கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம் : மாலைதீவு அரசு தீர்மானம்

2222maldives.jpgகடலுக்கு அடியில் முதல் தடவையாக அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்த மாலைத்தீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உலகம் வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றை வலியுறுத்தும் நோக்கில் இந்த விசித்திர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து ஆறு மீற்றர் ஆழத்தில் நீச்சல் உபகரணங்களுடன் மாலைத்தீவு அமைச்சரவை அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தை நடத்தவுள்ளனர். உலக காபனீரொட்சைட் வெளியீட்டு அளவைக் கட்டுப்படுத்தக் கோரி விசேட ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.

கடலுக்கு அடியில் மாநாடு நடத்துவது தொடர்பில் மாலைதீவு அமைச்சர்களுக்கு விசேட பயற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

14 பேரைக் கொண்ட மாலைதீவு அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் மட்டும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. குறித்த மூன்று அமைச்சர்களும் நீருக்கு அடியில் மாநாடு நடத்தக் கூடிய அளவுக்கு மருத்துவ ரீதியில் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி நசீட் கடலுக்கு அடியில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தத் திட்டமிட்டுள்ளார். அனைத்து அமைச்சர்களுக்கும் விசேட பயற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *