ஆப்ரிக் காவில் வேறுவகையான காலனித்துவம் உருவாகி வருவதாக போப் பெனடிக்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்ரிக்க பிஷப்புகளின் மூன்று வார கால மாநாட்டை ஆரம்பித்து வைத்த போப் பெனடிக்ட் அவர்கள், அரசியல் காலனித்துவம் முடிவடைந்து விட்டாலும், வளர்ச்சியடைந்த நாடுகள் குப்பைக்கு ஈடான ஆன்மிக சிந்தனைகளை ஆப்ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறியுள்ளார். அத்தோடு மத அடிப்படைவாதத்திற்கு எதிராகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ரோமின் செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் விசேஷ பிரார்த்தனையுடன் இந்த மாநாட்டை போப் பெனடிக்ட் ஆரம்பித்து வைத்தார். இந்த மாநாட்டில் ஆப்ரிக்காவின் சமுதாய மற்றும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து ஆராயப்படும்.