லண்டனில் அமைச்சர் திஸ்ஸ விதாரனவுக்கு காரசாரமான விருந்து : த ஜெயபாலன்

Tissa_Vitharana_Profஒக்டோபர் 18ல் அமைச்சர் திஸ்ஸ விதாரனவுடனான கேள்வி நேரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கேள்வி நேரத்திற்கு முன்னர் மதிய உணவு பரிமாறப்பட்டது. மதிய உணவு காரமாக இல்லாவிட்டாலும் உணவிற்குப் பின்னர் இடம்பெற்ற கேள்வி நேரம் ‘யாழ்ப்பாண மிளகாய்த்தூள்’ போட்டது போன்ற காரத்துடன் அமைந்தது. மதிய உணவின் போதிருந்தே அமைச்சர் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. ‘இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த நீங்கள் எப்படி இனவாத சக்திகளின் கை ஓங்கியுள்ள அரசின் அங்கமாக இருக்கின்றீர்கள்?’ என்றது முதல் ‘ஏபிஆச்சி தீர்வுத் திட்டம் குப்பைக் கூடையினுள் செல்லப் போகின்றது’ என்பதுவரை பல கேள்விகள் எழுப்பப்பட்டது.

ஏபிஆர்சி குழுவில் முன்னர் அங்கம் வகித்த எஸ் தவராஜா இக்கேள்வி நேரத்திற்குத் தலைமை தாங்கினார். ராஜேஸ் பாலாவின் குறுகிய அறிமுகத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது. கேள்விகளை அரசியல் தீர்வு என்ற வரையறைக்குள் வைத்திருக்க வேண்டும் என அவர் வரையறை செய்திருந்த போதும் கேள்விகள் பல அம்சங்களிலும் எழுப்பப்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு, ஏபிஆர்சி தீர்வுச் செயன்முறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும், அரசு வன்னி முகாம் மக்களை விரைவில் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, 30 ஆண்டுகால யுத்தம் அண்மையிலேயே முடிந்துள்ளதால் அரசு சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கும் இன்னமும் காலம் அவசியப்படுகின்றது போன்ற கருத்துக்களே அமைச்சரின் பேச்சிலும் பதில்களிலும் தொனித்தது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளுடைய யுத்தத்திற்கு ஆதரவு வழங்கினர், புலம்பெயர்ந்த தமிழர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவத் தவறிவிட்டனர் போன்ற குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் திஸ்ஸ விதாரன அங்கு தெரிவித்தார். மற்றுமொரு சமயத்தில் வெறும் விமர்சனங்களாக அல்லாமல் விமர்சனங்களை ஆரோக்கியமாக முன்வைத்து காத்திரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரின் கருத்துக்களில் வந்திருந்த பெரும்பான்மையினர் உடன்படாத நிலையில் ஒருவர் மாறி ஒருவராக இலங்கை அரசின் இனவாத செயன்முறைகள் பற்றியும் அரசியல் தீர்வை அரசு தட்டிக்கழிப்பதைப் பற்றியும் கேள்வி எழுப்பினர். (இங்கு தேசம்நெற் வாசகர்களால் முவைக்கப்பட்ட கேள்விகளும் அமைச்சரிடம் கேட்கப்பட்டது. கேள்வி பதில்கள் முழுமையாக விரைவில் தரப்படும்.)

மதிய உணவு முதல் ஐந்து மணிநேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமைச்சரின் கருத்துடன் உடன்பட்டு ஒரே ஒருவரே தனது கருத்தினை முன்வைத்தார். இவர் இலங்கையில் இன சமத்துவம் என்பது கடைப்பிடிக்கவில்லை எனவும் குறிப்பாக தமிழ் தலைமைகளும் இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

வன்னி முகாம் மக்களின் நிலைதொடர்பாக அங்கு எழுப்பப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு சபையில் இருந்த துணைத் தூதுவர் ஹம்சா பதிலளித்தார். வன்னி முகாம்களில் உலக உணவுத்திட்டம், ஹரித்தாஸ் போன்ற சர்வதேச என்ஜிஓ க்கள் உட்பட 53 என்ஜிஓக்கள் இலங்கையில் செயற்படுவதாகவும் மே 18க்குப் பின் பிபிசி போன்றவற்றின் ஊடகவியலாளர்கள் உட்பட 300 ஊடகவியலாளர்கள் வன்னி முகாம்களுக்கு சென்று வந்தள்ளாதாகக் கூறினார். ஆனால் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு வன்னி முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. துணைத்தூதுவர் ஹம்சா மேலும் குறிப்பிடுகையில் 70 000 வன்னி முகாம்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இவ்வாண்டு முடிவிற்குள் பெரும்பாலானவர்கள் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்றும் அடுத்த ஆண்டின் முற்பகுதிக்குள் வன்னி முகாம்கள் மூடப்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளின் இறுதியாக சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றிக் குறிப்பிட்டு அமைச்சர் வெளியிட்ட கருத்துக்களுடன் முரண்பட்டதுடன் ‘திஸ்ஸநாயகத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு முற்றிலும் சோடிக்கப்பட்ட வழக்கு’ எனக் குற்றம்சாட்டினார். மேலும் ‘திஸ்ஸநாயகம் புலிகளிடம் நிதிபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட காலப்பகுதியில் புலிகள் இலங்கையில் தடை செய்யப்பட்டு இருக்கவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தொடர்கையில் ‘ஜேவிபி தலைவர் ரோகன விஜயவீர கொல்லப்பட்ட போது அவருடைய மனைவி கொல்லப்படவில்லை. ஆனால் வே பிரபாகரன் சரணடைந்த பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய முத்த பிள்ளைகள் கொல்லப்பட்டதற்கு நியாயம் கற்பிக்கலாம். ஆனால் மனைவி மதிவதனி கொல்லப்பட்டார். 11 வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார். இது எந்தவகையில் நியாயம்’ என அவர் கேள்வி எழுப்பியதுடன் ‘இவர்கள் தமிழர்கள் என்பதற்காகவே அவர்கள் கொல்லப்பட்டனர்’ எனவும் அவ்வூடகவியலாளர் குற்றம்சாட்டினார்.

கூட்டத்தின் இடையே இவ்வூடகவியலாளர் தனது கேள்வியை எழுப்பிய போது அவர் கூட்டவிதிமுறைகளை மீறியதாக அவர் தொடர்ந்து கேள்வியை எழுப்ப அனுமதிக்கப்படவில்லை. அதனால் பின்னர் அவருடைய கேள்வி இறுதிக் கேள்வியாக அமைந்தது. அமைச்சருடைய பதில்கள் தன்னை ஆத்திரமூட்டுவதாக அமைந்ததால் தான் இடையே குறிப்பிட்டதாகக் கூறிய அவ்வூடகவியலாளர் மேலுள்ள கேள்வியை எழுப்பினார். ஆனால் நிகழ்வுக்கு தலைமையேற்ற எஸ் தவராஜா இக்கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டியதில்லை எனத் தெரிவித்தார்.

இதனை தேசம்நெற் ஆசிரியர் த ஜெயபாலன் உடனடியாகக் கண்டித்ததுடன் அவருடைய கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையையும் வைத்தார். அதற்குள்ளாக மண்டபம் கையளிக்கப்பட வேண்டிய நிலையில் கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பலரும் இக்கேள்விக்கு பதிலளிக்காமல் தட்டிக்கழிக்கப்பட்டதைக் கண்டித்தனர். எஸ் தவராஜாவின் அந்த முடிவு விமர்சனத்திற்குள்ளானது.

மதிய உணவில் 25 வரையானோரும் கேள்வி நேரத்தில் 70 வரையானோரும் கலந்துகொண்டனர். பொதுவாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு தங்கள் வரவை உறுதிப்படுத்தியவர்கள் மட்டும் நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். அமைச்சருக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்நிகழ்வு ரி கொன்ஸ்ரன்ரைன் ராஜேஸ் பாலா எஸ் தவராஜா ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நிகழ்வின் ஆரம்பத்தில் லிற்றில் எய்ட் ஏற்பாடு செய்ததாக அறிவிக்கப்பட்டது தன்னுடைய தவறு என்றும் அதற்கு வருந்துவதாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

வழமையாக கேள்விகளுக்கு முகம்கொடுக்காத கேள்வி கேட்கப்படுவதை அசௌகரியமாகக் காண்கின்ற ஒரு சூழலே தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டு வந்தது. குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகள் எப்போதும் தங்களை கேள்விக்கு உட்படுத்துவதைத் தவிர்த்தே வந்திருந்தன. தாங்கள் பதிலளிக்க விரும்பாத கேள்விகள் கேட்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் அமைச்சர் திஸ்ஸ விதாரனவை லண்டன் தமிழர்கள் கேள்விக்கு உட்படுத்தியதுடன் அரசு பற்றிய தங்கள் அச்சத்தையும் நம்பகத் தன்மையின்மையையும் உறுதிபடத் தெரிவித்தனர். இலங்கை அரச பிரதிநிதிகள் தமிழ் மக்களது கேள்விக்கு நேரடியாக முகம்கொடுக்க வைப்பது அவசியமாகின்றது. ஊடகவியலாளர்கள் தங்கள் தொழில்சார்ந்து அரசைக் கேள்விக்கு உட்படுத்தும் அதே சமயம் சாதாரண பொதுமகனும் தனது உணர்வு சார்ந்து அவர்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் வாய்ப்புகள் இதன் மூலம் ஏற்படுத்தப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

  • chandran.raja
    chandran.raja

    திஸ்சவிதாரன ஒரு சர்வதேசிவாதி. இவருக்கு மதம் மொழியல்ல பிரச்சனை. இவர் கவலைப்பட வேண்டியது இன்னல்உறுகிற மனிதஉயிர்களைப் பற்றியதே!.
    குறைந்தயளவில் இலங்கையில் யாவது இருந்தாக வேண்டும். விதிவசமாக முதாளித்துவத்தின் அமைப்பு முறையின் ஒரு கண்ணியாகவே செயல்படுகிறார். திசவிதாரண நல்லநோக்கம் உள்ளவர் மகிந்தராஜயபக்ச நல்லநோக்கம் உள்ளவர் என நாம் கணிப்பிட்டாலும் அவருடன் உள்ளவர்கள் அல்லது கூட்டுக்கு அழைத்தவர்கள் எல்லோரும் இந்தநோக்கத்தை கொண்டிருக்கிறார்களா? எனநாம் துல்லியமாக கணிப்பிட முடியாது.
    இலங்கையின் கொடுமையான யுத்தம் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு இவர்களின் உழைப்பே காரணமாகியது அந்த வகையில் இவர்களுக்கு நன்றி சொல்வோம். குறிப்பாக ஈழவாழ் தமிழ்மக்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள். அடுத்ததாக புலம்பெயர் தமிழர்கள் நன்றி செலுத்த பழகிக் கொள்ள வேண்டும். முடியாதவர்கள் பயிற்சியாவது எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகே அரசியலைப்பற்றி நாம் காரசாரமாக விவாதிக்க-கலந்துரையாட முடியும் .மனிதஉயிர் வாழ்வுபற்றி கருசரணையிருந்தால்…!.

    Reply
  • Naane
    Naane

    There are so many unanswered questions we have.No one have answers for those quetions. Who is Tissa vitharana?. He can do nothing for us,if he or his govt really wanted to do something for the Tamils,Do something first Then we can trust you guys. you guys are getting worse and worse and want us to believe what you saying now.Tamils never going believe any Singala govt unless someone bring some real change.
    Do something in action. “SHOW THE MONEY”

    Reply
  • thenaale
    thenaale

    பிரபாகரன் தமிழருக்குத்தான் ஆப்பு வைத்து விட்டுப் போயிருக்கிறார் என்று பார்த்தால் தனிஅலகு கேட்டவர்களுக்கும் சேர்த்து ஆப்பு வைத்து விட்டார். தனிஅலகுகளே நீங்களும் விழித்து எழுந்து கேள்வி கேளுங்கள்! ஏபிஆர்சி யில் கோட்டை விடப் போகிறீர்கள்.

    Reply
  • senthil
    senthil

    பலரும் இக்கேள்விக்கு பதிலளிக்காமல் தட்டிக்கழிக்கப்பட்டதைக் கண்டித்தனர். எஸ் தவராஜாவின் அந்த முடிவு விமர்சனத்திற்குள்ளானது…….
    லண்டனிலிருந்து சந்திரகுமார்(அசோக்),ரங்கன் தேவராஜன் என அரசுடன் சேர்ந்து வடக்கின் உதயத்தில் யாழில் செயற்பட்டுவரும்போது இனி தவராஜா எந்த மட்டில் லண்டனில் இருக்கபோகிறார். அவரும் வடக்கின் உதயத்துக்கு ஆலோசகராக செயற்படவேண்டிய தேவை இருக்கும் போது திசநாயகத்தின் தீர்ப்புக்கு பதிலளிக்கவிடமுடியுமா என்ன?

    தவராஜா மீண்டும் வடக்கின் வசந்தம் புகழ் தேவானந்தாவுடன் இணைந்து விட்டார்.யாழ் மாநகர சபை மேயருக்கு ஆலோசகராக செயற்படும்படி லண்டன் மாநகரசபையில் அங்கம் வகிக்கும் ஒருவரை யாழுக்கு போக அணிதிரட்டுவதாகவும் அறியப்படுகிறது.

    Reply
  • thenaale
    thenaale

    புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளுடைய யுத்தத்திற்கு ஆதரவு வழங்கினர், புலம்பெயர்ந்த தமிழர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவத் தவறிவிட்டனர் போன்ற குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் திஸ்ஸ விதாரன அங்கு தெரிவித்தார்.”

    ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்கள் இருக்கலாம் என சொல்லும் (பலாத்காரமாக அவர்கள் நாட்டை இணைத்து வைத்திருக்கும்) இலங்கை அரசே வன்னி முகாம் மக்களை பராமரிக்க வேண்டும்.

    இவர் வந்தது விசேடமாக அழைக்கப்பட்ட புலி எதிர்ப்பாளர்களை சந்திப்பதற்கே. அவர்களையே இவரால் திருப்திப்படுத்த முடியாத நிலையில் இவரும் இவரது அரசும் உள்ளது.

    Reply
  • சோழன்
    சோழன்

    …..” கேள்விகளை அரசியல் தீர்வு என்ற வரையறைக்குள் வைத்திருக்க வேண்டும் என அவர் வரையறை செய்திருந்த போதும்” …..
    என்ன ஜெயபாலன் நீங்கள் இப்படி நடந்ததாக சொல்கிறீர்கள்!!

    …..”இச்சந்திப்பு அமைச்சர் திஸ்ஸ விதாரண தனது கருத்துக்களைத் தெரிவித்துவிட்டுச் செல்லும் சந்திப்பாக அல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் முகம் கொடுக்கின்ற வகையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. மூடிய கதவுகளுக்குள் அரசியல் நடத்துவதும் சிலர் தங்களை அரசியல் முகவர்களாக புரட்சியின் முகவர்களாக காட்டி மேதாவித்தனம் செய்வதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பத்திரிகையாளர்களும் தங்களை அரசியல் மேதாவிகளாகக் காட்டிக்கொள்வோரும் தான் அரசியல் பேசுகின்ற நிலையைக் கடந்து சாதாரண ஒரு புலம்பெயர்ந்த தமிழனும் இலங்கை அரசை நோக்கி கேள்விகளை எழுப்புவதற்கு இச்சந்திப்பு இடமளிக்கும்.” …..

    உங்கள் நண்பரும், முன்னைநாள் நடுநிலைமை பத்திரிகையாளரும், இன்னைநாள் அரசியல்வாதியும், பசிலராஜபக்ஸ சிந்தனையாளருமான கொன்ஸன்ரைன் இப்படியல்லவோ விட்டார் ….

    Reply
  • pandiyan
    pandiyan

    சந்திரன் ராஜா அவர்களே
    ஒன்றில் வர்க்கப்புரட்சிக்கு தயாராகுங்கள் ………………………… அல்லது முதலாளித்துவ ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதைப் பற்றி பேசுங்கள். நீங்கள் எப்போதுமே இரண்டையும் போட்டு குழப்புவீர்கள். அது உங்களின் இருப்பு நிலை அம்சத்தின் வெளிப்பாடே. திஸ்ஸ விதாரணவும் அவ்வாறே. மேற்கத்தைய நாடுகளில் இருந்து கொண்டு அவர்கள் பிச்சைக்கார நாடுகளில் சுரண்டி வரும் பணத்தில் தரும் அரச மானியங்களை எடுத்துக் கொண்டோ அல்லது நீங்கள் செய்யும் வேலைக்கு மிக அதிகமாக (ஒப்பீட்டு அடிப்படையில் வறிய நாட்டு தொழிலாளி/ மேற்கத்தைய நாட்டு தொழிலாளி) தரப்படும் ஊதியத்தை அனுபவித்துக் கொண்டோ உலக மக்களின் விடிவு சாசனமான மாக்ஸிஸத்தை பேசுவது (மாத்திரம்)கொஞசம் கூட அழகில்லை. ஒரு அரசின் தலைவரே அங்கு நடக்கும் அனைத்திற்கும் பொறுப்புடையவர் ஆவர் என்பதைக் கூட நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் பக்கத்தில் நிற்பவரை நோக்கி கையை காட்டுகிறீர்கள். அரசு பற்றி பின்னர் விவாதிப்போம்.

    ……………….. ஒரு மாக்ஸிய அறிஞனுக்கு ஆசானுக்கு போராளிக்கு அழகு மக்களை அரவணைத்து செல்வதே அன்றி தூற்றிக் கொண்டு இருப்பதல்ல.என்னால் கம்யூட்டரில் வேகமாக எழுத முடியவில்லை. எங்கே இந்த போராட்டத்தை (நீங்களும் ஆதரித்து) தொடக்கி எங்களை கல்வி கற்க விட்டார்கள். உங்களுக்கென்ன அழகாக தரப்படுத்தலுக்கு முந்தைய காலத்தில் படித்து விட்டு வேகமாக எழுதுகிறீர்கள். இதனால்தான் நேரில் விவாதிப்போம் என்றேன். புலிகளைப் போல் நையப்புடைப்பதற்காக அல்ல.

    இப்பொழுது அரசு ஆங்கிலக் கல்வி கட்டமைப்பை உயர்த்தவுதறடகாக இந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்ததாக செய்தி பார்த்தேன். தீர்க்க தரிசனமற்ற பார்வையின்மையால் ஆங்கில மொழிக் கல்வியை வாக்கு வங்கிக்காக இலங்கை அரசுகள் முன்னாளில் நிறுத்தி விட்டதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். நேரம் கிடைக்கையில் தொடருகின்றேன்.
    பாண்டியன்.

    Reply
  • சோழன்
    சோழன்

    ……….”புலம்பெயர்ந்த தமிழர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவத் தவறிவிட்டனர் போன்ற குற்றச்சாட்டு” ……….

    ஏன் புலம்பெயர்மக்களால் வணங்காமண் (அது புலிகளின் ஆதரவாளர்களாலோ அல்லது பூனைகளின் ஆதரவாளர்களாலோ அனுப்பியதாக இருக்கட்டும். இப்போ புலியும் அழிந்து விட்டது, பூனைகளும் சுருண்டு விட்டது!!) அனுப்பப்பட்டு என்ன நிகழ்ந்தது தெரியும்தானே?? அங்கு போய்ச்சேர்ந்ததே முட்கம்பி முகாம் மக்களுக்கு போய்ச்சேரவில்லை!! அதனை புலி அனுப்பியது என்று கூறாமலாவது கொடுத்திருக்கலாம்தானே? எந்த உறுதிமொழி இருக்கிறது, இங்கிருந்து நாம் கொடுப்பது எம் மக்களுக்கு போய்ச்சேரும் என்று?? வணாங்காமண்ணுக்கு சட்டச்சிக்கல்களும், வரிப் பிரட்சனைகளுமென்றால், எம்மை கேட்டு நாம் அனுப்பினால் அவற்றுக்கு வராதா??

    இங்கிருந்து அமைச்சர் பெருமக்களோடும், பசில்ராராஜபக்ஸக்களோடும் நேரடியாக நாம் தொலைபேசியில் உரையாடுகிறோம் என்பவர்களும், மகிந்தவுடன் என்ன பிரட்சனை ஆனாலும் கதைக்கலாம் என்று நின்று புகைப்படம் எடுத்து திரும்பியவர்களும், புலம்பெயர் மக்கள் அனுப்பிய வணங்காமண்ணை, அவர்களிடம் கேட்டு எமது மக்களுக்கு கொடுத்திருக்கலாம்தானே??

    இது எம்மக்களை நீண்ட நாட்களுக்கு முட்கம்பிகளின் உள்ளேயே வைத்திருந்து ஒருபுறம் சர்வதேசத்திடம் நிதிகளை பெறவும், மறுபுறம் புலம்பெயர் எம்மக்களிடம், அம்மக்களை வியாபார பொருட்களாக்கவுமே முற்படுவதாக தெரிகிறது.

    அங்குள்ள எம்மக்களுக்கு இன்றுள்ள தேவை, எம்மிடம் இங்கு கையேந்துவதல்ல!! அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் உழுது.விதைத்தும், தம் கடலில் சுதந்திரமாக தொழிலில் செய்து வாழ்வதற்கான வழியேயாகும்!! அதை விடுத்து நாங்களும் அவர்களை ஏலம் பேசி வாங்குவதனை நிறுத்துவோம்!!

    Reply
  • பல்லி
    பல்லி

    சோழன் உங்கள் ஆவேசம் சரியா தவறா என என்னால் சொல்ல முடியவில்லை, ஆனால் தேசம் நண்பர்களின் சிறுஉதவி அமைப்பு அனுப்பிய மருந்து பொருள்கள் வன்னி முகாம்களை போய் சேர்ந்து விட்டதாமே; ஆக நாம் எதை செய்தாலும் கிடைக்க வேண்டியவர்களுக்கு உதவி கிடைக்க கூடிய வகையில் செய்ய வேண்டும், அதை விட்டு டாக்குத்தர்மார் தமது பெயரும் ஈழ பதிவேட்டில் வரவேண்டும் என்பதுக்காக வணங்காமன் நிமிர்ந்த கல் என GTV ஏப்பம் விட்டால் அது இப்படிதானே ஆகும்;
    வணங்கா மண். அதனாலோ என்னவோ அது மண்ணாகி போய் விட்டது, அதுகூட பரவாயில்லை இந்த மண்ணை கவ்வியதால் எம்பி சிவாஜி அண்ணன் தலைமறைவாகி பலகாலம் ஆகிவிட்டது, உதாரனத்துக்கு தேசத்தில் கூட நாம் எமது கடுப்பை காட்டினால் தணிக்கை செய்து விடுவார்கள், ஆக வணங்கா மண்ணை பொறுத்த மட்டில் டாக்குத்தர் கூட்டம் தவறாய் செய்த அறுவை சிகிச்சை;

    Reply
  • பல்லி
    பல்லி

    //இதனை தேசம்நெற் ஆசிரியர் த ஜெயபாலன் உடனடியாகக் கண்டித்ததுடன் அவருடைய கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையையும் வைத்தார். அதற்குள்ளாக மண்டபம் கையளிக்கப்பட வேண்டிய நிலையில் கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பலரும் இக்கேள்விக்கு பதிலளிக்காமல் தட்டிக்கழிக்கப்பட்டதைக் கண்டித்தனர். எஸ் தவராஜாவின் அந்த முடிவு விமர்சனத்திற்குள்ளானது.

    விமர்சனத்துக்கு உரியது மட்டுமல்ல; இவர்கள் அம்பலபடுத்த வேண்டியவர்கள், இது ஒன்றும் தவராசாவின் குடும்ப விழா அல்ல, எம்மினத்தின் சீரழிவு பற்றிய கதறல்; இதுகூடவா தவராசாவுக்கு தெரியாது, தவராசாவுக்கு இது பணசடங்கு; ஆனால் எமக்கோ எமது கருத்து அரசிடம் மறைமுகமாக போககூடிய பதிவு தபால்; அரசு அதை எடுப்பதும் எடுக்காததும் அவர்கள் அரசியல், ஆனால் எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் தவராசா போன்றோரால் அடிக்கடி தவறவிடுகிறோமே ,

    Reply
  • jalpani
    jalpani

    ஏன் புலம்பெயர்மக்களால் வணங்காமண் (அது புலிகளின் ஆதரவாளர்களாலோ அல்லது பூனைகளின் ஆதரவாளர்களாலோ அனுப்பியதாக இருக்கட்டும். இப்போ புலியும் அழிந்து விட்டது பூனைகளும் சுருண்டு விட்டது!!) அனுப்பப்பட்டு என்ன நிகழ்ந்தது தெரியும்தானே??”

    வணங்கா மண் தொடர்பான உங்கள் கருத்து தவறானது. வணங்கா மண் புலம்பெயர் மக்களிடையே ஸ்ரண்ட காட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை. மக்கள் நலன் கருதியல்ல.

    Reply
  • jalpani
    jalpani

    “14 வயதில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் எவ்வித விசாரணைகளுமின்றி கடந்த 14 வருடங்களாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது அந்த இளைஞருக்கு 29 வயதாகிறது. ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அழுத்தம் கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்காக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தகவல்களை சேகரித்த போது இந்த அமைப்புக்கு இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் எதுவுமின்றி பல தமிழ் இளைஞர்கள் கொழும்பிலுள்ள வெலிகடை களுத்துறை மற்றும் காலியிலுள்ள பூசா ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது”

    போங்க. நீங்களும் உங்கள் அரசியலும்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //அங்குள்ள எம்மக்களுக்கு இன்றுள்ள தேவை, எம்மிடம் இங்கு கையேந்துவதல்ல!! அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் உழுது. ,விதைத்தும், தம் கடலில் சுதந்திரமாக தொழிலில் செய்து வாழ்வதற்கான வழியேயாகும்!! அதை விடுத்து நாங்களும் அவர்களை ஏலம் பேசி வாங்குவதனை நிறுத்துவோம்!!// சோழன்
    சோழனின் எழுத்துக்களில் அவர் எவ்வளவுதூரம் மக்ளிடம் இருந்து விலகி நிற்கின்றார் என்பது தெரிகின்றது. அவரது மொழியில் அவர் கேவலப்படுத்துபவர்கள் எனது உறவுகள். என்னுடைய நெருங்கிய உறவுகள் உட்பட அந்த முகாம்களில் உள்ளனர். ஒரு சகோதரியின் குடும்பம் மட்டும் அவர் தாய்மை அடைந்திருப்பதால் வெளியேற அனுமதிக்கப்பட்டு யாழ் சென்றுள்ளார்.

    எமது உறவுகள் தங்கள் துன்பச்சுமையில் எம்மிடம் உதவி கேட்பதற்குப் பெயர் கையேந்துவதல்ல சோழன். முதலில் மக்களை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பயன்படுத்தம் வார்த்தைகளில் வக்கிரத்தை சேர்க்காதிர்கள். வன்னியில் உள்ள ஒவ்வொரு தமிழனும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உதவியை உரிமையுடனேயே கேட்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்கின்ற கடமையும் பொறுப்பும் ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனுக்கும் உண்டு. உங்களுக்கு உதவி செய்ய முடியவில்லை விரும்பவில்லை என்பதற்காக அவர்கள் ஏதோ கையேந்துவதாக கேவலப்படுத்துவதை நிறுத்துங்கள்.

    அந்த மக்களுக்கு எந்த வழியில் உதவ முடியுமோ அந்த வழியில் உதவுவதே இன்றுள்ள கடமை. //அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் உழுது.விதைத்தும், தம் கடலில் சுதந்திரமாக தொழிலில் செய்து வாழ்வதற்கான வழியேயாகும்!!// அவர்கள் சுதந்திரமாக உழுவதற்கு உழவு இயந்திரமும் கடலில் சுதந்திரமாக தொழில் செய்வதற்கு படகுகளும் வானத்தில் இருந்து வருமா அல்லது 60 ஆண்டுகால இனவாத அரசு தருமா?

    அதனை புலம்பெயர்ந்து வாழும் சில உறவுகள் வெவ்வேறு வழகளில் செய்கிறார்கள். அதற்குப் பெயர் அந்த உறவுகளை வாங்குவதல்ல //அதை விடுத்து நாங்களும் அவர்களை ஏலம் பேசி வாங்குவதனை நிறுத்துவோம்!!// உதவி மனிதாபிமானம். விடுதலைப் போராட்டம் புரட்சி என்று அம்மக்களை ஏமாற்றிவிட்டு மேற்கு நாடுகளுக்கு தப்பி வந்து அந்த மக்களின் அவலத்தில் அரசியல் தஞ்சம் கேட்ட குற்ற உணர்வு. அதனால் தான் உதவி செய்கிறார்கள். 30 ஆண்டு கால யுத்த்தில் பட்டினிச்சாவை மக்கள் எதிர்நோக்காததற்குக் காரணம் புலம்பெயர்ந்த உறவுகளின் உதவியும் தான்.

    எமது உறவுகளுக்கு உதவுவதற்கான அமைப்புகளை நாங்கள் தான் உருவாக்க வேண்டும். எமது மக்கள் எம்மிடம் உதவி கோருவது கையேந்துவதல்ல. நாம் அம்மக்களுக்கு உதவுவது அவர்களை வாங்குவதற்குமல்ல.

    தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் வீடுகட்டி கிணறு வெட்டி சொந்த வீட்டில் இருந்து தண்ணி குடிப்பது தான் சிறந்தது என்று மேலான ஆலோசனைகளை வழங்குவதற்கு இங்கு ஊரிப்பட்ட பேர் கைவசம் கொள்கைகயோடு உலாவிறார்கள். நித்திரையால் எழுப்பிக் கேட்டாலும் பின்னுக்கு இருந்து சொல்கிற திறமை அவர்களிட்டை இருக்கு என்றதிலை எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவை வெட்டின கிணறுகளில் இருந்து தண்ணி வரேல்லை பூதம் தான் வந்தது.

    அதனால் முதலில் தாகத்திற்கு தண்ணி கொடுப்பம். பிறகு பூதம் வராம யார் கிணறு வெட்டக் கூடியவர்கள் என்று பார்த்து கிணறை வெட்டி தண்ணி குடிப்பம். சோழன். கிணற்று தண்ணியை கையால குடிக்கிறதா இருந்தால் கையேந்தித்தான் குடிக்க வேணும். அதுக்காக அவர்களை கையேந்திகள் என்று நீங்கள் சொல்லப்படாது.

    Reply
  • மாயா
    மாயா

    புலத்து வியாபாரிகள் நினைத்தது போல், வணங்கா மண் சென்று சேர்ந்திருந்தால், புலத்து வியாபாரிகள், இந்த வழியிலேயே இருக்கும் நாட்டில் ஊர்களையே விலை கொடுத்து வாங்கியிருப்பார்கள். நல்லவேளை, வணங்கா மண், வழிஞ்ச மண் ஆனது. அதனாலேயே புலத்து மக்கள் நிம்தியாக இருக்கிறார்கள்.

    புலத்து மக்களிடம் ஒரு வேண்டுகோள், நீங்கள் அனைவரும் தாயகத்தில் இருந்து வந்தவர்கள் என்றால், உங்களுக்கு தெரிந்த அல்லது உறவுகள் யாராவது முகாமிலிருப்பார்கள். அவர்களுக்கு வங்கி வழி பணம் அனுப்பி உதவலாம். அவர்கள் உங்கள் உறவாக வேண்டியதில்லை. ஒரு மனிதாபிமானம். பணம் இருந்தால், அவர்கள் விரும்பிய எதையாவது வாங்கிக் கொள்வார்கள். பொருட்களை, இங்கிருந்து அனுப்ப வேண்டியதில்லை. இப்போதைய நிலையில் இது இலகுவான வழி. நான் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்த பல நண்பர்கள், இவ் வழி உதவிகளை செய்கிறார்கள். அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள அதனால் முடிகிறது. வவுனியாவிலுள்ள எவர் மூலமாவது உள்ளே உள்ள ஒருவரை தொடர்பு கொள்ள முயலுங்கள். அடுத்து உங்கள் உதவி பலனழிக்கும்.

    Reply
  • BC
    BC

    //மாயா- புலத்து வியாபாரிகள் நினைத்தது போல், வணங்கா மண் சென்று சேர்ந்திருந்தால், புலத்து வியாபாரிகள், இந்த வழியிலேயே இருக்கும் நாட்டில் ஊர்களையே விலை கொடுத்து வாங்கியிருப்பார்கள்.//
    சந்தேகமேயில்லை. புலத்து வியாபாரிகளுக்கு தற்போது மிகவும் ஏமாற்றம் தான்.

    //உறவுகள் யாராவது முகாமிலிருப்பார்கள். அவர்களுக்கு வங்கி வழி பணம் அனுப்பி உதவலாம்.//
    பலருக்கு பேரழிவை ஏற்படுத்துவதற்க்கு பங்களிப்பை செய்வதில் தான் திருப்த்தி ஏற்படுகிறது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வணக்கம் பாண்டியன். உங்கள் பின்னோட்டத்தையிட்டு மகிழ்சியடைகிறேன். பஞ்சத்துக்கு ஆண்டியா? பரம்பரை ஆண்டியா?? என்றதுமாதிரி தேசம்நெற்றில் வந்த எல்லோரும் பஞ்சத்துஆண்டிகள் தான். ஏழுதிப்பிழைக்க வேண்டும் எமது மேதா விலாசத்தை காண்பிக்க வேண்டும் என்று ஒருவருமே இல்லை. அப்படியிருந்தால் அவர் அழிக்கப்படுவார் (அழிக்கப்படுவார் என்ற வார்த்தையை புலி அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளாதீர்கள்)அல்லது தன்னை திருத்திக் கொள்வார்.ஆனபடியால்துணிகரமாக மனதில் பட்டதை எழுதுங்கள்.முயற்சி எடுங்கள் இருபத்திநான்கு மணத்தியாலத்தில் ஒரு மணத்தியாலத்தை இதற்காக ஒதுக்குங்கள் மடைதிறந்த வெள்ளமாக உங்களுக்கு…
    சித்திரமும் கைபழக்கம் செந்தமிழும் நாபழக்கம் எழுத்தும் அப்படித் தான். உங்களால் முடியும்.

    வர்கப்போராட்டத்தை இலவுவாக வழிஅமைப்தாக இருந்தால் இலங்கையில் இத்தனை ஆண்டுகால மனிதஉயிர்களையும் அவலங்களையும் சந்தித்திருக்க மாட்டோம். வர்கப்போராட்டத்தின் மறைமுக வடிவங்கள்தான் இவைகள். இவை மட்டுமல்ல காஷ்மீரில் தொடங்கி இரட்டை கோபுரம் தகர்த்தல் வரை அதுதான். என்ன?ஒவ்வொரு வெற்றியும் முதாளித்தவத்தின் வெற்றியாகிறது .தொழிலாளி வர்கத்தை உலகரீதியாக ஒழுங்கமைப்பதிதிலேயே பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி உறுதியளிக்கப்படும். இலங்கை இதற்கு விதிவிலக்காக இருக்கமுடியாது.

    Reply
  • சோழன்
    சோழன்

    …”அண்மையில் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களில் கணிசமான தொகையினரை அரசு நாட்டின் ஏனைய பகுதிகளில் ‘தற்காலிகமாக’ குடியிருத்த முயற்சிப்பதாகத் தெரியவருகின்றது. அதன்படி வெளிநாடுகளில் உள்ளவர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களைப் பொறுப்பெடுக்க முன்வரும்பட்சத்தில் பொறுப்பெடுக்கப்பட்டவர்களை ‘தற்காலிகமாக’ தென்னிலங்கையில் குடியமர்த்துவது பற்றி அரசு ஆராய்கின்றது. அவ்வாறு குடியிருத்தப்படுபவர்களது செலவீனங்களை அவர்களைப் பொறுப்பெடுக்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் செலுத்த வேண்டும் எனக் கேட்கப்பட இருப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.”……..

    வணக்கம் ஜெயபாலன், இங்கு மேலுள்ளது தங்களால் எழுதப்பட்டது! இது 100% உண்மை!! நடைபெறத்தான் போகிறது!! மிஞ்சினால் உலகிற்கு காட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரை பரந்தன், கிளிநொச்சியில் மாத்திரம் தற்காலிகமாக குடியேறுவதாக காட்டி, ஏனையோரை வேறுபகுதிகளில் உள்ள முகாங்களில் அடைக்கப்படுவார்கள்.

    எது, எமக்கு இன்றைய முக்கியமான தேவை?? அம்மக்களை நிரந்தரமாக தம் பூமியில் குடியேற்ற வைப்பதா?? அல்லது அவர்களுக்கு வருடத்தில் ஒருநாளில் ஒரு நேரக்கஞ்சி ஊற்றுவதா??

    ……”அதனால் முதலில் தாகத்திற்கு தண்ணி கொடுப்பம். பிறகு பூதம் வராம யார் கிணறு வெட்டக் கூடியவர்கள் என்று பார்த்து கிணறை வெட்டி தண்ணி குடிப்பம். சோழன். கிணற்று தண்ணியை கையால குடிக்கிறதா இருந்தால் கையேந்தித்தான் குடிக்க வேணும். அதுக்காக அவர்களை கையேந்திகள் என்று நீங்கள் சொல்லப்படாது.”…

    ஜெயபாலன், எம்மக்கள் வன்னியில் கிணறு வெட்டித்தான் தண்ணீர் குடிக்க வேண்டிய நிலையில் இருக்கவில்லை!! புலிப்பிரட்சனை, பூனைப்பிரட்சனை, வர்க்தகதடைகள், … குண்டு வீச்சுக்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்தபோதும் தண்ணீருக்காகவோ, கஞ்சிக்காகவோ ஒருவரும் அல்லல்படவில்லை!! தம் நிலத்தில்/தம் கடலில் உயிரைக் கொடுத்தாவது உழைத்து வாழ்ந்தவர்கள்!! புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்தாலும் புலி சாப்பாடு போடவில்லை!! மாறாக அம்மக்களே மரணத்திலும் வாழ்ந்தார்கள்!! ஆனால் இன்றோ?? … அம்மக்களை அவரவர் நிலத்தில் குடியேற்றிலாலேயே, அம்மக்கள் கையிலால் என்ன, வாயினாலேயே உறிஞ்யும் குடிப்பார்கள்!!

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    வணக்கம் சோழன் ”வன்னி முகாம்களை மூடுவது மட்டும் தீர்வாகாது!” என்ற கட்டுரையில் இருந்து ஒரு பகுதியைப் போட்டுவிட்டு அந்த மக்களை வன்னி மண் பூர்வீக மண் என்று கதையளக்க முற்பட்டுள்ளீர்கள். அமெரிக்காவில் உள்ள பேர்ள் என்ற அமைப்பு நீங்கள் சொன்ன அதே கதையைச் சொல்லித்தான் வன்னி மண்ணில் இருந்து தினம் தினம் குண்டு விழுகின்ற பூமியில் இருந்து மக்களை வெளியேற்றக் கூடாது இது பூர்வீக மண் என்றது. நீங்களெல்லாம் இலங்கையரசு ஏதோ ஜனநாயக அரசு போலவும் அது மனித உரிமைகளைக் காக்கின்றது போலவும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்று எண்ணியும் தான் கதையளக்கின்றீர்கள். பீரங்கிக் குண்டுகளைப் பொழியும் பொழுது அங்கு தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் இக்குண்டுகளால் புலிகள் அல்ல மக்களும் கொல்லப்படுவார்கள் என்பது அந்த அரசுக்குத் தெளிவாகத் தெரியும். அந்த மக்களுக்கும் தெளிவாகத் தெரியும். அதனால் தங்களைக் காப்பதற்கு அரச படைகளை நோக்கிச் செல்வதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை. அதனால் அவர்கள் அரசபடைகளை நோக்கி நகர்ந்தார்கள்.

    புலிகள் பூர்வீக மண் கதையைச் சொல்லித்தான் மக்களை பலவந்தமாக தங்கள் பாதுகாப்பிற்காக முள்ளிவாய்க்கால் வரை இழுத்து வந்தனர். அதே பூர்வீகமண் கதையைச் சொல்லித்தான் புலத்து தமிழர்கள் முள்ளிவாய்காலை விட்டு மக்களை வெளியேற்ற வேண்டாம் என்று தடுத்தனர். இப்போது அதே பூர்வீகமண் கதையொடு நீங்கள் வந்திருக்கிறீர்கள். நிற்க.

    அரசு திட்டமிட்டு தமிழ் மக்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த முற்படுகின்றது. அதனைத் தடுக்க உங்களிடம் உள்ள திட்டம் ”அம்மக்களை நிரந்தரமாக தம் பூமியில் குடியேற்ற வைப்பதா?? அல்லது அவர்களுக்கு வருடத்தில் ஒருநாளில் ஒரு நேரக்கஞ்சி ஊற்றுவதா??”

    வடக்கு கிழக்கு சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் வெளிநாடுகளுக்கு வந்துள்ளனர். மூன்றிலொரு பகுதியினர் தென்னிலங்கையில் உள்ளனர். மற்றுமொரு மூன்றிலொரு பகுதியினர் தான் வடக்கு கிழக்கில் இன்று பெரும்பாலும் முகாம்களில் வாழ்கின்றனர்.

    சோழன் நீங்கள் நான் உட்பட வடக்கு கிழக்கு சனத்தொகையில் மூன்றிலொரு பங்கினர் எதற்காக எமது பூர்வீக மண்ணைவிட்டு வெளிநாட்டுக்கு வந்தோமோ அதே காரணங்களுக்காக வன்னி மக்களும் வெளிநாடுகளுக்கும் தென்னிலங்கைக்கும் செல்வதை நீங்கள் எப்படித் தடுக்க முடியும் அதற்கு உங்களுக்கும் எனக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் என்ன தகுதி இருக்கின்றது?

    நீங்கள் வெளிநாடுகளுக்கு வந்ததும் டொலரையும் பவுணையும் கண்டதும் உங்களுக்கு ‘கையேந்துகிறார்கள்’ ‘கஞ்சி ஊற்றுவது’ போன்ற தடித்த சொல்லாடல்கள் தான் வெளிப்படுகிறது.

    வன்னி மக்கள் தங்கள் பூர்வீக மண்ணில் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளைச் செய்யத் தவறினால் அந்த அடிப்படை வசதிகள் எங்கு கிடைக்கின்றதோ அதைநோக்கி அவர்கள் நகர்வார்கள். எங்களைப் போன்று அவர்களும் பூர்வீகம் புண்ணாக்கு என்று எதையும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். எங்கு வசதி வாய்ப்புகள் உள்ளதோ அங்கு செல்வார்கள்.

    இந்த உளவியலை இலங்கை அரசு திட்டமிட்டு பயன்படுத்தப் போகின்றது.

    நீங்கள் ”அம்மக்களே மரணத்திலும் வாழ்ந்தார்கள்!! அம்மக்கள் கையிலால் என்ன, வாயினாலேயே உறிஞ்யும் குடிப்பார்கள்!!” என்று அந்த மக்களை புராண இதிகாச காலங்களிலேயே வாழ வைக்கலாம் என்று என்று கனவுலகில் வாழாதீர்கள்.

    2011ல் சனத்தொகைக் கணக்கெடுப்பு நடக்க இருக்கின்றது முடிந்தால் அதற்கு முன்னர் வடக்கு கிழக்கு சென்று உங்கள் பூர்வீகமண் பறிபோவதை தடுக்க முயற்சிக்கவும். எத்தினை புலத்து பூர்வீகமண் பக்தர்கள் உங்களுடன் வந்து கையிலால் என்ன, வாயினாலேயே உறிஞ்சிக் குடிக்கும் அழகை நான் பார்க்கிறேன். கிணறு வெட்டாமல் வாயினாலேயே மற்றவர்களை உறிஞ்சிக் குடிக்க வைக்கும் சோழனின் திறமையைக் கண்டு புல்லரிக்கின்றது.

    Reply