற்காக அமெரிக்காவிற்கு பயந்து ஐ.நா தனது பிரதிநிதியை மீளப்பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. இதற்கு நேர்மாறாக ஐ.நா ஈரான் விடயத்தில் நடந்து கொண்டது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பல்லி ஏதோ வில்லங்கத்தில் மாட்டிவிடுவது மாதிரியே சிலகேள்விகளை தொடுகிறது சொல்லப் பயந்தாலும் சொல்லித்தான் தீரவேண்டும். சிங்களஇனம் ஒரு மகத்தான இனம். அவர்களுடன்வாழ தமிழர்கள்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். விரும்தோம்பல்களுக்கு பேர்போனவர்கள் தமிழர்கள் என்பதை புத்தகமூலமாக படித்து அறிந்திருக்கிறோம். உண்மையில் பெயர்போனவர்கள் சிங்களமக்களே! ஒட்டிஅரவணைத்து எத்தனை தமிழ்மக்களை பாதுகாத்திருக்கிறார்கள். எந்த குக்கிராமத்திலும் தமிழனின் சுறுட்டுகடை இல்லாததை காணமுடியாது. அவர்களை ஒட்டியே யாழ்பாணத்து பணக்காரர்கள் உருவானார்கள்.

    தமிழ் அப்புக்காத்துகள் உருவாக்கியதே சிங்களவெறி தனிநாடு..தனிஈழம்.. ஜனநாயக மரபின்படி ஐம்தொரு வீதம் இருந்தாலே போதுமானது தமது அதிகாரத்தை செலுத்துவதற்கு இலங்கைத்தீவில் எழுபத்தை வீதத்தை கொண்டவர்கள் சிங்களமக்கள் எதையும் பேசுவதற்கு எதையும் கதைப்பதற்கு எதையும் முடிவெடுப்பதற்கு உரிமை கொண்டவர்கள். திருகோணமலையோ மட்டக்களப்போ வவுனியாவோ ஒருசிங்கள குடியோ புத்தகோவிலோ வந்தால் திட்டமிட்ட குடியேற்றம் என தமிழ் அப்புக்காத்துமாரும் தமிழ் அரசியல்வாதிகளும் போராட்டத்திற்கு கிளம்பிவிடுகிறிரீர்கள். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் பனைமுனையில்லிருந்து தெய்வேந்திர முனைவரை தமிழன் இருக்காத இடத்தை யாராவது காட்டமுடியுமா? சிங்களவன்
    வந்துகுடியிருந்தால் புத்தகோவில் கட்டினால் திட்டமிட்ட குடியேற்றம் என்கிறீர்கள். குடியேற வந்தவர்கள் அரசகுடும்பத்தை சேர்ந்தவர்களோ மந்திரியின் குடும்பத்தை சோந்தவர்களோ அல்ல. சதாரண ஏழை மக்களே.

    இவ்வளவு புரிந்துணர்வை வைத்துக்கொண்டுதான் தமிழன் அரசியல் நடத்துகிறான் அதுமட்டுமல்லாமல் பிணக்கு தீர்க்க குரங்குகளையும் கூப்பிடுகிறார்கள். அதுவும்மல்லாமல் பிறநாடுகளில் வந்திருந்துகொண்டு பிறபாஷையை பேசிக்கொண்டு யதார்த்தத்துக்கு பிறம்பாக கதைப்பது எப்படி உங்கள் மனத்திற்கு ஒத்துவருகிறது? இது யாழ்பாண தமிழனாலேயே சாத்தியப்படகூடியதொன்று.

    Reply
  • jeeva
    jeeva

    ஆப்கானிஸ்தான் தேர்தல் முறைகேடுகள் உலகறிந்தது அமெரிக்க, இங்கிலாந்து ஊடகத்துறையினர் அங்கு செல்லக்கூடியதாக இருந்ததாலேயே.
    ஏன் வடக்கு ஸ்ரீலங்காவில் இல்லை? அமெரிக்காவினால் நியமிக்கப்பட்ட சிவிலியன் அதிகாரியே ஆப்கானிஸ்தானில் தேர்தல் ஊழல் நடந்ததாகச் சொல்கிறார்.

    —————
    பீற்ரர் கல்பெரெய்த் அமெரிக்கர் ஆவார். மேலும் திரு.பீற்றர் கல்பெரெய்த் இன் வெளியேற்றம் அமெரிக்காவுக்குத்தான் இழப்பு. இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது ஐ.நாவின் ஆப்கானுக்கான பிரதிநிதி திரு.காய் எடிக்கும் பீற்றர் கல்பிரெய்த்துக்கும் ஏற்பட்ட முறுகல் நிலை. காய் எடி தேர்தல் முறைகேடுகளை மறைக்க முயன்றார் ஆனால் கல்பெரெய்த் அப்பட்டமாக வெளியே சொன்னார்.

    ஆப்கானில் அமெரிக்காவின் தலையீட்டை 80% அமெரிக்க மக்கள் முன்னர் (2002-2007) ஆதரித்தபோதும் இப்போது அதுவும் ஒரு தேவையற்ற யுத்தம் என நினைக்கின்றனர் (50% மட்டுமே ஆதரவு). எனவே அமெரிக்க மக்கள் ஆதரவின்மையை காரனம் காட்டாமல் ஆப்கானிஸ்தான் மக்கள் ஆதரவற்ற கட்சிக்கு எமது ஆதரவும் இல்லை என சொல்வது ‘ஜனநாயக’ தோற்றத்தை ஏற்படுத்தும். ஆப்கானிஸ்தான் தேர்தலில் முறைகேடுகள் அரங்கேறின என்பதனை வெளிக்கொண்டுவருவதன் மூலம் ஆப்கானிஸ்தானில் முஹமட் காசாய் அரசு மக்கள் ஆதரவற்ற அரசு என்கின்ற உண்மையை ஏற்றுக்கொள்ளப் பண்ணுவதே நோக்கம். அதன்மூலம் ம்ஹ்கமட் காசாயின் அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பில் ஆப்கானிஸ்தானியரின் பங்களிப்பைக்கூட்டி அமெரிக்கா கழன்றுகொள்ள நினைக்கிறது. அமெரிக்காவில் எந்த முடிவும் சிவிலியன் நிர்வாகத்தின் கையிலேயே இருக்கும். ராணுவ விடயத்தில் ராணுவத்தின் பங்கு அதிகம் இருப்பினும் இறுதி முடிவை சிவிலியன் அதிகாரியே முடிவுசெய்வார். அமெரிக்கா அனுப்பிய சிவிலியன் அதிகாரியை ஐ.நா வேலையை விட்டு நீக்கி விட்டது.

    இப்போ அமெரிக்கா யாரை அங்கு அனுப்பி அலுவல் பார்க்கலாம் என குழம்பி இருக்கிறது. பார்த்திபன் நீங்கள் //ஆப்கானிஸ்தானில் நடந்த தேர்தலில் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதற்காக அமெரிக்காவிற்கு பயந்து ஐ.நா தனது பிரதிநிதியை மீளப்பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. இதற்கு நேர்மாறாக ஐ.நா ஈரான் விடயத்தில் நடந்து கொண்டது// என்கிறீர்கள்.

    ஏ.எஃப்.பி இவ்விடயத்தை எவ்வாறு நோக்குகிறது எனப்பாருங்கள்.
    Differences between Galbraith and the UN special representative to Afghanistan, Kai Eide, over how fraud allegations in the election should be dealt with became public earlier this month when Galbraith abruptly left Kabul to return to the United States.
    His removal was seen as a blow to US status in Afghanistan, and a victory to President Hamid Karzai, who had been under pressure from US officials, including Galbraith, to deal with endemic corruption.
    ————

    இங்கு இங்கிலாந்து/ஸ்ரீலங்கா அரசியல் தலைப்பில் அமெரிக்க/ஆப்கானிஸ்தான் அரசியல் விவாதித்ததற்கு மன்னிக்கவும். ஆனால் சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டி இருந்தது.

    Reply
  • Thaksan
    Thaksan

    நேற்றும் இன்றும் சுமார் 120க்கும் மேற்பட்ட கர்பிணிகள்> கைக்குழந்தைகள் கொண்ட குமடும்பங்களை முகாமிலிருந்து விடுவித்துள்ளார்களாம். இவர்களை பஸ்ஸில் ஏற்றி வந்து வவுனியா பஸ் நிலையத்திலும் வைத்தியசாலையின் முன்பாகவும் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இறக்கி விடப்பட்டவர்களுக்கு தமது இடங்களுக்கு செல்வதற்கான எந்த பயண ஒழுங்கும் செய்யப்படவில்லை. குறைந்த பட்சம் அவர்கள் தங்கள் சொந்த இருப்பிடம் போய்ச் சேரும்வரைக்குமாவது உணவுக்குக்கூட ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை. எத்தனையோ பினாமிகளை உருவாக்கிய புலிகள் தளத்தில் அல்லப்படும் மக்களுக்கு உதவ எந்தவொரு பினாமியையும் ஏற்படுத்தியிருக்கவில்லை என்பது அவர்களின் மக்கள் நலன் தொடர்பான அசட்டையை அப்பட்டமாக்குகிறது.

    புலிகள் உருவாக்கிய பினாமிகள் இன்று மெளனமாக தங்களுக்குள் முதலீடுகளை பங்குபோட்டுக் கொண்டு வாழ்விடங்களை மாற்றி சிறீலங்கா படைகளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு பம்மிக்கொண்டிருக்கிறார்கள். புளொட்காரருக்கும் வவுனியாவில் அரசாங்கம் ஆப்பு இறுக்கீட்டுதாம். அவை தேர்தலில் தனித்த நிண்டு வீரம்காட்ட வெளிக்கிட்டதால் வந்த வினை. கப்பம் வாங்கினாலும் ஏதோ நெல்லுக்கும் ஆங்கே பொசிய வைத்த புளொட் இப்ப தங்களுக்கே கையேந்துகினமாம். வாழ்க தமிழீழம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    இதை பல்லி சொன்னால் பல நம்பியார்களும் அசோகன்களும் ஏன்தான் மல்லுகட்டுகினமோ பல்லி அறியேன்!

    Reply
  • pandiyan Thambiraja
    pandiyan Thambiraja

    சந்திரன் ராஜா நாங்கள் பாவப்பட்ட இனம். ஒரு மகத்தான இனமான சிங்கள இனத்துடன் எங்களால் ஒற்றுமையாக வாழ முடியவில்லை என்னும் போது நெஞ்சு அடைக்கிறது. பரவாயில்லை நீங்களாவது அங்கு போய் குடியிருக்க வேண்டியது தானே? நான் உங்களுடன் தேசிய இனப்பிச்சனை சம்மந்தமாக ஒரு பகிரங்க விவாவதத்திற்கு தயாராக இருக்கிறேன். நீங்களும் தயார் என்றால் ஜெயபாலனுகு ஈமெயில் அனுப்புங்கள். என்னை பாண்டியன் என்ற பெயரில் அதிகமானவர்களுக்கு தெரியும்.

    வர்க்கப் புரட்சி பற்றி பேசும் நீங்கள் எனது தந்தையாரைப் போல நீர்ப்பாசன வசதிகளற்ற வளமற்ற துண்டு நிலத்தில் யாழ்ப்பாணத்து வறிய விவசாயி எத்தனை மணித்தியாலங்கள் கடுமையாக தனது உழைப்பை வழங்குகிறான் என்பதை நீங்கள் அறியாவிடின் நீங்கள் புலி ஆதரவாளர்களைப் போல பிழைப்பு நடத்தும் அரசின் ஆளோ என எண்ணத் தோன்றுகிறது. சுறுட்டுக் கடை வைத்திருந்தவர்களெல்லாம் பணக்காரன் என்று நீங்கள் எழுதிய பின்புதான் தெரிந்து கொண்டேன். நீங்கள் எப்பவாவது சுருட்டு செய்யும் இடத்தை கண்டதுண்டா?

    தயவு செய்து உண்மை முகத்துடன் வாருங்கள். விவாதிப்போம். உங்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தின்படி ஐம்பத்தயொரு வீதம் இருந்தாலேயே ஆட்சி புரிய முடியும். ஆனால் உங்கள் கருத்துப்படி எதையும் கதைப்பதற்கும் முடிவெடுப்பதற்கும் முடியாது. மற்ற இனத்தை அடக்கி ஆள முடியாது. அது ஐனநாயகம் அல்ல.

    நீங்கள் கூறுவது போல தமிழர்கள் சிங்கள பகுதிகளில் அரசின் உதவியுடன் குடியேறியவர்கள் அல்லர். தங்களது சொந்த பணத்தில் வளமற்ற யாழ்ப்பாணத்தில் இருந்து உழைப்பு தேடியும் பின்னாளில் சண்டை காரணமாகவும் குடியேறியவர்கள். தயவு செய்து புலியின் பயங்கரவாதத்திற்கும் அரசின் பயங்கரவாதத்திற்கும் முகம் கொடுத்த அப்பாவி தமிழர்களை வார்த்தைகளால் வதைக்காதீர்கள்.

    மீண்டும் கூறுகின்றேன். உங்கள் கடந்த கால் பின்னூட்டங்களில் இருந்தும் உங்களுக்கு தெரிந்த விடயங்களை எனக்கு விளக்கினால் நானும் தெளிவு பெற்று உங்களுடன் இணைந்து தமிழர்களின் (யூதர்களைப்போல) குணாதிசயங்களுக்கு எதிராக கிட்லரைப் போல போராடுவேன். தயவு செய்து உங்கள் உண்மை முகத்தைக் காட்டுங்கள்.

    பாண்டியன் தம்பிராஜா.

    Reply
  • பல்லி
    பல்லி

    பாண்டியன் உங்கள் விவாதத்தில் இந்த சின்ன பல்லிக்கும் இடம் உண்டோ, உங்கள் தந்தை போல் பல கிராம அனுபவங்களை தனது சுருக்கு விழுந்த உடலில் வைத்து கொண்டு எம்மிடமே நாட்டில் என்னதான் நடக்குது அப்பு? என கேக்கும் ஒரு கிராமவாசியின் மகன் என்பதால் சுருட்டுக்கு தேவையான புகையிலைதான் எமது பொருளாதாரம் என்பதாலும் பல்லிக்கும் அறியா பருவத்தில் அறிந்த பல விடயங்களை கருத்துக்களாய் தங்களுடன் கடிபடலாமா? அனுமதி இலவசமாக இருக்கட்டும்,

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    நன்றி பாண்டியன்,

    உங்கள் விவாதத்தில் நானும் பங்கேற்க விரும்புகிறேன். விவசாய/சுருட்டு கிராமத்தில் இருந்த்து வந்தவன். மேலும் சுருட்டு வியாபாரிகளாக ஆனமடுவ, கெக்கிராவை, மாத்தறை போன்ற இடன்களுக்கு தமது மனைவி, குழந்தைளை விட்டுப் பிரிந்து பணமீட்டி அவ்வப்போது அடிவாங்கி வெறும்கையுடன் மீண்ட மக்களை அயலவர்களாகக் கொண்டவன்.

    Reply
  • மாயா
    மாயா

    //சுருட்டு வியாபாரிகளாக ஆனமடுவ, கெக்கிராவை, மாத்தறை போன்ற இடன்களுக்கு தமது மனைவி, குழந்தைளை விட்டுப் பிரிந்து பணமீட்டி அவ்வப்போது அடிவாங்கி வெறும்கையுடன் மீண்ட மக்களை அயலவர்களாகக் கொண்டவன். – சாந்தன் on October 6, 2009 10:39 pm //
    சாந்தன், இவர்கள் அதிகம் அடி வாங்கியது தமிழர் என்பதால் அல்ல. போன இடங்களில், அடுத்தவர் பொண்டாட்டிமாரை தன் பொண்டாட்டிகளாக்கியதால். சிங்கள பெண்களுக்கு இவர்களால் பிறந்த குழந்தைகள்தான் ஜுலை கலவரத்தில் இவர்களுக்கு அதிகமாக அடித்தனர். சில கணவன்மார் கூட பிரச்சனைகளை சாதகமாக வைத்து இந்த கயவர்களை அந்த நேரம் பார்த்து ஆட்களோடு சேர்ந்து தாக்கினர். அதைக் கூட இவர்கள் இனவாதத்தால் தாக்கப்பட்டதாக நியாயப்படுத்திக் கொண்டனர். சிலர் அப்பாவிகள். எனக்கு தெரிய சுருட்டு, புகையிலை, சைவ கடை முதலாளிகளது பல வைப்பாட்டிகள் சிங்கள பெண்கள். வைப்பாட்டிகள் 2 – 3 என போனதாலும் அதே பெண்களே ஆள் வைத்து அடித்த சம்பவங்களும் உண்டு. வெத்திலை பாக்கு கொடுத்து விளையாடிய பனங் கொட்டைகளிடம் கேட்டால் சப்பிக் கொண்டே தமது லீலைகளை சொல்வார்கள்?

    Reply
  • jalpani
    jalpani

    ஆமாம் மாயா. இப்படித்தான் யூத வியாபாரிகள் ஜேர்மனியப் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருந்தபடியால் தான் கிட்லரும் யூதர்களை ஒழிக்க வேண்டும் என வன்மம் கொண்டானாம். தமிழாக்கள் மோசமானவர்கள். அழிக்கப்பட வேண்டும். அப்படித்தானே?

    ஒரு இனத்தின் பிரச்சனையை எதனோடு தொடர்புபடுத்திப் பேசுவது என விவஸ்தை இல்லையா?

    Reply
  • BC
    BC

    சுருட்டு வியாபாரிகள் அடிவாங்கியது பற்றியே இங்கே கூறப்பட்டது. அவர்கள் தங்கள் லீலைகளை பற்றி பெருமையா கூறுவது தெரிந்ததே.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    திரு பாண்டியன்தம்பிராஜா அவர்களே நான் சுருட்டு கூலித்தொழிலாளியின் மகன். நானும் ஒரு சுருட்டுதொழியாளியே!
    இந்த கதையெல்லாம் அரசியல் சம்பந்தபடாதது பாண்டியன் தம்பிராஜா உங்கள் தவறான சந்தேகங்களை தீர்பதற்கு மட்டுமே. அரசியல் கருத்துதென்று சொல்லும்போது யாழ்பாணியும் நானே! தமிழனும் நானே!! தமிழன் சுயநலமிக்கவன் என்பனும் நானே!! ஐக்கிய இலங்கையை கோரி பொதுநலமாக்க எல்லாஇனமும் சமவத்தும் அடைய முயற்ச்சி செய்பனும் நானே!!! அடுத்த பின்னோட்டத்தில் அரசியல் சம்பந்தபட்டதை மட்டும் கதைப்போம். நீங்கள் தொடராவிட்டாலும் நான் பின்தொடருகிறேன்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    யாழ்பாணி ஒவ்வொரு இனத்தின் அடிவரலாறுகளை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்களின் பின்புலங்களை ஆய்வுக்குள்ளாக்கப் படவேண்டும். ஒருஇனம் வெளிவரமுடியாதபடி முடங்கிப் போயிருக்கிறது. அது தன்நிலை அடைய வேண்டுமாயின் தனது சுயரூபத்தை திறந்து காட்டவேண்டியுள்ளது. மாயா செல்வதெல்லாம் பொய் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்ரா? அல்லது உள்ள முகமூடிகளை களைவதில் கெளரவக் குறைவாக இருக்கும் என எண்ணுகிறீர்ரா?.

    Reply
  • Thaksan
    Thaksan

    யாழ் சிற்றி பேக்கரி பாண் சாப்பிடாதவன் கொடுத்துவைத்தவன் என்று சொன்னால் அதில் உண்மை இருக்கெண்டு நம்ப எனக்கு கஸ்டம் தான். யாழ் சிங்கள மகாவித்தியாலயம் தமிழருக்காக அங்க தொடங்கப்ட்டதில்லை. ஒரு மகா வித்தியாலம் இருக்க வேண்டிய அளவிற்கு அங்கு சிங்கள மக்களும்> சிங்களம் படிக்க விரும்பிய மக்களும் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள்.

    1983 ன் பின் ஒரு சிங்கள குடிமகன்கூட வடக்கில் இருக்க அனுமதிக்கப்படவில்லை என்பது ஊரறிந்த உண்மை. 1992க்கு பின் ஒரு முஸ்லீம்கூட வடக்கில் வாழ அனுமதிக்கப்படவில்லையென்பதும் நாங்கள் கண்ட உண்மை. ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்களில் 60வீதத்திற்கும் மேற்பட்டோர் வடக்கு-கிழக்குக்கு வெளியே தான் இப்போதும் வாழ்கிறார்கள் என்ற யதார்த்தம் எங்களில் எத்தனை பேருக்கு விளங்குகிறது? பேயை விட பிசாசு பரவாயில்லையென்ற நிலைப்பாடு தான் இந்த 60வீதமானவர்களுக்கு இருந்திருக்கிறது என்பது தானே நிஜம்?

    அதற்காக நாங்கள் யாரையும் அண்டிப்பிழைக்க வேண்டும் என்பதில்லை. இந்த நாட்டின் சக பிரஜையாக உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதில் எந்த கருத்து முரணும் எனக்கில்லை. அதை உறுதிப்படுத்த எங்களின் பங்களிப்பு இந்த நாட்டின் சுபீட்சத்திற்கு அவசியமானது என்பதை நிரூபிக்க வேண்டும். வெறும் வடக்கு-கிழக்கல்ல முழு இலங்கையுமே எங்களது என்ற உரிமையை நாங்கள் கையிலெடுக்க வேண்டும். வரண்ட வடக்கை விட வளங்கொழிக்கும் மலையகமும் தென்னிலங்கையும் கிழக்கும் எங்கள் வசப்பட வேண்டும். எங்களுடன் கைகோர்க்க உண்மையான உழைக்கும் வர்க்கம் அங்கே காத்திருக்கிறது. முதலாளித்துவத்தின் மூச்சுக்காற்றுக்காக அங்கு பேரினவாதம் புகுத்தப்பட்டிருக்கிறது. அதை உடைத்தெறிய உழைக்கும் மக்களாக நாங்கள் ஒன்றுபடுவதை தவிர வெறும் “ஆண்ட பரம்பரை” கனவுகள் அகதிகளாகவே எங்களை இருந்தழியச் செய்யும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புரிதல் தவறாக இருக்கும்போது விளக்கங்களும் தப்பாகவே வந்தமையும்.தேசம்நெற் ஒரு பகிரங்கஇணைத்தளம் யாரும் வேண்டுமானாலும் எந்தப்பேரிலும் வந்து கருத்து சொல்ல முடியும். ஒருவர் கருத்துச் சொல்லும் போது வாசகங்களும் சொல்களிலும் துண்டு விழுவதும்யுண்டு. ஒரு சில பின்னோட்டங்கள் காணமல் போவதும்உண்டு இது தேசம்நெற்றின் தர்மமாக இருக்கலாம்.கருத்துசொல்பவரும் விரும்பினால் சொல்லாமலும் விடலாம்.சொல்லுவரை அனுமதிக்கும் வரை சொல்வோம் என்றும் இருக்கலாம். இந்த வழமைமுறை சாதாரணமானதே!

    பாண்டியனின் பாண்டித்தியமுறை என்ன வென்றால் ஈமெயில் அனுப்பட்டது திகதி குறித்து நாள்கிழமை பார்த்து தொடங்க வேண்டுமென்கிறார்.
    தேசம்நெற்றில் இருபதுமாதங்களாக ஒரே பெயரில் கருத்து சொல்லிவருகிறேன். இன்றும் அதை தேடிப்பிடிக்க முடியும். என்கருத்துகளில் யாரும்
    கட்டுபட்டுயிருக்க வேண்டும் என்றோ தவறான கருத்தாக இருக்கமுடியாது என்றோ நான் நினைத்ததில்லை. தவறுசெய்யாதவன் இருவர்தான் இருக்கமுடியும். ஒன்று கல்லறைக்கு போனவனும் கர்ப்பத்தில் இருப்பனுமே. இது எனக்கும் பொருந்தக்கூடியதே.

    கடந்தகால பின்னோட்டங்களை தவிர என்னிடம் வேறுஎதுவும் புதியகருத்துக்கள் இல்லை. திரு.பாண்டியன் தம்பிராஜா! கடந்தகால பின்னோட்டங்களை தேடிப்பிடிக்க முடியாவிட்டால் ஜெயபாலனின் உதவியை நாடுங்கள் நிச்சயம் செய்வார். அதில்லிருந்து தொடங்குங்கள் உங்கள் விவாதங்களை. “கள்ளன் போனபிறகு எடடா!விசுவா பொல்லை” என்றபாணியில் கதை சொல்லாதீர்கள். தமிழரின் குணாசியங்களுக்கா கொன்றொழிக்க வேண்டுமென்ற முடிவுக்கு நீங்கள் விளக்கத்தை கொண்டிருக்கும் போது உங்களிடம்இனி என்னத்தை எதிர்பார்கமுடியும்?. இருந்தாலும் தொடர்ருங்கள் வாசகர்கள் ஒரு புரிந்துணர்வைப் பெறுவார்கள்.

    Reply