என்னுடன் ஆய்வு கூடத்தில் பணியாற்றிய சக விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என வேதியியலுக்கான நோபல் பரிசு வென்றுள்ள வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு வென்றது குறித்து மகிழ்ச்சியுடன் உள்ளார் வெங்கி. இது குறித்து அவர் கூறுகையில், நான் ஆய்வு செய்து வரும் எம்ஆர்சி மூலக்கூறு உயிரியியல் லேப் மற்றும் உடாவா பல்கலைக்கழகம் எனக்கு நல்ல ஆதரவு கொடுத்தது. அங்கிருந்த சூழல், சக விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் எல்லாம் சேர்ந்து தான் எனக்கு இந்த பெருமையை தேடி தந்துள்ளது. என்னுடம் ஆய்வு கூடத்தில் பணியாற்றிய திறமையான சக விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்றார்.