தென் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதினால் தென்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் நாளை வெள்ளிக்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்தது. நாளை மூடப்படும் பாடசாலைகள் திங்கட்கிழமை வழமைபோல இயங்க ஆரம்பிக்கும்.
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்கள் வெள்ளிக்கிழமை காலைக்கு முன் தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு தேர்தல் திணைக்களம் வேண்டியுள்ளது. பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்கள் பாடசாலைகளிலே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.