ஐரோப்பிய ஒன்றியத்தின் பணிகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் லிஸ்பன் உடன்படிக்கையை அங்கீகரிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தமது நாட்டில் உள்ளதாக செக் பிரதமர் யான் பிஷ்ஷர் கூறியுள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த உடன்படிக்கை செக் நாட்டால் அங்கீகரிக்கப்படும் என்று தான் நம்புவதாக செக் நாட்டின் பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் ஜொஸ் மேனுவல் பரோசோவை சந்தித்துப் பேசிய பிறகு கூறியுள்ளார்.
இந்த உடன்படிக்கைக்கு செக் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் செக் அதிபர் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளும் ஒப்புதல் அளித்த பிறகுதான் லிஸ்பன் ஒப்பந்தம் அமலுக்கு வரும்.