தமிழகக் குழுவினர் இன்று மலையகத்துக்கு விஜயம்!

12kanimoly.jpgதமிழ கத்தின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை வந்துள்ள 10 பேர் அடங்கிய குழுவினர் இன்று மலையகப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பின் பேரில் மலையகத்திற்கு வருகை தந்த இக்குழுவில் டி.ஆர்.பாலு, கலைஞரின் மகள் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உட்பட பலரும் அடங்குகின்றனர்.
 
ஹெலிகொப்டர் மூலம் நோர்வூட் மைதானத்திற்கு வந்த இக்குழுவினர் அங்கிருந்து ஹட்டனை நோக்கி வாகனத்தில் பயணித்தனர். ஹட்டன் நகரை இன்று காலை 10.45 மணியளவில் வந்தடைந்த இக்குழுவினருக்கு ஹட்டன் நகர் வர்த்தகர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.

கனிமொழியைச் சுழ்ந்து கொண்டு மக்கள் அவரை மலர்மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.கலைஞர் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என உற்சாக கோஷங்கள் எழுப்பினர். மலையக மக்களின் வரவேற்பில் திக்குமுக்காடிப்போன கனிமொழி உள்ளிட்ட குழுவினரைப் பாதுகாப்பு பிரிவினர் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் மறுபடி வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றனர்.

இந்நிலையில் வாகனத்தைச் சுழ்ந்து கொண்ட மக்கள் கனிமொழி மற்றும் திருமாவளவனின் பெயர்களை உரக்க உச்சரித்து வாழ்த்துத் தெரிவித்தனர். சுமார் ஒரு மணிநேரம் இம்மக்களின் அன்புப் பிடியில் சிக்கிக் கொண்ட குழுவினர் கொட்டகலைக்குச் சென்றனர். இவர்களுக்கு அங்கும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • poor themulu
    poor themulu

    president said not allowed foreign cuontries, members of parliments, journalist many mmany government killed.Indian government gave all support killed tamils in the name of terror,mr Kuruna and mr.Childaram too did ugly game .

    Reply
  • appu hammy
    appu hammy

    Why did your team leader T.R.balu behave with public indecent way? Did you teach him how to behave with people who suffer a lot because of last 20 year war?

    Reply
  • மாயா
    மாயா

    ராஜீவுக்கு நடந்தது போல தனக்கும் நடந்து விடக் கூடாது எனும் அச்சத்தால் பாலுவுக்கு அப்படியாகியிருக்கலாமோ? உதவி செய்தவனுக்கே உபத்திரவம் கொடுக்கும் ஆட்கள் என விலகியிருக்க இப்படி நடந்தும் கொண்டிருக்கலாம்?

    திருமா என்ன?, ஆட்களை பார்க்காமல் பத்திரகையை பார்க்கிறார்?

    Reply