உலக‌த்தை ஏமா‌ற்றவே த‌மிழக எ‌ம்.பி.க்க‌ள் இல‌‌ங்கை பயண‌ம்: வைகோ

16-vaiko.jpgமுள்வேலி முகாம்களில் அவதிப்படும் ஈழத்தமிழர்களின் மனித உரிமை அவலங்களை மூடி மறைக்கவும், உலகத்தை ஏமாற்றவும் தமிழக நாடாளும‌‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் குழு இலங்கை சென்றிருப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ குற்றம் சா‌ற்‌றியுள்ளார்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், தமிழக அரசு என் மீது ஒரே குற்றச்சா‌ற்றுக்காக 2 முறை வழக்கு தொடர்ந்திருப்பது விசித்திரமானது. இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை ம.தி.மு.க அற வழியில் எதிர்கொள்ளும். அவற்றை கண்டு கவலைப்பட மாட்டோம்.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின. சென்னையிலும் வழக்கறிஞர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மிருகத்தனமாக தாக்குதல் நடத்தி தமிழக அரசு அந்த அறப்போராட்டத்தை ஒடுக்கியது.

இலங்கையில் நடைப்பெற்ற போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின. தமிழக சட்டமன்றத்திலும் இந்த கோரிக்கையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்திய அரசு ஒப்புக்காகக்கூட போரை நிறுத்த வேண்டும் என்று கூறவில்லை.

ஏனென்றால், அந்தப் போரை நடத்தியதும், போருக்கு திட்டமிட்டதும், போரை வழிநடத்தியதும் இந்தியாதான். ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரின் சாவுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் பொறுப்பாகும். யுத்தத்தை நிறுத்த குரல் கொடுக்காத மத்திய அரசு, தற்போது ஈழத்தமிழர்களின் ரத்தம் தொய்ந்த கரத்தையுடைய ராஜப‌க்சேவின் அழைப்பை ஏற்று தமிழக எ‌ம்.‌பி.‌க்க‌ளி‌ன் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

போருக்கு பிறகு ஐ.நா பார்வையாளர்களும், சர்வதேச பொது மன்னிப்பு சபையும் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்கள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர். முள்வேலி முகாம்களில் அவதிப்படும் ஈழத்தமிழர்களின் மனித உரிமை அவலங்களை மூடி மறைக்கவும், உலகத்தை ஏமாற்றவும் இப்போது தமிழக எ‌ம்.பி.க்க‌ள் குழு இலங்கை சென்றிருக்கின்றனர்.

இவர்களை அங்குள்ள அனைத்து முகாம்களுக்கும் செல்ல சிங்கள அரசு அனுமதிக்கப் போவதில்லை. இந்த குழுவின் பயணத்தால் ஈழத்தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை இக்குழுவின் பயணம் ஒரு கண்துடைப்பு நாடகம் என்று வைகோ கூ‌றினா‌ர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Sendoor
    Sendoor

    வைகோ அவர்களே நீங்கள் என்றைகாவது இலங்கை அரசை ராஜதந்திரத்துடன் அணுகி இருகிறிர்களா? களவாகச் சென்று பிரபாகரனை மட்டும் சந்தித்து விட்டு சிங்கள எதிர்ப்பை முன் வைத்து, தமிழ் நாட்டில் உங்கள் அரசியலை நடத்திநீங்கள்.
    இப்ப இலங்கைக்கு வந்திருக்கும் தமிழ் நாட்டு குழு சரியோ பிழையோ அவர்கள் புலிகளை அல்ல தமிழ் மக்களை சந்திக்க வந்துள்ளார்கள்.

    Reply
  • BC
    BC

    Sendoor, உங்கள் கருத்து மிகவும் சரியானது.

    Reply
  • மாயா
    மாயா

    கள்ளத் தோணியில் போன ஒருவர் , நியாயம் , அநியாயம் குறித்து பேச அருகதையே இல்லை. வைகோ போன்றவர்கள் அரசியல் நடத்த தினமும் தமிழர்கள் சாக வேண்டும். அது இனி தொடராது. இனி தனக்குள்ளே புலம்பலாம்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    இலங்கை விஜயம் தொடர்பில் பாலு,கனிமொழி திருமாவளவன் கருத்துக்கூறுவதற்கு தயக்கம்

    வீரகேசரி நாளேடு 10/13/2009 10:18:28 AM – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக பாராளுமன்றக் குழுவினரை சந்தித்து, அவர்கள் பார்வையிட்ட அகதி முகாம்களின் நிலைவரங்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் குறித்து அறிய முயற்சித்த போதிலும், அது சாத்தியமான பயனை அளிக்கவில்லை. தமிழக எம்.பி.க்களின் தூதுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் ரி.ஆர்.தங்கபாலுவை சந்தித்து பேச முயற்சித்த போதிலும் அது சாத்தியமான கிட்டவில்லை.

    தமிழக முதல்வரின் மகளும் எம்.பி.யுமான கனிமொழியை அணுகியபோது அவர் “நோ கொமன்ட்ஸ்” என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். இலங்கை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கட தமிழகத்தில் அதிக குரல் கொடுத்தவரும் விடுதலை சிறுத்தைகள் அணியின் தலைவருமான திருமாவளவனைச் சந்தித்தப்போது அவரும் செவ்வியளிக்க மறுத்ததுடன், ஓரிரு வார்த்தைகளை கூறினால் அவர் கூறுகையில்,

    முகாம்களில் இருக்கும் அகதிகள் தங்களை உடனடியாக மீளவும் தங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம். இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமுமே தீர்மானிக்கும் என்றார்.

    அந்தச் சந்தர்ப்பத்தில் முகாம்களிலுள்ள மக்கள், தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் விடுத்த கோரிக்கை என்ன? அதனை இந்தக் குழு விரைவாக நிறைவேற்றிக் கொடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று கேட்டபோது, முகாம்களை அவதானித்தோம். நேரில் கண்டதை மிக விரைவில் அறிக்கையிட்டு தமிழக அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம்.

    முகாம்களில் வாழ்கின்ற மக்கள் நிவாரணப் பொருட்களைக் கேட்க வில்லை. தமது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் வாழ்வதற்கே விரும்புகின்றனர் என்றார். மேலும் அவரிடம் விபரம் அறிய முயன்றபோது, மேலதிக விபரங்களை தொலைபேசியூடாக தெரிவிப்பதாக கூறி அதன் இலக்கத்தையும் பெற்றுக் கொண்டு நழுவினார்.

    -வீரகேசரி

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    திமுக குழுவினர் இந்தியா திரும்பியதும் கலைஞரிடம் தமது அறிக்கையை சமர்பிப்பார்கள் தானே. அதுவரை ஊடகங்கள் பொறுமை காப்பதில் என்ன பிரைச்சினை ?? வை.கோ போன்றவர்கள் போல் இந்தியக் குழுவின் வாயைக் கிளறி தமக்கு மெல்லுவதற்கு ஏதாவது அவல் கிடைக்காதா என நக்கீரன் போன்ற ஊடகங்களும் காத்துக் கிடக்கின்றன. பாலு வவுனியா அரச அதிபரிடம் கடிந்து கொண்டதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் கூட என்ன நடந்தது என்ற விபரத்தை தரவில்லை. தமது கற்பனைகளில் அப்படியிருக்குமோ இப்படி இருக்குமோவென சில ஊடகங்கள் எழுதியது தான் மிச்சம்.

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    The delegation from Tamilnadu may have realized that the welfare villages in the North are somewhat better than some places in Tamilnadu. Yes we agree the inmates have to be resettled in decent manner.No body need to tell us what we have to do. Sri Lankan(Sinhalese governments) gave us free meal, free eduation, free heath facilities, mother tongue education and so on. Progressive measures adopted by late Mr.SWRD enabled lower caste Tamils in Jaffna to enjoy education and state jobs. Lower cate tamils in the North were liberated from high caste Tamils suppression becuase of Sinhalese What is the position of the lower caste Tamils in Tamilnadu. Actually Tamilnadu govt must learn this from Sri lanka. The only think in their favour is the size and power.

    Reply