கொலன்னாவ, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் துண்டி ப்பு ஏற்பட்டது. இம்மின் துண்டிப்பினால் நாட்டின் சில பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய சகல பிரதேசங்களும் இருளில் மூழ்கியதுடன் மக்கள் பெரும் அசெளகரிய ங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது.
இதேவேளை, இம் மின் துண்டிப்பிற்கு நாசகார சதி முயற்சிகள் எதுவும் காரணமில்லையெனவும் இயந்திர தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணமெனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
மேற்படி விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்றை நேற்று நண்பகல் மின்சார சபை ஒழுங்கு செய்திருந்தது. சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இம்மாநாட்டில் மின்சார சபையின் தலைவர் ஈ. ஏ. எஸ். கே. எதிரிசிங்க பொது முகாமையாளர் திருமதி பீ. ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
இது தொடர்பில் விளக்கமளித்த மின்சார சபையின் தலைவர் எதிரிசிங்க; நேற்று அதிகாலை 1.30 மணியளவில் களனி திஸ்ஸ கொலன்னாவை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தென்மாகாணத்தைத் தவிர்ந்த நாட்டின் சகல பகுதிகளிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. இம் மின்நிலையத்தின் மூலம் 1,32,000 மெகாவாட் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுவருகிறது.
இம் மின் துண்டிப்பினை முழுமையாக சரிசெய்வதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் நேற்றுக் காலை 9,15 மணிக்கே இதனை சரிசெய்ய முடிந்தது. 60 வருட மின்சாரசபையின் வரலாற்றில் இத்தகைய நீண்ட மின் துண்டிப்பொன்று இடம்பெறவில்லையென தெரி வித்த அவர், நேற்று மதியமளவில் நாடு முழுவதிற்கும் 95 வீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.