குருநாகல் உடவல்பொல பிரதேசத்தில் இன்று காலை வான் ஒன்றில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட்ட 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குருநாகல் வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் போது குறித்த வாகனம் வீடொன்றின் முன்பாக தரித்திருந்த வேளையிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தனிப்பட்ட குரோதங்களே காரணம் என தெரிவிக்கப்படுகிறது
செல்வன்
குருநாகலில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த பாடசாலை மாணவியும் வேன் சாரதியும் உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை குருநாகல், உடுவல்பொலவில் வேனொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 மாணவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்தனர்
படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வந்த மாலியாதேவ பாலிகா வித்தியாலய மாணவியான எரந்திகா திஸாநாயக்கவும் (12 வயது) வேனின் சாரதியும் உயிரிழந்துள்ளார்.ஏனையோர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இந்த குண்டுவெடிப்புக்கு தனிப்பட்ட குரோதமே காரணம் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது குண்டு வெடிப்புச் சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாயா
இத் தாக்குதலுக்கு தனிப்பட்ட குரோதமே காரணமாக இருப்பதாக தெரிய வருகிறது. அத்துடன் இக் குண்டு வெடிப்பு தொடர்பாக, இராணுவத்தில் பணிபுரியும் குண்டுகள் தொடர்பான நிபுணர் ஒருவரே காரணமாகி இருப்பதாகவும், அவர் விரைவில் கைதாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பொரளி
குண்டுவெடிப்புக்கு தனிப்பட்ட குரோதமே காரணம் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார் அப்ப இது அவங்க இல்லீயா.
KP
//முன்னாள் பொரளி on October 2, 2009 8:23 pm குண்டுவெடிப்புக்கு தனிப்பட்ட குரோதமே காரணம் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார் அப்ப இது அவங்க இல்லீயா.//
எல்லாம் அவங்க என்று வர வேணுமே? அதை வச்சு நீங்க டமாரம் அடிக்க வேணுமே?
பல்லி
ஒருகாலத்தில் யார் செய்தாலும்………. நாம்தான் தலையின் சரிந்த பார்வையில் வெட்டி கிழித்தோம் என அறிக்கைவிட்ட பல பரபரப்புகள் கூட; இன்று அவர்கள் தான் செய்தாலும் ஜயோ இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; இது யாரோ KP மாட்டிவிட செய்யும் சதி என புலம்புவது தெரியாதா?
jeeva
பல்லி.. ‘..ஒருகாலத்தில் யார் செய்தாலும்……………;
இதை வாசித்தவுடன் கழகக்காரர் அம்பாறை சென்ரல் காம்ப் அடிச்ச விசயம் ஞாபகம் வரேல்லையோ? வர வேணுமே!