வவுனியா நிவாரண கிராமங்களிலிருந்து விவசாயிகளை அழைத்து செல்ல ஏற்பாடு

190909paddy.jpgமுல்லைத் தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து வயற் காணிகளிலும் பெரும் போகத்திற்கு செய்கை பண்ணக் கூடிய விதத்தில் நிவாரணக் கிராமங்களிலுள்ள முல்லைத்திவு மாவட்ட விவசாயிகள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

வவுனியா, மன்னார் மாவட்டங்களிலுள்ள விளைநிலங்களில் பெரும் போக செய்கை மேற்கொள்ளப்படும் அதேவேளை முல்லைத்தீவிலும் தரிசு நிலங்களாகக் கிடக்கும் வயற்காணிகளில் செய்கை பண்ண உடனடியாக நட வடிக்கை எடுக்குமாறு வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பி. பணிப்புரைகளை வழங்கியதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்படாத இடங்களைத் தவிர ஏனைய பகுதிகளிலுள்ள விளை நிலங்களின் உரிமையாளர்கள் நிவாரணக் கிராமங்களிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அவர்களது சொந்த கானிகளில் இருந்தவாறு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.

அத்துடன் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களை மீளக்குடியமர்த்து வது தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வன்னி இராணுவ கட்டளை தலைமையகத்தில் நடைபெற்ற வடக்கு வசந்தம் மீளாய்வுக் கூட்டத்தி ற்கு தலைமை வகித்து உரையாற்றிய போதே அவர் இதைத் தெரிவித்து ள்ளார்.

வடமாகாண ஆளுநர் ஏ.ஜீ. சந்திர சிறி, அமைச்சர் ரிசாட் பதியுதீன், அத்தியாவசிய சேவைகள் ஆணையா ளர் நாயகம் திவாரட்ண, தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சின் செயலா ளர் குமாரசிறி, வடமாகாண சபை செயலாளர் ஏ.சிவசுவாமி, வவுனியா கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட் டங்களின் இராணுவ கட்டளை தளபதி, முக்கிய திணைக்கள தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மீளக்குடியேறும் விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நிவாரண கொடுக்கப்பனவாக 25 ஆயி ரம் ரூபாவும் ஆறு மாதத்திற்கு உலர் உணவுப் பொருட்கள், வீடு அமைத்து கொள்ள கூரைத்தகடுகள் மற்றும் விதை நெல், உரம், தேவையான உபகரணங்களும் வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *