ஜிம்பா ப்வேயில் பிரதமர் மோர்கன் சுவாங்கிராய்யின் கட்சியான ஜனநாயக மாற்றத்துக்கான கட்சியுடைய மூத்த உறுப்பினரான ராய் பென்னெட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராய் பென்னெட் கைதானதை அடுத்து அரசாங்கத்தில் தங்களோடு கூட்டணி சேர்ந்துள்ள ஸானு பி.எஃப். கட்யுடன் ஒத்துழைப்பதை சாங்கிராய் நிறுத்திக்கொண்டுள்ளார்.
ராய் பென்னெட் சிறையில் இருக்கும் வரை தனது கட்சி அமைச்ச்சரவைக் கூட்டங்களிலோ அரசாங்க நடவடிக்கைகளிலோ பங்குகொள்ளாது என சாங்கிராய் தெரிவித்திருந்தார்.
ஜிம்பாப்வேயின் கூட்டணி அரசாங்கத்தில் விவசாயத்துறை துஅனி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த பென்னெட், சென்ற வாரம் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவர் மீதது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.