பாகிஸ் தானில் தாக்குதல் நடத்திய தலி பான்கள் தங்களின் அடுத்த இலக்கு இந் தியா தான் என மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தலிபான் களின் தலைவர் மசூத் தெரிவித்துள்ளான்.
தலிபான் இயக்கத்தின் புதிய தளபதி ஹக்கீமுல்லா மசூத் பேசும் காட்சியை இங்கிலாந்தில் உள்ள ஒரு செய்தி சேனல் ஒளிபரப்பியது. அதில் அவன் கூறியதாவது,
பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பொலிசாருடன் நாங்கள் (தலிபான் தீவிர வாதிகள்) போரிட்டு வருகிறோம். ஏனெ னில், அமெரிக்க உத்தரவுக்கு ஏற்ப அவர் கள் செயல்படுகின்றனர். அமெரிக்க உத்தரவுகளை பின்பற்றுவதை அவர்கள் நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தினால், நாங்களும் எங்களுடைய தாக்குதல்களை நிறுத்துவோம். பாகிஸ்தானுக்குள் ஒரு இஸ்லாமிய நாடு உருவாக்குவதே எங்களுடைய லட்சியம். அப்படி ஒரு நாட்டை பெற்றதும், எல்லை வழியாக இந்தியாவுக்குள் நாங்கள் செல்வோம் அங்கு, இந்தியர்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்துக்கு (தீவிரவாத செயல்களுக்கு) நாங்கள் உதவி செய்வோம் என்று ஹக்கிமுல்லா மசூத் கூறினான்.