ஆப்கானிஸ் தானில் செயற்படும் ஐ.நாவின் தலைவரான கேய் எய்டி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தூதர்கள் புடை சூழ செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தோன்றியுள்ளார். அவருக்கு இருக்கும் சர்வதேச நாடுகளின் ஆதரவை காண்பிப்பதற்காகவே இவ்வாறு தோன்றியதாக பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகளை கேய் எய்டி குறைத்து காண்பித்ததாக, முன்னாள் துணை தலைவராக இருந்த பீட்டர் கால்பிரைத் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்தவுடன் பீட்டர் கால்பிரைத் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கேய் எய்டி, தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றது என்பதை ஒப்பு கொண்டுள்ளார், ஆனால் முறைகேடுகள் தொடர்பான சில தகவல்களை ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் ஐ.நா கொடுத்து விட்டதாகவும் கேய் எய்டி கூட்டத்தில் கூறினார்.