வெலிமடை – பதுளை பிரதான வீதியில் 106வது கட்டையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால், அந்த வீதி மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது. பதிலாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்டதால் அந்த வீதியில் வாகனப் போக்கு வரத்து பாதிக்கப்பட்டிருந்தது. பாதை சீர்செய்யப்பட்டு போக்குவரத்து இடம் பெற்றுக்கொண்டிருந்தவேளை நேற்று முன்தினம் 106ஆம் கட்டையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
வீதி மூடப்பட்டுள்ளதால் வெலிமடையிலிருந்து பதுளை செல்லும் வாகனங்கள்
வெலிமடை, டயரபா, பண்டார வளை, அட்டம்பிட்டி ஊடாக ஹாலி -எல மார்க்கமாக பதுளை செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.