இலங்கையரான உலகப் புகழ்பெற்ற அமெரிக்க வர்த்தகர் கைது

3333raj-rajaratnam.jpgவர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையரான, புகழ் பெற்ற அமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார்.  உலகப் பிரசித்தி பெற்ற கெலொன் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்த வரிசையில் 559ஆம் இடத்தை வகிப்பவருமான ராஜ் ராஜரட்னம் நேற்றைய தினம் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடியான முறையில் இலாபமீட்டியுள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற இவ்வாறான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி உதவி வழங்குவதாக ராஜரட்னம் ஒப்புக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    ‘….மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது….’

    அருட்செல்வன்,
    உங்களுக்கு எப்போதும் மில்லியனுக்கும் பில்லியனுக்கும் வேறுபாடு தெரிவதில்லை. ஈட்டப்பட்ட வருமானம் 20மில்லியன்கள், பில்லியன் அல்ல.
    He said the scheme made more than $20 million in illegal profits over several years.

    மேலும் அவர் (ராஜ் ராஜரட்னம்) ஸ்ரீலங்கா எம்.பி ஒருவரின் வங்கிக்கணக்கில் 3 மில்லியன் டொலர்கள வைப்பிலிட்டுள்ளார்.

    ‘… connected with an indictment against a Sri Lankan member of Parliament and two others, according to the Daily Mirror of Sri Lanka.

    The MP and his two accomplices were indicted for depositing $3 million in a private Sri Lankan bank without informing the nation’s central bank, a violation of Sri Lanka’s banking rules. According to the indictment, $1 million of the funds came directly from Galleon on Dec. 22, 2006, and $2 million were deposited by Mr. Rajaratnam on Jan. 3, 2007. The funds were intended to purchase shares in the Union Bank of Sri Lanka, according to the Mirror…’

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சரியான பதில் 20 பில்லியன் டொலர் தான்.அருட்செல்வன் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

    Reply
  • santhanam
    santhanam

    புலம் பெயர்ந்த தமிழரின் சுனாமியின் பணக்காரர்கள்???

    Reply
  • பல்லி
    பல்லி

    புலிக்கு உதவ நினைத்தாலே யாராய் இருந்தாலும் ஏழரைசனி குடும்பதோடு குலம் விசாரிக்க தவறுவதில்லை;
    ராசரத்தினத்துக்கு யாராவது ஒரு பொட்டளம் எள் எண்ணை எரிக்கபடாதா??

    Reply
  • Karen
    Karen

    //தற்போது ஏற்ப்பட்டிருக்கும் “பொருளாதர நெருக்கடியே” அநாவசியமாக பல “பில்லினேயர்கள் உருவானதால்தான்”. “பணத்தின் அர்த்தம்”, பொருள் உற்ப்பத்தியில் தங்கியிராமல், உற்ப்பத்தி மூலம் சேர்ந்த பணத்தை கையாளும் முறையில் “மாறத் துவங்கி விட்டதால்தான்” (வங்கி,ஹெட்ஜ் பஃண்ட்ஸ், முதலீட்டு நிறுவனங்கள்…போன்றவை). இது பொருளாதாரத்தை “ஒரு கெசினோ கிளப்” போன்று ஆக்கிவிட்டது!.// DEMOCRACY on September 21, 2009 3:51 pm

    //இங்கு நண்பர் டெமொகிரசியின் கருத்து முக்கியமானது. ஆனால் கட்டுரை செய்திக்கு வெளியே சென்றுவிடும் என்பதால் அது பற்றி ஆழமாகச் செல்லவில்லை. டெமொகிரசி குறிப்பிட்டது போல் ஹெச் பண்ட் பில்லியனரே ராஜ் ராஜரட்ணம். இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இவ்வகையான ஹெச் பண்ட் நிதிமுகாமைத்துவமே முக்கிய காரணம். இவற்றை அரசுகள் கூடுதலாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.

    பேர்னாட் மேடொப் இன் 150 பில்லியன் டொலர் ஹெட்ச பண்ட் மோசடி அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று. 71 வயதான மேடொப் க்கு 150 வருடத் தண்டனை பொருளாதார வீழ்ச்சியின் கீழ் அந்தத்தில் உள்ள மக்களுக்கு எவ்வித நன்மையையும் வழங்கப் போவதில்லை. மேடொப்பின் பெருமளவிலான சொத்துக்கள் அவருடைய பெயரில் இல்லை. தகவலுக்காக.// Jeyabalan T on September 21, 2009 8:01 pm

    //ஒரு சிறிய திருத்தம். மோசடி 150 பில்லியன் அல்ல மாறாக 50 பில்லியன் அளவிலேயே இருக்கும். இது அவரால் மிகைப்படுத்திக்காட்டப்பட்ட இலாபமும் சேர்த்தே.
    அவ்வாறான இலாபம் கழிக்கப்படுமிடத்து மோசடி 30 பில்லியன்கள் வரையே இருக்கும் என்கிறார்கள். நியூயோர்க் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எந்த குற்றப்பத்திரிகையிலோ அன்றி வர்த்தக செய்தி ஊடக விமர்சகர்களோ 150 பில்லியன்கள் எனச் சொல்லப்படவில்லை. ஆனாலும் ஹெச் பண்டுகளின் ஆதிக்கம் அளவுக்கதிகமானது என்ற உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டும்!// jeeva on September 21, 2009 11:47

    Reply
  • Kandaswamy
    Kandaswamy

    பல்லி,
    ஏன் நீங்கள் எரிக்க கூடாது (எள் எண்னயை)?

    இதுக்கும் கந்தசாமி வர வேனுமா?

    Reply
  • மாயா
    மாயா

    இப்படியான கைதுகள்தான் , புலிக் கோஸத்தை புலத்தில் தொடராமல் பண்ணும். இல்லையென்றால் எதிர்கால சந்ததிகளையும் முகாம்களில் தடுத்து வைக்கவும் , மாவீரராக மண்ணில் மடியவும் இவர்களது பணம் வழி செய்யும்.

    இனியும் தமிழர் சாதல் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘…சரியான பதில் 20 பில்லியன் டொலர் தான்.அருட்செல்வன் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்…

    சந்திரன்.ராஜா, அருட்செல்வன்….

    கீழே உள்ள அமெரிக்க நீதி அமைச்சின் லிங் இல் அமெரிக்க அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உள்ளது அதில் இவர் எவ்வளவு லாபம் சம்பாதித்தார் என விளக்கமாக தெரிவித்துள்ளனர். யாவரும் வாசித்து அறிந்து இன்புறலாம். நான் ‘கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன’, ‘மக்கள் பேசியதாக அறியப்படுகிறது’ போல சொல்லவில்லை.
    http://www.usdoj.gov/usao/nys/hedgefund/rajaratnamrajetalcomplaint.pdf

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    Rajaratnam was linked to the controversial US$ three million channelled to UNP Parliamentarian Ravi Karunanayake. At the local hearing, Karunanayake had admitted that it was Rajaratnam who credited US$ three million to the MP’s nominee’s account. The case is due to be taken at the Colombo High Courts later this month. Rajaratnam has given more than US$3.5 million to the LTTE front organisation – Tamil Rehabilitation Organization (TRO) whose assets were frozen by the US Treasury Department in Nov. 2007

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ’…இப்படியான கைதுகள்தான் , புலிக் கோஸத்தை புலத்தில் தொடராமல் பண்ணும்….’

    எப்படியெல்லாம் ‘முடிச்சு’ போடலாமோ அப்படி எல்லாம் போடுங்கள்.
    கீழே ராஜ் ராஜரட்னத்தின் இன்ரவியூவில் இருந்து ஒரு பகுதி. இது ஸ்ரீலங்காவில் 2005 அளவில் கொடுக்கப்பட்டது. அப்போது அவர் CIMA மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். அதில் களுத்துறை மாணவர் கல்வி, சுனேரா ஃபவுண்டேசன் போன்ற ‘புலிக்கோசம்’ இருக்கிறது காணுங்கள்.

    “I have funded orphanages in Mullaitivu, as much as I have funded education projects in Kalutara. I funded Vanni Tech as much as I funded Sunera Foundation. I know there is speculation, but I don’t worry about it one bit. When somebody is successful, apparently it appears that no good deed goes unpunished. People don’t understand philanthropy in this country” & “ Here when you do charity people say that I have got political ambitions. I am very tenacious, so these statements are not bothering me,”

    மேலும் நான் முன்னர் குறிப்பிட்ட (3 மில்லியன் வைப்பு) எம்பி யின் பெயர் ரவி கருணாநாயகா என கசிந்துள்ளது. அத்துடன் நாளை கொழும்பு பங்குச்சந்தை நிலவரம் ராஜ் ராஜரட்ணத்தின் கைதினால் குழப்பநிலைக்குச் செல்லும் என எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் இவர் ஸ்ரீலங்காவின் முன்னிலை வகிக்கும் 10 கம்பனிகளின் பிரதான முதலீட்டாளராக இருக்கிறார். இவரின் ஸ்ரீலங்கா முதலீடுகளை முகாமைத்துவம் செய்பவர் கோடீஸ்வர பெண்மணியும் அமைச்சர் ஒருவரின் மனைவியும் ஆவார் (மிலிந்த மோரகொட??)

    Reply
  • மாயா
    மாயா

    // எப்படியெல்லாம் ‘முடிச்சு’ போடலாமோ அப்படி எல்லாம் போடுங்கள்.//

    ஒரு கிரிமினல், கொடை வள்ளலாக என்ன கொடுத்தாலும், அவர் கிரிமினல்தான். என்ன செய்துள்ளார் என்பதை அனைவரும் அறிவர். கிரிமினல்களை, மா மனிதர்களாக பார்த்தே பழகி விட்டார்கள். இது மாறும்வரை தமிழன் தலை நிமிராது.

    பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடியான முறையில் இலாபமீட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. இவர் 2006-2007ம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற இவ்வாறான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இணையத்தினூடாக ஊடுருவி ஏனைய இடங்களில் உள்ள விபரங்களை பெற்றதுடன், சில நிறுவன முக்கியஸ்தர்களுக்கு லஞ்சம் கொடுத்து தகவல்களை பெற்று பணக்காரராகியுள்ளார். இவர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    வாஷிங்டன்: அமெரிக்காவில் நிதி மோசடியில் (insider-trading) ஈடுபட்டதாக முக்கிய நிதி நிறுவன அதிபரான தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதியுதவி செய்து வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. வாஷிங்டனில் கெல்லியான் குரூப் என்ற முதலீட்டு நிறுவனத்தை (hedge fund) நடத்தி வருபவர் பில்லியனரான ராஜ் ராஜரத்தினம். இவர் பங்குகளை விற்றதில் முறைகேடு செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ள எப்.பி.ஐ. அதிகாரிகள், இவர் விடுதலைப் புலிகளுக்கும் நிதியுதவி செய்து வந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள தமிழ் மறுவாழ்வு இயக்கம் ( Tamil Rehabilitation Organization) என்ற சமூக நல அமைப்புக்கு இவர் வழங்கிய 3.5 மில்லியன் டாலர் நன்கொடைகள் புலிகள் இயக்கத்துக்குப் போய்ச் சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இந்த பங்கு மோசடி தொடர்பாக ராஜரத்தினம் (52) தவிர மேலும் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக பங்குகளை விற்றதில் ராஜரத்தினமும் அவரது கூட்டாளிகளும் 20 மில்லியன் டாலர் வரை பணம் ஈட்டியுள்ளதாக எப்பிஐ கூறியுள்ளது. இவரது கெல்லியான் குரூப் நிறுவனம் 3.7 பில்லியன் டாலர் அளவுக்கு பொது மக்களின் முதலீடுகளை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தக்கு 7 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்து உள்ளது.

    ஆனால், ராஜரத்தினம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவரது வழக்கறிஞர் ஜிம் வால்டன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், இலங்கையில் சுனாமியில் இடிந்துபோன வீடுகளைக் கட்டத்தான் மேரிலாண்ட் சமூக சேவை நிறுவனத்துக்கு நன்கொடையை அளித்தார். அது விடுதலைப் புலிகளுக்குத் தரப்பட்டதல்ல. அவருக்கு புலிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை.

    தமிழ் மறுவாழ்வு இயக்கத்துக்கு மிஸ்டர் பி என்பவர் நிதி அளித்துள்ளதாகவும், அது ராஜரத்தினம் தான் என்றும் எப்பிஐ கூறுவது கேலிக்கூத்தானது எனறார்.

    இந் நிலையில் ராஜரத்தினம் சிக்கலில் மாட்டியுள்ளதால் பல இலங்கை இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் சட்ட விரோதமாக ஈட்டிய நிதியும் ராஜரத்தினத்தின் நிறுவனம் மூலம் பல நிறுவனங்களி்ல் முதலீடு ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    அதிபர் ராஜபக்ஷே, முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசி்ங்கே உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களையும் ராஜரத்தினம் பலமுறை சந்தித்துள்ளார் என்கிறார்கள்.

    புலிகள் இயக்கத்தில் உள்ள சிறார்களுக்கு மறுவாழ்வு அளிக்க ராஜரத்தினம் 1 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கத் தயாராக உள்ளதாக கடந்த செப்டம்பரில் இலங்கை நீதித்துறை அமைச்சர் மிலிந்த மொரகோடாவிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அவரிடமிருந்து இந்த நிதியைப் பெறக் கூடாது என்று வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா அதிபர் ராஜபக்சேவிடம் கூறிவிட்டார்.

    மேலும், ராஜரத்தினத்தி்ன் நிதி புலிகளுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் தனது துறை புகார் கூறியுள்ளதாகவும் ராஜபக்சேவிடம் பொகல்லகாமா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஒபாமாவுக்கும், இப்போதைய அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனின் பிரச்சாரத்துக்கும் ராஜரத்தினம் பெருமளவில் நிதி வழங்கியுள்ளார். இவருக்கு இலங்கையின் டாப் 10 நிறுவனங்களிலும் முதலீடுகள் உள்ளன. இலங்கை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள மிகப் பெரிய தனிப்பட்ட முதலீட்டாரும் ராஜரத்தினம் தான்.

    போர்ப்ஸ் இதழின் இந்த ஆண்டின் உலக பில்லியனர்கள் பட்டியிலில் 559வது இடத்தைப் பிடித்தவர் ராஜரத்தினம். இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டாலர்களாகும். இதனால் இவர் நிதி மோசடி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவரை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டச் செய்துள்ளனர் அவருக்கு வேண்டாதவர்கள் என்கிறார்கள் ராஜரத்தினத்தின் வழக்கறிஞர்கள்.

    இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள ராஜரத்தினத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது நியூயார்க் நீதிமன்றம்.

    Thatstamil.com

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘….ஒரு கிரிமினல், கொடை வள்ளலாக என்ன கொடுத்தாலும், அவர் கிரிமினல்தான். …..’

    நிச்சயமாக, ஆனால் அது ஏன் ”புலிக்கோசம்” என மட்டுப்படுத்தப்பட வேண்டும்? ஏன் களுத்துறை கல்வி, சுனேரா மனவளர்ச்சி குன்றியோர் உதவி என சிங்கம், நரிக் கோஷம் போடக்கூடாது என்பதுதான் எனது கேள்வி!
    http://www.sunerafoundation.org/

    ’….சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது…..’
    எங்கே இவர் 20 பில்லியன் (20 x 1000 மில்லியன்) எனக்கூறப்படுளது என சொல்லமுடியுமா?. அதற்காகத்தானே அரச இணையத்தளத்தின் குற்றப்பத்திரிகைக்கு லிங்க் கொடுத்திருக்கிறேன். கொஞ்சம் படித்துப் பாருங்களேன்!

    ’…. இதற்காக இணையத்தினூடாக ஊடுருவி ஏனைய இடங்களில் உள்ள விபரங்களை பெற்றதுடன், சில நிறுவன முக்கியஸ்தர்களுக்கு லஞ்சம் கொடுத்து தகவல்களை பெற்று பணக்காரராகியுள்ளார்…..’’
    இணையத்தினூடாக ‘ஊடுருவி’??? அமெரிக்க அரசின் குற்ரப்பத்திரிகையில் கூட அவ்வறு சொல்லவில்லை. மாறாக செல்லிடத் தொலைபேசியூடாக தகவல் பெற்றதாக/லஞ்சம் கொடுத்ததாக கூறியுளளனர்.

    ‘…’….ஒரு கிரிமினல், கொடை வள்ளலாக என்ன கொடுத்தாலும், அவர் கிரிமினல்தான். …..’

    இதைத்தான் மிலிந்த மோரகொட புலிகளைப் புனர்வாழ்வு செய்ய என $1 மில்லியன் வாங்கும்போது பல்லை இளிச்சுக்கொண்டு சொன்னார் என நினைக்கிறேன்!!!!
    மேலும் தேசத்தில் இவ்விவாதம் வந்தபோது ரீ. ஆர்.ஓ பணம் புலிகள் பணம் என்று தெரிந்தவுடன் ‘முடக்கினர்’ எனச் சொல்லப்பட்டது. அதேபோல இப்போது கிரிமினல் ஒருவரினுடையது எனத் தெரியும்போது களுத்துறை கல்வி நிறுவனம், சுனேரா ஃபவுண்டேசனின் கணக்குகளையும் முடக்குவார்களா? அமெரிக்க ஏழை முதலீட்டாலர்களின் வயிற்றில் அடித்து சட்டவிதிகளை மீறி கிரிமினல் வழிகளில் சம்பாதித்த பணமல்லவா?

    Reply
  • பல்லி
    பல்லி

    கந்தசாமி பல்லி எரிப்பதில் தயக்கம் இல்லை;ஆனால் பல்லி என்பதால் பகுத்தறிவு தடுக்குமே;

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    புலன் பெயர்ந்த தமிழரின் அண்மைய நடவடிக்கைகள் தமிழர் எல்லாரையும் தலை குனிய வைக்கின்றன. சிலரது அகராதியில் களவு எடுப்பது ஏமாற்றுவது எல்லாம் பெருமையான விஷயம் போல

    Reply
  • EX DIPLOMATIC
    EX DIPLOMATIC

    Sri Lanka’s justice ministry thanked Rajaratnam last month for donating millions of dollars to rehabilitate child soldiers conscripted by Tamil Tiger separatists who were crushed by government forces in May

    “It’s a setback for the Colombo stock market which was proud to show him off as one of the biggest foreign investors in the country,” said a fund manager who also asked not to be named.
    :-By Mel Gunasakera (AFP)
    I think the US government want to punish srilankan government but he is investing lot of money and supporting srilankan government so they (us government) are sending warning message to srilankan government.
    EX DIPLOMATIC

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ரீ. ஆர்.ஓ பணம் புலிகள் பணம் என்று தெரிந்தவுடன் ‘முடக்கினர்’ எனச் சொல்லப்பட்டது. அதேபோல இப்போது கிரிமினல் ஒருவரினுடையது எனத் தெரியும்போது களுத்துறை கல்வி நிறுவனம், சுனேரா ஃபவுண்டேசனின் கணக்குகளையும் முடக்குவார்களா?- சாந்தன் //

    காதில பூ வைக்கிறதிற்கும் ஒரு அளவில்லையா?? ரீ்ஆர்ஓ புலிகளின் ஒரு அமைப்புத் தானென உலகிற்கே தெரியும். அப்படியிருந்தும் இலங்கை அரசு அதனை பகிரங்கமாக கொழும்பில் இயங்கக் கூட அனுமதித்திருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்குதவும் அமைப்பாக தம்மைக் காட்டி வந்த ரீஆர்ஓ பின்பு புலிகளுக்குதவியது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்ததாலேயே அரசு தடை செய்தது. இலங்கை அரசு மட்டுமல்ல பல உலக நாடுகளே இன்று ரீஆர்ஓவை தடை செய்துள்ளன. தடைசெய்யப்பட்ட நாடுகளில் இப்போ அனைத்துலக புனர்வாழ்வுக் கழகம் என புது நாமகரணம் சூட்டி அறிக்கைகள் விட ஆரம்பித்துள்ளார்கள். முன்னாள் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளரோ தான் எவருக்கும் புனர்வாழ்வுக் கழக கணக்கு வழக்குகளை காட்ட வேண்டிய அவசியமில்லை என மிரட்டியுள்ளார். இந்த இலட்சணத்தில் இதற்கும் அடுத்தவனைச் சுரண்டி வாழ்வோருக்குமாக வக்காலத்து வேறை……

    Reply
  • Rohan
    Rohan

    பார்த்திபன் “காதில பூ வைக்கிறதிற்கும் ஒரு அளவில்லையா??” என்று தொடங்கினார். பிறகு “ரீ்ஆரோ புலிகளின் ஒரு அமைப்புத் தானென உலகிற்கே தெரியும். அப்படியிருந்தும் இலங்கை அரசு அதனை பகிரங்கமாக கொழும்பில் இயங்கக் கூட அனுமதித்திருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்குதவும் அமைப்பாக தம்மைக் காட்டி வந்த ரீஆரோ பின்பு புலிகளுக்குதவியது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்ததாலேயே அரசு தடை செய்தது” என்று தொடர்கிறார்.

    யார் காதில யார் பூ வைக்கிறார்கள் என்று எனக்குக் குழப்பமாக இருக்கிறது!

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா,
    தினம் கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் முரட்டு உலகமடா
    தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Rohan.
    ஆமா நீங்கள் எப்போது குழம்பவில்லை. எப்போதெல்லாம் உண்மைகள் வெளிவருகின்றதோ அப்போதெல்லாம், தாங்களும் குழம்பி மற்றயவர்களையும் குழப்ப முயல்வது தானே தங்களின் வேலை. ரீஆர்ஓ மக்களுக்கு உதவுவதாக சொல்லிக் கொண்டு மக்களுக்கு வெறும் கஞ்சியையயும், புலிகளுக்கு காசையும் அள்ளிக் கொடுத்ததை தாங்கள் அறியாத அப்பாவி தான் என்பதை நாமும் நம்புவோமாக……

    Reply
  • thenaale
    thenaale

    புலியோடு கூடிக்குலாவி புரொபசனல் வியாபாரிகளாய் திரிந்தவர்களுக்குத் தான் அலுப்பென்று பார்த்தால் அரசோடு கைகுலுக்கியவர்களுக்கும் ஆப்புக்கள் காத்திருக்கின்றன.

    Reply
  • மாயா
    மாயா

    //ரீ. ஆர்.ஓ பணம் புலிகள் பணம் என்று தெரிந்தவுடன் ‘முடக்கினர்’ எனச் சொல்லப்பட்டது. அதேபோல இப்போது கிரிமினல் ஒருவரினுடையது எனத் தெரியும்போது களுத்துறை கல்வி நிறுவனம், சுனேரா ஃபவுண்டேசனின் கணக்குகளையும் முடக்குவார்களா?- சாந்தன் //

    இவையெல்லாம் சும்மா கொடுக்கப்படவில்லையாம். அரசியல் தலைமைகளை கவிழ்க்கவும், இராணுவ ரகசியங்களை பெற்றுக் கொள்ளவும், இன்னும் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்யவும், புலிகள் என இல்லாமல், வெளிநாட்டு பிரஜைகளின் உதவிகளாக அள்ளி வீசிய பணங்களை நிர்வகித்தவர்கள் ராஜரத்தினம் போன்றவர்கள்தான் என்பதை இலங்கை புலனாய்வுத் துறைக்கு முள்ளிவாய்க்காலில் இருந்து வந்தவர்கள், மற்றும் தென் பகுதியில் கைதானவர்கள் ஆதாரமாக கொடுத்துக் கொண்டிருப்பதன் விளைச்சல், வேறு நாடுகளில் அறுவடையாகி வருகிறது. அதன் சில அங்கங்களே இவை.

    ராஜரட்னம் முதலீடுகள் பற்றி ஒன்றுமே தெரியாதவர். ஆனால் லஞ்சம் கொடுத்து ஆட்களை மடக்குவதில் வெகு சமர்த்தராக அனைத்தையும் செய்துள்ளார் என FBI அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளார்கள். தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யவும் பட்டுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு காசு கொடுத்ததற்கான குற்றச்சாட்டு முன் வைக்கப்படாவிடினும் இவர் செய்திருக்கும் கிரிமினல் குற்றங்களுக்கு வாழ்வு பூராவும் சிறை வாழ்வை அனுபவிக்க நேரிடலாம் என ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

    நேர்மையான போராளிகளுக்காக பேசுங்கள். அதில் நியாயம் உண்டு. இவர்களை பற்றி பேசுவோர், இவர்களைப் போன்றவர்களே.

    Reply
  • mano
    mano

    பணம் கொட்டியதால்> நாட்டிற்குள் வந்து குவிந்த ஆயுதங்கள் எங்களை நிரந்தரமாகவே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. புலி இல்லையே என்று பயமில்லாமல் இருக்க முடிகிறதா?> பாதுகாப்புக்கு வைத்திருக்கும் ஆயுதங்களும் பயமுறுத்துகின்றன. பாதாள உலகத்திடம் போய்ச்சேர்ந்த ஆயுதங்கள் பயமுறுத்துகின்றன. 30 வருடப் போராட்டம். 30 வருடங்களுக்கு முன்னர் பொலிசிடம் இருந்த ஆயுதத்துக்கு மட்டும் பயந்தோம். இப்போது போறவன் வாறவன் எல்லாம் ஆயுதம் வைத்திருப்பானோ என்று பயந்து சாகிறோம்.

    வணங்கா மண்” கப்பலிருந்து பொருட்களை இறக்க> 2 மில்லியன் ரூபாவை இலங்கையின் ஜனாதிபதி நிதியம் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்குகிறது. இன்னும் சில நாட்களில் பொருட்கள் இறக்கப்பட்டு தரம் பரிசோதிக்கப்பட்டு முகாம்களுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி நீங்கள் புலி என்று வந்தால் ‘பகுத்தறிவை’ சைற்றில வச்சுடுவியள். ஆனால் உங்களுக்கெண்டு வந்தால் கையில எடித்திடுவியள் போல கிடக்கு!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    சிலவேளை பல்லி; புலிக்கும் (பகுத்)அறிவிற்கும் சம்மந்தமில்லையென்பதால் அதை பாவிக்காது விடுகின்றார் போல. (பகுத்)அறிவைப் பற்றித் தெரிந்தவர்களுடன் தானே அதைப் பாவிக்க முடியும்.

    Reply
  • Kandaswamy
    Kandaswamy

    பல்லி,
    இந்த பாழாய்ப்போன ‘பகுத்தறிவு’ கூடி குறையிறதால் தானே எங்கள் எல்லோருக்குள்லேயும் பிரச்சணை.

    Reply
  • மனிதன்
    மனிதன்

    அமெரிக்கா தங்கள் பங்குசந்தை உலக பயங்கரவாதிகள் முதலிடுகிறார்கள் என்ற தப்பாவிப்பிராயம் இருக்ககுடாது என்பதில் கவனமாக கையாண்டு இவரைவேறு ஒரு பெரிய பிழையை விடப்பன்னி மாட்டியுள்ளார்கள் ஒன்று மட்டும் புரிகிறது தமிழரின் முக்கிய பொருளாதாரத்தில் கைவைத்து விட்டார்கள் யூதகனவு கானல் நீராகிவிடது.

    Reply
  • மாத்தையா
    மாத்தையா

    மனிதன்,
    தமிழன் யூதனாக முடியாது. அவன் அவனாக சிந்திக்காததன் விளைவை ஈழத் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //பல்லி நீங்கள் புலி என்று வந்தால் ‘பகுத்தறிவை’ சைற்றில வச்சுடுவியள்.//
    சாந்தன் பகுத்தறிவு என்பது எனது நிலையில் என் அறிவு தூங்காதநிலைதான்; இதில் புலிஎன வந்துவிட்டால் பல்லி எங்கே அறிவை தொலைத்தேன் என்பதை சாந்தன் சுட்டிகாட்டினால் கண்டிப்பாக பல்லியின் தவறாய் இருந்தால் திருத்தி கொள்வேன், அதை விட்டு உங்கள் அறிவை தொலைத்து பல்லியின் அறிவை தேடுவது புலியிடம் தப்பிய மக்கள் சிங்கத்திடம் மாட்டிய கதைதான்;
    சாந்தன் புலியை விமர்சிப்பது வேறு; பழி வாங்குவது வேறு, பல்லி என்றுமே புலியை விமர்சிப்பவனே தவிர பழி வாங்குபவனல்ல; காரணம் புலி அங்கத்தவரும் எமது உறவுகளே என்னும் நிலைகூட தெரியாத அளவுக்கு பல்லியின் அறிவு மங்கவில்லை, எது எப்படியோ பல்லி தவறாக எழுதியிருந்தால் கண்டிப்பாக என்னை திருத்தி கொள்வேன்;

    //சிலவேளை பல்லி; புலிக்கும் (பகுத்)அறிவிற்கும் சம்மந்தமில்லையென்பதால் அதை பாவிக்காது விடுகின்றார் போல.//இது பார்த்திபன் கவலை;
    புலி தலமைக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இலாதபோது எங்கே பகுத்தறிவை தேடுவது, அது தமிழர் அறிந்த உண்மை போய் உலகம் அறிந்த செய்தியாகி பல நாள்கள் ஆகிவிட்டது. அதை பாலா அண்ணாவின் பாணியில் கிண்ட வேண்டாமே;

    ஆனால் பகுதறிவுக்கும் மனிதநேயத்துக்கும் சிலகாலமாகவே தமிழர் மத்தியில் (அதுவும் புலம் பெயர் தமிழர் மத்தியில்) புடுங்குபாடு நடப்பதால் எல்லாமே பூதமாக பலருக்கு தெரிகிறது, அது தவறல்ல; ஆனால் அந்த நினைப்பால் பூதம் கூட விளையாட்டு பொருளாய் சிலருக்கு தெரிவதால் தொடர்ந்தும் எம்மினம் வருந்துகிறது என்பதே எனது வாதம்;

    Reply
  • மகுடி
    மகுடி

    Hedge funds face insider trading scrutiny

    When Raj Rajaratnam arrives on Monday morning to address the staff at his hedge fund’s Madison Avenue offices in New York, the mood will probably be sombre.
    On Friday, Mr Rajaratnam was charged with five others with carrying out $25m (£15.3m) in insider trading by the Securities and Exchange Commission (SEC). It has been labelled the biggest hedge fund insider trading case in US history…….

    http://news.bbc.co.uk/2/hi/business/8313917.stm

    Reply