‘புதினம்’ இணையத்தளம் மூடல்.

191009puthinam_com.jpgவிடுதலைப் புலிகள் ஆதரவு முக்கிய இணையத்தளமான ‘புதினம்’ திடீரென மூடப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேல் இவ்விணையத்தளம் இயங்காது என்ற செய்தியை (This is to advise due to personal reasons this website will not be functioning anymore)  புதினம் வெளியிட்டுள்ளது.

புதினம் இணையத்தளத்தின் திடீர் மூடல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. விடுதலை புலிகள் சார்பான புதினம் இணையத்தளம் முல்லைத்தீவில் இறுதிக்கட்ட மோதல்களில் போது போர்க்கள நிலவரத்தை உடனுக்குடன் தரவேற்றம் செய்தது.

வெளிநாட்டு புலிகளுக்குள் தொடரும் சொத்து பிரச்சினைகளின் எதிரொலியாகவே இந்த இணையத்தளம் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 Comments

  • jalpani
    jalpani

    பிரபாகரனின் மரணத்தின் பக்க விளைவுகளில் ஒன்று.

    Reply
  • சட்டம்பிள்ளை
    சட்டம்பிள்ளை

    பிரபாகரனின் மரணத்தின் பின் இதெல்லாம் எதிர் பார்த்தவை தான்

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய் ஊடகங்கள் பொய்யாய் போய்விட்டன. படுகொலையில் ஆரம்பித்த படுகொலை போராட்டம் எத்தனயோ பத்தாயிரம் பேரை பலி எடுத்து கடைசியில் பிடரியில் கொத்து வாங்கி படுகொலை செய்யப்பட்டது. படுகொலைகளும் பொய்களும் நீண்ட நாளைக்கு நிலைக்காது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புதினம் மட்டுமல்ல தமிழ்நாதம் இணையத்தளமும் காணாமல் போய்விட்டது. புலிகள் இருக்கும் வரை, புலிப்புராணம் பாடியே காலத்தை ஓட்டியவர்கள் இவர்கள். பின்பு அதே பெயரில் வேறு விதமாக எழுத முற்பட்டனர். சாயம் வெழுத்து விட்டது என மக்கள் சாடத் தொடங்கினர். அதனால் பழைய பெயர்களை காலாவதியாக்கி விட்டு தற்போது புதிய பெயர்களில் இவர்கள் களம் புகுந்துள்ளதாக நம்பகமான செய்தி தெரிவிக்கின்றது. இவற்றை உறுதிப்படுத்துவது போல் திடீர் இணையத்தளங்களும் களத்தில் புகுந்துள்ளன. ஆடிய கால்களும் பாடிய வாய்களும் சும்மா இருக்காதென்பது, இணையத்தளங்களுக்கும் பொருந்தும் போல.

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    ஆயிரக் கணக்கில் கொலைகள் செய்தும் அண்டப்புளுகு புளுகியும் ஆயிரம் பொய் சொல்லியும் நாம் கண்டதென்ன? ஆயிரக் கணக்கான எம் பிள்ளைகளையும் கோடிகணக்கான சொத்துகளையும் இழந்துவிட்டு இன்று அரசியல் அனாதைகளாக அம்மணமாக நிற்கிறோம். இத்தனை அழிவிற்கு பிறகும் நாம் திருந்தாவிட்டால் நாம் முன்னேறவே முடியாது! இனியாவது இனவெறியில் மூழ்காமல் வெகு சாணக்கியமாக சாமர்த்தியமாக ஒற்றுமையாக சந்தோஷமாக வாழப்பழகுவோம்!!

    Reply
  • mano
    mano

    இலங்கையில் சில மாதங்களுக்கு முன்னரே புதினம் தடை செய்யப்பட்டுவிட்டது.

    Reply
  • மாத்தையா
    மாத்தையா

    //mano on October 19, 2009 2:19 pm இலங்கையில் சில மாதங்களுக்கு முன்னரே புதினம் தடை செய்யப்பட்டுவிட்டது.//
    இப்போது நடந்துள்ளது தடையல்ல. அவர்களது வார்த்தையில் உள்ளுக்கு வரவிட்டு அடித்தல் போன்ற நாடகம்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்.
    This is to advise due to personal reasons this website will not be functioning anymore.

    என தனிப்பட்டதாக ஆகிவிட்டது தேசியம். பாவம் இன்னும் வீதிக்கு வந்து கோஸம் போடுவோர்.

    Reply
  • Thaksan
    Thaksan

    உள்ளுக்கை விட்டு அடிக்கப் போறாங்கள் என்ற கற்பனையை புலிகளையே நம்ப வைச்ச புளுகுத் தளம் புதினம். உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கினாங்கள். கிளைமாக்ஸே இல்லாமல் படத்தை முடிச்சு ரசிகர்களையெல்லாம் ஏமாத்தீட்டிங்களே. அடப் போங்க…. நீங்களும் உங்கட போராட்டமும். ……….!

    Reply
  • மகுடி
    மகுடி

    உள்ளுக்கை வச்சு அடித்தது புலிகள் அல்ல. கடைசியில் இராணுவமே அதைச் செய்தது. வந்து காலடியில் வீழ்ந்த புலித் தலைமையை உள்ளுக்கையே வைத்து அடித்து, கடைசியில் முடித்தும் போட்டது.

    இராணுவ இரகசியங்களை பெற அழகான பெண்களை, இராணுவ உயர் அதிகாரிகளிடம் படுக்கைக்கு அனுப்பியது வரை, கலாச்சார பேணலை புலிகள் செய்தனர். ஆனால், பெண்களை நிர்வாணமாக்கி சீரழிக்கிறார்கள் என பொய்யான தகவல்களை வழங்கி வந்தவை புலி ஊடகங்களும், அதன் தலைமையுமேயாகும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //பிரபாகரனின் மரணத்தின் பக்க விளைவுகளில் ஒன்று//
    அப்படியாயின் இதுவும் பரபரப்புதானா? புதினமில்லையா??

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இது சம்பந்தமாக இணையத்தளமொன்றில் ஒருவர் தனக்கு வந்த மின்னஞ்சலாக இணைத்ததை நான் இங்கு இணைக்கின்றேன். இதில் எந்தளவு உண்மையுள்ளது என்பது எனக்கும் தெரியாது.

    திரு.**** அவர்களுக்கு ,தமிழ்தேசியத்தின் ஊடகமொன்று அதுவும் புலிகளின் நேரடிக்கட்டுப்பாட்டில் மே மாதம் வரை இயங்கிய ஊடகமொன்று அதற்கும் மேல் எல்லா ஊடக நிறுவனங்கள்,ஊடகவியலாளர்கள்(உள் நாட்டு மற்றும் இந்திய)தொடர்பிலும் மிகவும் எல்லா தரப்பாலும் நம்பகத்தன்மையான செய்திகளாக பரீட்சையப்பட்ட ஊடகமொன்று வெளிநாட்டில் இருந்து கொண்டு கோலோச்சும் மாவீரர்களின் அச்சுறுத்தலால் நின்று போனது என்பதே உண்மை.இது ஊடக அடக்குமுறை. இந்த சொல் தமிழ் தேசிய பரப்பில் எதிரிக்கு எதிராக சொல்லப்பட்டு வந்தது இப்போது எம்மவரை பார்த்து சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது.தேனீ,அதிரடி, நெருப்பு போன்ற அதிர்வுகள் தமிழ் தேசியமென சொல்லிக்கொண்டு நெருடலாக ஊடுருவிவிட்டது.
    போதாக்குறைக்கு @ தமிழ்தேசியம் @பேசும் ஊடகமும் முளைவிட்டுள்ளது.

    புதினம்,தமிழ்நாதம் ஆகிய ஊடகங்களை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பொய்மைகளை கக்குவதற்கு சில தரப்பினர் எடுத்துக்கொண்ட விடாப்பிடியான அழுத்தங்கள்,மிரட்டல்கள்,துரோகிப்பட்டங்கள் எல்லாவற்றினையும் தாண்டி கடந்த 5மாதங்களாக குறித்த இணையத்தளத்தினை ஒரு மருத்துவ நிதியில் தனது உறவினருடன் வாழ்ந்து வரும் திரு.கரன் என்பவரால் முழு நேரமாக தன்னை அர்ப்பணித்து இந்த தளம் நடாத்தப்பட்டுவந்தது.

    ஆனால் ஒரு சில நாட்களுக்கு முன்னர் வந்த நாடு கடந்த அரசு தொடர்பான செய்தி தொடர்பாக திரு.கரன் அவர் தங்கியிருந்த வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது உறவினரது வீட்டிற்கு வேண்டத்தகாத நேரத்தில் தொலைபேசி எடுத்த வீரர்கள் தமது இயக்கத்தின் கட்டுக்கோப்பு ஒழுக்கம் பற்றி மேடைக்கு மேடை கூறும் செயல்வீரர்கள் மிகமோசமான வார்த்தை பிரயோகங்களினை குறித்த வீட்டில் இருந்தவர்களுக்கு சொல்லி பயமுறுத்தியுள்ளனர்.

    இதன்பின்னர் நடந்த விடயங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இதில் எழுதமுடியவில்லை.

    இப்போது புதினத்துக்கும் தமிழ்நாதத்துக்கும் நடந்தது இனி வேறு ஊடகங்களுக்கும் நடக்கலாம்?

    ஏனெனில் சுபவீக்கும் கஸ்பருக்கும் நடந்தது இனி நெடுமாறனுக்கும் சீமானுக்கும் நடக்கும் இதுதான் தமிழ் தேசிய அரசியல் கொள்கை.
    இதை விளங்க்கிக்கொள்ளாதவரை துரோகிப்பட்டங்கள் மாறிமாறி கோலிப்பண்டிகையாக போன்று வீசி கொண்டாடப்படும்.

    இதை நீங்கள் வலைப்பதிவில் போடுவீர்களானால் நீங்களும் துரோகிதான்.

    நட்புடன் *****
    [2:21:37 PM]

    Reply
  • விசுவன்
    விசுவன்

    மேற்சொன்ன விடயம் ஒரு இணையத்தளத்தில் வந்திருந்தது! சுட்ட காரணம் உள் முரண்பாடே புதினத் தடைக்கு காரணமாம்!

    Reply
  • jalpani
    jalpani

    கடந்து வந்த பாதை தன்னை திரும்பி பாரடா!
    நாச வேலை செய்த நீயும் வருந்துவாயடா!

    பாடல் எப்படிப் பொருந்திப் போகிறது!

    Reply
  • Puthinam Reader
    Puthinam Reader

    Puthinam is closed for personal reason that mean it was not run for people. blady prabakaran killed innesent muslim without any reason, he destroyed muthur and his end started from there. people still says he was hero but he is a coward, he killed so many people but he like to live long thats y he surrendered.

    Reply
  • மாயா
    மாயா

    புதினம் பழங் கஞ்சாச்சு. தமிழ் நாதம் அடங்கிப் போச்சு.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மெல்ல மெல்ல கசியும் செய்திகள்…………..
    புதினம், தமிழ்நாதம் எனும் இரு இணையத்தளங்களும் அவுஸ்திரேலியாவில் உள்ள கரன் என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இவ் இரு இணையத்தளங்களும் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்ரரின் மேற்பார்வையில் இயங்கி வந்தன. இவ் இணையங்களுக்கான செய்திகள் வன்னியில் இருந்து நந்தவனம் எனும் பெயரில் இயங்கிவந்த புலிகளின் கிளை ஒன்றில் இருந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

    அதேநேரம் இவ் இணையத்தினை நிர்வகித்து வந்த கரன் என்பவருக்கு தயா மாஸ்ரரின் சிபார்சின் பேரில் மேற்குலக நாடொன்றில் வசிக்கும் தமிழ் தொழில் அதிபர் ஒருவர் நிதி உதவி செய்து வந்துள்ளார். ஆனால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரனுக்கான மாதாந்த வருமானம் கிடைக்காமையால் அவ்விணையம் தடைப்பட்டிருக்க வேண்டும் என கடந்த காலங்களில் புலிகள் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒருவர் சந்தேகம் தெரிவித்தார்.

    அத்துடன் தயா மாஸ்ரர், இலங்கை அரசாங்கத்தினால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார் என்பது பலரினாலும் உணரப்பட்டுள்ள விடயம். அந்நிலையில் தயா மாஸ்ரரின் நம்பக்கைக்கு உரியவரான கரனால் நிர்வகிக்கப்பட்டு வந்த இணையம் தனிப்பட்ட காரணங்களுக்காக சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. தனிப்பட்ட காரணங்கள் எனும்போது தயா மாஸ்ரரின் தேவைக்காக நிறுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட இணையம், பிற்காலத்தில் தயா மாஸ்ரர் கும்பல் மீண்டும் ஒரு வடிவத்தில் மக்களை ஏமாற்ற மக்கள் முன் தோன்றும்போது புதினம், தமிழ்நாதம் போண்ற இணையங்களும் தமது வடிவத்தையும் மாற்றிக்கொண்டு வெளிவருவதற்கு முன் ஏற்பாடாக நிறுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

    புலிகள் இயக்கம் இரு பிரிவுகளாக பிரிந்துள்ளபோது, குறிப்பிட்ட இரு இணையங்களும் கே.பி தரப்பினரை ஆதரித்து வந்திருந்தன. கே.பி யின் கைதை தொடர்ந்து இடம்பெற்ற தொடர் கைதுகளையும், இலங்கை அரசியல் மாற்றங்களையும் வைத்து நோக்குகின்றபோது, கொழும்பில் தடுப்புக்காவலில் உள்ள கேபி யின் அழுத்தத்தில் குறிப்பிட்ட இணையங்கள் நிறுத்தப்படனவான என்கின்ற சந்தேங்களும் எழுந்துள்ளன.

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    பேதத்தை வேதமாய் போதித்து மனிதநெறி இழந்து இனவெறி தலைக்கேறி ஆயிரக்கணக்கில் மக்களை பலிகொடுத்து பிணக்கணக்கு காட்டி பணம் சேர்த்த கொரூரகொள்ளையர்கள் இனி ஒருவழியும் இல்லாதலால் இழுத்து மூடுகிறார்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    புதினமே ஒரு புதினமாய் இன்று நம் மத்தியில்;

    Reply