இலங்கைக்கு மேலும் ரூ. 500 கோடி: ப.சிதம்பரம்

18-pc-karuna.jpgஇலங் கையில் முகாம்களி்ல் உள்ள தமிழர்களை மீள் குடியமர்த்துவது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆலோசன நடத்தினார்.

சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், அண்மையில் தமிழக எம்.பிக்கள் குழு இலங்கை சென்று, முகாம் தமிழர்களை சந்தித்து நிலவரங்களை அறிந்து வந்துள்ளது. அவர்கள் ஆய்வறிக்கையும் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் அவர்களை சொந்த இடங்களுக்கு குடியமர்த்த என்னென்ன அறிவுரை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்துப் பேசினோம்.

முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசித்தது குறித்து மத்திய அமைச்சரவையிலும் விவாதிக்கப்படும்.

எம்.பிக்கள் குழு இலங்கை சென்று வந்த பிறகு இதுவரை சுமார் 5,000 தமிழர்கள் சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.  இது தொடக்கம் தான் என்பதால் இந்தப் பணி மெதுவாக உள்ளது. போக போக அனைவரும் வேகமாக குடியமர்த்தப்படுவார்கள் இதுபற்றி இலங்கைக்கு போதிய அறிவுரை வழங்கப்படும். இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக ஏற்கனவே ரூ.500 கோடி மத்திய அரசு  வழங்கி உள்ளது. மீண்டும், இன்னும் ரூ.500 கோடி வழங்கவும் தயாராக உள்ளது.

இதுகுறித்து திட்ட அறிக்கை இலங்கை அரசிடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை. வந்த பிறகு தேவைப்பட்டால் நிதி ஒதுக்குவோம் என்றார் சிதம்பரம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    தமிழ்நாட்டில்தான் உண்மையான ஜனநாயக ஆட்சி நடக்கிறது. (கருணாநிதியின்) மக்களால் (கருணாநிதியின்) மக்களுக்காக நடக்கும் ஆட்சி.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ’..இதுகுறித்து திட்ட அறிக்கை இலங்கை அரசிடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை. வந்த பிறகு தேவைப்பட்டால் நிதி ஒதுக்குவோம் என்றார் சிதம்பரம்…’

    இருந்தால் தானே பெறுவதற்கு!!

    Reply
  • பல்லி
    பல்லி

    ஒருவரை சிறை முகாமை விட்டு வெளியே அனுப்ப 200000 வேண்டுவதாக வவுனியா செய்தி சொல்கிறது, ஆனால் தமிழக சுற்றுலா குழுவினரிடம் பஸில் பட்ச்சா 50000 பேரை அவர்களுக்காக விடுவிப்பதாக திரு திடமாக சொன்னார்; அப்படியாயின் 50000 பேருக்கும் 200000 படி 500 கோடியா? கணக்கு பிழைக்குதே? சிலவேளை மொத்தம்லாக விடுவிப்பதால் அரசு ஏதும் சலுகை செய்திருக்குமோ? புதுவிதமானஅரசியல் வியாபாரமா? அல்லது மோசடியா?

    Reply
  • Meinike.W
    Meinike.W

    India, your initiative is highly appreciated. However, knowing about GOSL, does not India feels that it’s foolish to give money to a corrupted Govt like that of SL, which does not care about democray, no freedom for speech/prees, no freedom of movement, violats human rights and top of all there is no law as well. It’s better to give it to a INGO or NGO and to make it accountable to the money. Think it over!!!

    Reply
  • Calistus Jayatilleke
    Calistus Jayatilleke

    Instead of GSP+ and, to avoid C(china)SP+, India ready to give I(india)SP+. Srilanka has increasingly become a play ground for some other countries to show their strength to west.ultimatly we are the main losers

    This so called rehabilitation is good business for those in charge. Even 10% is attractive enough although it could be more now due to inflation.

    Reply
  • Peter
    Peter

    If India is in such a shape financially what makes India to ask for a loan around $6 bilion from the IMF? Doesn’t this show that some thing crooked is brewing? Or is it that parts of Mother Lanka, starting from the North-East, being sold to whoever pays the highest commission. Hello! the ‘Patriots’ are you all listening?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //அப்படியாயின் 50000 பேருக்கும் 200000 படி 500 கோடியா? கணக்கு பிழைக்குதே? சிலவேளை மொத்தம்லாக விடுவிப்பதால் அரசு ஏதும் சலுகை செய்திருக்குமோ? //

    அப்போ முன்பு கொடுத்த 500 கோடிக்கு விடுவித்தவர்களின் பட்டியலும் பல்லியிடம் இருக்கும் தானே?? அதையும் இணைத்து விடலாமே. தற்போது 15 நாட்களில் அரசு விடுவிப்பதாகச் சொல்லியது 50000 மக்களையல்ல 58000 மக்களை. பல்லி எப்பவும் கணக்கிலை ரொம்ப வீக் தான் போல……

    Reply