மலையகப் பெருந்தோட்டங்களிலிருந்து வெளி இடங்களுக்கு வீட்டு வேலைக்காரர்களாகச் சென்றுள்ளவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டும் பணிகளை இவ்வாரம் ஆரம்பித்துள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.
தகவல்களைத் திரட்டுவதற்காகக் குழுக்களை நியமித்துள்ளதுடன், அதற்கெனத் தனியான ஒரு படிவத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளதாகக் கூறிய அவர் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகைக்குத் தோட்டங்களுக்குத் திரும்புவோரின் தகவல்களைத் திரட்டும் வகையில் விபரப் படிவங்களை விநியோகிக்க குழுக்களை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
thambi
என்ன? இன்னும் கற்காலத்தில் இருக்கிறார் போல. அமைச்சர் என்கிறார். அரசாங்க பதிவுகள் குடியகல்வு குடிவரவு பற்றிய தகவல்களை ஏன் விண்ப்பங்கள் கொடுத்து வீடு வீடாக போய் சேர்க்க வேண்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குழந்தைகள் கணக்கு பார்க்கும் விளையாட்டுப்போல இருக்குதே. இல்லை அமைச்சருக்கு எல்லாம் புதுசோ?