தென் மாகாண சபைக்கான அமைச்சர்களை தெரிவு செய்யும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் கூறினார்.
இவர்கள் விரைவில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை தென் மாகாண சபை முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சரே மீண்டும் நியமிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் கூறின.