தென்னிந் தியாவில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இதுவரையில் 200 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தாங்கள் எண்ணுவதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிராமங்கள் முற்றாக அடித்து செல்லப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கானவர்கள் வீடின்றி தவித்து வருகின்றனர். ஆந்திர பிரதேசத்தில் மட்டும் சுமார் இரண்டரை லட்சம் பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
பெருமளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியிருப்பதால் பயிர்கள் நாசமாகியுள்ளன. மீட்கட்டமைப்புக்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் தேவையாக இருக்கும் என மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.