இந்தியா வின் மேற்கு வங்க மாநிலத்தின் இஸ்லாமிய மதப் பள்ளிக்கூடங்களான மதரசாக்களில் உள்ள ஆசிரியர்கள், அங்கு ஆங்கிலத்தை முக்கிய மொழியாக பயன்படுத்த ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 மதரசாக்கள் இந்த முயற்சியை இந்தக் கல்வியாண்டின் தற்போதை தவணையில் ஆரம்பிக்கும் என்று சிறுபான்மையின விவகார அமைச்சர் அப்துஸ் சத்தார் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள 566 மதரசாக்களும் இந்தத் திட்டத்தை இன்னும் சில வருடங்களில் ஆரம்பிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆங்கிலத்தின் பயன்பாடு இல்லாமல் மாணவர்கள் மிகத் தரமான கல்வியைப் பெற முடியாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் மதம் சார பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம் ஏற்கனவே பயன்படுத்தப்படுகின்றது.