தமிழருவி மணியனின் ‘காந்திய அரசியல் இயக்கம்’ ஆரம்பம்

Maniyan_thamilaruvi‘காந்திய அரசியல் இயக்கம்’ என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்னற தமிழருவி மணியன் இன்று (02 ஒக்ரொபர் 2009) ஆரம்பித்து வைத்தள்ளார். காந்தியின் பிறந்த தினமான ஒக்ரோபர் 2 அன்று உலக அகிம்சை தினமாக அது பிரகடனப்படுத்தப்பட்டு இருந்த நாளான இன்று ‘காந்திய அரசியல் இயக்கம்’ தமிழருவி மணியனால் இன்று  சென்னை பிலிம்-செம்பரில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில தினங்களாக மேற்குலக விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு நாடுகளில் வதியும் புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து வந்த தமிழருவி மணியன் இவ்வரசியல் இயக்க வேலைகளைக் கவனிப்பதற்காகவே அவசரமாக நாடு திரும்பியதாக தமிழருவி மணியனின் வருகையை ஏற்பாடு செய்திருந்த வி போஸ் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த தமிழருவி மணியன் வன்னி அவலத்தை நிறுத்துவதற்கு இலங்கை அரசு யுத்த நிறுத்தத்தைச் செய்வதற்கான நிர்ப்பந்தத்தை வழங்கத் தவறியதற்காக தனது பதவியையும் கட்சியின் உறுப்புரிமையையும் தமிழருவி மணியன் துறந்தார்.

மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்து கூட்டங்களில் உரையாற்றிய தமிழருவி மணியன் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் மீது கொண்ட நம்பிக்கையும் அவர்களின் அரசியல் பலவீனமுமே இந்த அவலநிலைக்குக் காரணம் எனத் தெரிவித்து வந்தார். எதிர்காலத்தில் இலங்கைத் தமிழர்கள் ஆயுதப் போராட்டம் மூலம் எதனையும் சாதித்து விடமுடியாது எனவும் தமிழருவி மணியன் தான் கலந்துகொண்ட ஒவ்வொரு மேடையிலும் தெரிவித்து உள்ளார்.

‘காந்திய அரசியல் இயக்கம்’ ஒரு அரசியல் இயக்கம் அல்ல என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். காந்திய அரசியல் இயக்கம் கட்சி அரசியல் செய்கின்ற இயக்கமல்ல என்ற வகையில் அவர் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • பல்லி
    பல்லி

    இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம், என்னும் விளம்பரபலகை இல்லலாத குறை தவிர மிகுதியாவும்,,,,,,

    Reply
  • மகுடி
    மகுடி

    இவரும் இன்னொரு நெடுமாறன் ஆகிறார்? எல்லாம் லண்டன் பவுண் செய்யிற வேலை? உம்…..

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    இலங்கை வடக்குப் பகுதி வரலாற்றில், “கேப்டன்” என்ற ஒருவர், அரியாலையில், “டச்சு காரனுக்கோ, ஆங்கிலேயனுக்கோ” அடியாளாக செயல்பட்டு வந்தார் (கேப்டன் பிரபாகரன்?). தடியெடுத்ததால் தண்டல்காரனாக இருந்தார் (ஆரியகுளம் மணியன் மாதிரி). அந்த காலகட்டத்தில் இந்தியாவில் சென்னை மாநகரத்திலும் இப்படிதான் குப்பங்கள் உருவாகின (கடற்கரையை ஒட்டி), இதிலுள்ள அடியாட்கள் ஆங்கிலேயருக்கு சார்பாக லோக்கல் மக்களுக்கு எதிராக ரவுடிசத்தைப் பயன்படுத்தினார்கள், இவர்களுக்கு தரகர்களாக ஆங்கிலோ இந்தியர்கள் செயல்பட்டு வந்தார்கள், இவர்களுக்கு பெரும்பாலும் “துரை” என்ற பெயர்கள் உண்டு. உதாரணத்திற்கு, எங்கள் பகுதியில் பிரபலமாக இருந்தவர் “ரவுடி சுருட்டுக்கார துரை”. மன்னிக்கவும், திரு.பிரபாகரன் அவர்களை, இந்திய அரசாங்கம் இந்த “லெவலிலேயே” கையாண்டிருந்தது. குறிப்பாக மலையாளிகளின் அறிவுரைப்படி.

    இந்தத் தரவுகளை மாற்ற இலங்கைத் தமிழர்கள் ஏதாவது வழியில் செயல்பட்டிருக்கிறார்கள் என்றால், “இல்லை” என்பதே என்னுடைய பதில். புறநானூற்றுப் புடுங்கிகள் என்று, “தமிழை” வைத்து “மேளம் அடித்து” காலத்தையும், கதாகாலஷேபத்தையும் ஓட்டிக் கொண்டிருந்தவர்களை ஏமாற்றவே நேரத்தை செலவிட்டார்கள். புறநானூற்றுக் காலக் கட்டம் வேறு, விடுதலைப் புலிகள் துவங்கிய மேற்குலக செல்வாக்கு மிகுந்த காலக்கட்டம் வேறு,தற்போதைய காலக் கட்டம் வேறு. “ஃகார்ல் மார்ஃஸின்” இறுதிக்கட்ட வார்த்தைகள் செயல்படும் காலமிது. கிட்டதெட்ட “டார்க்கியிஸம்”(பினவலண்ட் டெஸ்போட்டிஸம்)தேவை. உற்பத்திப்பொருள்கள் மற்றும் சந்தைப் படுத்துதலால் விளைந்த “ஏகாதிப்பத்தியம்” தனக்குள்ளான, “உள் போட்டிகளால்”, பொருள்களின் விலைகள் மிக மலினப்படுத்தப்பட்டு, அதனால் ஏற்படும் நஷ்டங்களினாலேயே அழிவார்கள் என்பது. இந்த நிகழ்வுகளினால் ஏற்படும் தளம்பு நிலைகளில் உள்ள வரவு செலவு கணக்குகளை நிர்வகிக்கும் அமைப்புகளில் ஏற்படும் குளறுபடிகளின் “கிரிமினல் குழந்தைகளே(குற்றவாளிகளே) இந்த திடீர் “பில்லினேயர்கள்”.

    “பில்லினேயர்கள் என்னுடைய “இஷ்யு” அல்ல”, அவர்கள் தமிழ் என்ற சொல்லாடலின் தொடர்ச்சியாகவோ அல்லது சமூகத்தின் ஒரு அங்கமாகவோ இல்லாதிருப்பதுதான் என் “இஷ்யு”. யூதர்களின் உதாரணம் இங்கு பொருந்தாது- நீங்களே சுயமாக விவாதிக்கவும். இலங்கைப் பிரச்சனையில் ஆரம்பம் முதலே, “ஒரு முரண்பாட்டை” வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு (இந்தியாவுக்கு எதிராக)செல்வதில் மேற்குலகம் கொள்கையாக கடைப்பிடித்தது, இதன் “கடிவாளமாக” ஜே.ஆர்.ஜெயவர்த்தனே செயல்பட்டார், இந்தக் கடிவாளத்தை தன் கையில் எடுப்பதற்கே இந்திராகாந்தி அவர்கள் முயற்சி செய்தார்கள். தற்போது குளறுபடிகளில் பிறந்த “கிரிமினல் குழந்தைகள்”, அந்த முரண்பாடுகளை இழுத்துச் செல்லும் குழந்தைகளகவே இருக்கின்றார்கள். இந்தியா என்பது அரசியல் சட்டம் உட்பட பல விஷயங்கள், பிரிட்டிஷை பார்த்து நகல் எடுத்ததேயாகும், நிர்வாகமும் பொருளாதாரமும் அப்படியே. கலாச்சாரம் மட்டும்தான் தன்னகத்தானது. இலங்கைத் தமிழர்கள் முரண்படுவது இந்த “நகல் போலிகளுடன்தான்”. ஆனால் அவர்களும் நகல் போலிகள் என்பதால்தான் “எதிர்மறை திசையில்” பயணம் செய்ய முடியவில்லை. இந்த போலிகளுடன் “அட்ஜஸ்” செய்துகொண்டு வளர்ந்தவர்களே, கருணாநிதியும், அமிர்தலிங்கமும். அமிர்தலிங்கத்தின் பரிணாம வளர்ச்சியே பிரபாகரன், அவர் சுட்டது ஒரு தலைமை போட்டியே, அரசியல் முரண்பாடு அல்ல. இவர்கலின் வழிவந்த அரசியல் தற்போது, “இந்த நகல் போலியின் ஒரு பிரதியை” “தமிழர்களின் அரசியல் பிரச்சனையக” முன் வைக்க முயல்வது, விலை உயர்ந்த, அலங்காரமான, “முழுகிக் கொண்டிருக்கும்” “டைட்டானிக் கப்பலில்”, தமிழர்களை அவசரமாக ஏறச்சொல்லுவதற்கு சமமாகும்.

    Reply
  • Vannikkumaran
    Vannikkumaran

    புலம் பெயர் ஈழத்தமிழ் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுதல்.

    எமக்காக எம்தலைவர்களே செய்யாததை இந்த சுயநல ஏகாதிபத்தியவாத இந்திய அரசியல்வாதிகளோ தமிழக தமிழ் தலைவர்களோ செய்யப் போறதில்லை. மணியன் தான் அரசியல் அனாதை ஆகிவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில் வெளிநாட்டுத் தமிழரிடம் இருக்கும் இன்று இடைத்தங்கல் முகாம் மக்களின் கவலையை காசாக்கப் பார்க்கிறார் என்பதே தவிர வேறொன்றும் இல்லை.இவர்கள் எல்லாம் எங்கள் கவலைகளைக் காசாக்கும் அரசியல் வியாபாரிகள். தமிழக எட்டுக் கோடி தமிழரால் அயலில் 25 மைல் தொலைவில் தமிழருக்கு நிகழ்ந்த குரூரத்தை தடுக்க முடியவில்லை அல்லது உண்மையாக முயலவில்லை என்பதற்கு குடும்ப அரசியல் காக்க ஈழத்தமிழன அழிப்பைக் ஆதரித்துப் பேசி பெரும்பான்மை வெற்றி பெற்ற கருணாநிதியின் வெற்றிக்குப் பின்னும் தமிழருக்கு கொடுமை போக்க தமிழக தமிழர் உதவுவார்கள் என்று நம்பினால் அது எமது தப்பு.

    தமிழக தமிழர் தமிழ் பேசினாலும் அவர்கள் இந்தியர்கள் என்ற தேசிய உணர்வால் ஒன்றுபட்டவர்கள். அவர்கள் என்னதான் எமக்கு ஆறுதல் சொன்னாலும் இந்தியாவின் இறமைக்கு எதிராக எதுவந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இன்றைய எமது அவலத்துக்கு காரணம் தமிழக தலைவர்களின் பேச்சை நம்பி காலம் காலமாக தமிழ் மீது பாசம் காட்டி எமக்கு மாற்றான் தாய்போல் செயல்பட்ட தமிழக தலைவர்களின் தந்திரமே. காரணம் இலங்கையும் இந்தியாவின் ஒருபகுதியாக இணைக்கப்பட வேண்டும் என்ற பாரதியின் கனவும் 1948ல் அது இந்திய மானிலமாக்கப் படவேண்டும் என்ற நேருவின் கோரிக்கையும் அதை முறியடித்து இலங்கையத் தனிநாடாக பிரிட்டிஷ்சாரிடம் இருந்து துறைமுகங்களையும் விமானத்தளங்களையும் உயர்நீதிமன்ற உரிமையையும் விட்டுக் கொடுத்து இலங்கையை உருவாக்கிய டி எஸ் சேனாநாயக்காவும் சேர் பொன் இராமநாதனும் தொடர்ந்து தம் நாட்டின் இறைமையில் இந்தியா தலையிடாது என்ற எண்ணத்தினால் இலங்கையின் ஒருமைப்பாட்டுக் கொள்கையில் ஒருஉறுதியான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்காமையே இன்றைய அவல நிலைக்கு காரணம்.

    ஆனால் தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை தீர்க்கவும் கச்சதீவு விடயத்தில் தோற்றுப் போனதும் இலங்கையின் ஸ்திரத்தை குறைக்க இந்திரா காந்தி பூண்ட சபதமே இலங்கைக்கு எதிரான ஆயுதக் குழுக்களை இந்தியாவில் வளர்த்து அதை இலங்கையின் அரகசுக்கு எதிராக திருப்பி விட்ட அதே நேரம் அமிர்தலிங்கம் போன்ற சோரம் போகும் தலைவர்களை இந்தியா விலைக்கு வாங்கிய அதேநேரம் எம் ஜி ஆர் அவர்கள் மூலமாக பிரபாகரனையும் விலைக்கு வாங்கினார்கள். அது அவர்கள் இலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக் கொட்டிய பணங்கள் கொஞ்சமல்ல. அதற்கு விலைபோன இன்றைய ராஜபக்சவும் விதிவிலக்கல்ல. ஆனால் அழிந்தது தமிழர்கள் காரணம் புத்திகெட்டதனமாக விலைபோனபின் இந்தியாவின் சொல்லைக் கேட்காமலும் இலங்கை அரசுடன் நல்லுறவை வளர்க்காமல் ஆயுதத்தையே நம்பிதான் இந்திய அரசிடம் ஏமாந்ததிற்காக இன்று தமிழரின் மானம் மற்றும் இலட்சக்கணக்கான உயிர்கள் வளமான நிலத்தையும் பறிகொடுத்து கிட்லர் சுபாஷ் சந்திரபோஷ் பாணியில் மறைந்துகொண்ட அரசியல் சித்தாந்த அறிவற்ற பிரபாகரனே காரணம்.

    அதைவிடக்காரணம் தமிழர்கள் ஓர் ஸ்த்திரமற்ற ஆயுதப் போரட்டத்தில் நம்பிக்கை கொண்ட அதே நேரம் ஸ்த்திரமான அரசியலை வளர்க்காமல் விட்டது. இன்று இந்திய அரசும் இலங்கை அரசும் புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழரின் எஞ்சியுள்ள தமிழ் தாயக கோட்பாட்டு சிந்தனைகளையும் முயற்சிகளையும் அழிக்க மணியன் நெடுமாறன் போன்றோரை விலைகொடுத்து வாங்கி எம்மிடையே உலாவ விட்டிருக்கிறார்கள். இந்த இந்திய அரசுப் பினாமிகளின் பேச்சில் நாம் மயங்கினால் மின்மினிப்பூச்சியில் குளிர்காய்ந்த பஞ்சதந்திரக் குரங்குகள் ஆகிவிடுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இவ்வளவு தமிழர்கள் இழியும் போது வராத தமிழ்நாடும் இந்தியாவும் இனி எமக்கு எதற்கு?
    எட்டாத சாமந்திப் பூவை விட கைக்கெட்டிய ஊமத்தம் பூ மேல் என்பதே யதார்த்தம்.

    முதலில் நம் மீது நாம் நம்பிக்கை கொள்வோம். மணியன் மாதிரி மணிஅடிக்க பல தமிழ் நாட்டுப் பிரபல்யங்கள் இந்த காலகட்டத்தில் எமக்காக பரிந்து பேச பாசாங்கு காட்ட வருவார்கள் ஓட விரட்டுங்கள். நடைமுறைக்குச் சாத்தியமானதை நம்புங்கள் இனியும் நாம் இந்த விடயத்தில் நாம் திருந்தவில்லையானால் உலகில் தமிழினம் அற்றுப் போவதை தடுக்க யாராலும் முடியாது. தமிழக தமிழருக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் உங்கள் பேச்சால் தமிழால் கவரப்பட்ட ஈழத்தமிழருக்கு துரோகம் செய்து எம் அழிவுக்கு ஆதாரமான நீங்களும் நாளை உங்கள் இந்தி பற்றாளர்களால் அழிக்கப்படுவீர்கள் அப்போது உங்களை சர்வதேசத்திலும் ஆதரித்து இடைக்கலம் கொடுப்பவர்கள் ஈழத்தமிழர்களாகிய நாங்களாகத்தான் இருப்போம். உங்களைப்போல் இரணியர்களாக ஈழத்தமிழர்கள் ஒரு போதும் இருக்க மாட்டார்கள்.

    அன்புடன்
    வன்னிக் குமரன்

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /இன்று தமிழரின் மானம் மற்றும் இலட்சக்கணக்கான உயிர்கள் வளமான நிலத்தையும் பறிகொடுத்து கிட்லர் சுபாஷ் சந்திரபோஷ் பாணியில் மறைந்துகொண்ட அரசியல் சித்தாந்த அறிவற்ற பிரபாகரனே காரணம்./–
    1989ல், சி.வி.எஃப் என்ற ஈ.பிஆர்.எல்.எஃப். இளைஞர்களால், வெட்டி கொலை செய்யப்பட்டவர் என்று எனக்கு சொல்லப்பட்ட எல்.டி.டி.ஈ. போராளி ஒருவர் தற்போது சிங்கப்பூரில் வசிப்பதாக அறியமுடிகிறது. அவருடைய கூற்றின்படி,”வே.பிரபாகரன் உயிருடன் பத்திரமாக இருப்பதாகவும், இனி அரசியலில் தலைக்காட்ட மாட்டார் என்றும் உறுதியாக அறியமுடிகிறது!”. வன்னிக்குமரன்!, நீங்கள் மேலே (கட்டுரையில் முழுமையாக) கூறியுள்ள விடயங்கள், ஒரு “வெளிநாட்டையே பார்த்திராத வன்னிக் குமரனின் வாயிலிருந்து வந்திருந்தால், அவ்வளவும் அப்படியே தங்கக் கட்டிகள்”, இல்லையென்றால்……… ஏனென்றால் பெரும்பாலான இலங்கைத்தமிழர்கள் கருத்து என்ற “கன்டக்ஸ்டில்”, இது கல்வி ரீதியில் ஆராயப்பட வேண்டியது!.

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    வே.பிரபாகரன் உயிருடன் பத்திரமாக இருப்பதாகவும், இனி அரசியலில் தலைக்காட்ட மாட்டார் என்றும் உறுதியாக அறியமுடிகிறது! இதுக்கு முடிவே இல்லையா.

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    தமிழக தமிழருக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் உங்கள் பேச்சால் தமிழால் கவரப்பட்ட ஈழத்தமிழருக்கு துரோகம் செய்து எம் அழிவுக்கு ஆதாரமான நீங்களும் நாளை உங்கள் இந்தி பற்றாளர்களால் தண்டிக்கப்படுவீர்கள் அப்போது உங்களை சர்வதேசத்திலும் ஆதரித்து இடைக்கலம் கொடுப்பவர்கள் ஈழத்தமிழர்களாகிய நாங்களாகத்தான் இருப்போம். உங்களைப்போல் இரணியர்களாக ஈழத்தமிழர்கள் ஒரு போதும் இருக்க மாட்டார்கள். வன்னிக் குமரன் உங்களின் வலி எனக்கும் உண்டு சிலருக்குப் புரிவதில்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இதுக்கு முடிவே இல்லையா.//
    இதே நல்ல முடிவுதானே வேறு என்ன முடிவை எதிர்பார்க்கிறியள்;

    Reply
  • BC
    BC

    //வேறு என்ன முடிவை எதிர்பார்க்கிறியள்;//

    நவம்பர் 27-ம் தேதி தலைவர் உலகத்தை நோக்கி வீர உரையாற்றுவார்! என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /வன்னிக் குமரன் உங்களின் வலி எனக்கும் உண்டு சிலருக்குப் புரிவதில்லை./–
    வலியின் மூலமாக தவறான முடிவு எடுக்கிறீர்கள். 1945ல் ஜப்பானுடன் சேர்ந்து பிரிட்டிஷுக்கு எதிராக போரிட்டு, சிலநாட்களிளேயே, முப்பதாயிரம் தமிரர்கள் பலியானார்கள், அந்தமான் சிறையில் பலர் பலியானார்கள், இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா!. இதில் ஒரு ஈழத்தமிழன் ஒருவர் கூட இல்லை. இந்தப் போராட்டத்தில் இலங்கைத்தமிழர்கள் என்று கூறிக்கொண்டு, “தன்னலம்” அடைந்த, அதே போலுள்ள, தமிழகத் தமிழர்களுடன்தான் நீங்கள் முரண்படுகிறீர்கள்!. அண்ணல் காந்தியடிகள் பிரிட்டிஷாரிடமிருந்து, இறைந்துப் பெற்றது, “ஒரு டொமைன் அரசாங்கத்தைதான்(இடைகாலத்திற்கு)”, அந்த நிர்வாகத்தில் அப்படியே “சப்பென்று சாணி மீது உட்காருகிறமாதிரி” உட்கார்ந்துக் கொண்டு இந்தியாவை நகரவிடவில்லை இவர்கள்!. இது இந்தியா அல்ல, “இந்திய என்பது” இவர்கள் காலடியின் கீழ் ஆழமாக இந்துத்துவ அடையாளத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்கள் அதன்மீது அமர்ந்து சவாரி செய்கிறார்கள். தற்போது எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு இதுதான் காரணம். காலம் பதில் சொல்லும்…”ஜெய் ஹிந்த்!!”.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வே.பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதும் இனிஅரசியலில் தலையிடமாட்டார் என்பதும் ஒன்றுதானே! இதன் சூத்திரம் என்னவென்றால் புலிகளின் பெயரில் பணச்சுறுட்டல் தொடரும் என்றும் தமது தேவைகளுக்காக யாருடனும் கூட்டுவைத்துக் கொள்ள தயார் என்பதுமே. உதாரணத்துக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பை எடுத்துக்கொள்ளலாம்.
    புலம்பெயர்நாட்டில் ஜிரிவி. தீபம்தொலைக்காட்சி வெண்புறா புனர்வாழ்வுக்கழகம் இப்படியே அடிக்கிக்கொண்டே போகலாம்….

    Reply
  • பல்லி
    பல்லி

    //. வன்னிக் குமரன் உங்களின் வலி எனக்கும் உண்டு சிலருக்குப் புரிவதில்லை.//
    சரி புரியவில்லை அதுக்குதான் என்ன செய்யலாம் என சொல்லுங்கோ; அதவிட்டு வலிக்குது வலிக்குது என எம்மை கெலிக்க வைக்கலாமா? வலியின் உச்ச கட்டமே இதுதான்: 30வருட ஈழபோரின் முடிவு, முடிவு;?
    முடிவு,;தலைவர் இருக்கிறாரா?? அல்லது இறந்து விட்டாரா?? அல்லது ஓடோடி விட்டாரா???
    இதை பற்றி பட்டிமன்றம் நடத்தினால் கூட பாப்பையாவால் கூட தீர்ப்பு ஒத்திவைக்கபடும் நிலையில்; வலிக்குதென சொல்லி பின்பும் ஒரு பட்டிமன்றத்தை தயார்படுத்த முனைய வேண்டாம்; வலிக்கு சரியான ஆயுள்வேத மருந்து சிந்தனைதான்;

    Reply