அநுராத புரம் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைப் பிரிவொன்று இன்னும் மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுநீரக நோய் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் திலக் அபேசேகர தெரிவித்துள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வளவில் 2850 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஜந்து மாடிக்கட்டடத்தில் இப்பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனால், ரஜரட்ட பிரதேச சிறுநீரக நோயாளர்கள் நன்மையடையவுள்ளனர். இதற்கு முன்னர் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து கண்டி மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளுக்கு சென்றுவந்த இப்பகுதி நோயாளர்களுக்கு இது பெரும் வரப்பிரசாதகமாக அமையவுள்ளது.