சிறையிலிருந்து கப்பம் கோரிய கைதிகள் தொடர்பான தகவல்கள் அம்பலம்

பொலிஸாரென்ற போர்வையில் தொலைபேசியில் பொது மக்களை அச்சுறுத்தி கப்பம் கோரிய சிறைக் கைதிகள் தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சிறைச்சாலையிலிருந்து 15 தொலைபேசிகளும் 45 சிம்கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மட்டக்களப்பு, கொழும்பு, கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களின் நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்பெடுத்து, அவர்களிடம் கப்பம் கோரப்பட்டுள்ளது.

“புலிகளின் தற்கொலைப் பிரிவினர், தற்கொலை அங்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் தொலை பேசியிலிருந்து உங்களுக்கு அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது! எனவே, உங்களைக் கைது செய்ய வேண்டும் இல்லையேல், 10 இலட்சம் ரூபாய் வழங்கினால் சமரசமாய்த் தீர்த்துக் கொள்ளலாம்’ என்று தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கப்பம் செலுத்த தயார் என்றதும் சம்பத் வங்கியின் 110353544211 மற்றும் 108053547393 ஆகிய கணக்கு இலக்கங்களிலும், செலான் வங்கியின் 06-0002612541101 என்ற கணக்கிலகத்திற்கும் பணத்தை வைப்பிலிடுமாறு கோரப்பட்டுள்ளது.

மெபிட்டெல் வலையமைப்பின் 0718929261, 0718929214 ஆகிய தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்பு எடுக்கப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம், இவ்வாறு கப்பம் கோரியவர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி 15 தொலைபேசிகளும், சுட்சுமமான முறையில் சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 சிம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற் கொண்டுள்ளனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *