Tuesday, August 3, 2021

ஓசியில் ஒரு இந்திய எதிர்ப்பு ஓலம்! : வாசு

Pirabakaran V & Mahathaya‘மறை களண்ட கோமளிகள்!’, ‘வெள்ளி பார்க்க வந்த வெங்காயங்கள்!’, ‘இந்தியா ஒரு வாந்தி!’, ‘சோனியா ஒரு சோந்தி!’, ‘வடக்கன் வம்பிலை பிறந்தவன்’ இது நான் சொல்வது அல்ல. இந்தியா பற்றி அண்மையில் புலம்பெயர் தமிழ் தேசிய ஊடகங்கள் வெளிக்கொணர்ந்த பதங்கள்! 1980களில் இந்தியாவையும் இந்திய அரசை மட்டும் நம்பி படையெடுத்த தேசிய விடுதலைப் போராட்டம் இன்று இந்தியாவை வாந்தி பேந்தி என்று திட்டுமளவிற்கு வந்த காரணங்கள் வெள்ளிடைமலை!. சுருங்ககூறின் புலிகளின் இருப்பை இந்தியா கேள்விக்கு உள்ளாக்கியமையும் புலிகளை அழிக்க சிறீலங்கா அரசிற்கு உதவியமையுமே இந்த இந்திய எதிர்பின் இன்றைய உச்சக் கட்டம். ‘ஆகாசவாணி’யின் செய்திகளை மெய்மறந்து  கேட்ட யாழ்பாண மக்கள் இன்று அதே ஆகாசவாணியை அழிக்க வேண்டும் என்ற பார்வையில் கட்டுரைகள் பல  எழுதப்பட்டு வருகிறது. அதாவது இந்தியா என்ற தேசம் இருக்கும் வரை தமிழீழம் கிடைக்காதாம். இதை எழுதியவர் ஒரு அரசியல் ஆய்வாளராம். இவர் பெயர் சபேசனாம்!. நாம் அனைவரும் இந்தியாவை அழிக்க சீனாவுடன் கூட்டுப் புணர்ச்சி செய்ய வேண்டும் என்று நாசூக்காக வேறு சொல்லுகிறார். அட முட்டாள் பயலுகளே இந்தியாவில் இப்ப பிரபலமாக விற்கப்படும் பிள்ளையார் சிலைகள் செய்யப்படுவதே சீனாவில்தான்.

இந்த ஆய்வாளர் திலகம் இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி போற போக்கில இந்தியாவுக்கு விசா எடுப்பற்கு நாங்கள் ‘இந்தியாவின் இறைமைக்கு ஆதரவாக இருப்போம்’ என்று கற்பூரத்தில் அடித்து சத்தியப் பிரமாணம் எடுக்க  வேண்டி வந்தாலும் வரும்!. இதுதான் இந்த ஆய்வாளரின் இந்திய எதிர்ப்பின் பலாபலனாக இருக்குமே ஒழிய வேறு எதுவும் நடந்துவிடப் போவதில்லை.  1980களில் இருந்த நிலையில்தான் சர்வதேச அரசியல் இருப்பதாக  இந்த பத்திரிகையாளர் நினைப்பதுதான் ‘மறை களன்ட கோமாளி’யின் சிந்தனை. இதை லண்டன் வாழ் தமிழ்மக்கள் ஓசியில் படிப்பது….. ???

இந்திய எதிர்ப்பை இன்று மிக மோசமாக நடாத்திவரும் இந்த பத்திரிகைகளும் வானொலிகளும் யதார்த்தத்தை மறந்து கற்பனை உலகில் இருக்கிறார்கள்.  1986இல் சிறிலங்கா இந்திய ஒப்பந்தம் இடம்பெற்றபோது நான் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி கல்வி கற்றுக்கொண்டிருந்த சமயம். புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட சமயம், நான் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த செங்கமலத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. அப்போது அவர்களின் மனநிலை மிகவும் குழம்பியதாக இருந்தது. ”இந்தியாவின் உதவியுடன் நாம் மிகவும் நல்லவிதமாக நமது போராட்டத்தை வென்றெடுக்க முடியும். ஆனால் தலைமை பிழை விடுகிறது. என்ன செய்வது தலைமையின் சொல்லை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என அவர் மன வேதனையுடன் கூறியது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.

இந்தியா தனது நலனை தவிர வேறு எந்த நலனுக்காகவும் இலங்கைக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை! ஆனால் இந்திய இராணுவம் தமிழ் மக்களின் காவலாளிகளாகவே அன்று தமிழ் மக்களால் பார்க்கப்பட்டார்கள். கிழக்கில் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை இல்லாது செய்ய இந்தியா சில திட்டங்களை புலிகளுடன் தீட்டியது பலருக்கு தெரிய நியாயமில்லை. அது மட்டுமல்ல புலிகளின் தலைமைக்கு பல வாக்குறுதிகளை கொடுத்ததுடன் ”மாகாணசபையை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். சிங்கள இனவாத அரசு அதை நிச்சயம் மறுக்கும். அந்த நேரத்தில் நமது இராணுவம் வடக்கு கிழக்கில் உங்களிற்கு பயிற்சி அழித்து ஒரு தமிழ் தேசிய இராணுவத்தை ஏற்படுத்த அனைத்தும் செய்வோம்” என்று உறுதிமொழியும் வழங்கப்பட்டது.

ஆனால் ”வடக்கு கிழக்கில் புலிகள் மட்டுமல்ல மற்றைய குழுக்களும் இயங்க புலிகள் வழி சமைக்க வேண்டும்” என்றும் கோரப்பட்டது. இதுதான் புலிகளை உசுப்பேத்திய ஓரே ஒரு பிரச்சனை. இந்த நிபந்தனை இல்லாதிருந்திரதால் புலிகள் இந்திய இராணுவத்திற்கு நிச்சயம் சலாம் போட்டிருப்பார்கள்.  புலிகள் தம்மை தவிர எந்த ஒரு இயக்கமும் இருக்க கூடாது என்பதில் முனைப்பாக இருந்த ஒரே காரணம்தான் அவர்களை இந்தியாவுடன் மோத வைத்தது என்பதை புலிகளின் பல முன்னைநாள் போராளிகள் அன்றே ஒப்புக் கொண்டார்கள். மக்களின் நலனில் எந்தவித அக்றையும் கொள்ளாத புலிகள் தமது இருப்பை மட்டும் முன்நிறுத்தியது என்ன நியாயாம்? காலா காலமாக சிங்கள இனவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளான கிழக்குவாழ் தமிழ் மக்கள் இந்திய இராணுவ பிரசன்னத்தில் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தார்கள். புலிகள் மெதுவாக மக்களிடமிருந்து ஒதுக்குப்பட்டார்கள். இதைக் கண்ணுற்ற புலிகள் இனியும் இந்த நிலை நீடித்தால் தாம் முழுவதுமாக மக்களிடமிருந்து ஒதுக்குப்பட்டு விடுவோம் என்ற நிலையில் இந்திய இராணுத்துடன் மோதுவதே தம்மை காக்கும் என பிரபாகரன் உணர்ந்தார். புலிகளின் தலைவர் பிரபகாரனின் இந்த தனிப்பட்ட முடிவு தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியதுடன் இந்தியா தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக மாற்றப்பட்டது.

வடக்கு கிழக்கு மக்களிடம்  எந்தவித அபிப்பிராயமும் கேட்காது தான்தோன்றி தனமாக யுத்த நிறுத்தத்தை மீறியது புலிகளே. இந்த முடிவை பல புலிப் போராளிகள் எதிர்த்தபோதும் தலைமைக்கு கட்டுப்பட்டு இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடினார்கள். இதே போராளிகள் பின்னர் இந்தியாவுடன் சேர்ந்து பிரபாகரனை அழிக்க சதி செய்ததாக கூறி போட்டுத் தள்ளப்பட்டார்கள். மாத்தையா, சுசீந்திரன், செங்கமலம் உட்பட 700 புலிப் போரளிகள் பிரபாகரனினாலும் பொட்டம்மானாலும் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். இதன் பின்னர் இந்தியாவில் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்ட இந்திய முன்னைநாள் பிரதமரை எந்தவித அரசியல் காரணங்களும் இன்றி பிரபாகரனின் தனிப்பட்ட குரோத வெறிக்கு பலியாக்கியது தமிழ் மக்களை இந்தியாவின் நிரந்தர எதிரியாக்கியது. மிகவும் முட்டாள்தனமான இந்திய எதிர்ப்பு முடிவுகளை எடுத்தது புலிகள் அமைப்பும் அதன் தலைமையுமே!

ஒரு காலத்தில் சிறீலங்காவில் இருந்து இராணுவத்தால் துரத்துப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தபோது இந்த புலித் தலைமைக்கு பாதுகாப்பும் பயிற்சியும் கொடுத்தது இந்தியாவே.! இந்தியா தனது நலனுக்காக தான் இலங்கைக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் அதை நமது அரசியல் இலாபத்திற்கு பாவிக்க தெரியாத முட்டாள்களாக இருந்த புலிகளின் தலைமை படு முட்டாள்கள் தான் என்பதை 22 வருடங்களின் பின் மீண்டும் நிரூபித்துள்ளார்கள். அன்று சமயோசிதமாக முடிவெடுத்திருந்தால் நாம் இன்று இந்த இழப்புகளை சந்தித்திருக்க தேவையில்லை. புலிகளின் பொய்யான பிரச்சாரங்கள் இன்று புலம்பெயர் மக்களை இந்தியாவிற்கு எதிராக திருப்பியதை ஏன் இந்த பத்திரிகையாளர்கள் உணர மறுக்கிறார்கள். அனைத்து தவறுகளையும் துரோகங்களையும் நாமே செய்துவிட்டு இன்று இந்தியா துரோகி அதை அழிக்க வேண்டும் என்பது என்ன நியாயாம்? வரலாறு தெரியாதவர்கள் ஓசியில் பத்திரிகை நடாத்தினால் இதைவிட வேறு எதைதான் எழுதுவார்கள்?

ஓசியில் பேப்பர் விடுவது இலகுவான விடயம் அல்ல. அதற்கு வர்த்தகப் பெருமக்களின் ஆதரவு வேண்டும்! அவர்களுக்கென்ன, என்ன விடயம் பத்திரிகையில் இருக்கிறது என்பது அவர்கள் கவலையில்லை. எத்தனை பேர் ஓசியில் படிக்கிறார்கள் என்பதே அவர்களின் கவலை! அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் சிறீலங்காவின் போர்கால நிலவரம் தொடர்பாக வெளியிட்ட 72 பக்க அறிக்கையில் உள்ள பல தகவல்கள் நமக்கு தெரிந்தவையே! குறிப்பாக சிறீலங்கா அரசு செய்த அத்தனை மனிதஉரிமை மீறல் விடயம் முதல் மக்களை கும்பல் கும்பலாக ஷெல்லடித்து கொன்றது வரை, இந்த ஓசி பேப்பர்கள் இதை வரிக்குவரி எழுதியதோடு அதை ஊதிப் பெரிப்பித்து  இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடக்கிறது என்று ஓலமிட்டு அழுதன.

ஆனால் அமெரிக்க ராஜாங்க திணைக்கள அறிக்கையில் வரிக்குவரி புலிகள் செய்த அக்கிரமங்கள் பற்றி இந்த ஊடகங்கள் ஒரு மூச்சுக்கூட விடவில்லை. மாறாக அங்கு  நடப்பவை எல்லாம் சரியெனவும் மக்கள் ஒரு சில தியாகங்களை செய்தால்தான் விடுதலை பெறமுடியும் என்றும் இந்த  சேயோன்களும் சபேசன்களும், கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிக் குவித்தார்கள். ஆனால் தப்பிச் செல்ல முனைந்த தமிழ்மக்களை புலிகள் சுட்டுக் கொன்றதையோ பத்து வயதுப் பாலகன்களை கடத்தி சென்றதை பற்றியோ எந்த மூச்சும் விடவில்லை. அது மட்டுமல்ல ஒரு சில முதுகெலும்புள்ள ஊடகங்கள் அந்த செய்திகளை வெளியிட அவர்களை புலியெதிர்ப்பு ஊடகங்கள் என்று முத்திரை குத்தி அவர்களையும் துரோகிகளாக்கினர்.

இந்த பத்திரிகை ஒருகாலத்தில் பயோடேட்டா என்ற பெயரில் புலம்பெயர் வாழ் பெண் ஜனநாயகவாதிகளை புலியெதிர்ப்பாளர்கள் என்ற போர்வை சுமத்தி அவமானப்படுத்தினார்கள். ஆனால் புலிகள் மக்களை கொடுமைப்படுத்தியதை இன்று வன்னி தடுப்பு முகாம் மக்கள் கூறுவதைக் கூட தமது பத்திரிகையில் போட திரணியற்று நிற்கின்றனர். ஆனால் இந்த சேயான்களுக்கு ராஜேஸ் பாலாவையும் நிர்மலாவையும் உச்சரித்தால் மட்டும் கிக் வந்துவிடும். இவர்களுடைய அந்த எழுத்துக்களுக்கு இவர்கள் ஓசியில் பத்திரிகை அடிப்பதை விடுத்து காசுக்கு விற்பனை செய்யும் மஞ்சள் பத்திரிகையே நடாத்தி இருக்கலாம்.

அதற்குள் தாங்கள் சிவப்புச் சட்டைகாரராம் என்று சிலருக்கு தற்பெருமை. மம்மி ஜெயலலிதா தம்பிக்கு தமிழீழம் வாங்கித் தருவார் என்று அரசியல் ஆய்வு செய்தவர்கள், ஓபாமாவும் ஹிலரியும் கப்பல் அனுப்புவார்கள் என்று தலைவரை நந்திக்கடல் ஓரத்தில் வெள்ளி பார்க்கவிட்ட பெருமை ஒரு பேப்பர் உட்பட தேசிய ஊடகங்களையே சாரும். தலைவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி முருங்கை மரத்தில் ஏத்தி முள்ளிவாய்காலில் தள்ளிவிட்ட இந்த ஜம்பாவான்களுக்கு மாவீரர் தினத்தன்று தேசிய ஆய்வாளர் விருதுகைள வழங்கி கௌரவிக்க வேண்டும். அப்போது தான் தலைவரின் ஆத்மசாந்தி அடையும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

18 Comments

 • mano
  mano

  இந்தப் புலம்பெயர் தமிழ்த்தேசியப் பற்றாளர்கள்> உலகில் யார் யாரையெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்கு பகைவர்களாக்க முடியுமோ அதைக் கச்சிதமாக செய்துமுடிப்பார்கள் என்றே நினைக்கிறேன். அந்தக் காலத்திலேயே எங்களுக்குப் பொருத்தமான பழமொழி இருக்கிறது> ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்றாளாம்”
  யுத்தம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது> தமிழ்நாடு அனுப்பிய உணவுப்பொதி அந்த மக்களுக்கு பிரயோசனமானது பற்றி தெரியுமா இவர்களுக்கு. வணங்காமண் இன்று இலங்கை ஜனாதிபதியிடம் மண்டியிட்டுப் பெற்ற அனுமதியுடன் இப்போதுதான் கிடைத்தது.

  Reply
 • T Sothilingam
  T Sothilingam

  நன்றி வாசு,
  நாம் எமது இயக்கங்கள் இந்தியாவின் உதவியை பெறும்போதே தனித்தமிழ்ஈழம் உருவாவதை இந்தியா அனுமதிக்காது என்பதும் இந்தியா ஜக்கிய இலங்கைக்குள்ளேயே தீர்வினை முன்வைக்கின்றது என்பதையும் தெரிந்து தான் இந்திய உதவிகளை பெற்றோம்.

  இந்தியாவை தமிழர்கள் ஒரு அயல்நாடாக கணிக்கவில்லை இந்தியாவை தாய் சேய் பொன்ற அர்த்தத்துடனேயே போற்றப்பட்டது இது மொழி இன சமய கலாச்சார அடையாளங்களால்.

  இந்தியாவின் உதவியில்லாமல் இராணுவ வெற்றி பெற்றாலும் தமிழீழம் அமைக்க முடியாது என்பது தெரியும்.

  இவ்வளவும் எல்லா இயக்கங்களுக்கும் புலிகளின் முக்கிய தலைவர்களுக்கும் (குறிப்பாக மாத்தையா)நன்றாகவே தெரிந்து கொண்டனர். பிரபாகரன் என்ற தனிமனிதன் மட்டுமே இவற்றை புரிந்து கொள்ளாமல் அல்லது புலிகள் இயக்கத்தை இயற்கையான அரசியல் முதிர்ச்சி பெறாமலும் போக தடைக்கல்லாக இருந்தவர்

  புலிகளின் ஆதரவாளர்களுக்கும் இது தெரிந்த விடயம் ஆனால் புலம் பெயர் புலிகள் புலிகளின் ஆதரவாளர்கள் புலிகளின் இயக்கத்தை பாவித்து தமது சொந்த பணம் சேர்ப்பினையே நடாத்தினர் இவர்களுக்கு தமிழீழமோ தமிழர்களே முக்கியமில்லை அதில் நீங்கள் சொல்லும் பல எழுத்தாளர்களும் அடங்கும் அவர்கள் இன்றும் இதையே செய்கின்றனர்.

  இவையாவற்றிக்கும் நல்ல உதாரணம் புலிகள் இயக்கத்தின் சொத்துக்கள் பணங்களை இன்று கையாளும் விதங்களும் முகாம்களில் உள்ள மக்களுக்கு அவை பயன்படத்த முடியாமல் போனதும்.

  அதைவிட கேவலம் இன்றும் எதையும் விளங்கிக் கொள்ளாதவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டைத் தீர்மானம், இது என்ற ஏமாற்றும் வித்தைகள்.

  இன்று வரையில் புலிகளை வைத்து பிழைப்பதே தொழிலாக கொண்டவர்களால் இவர்களது தொல்லை தொடரும்.

  தமிழ் மக்கள் தமது அரசியலையும் வாழ்வினையும் இலங்கை அரசு இந்திய உறவுகளுடன் கூட்டாக சிந்திக்காத வரையில் தமிழர்க்கான அரசியல்த்தீர்வு உருவாகாது.

  தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் எழுத்தாளர்களும் தம்மை ஒரு குறுகிய தமிழ் வட்டத்திற்குள் வைத்து தமிழர்க்கு அரசியல்தீர்வு தேடுவது ஒரு பலனையும் தராது

  Reply
 • விசுவன் 1
  விசுவன் 1

  இந்த ஓசி பேப்பர் இந்த இதழில் தலைவர் பிரபாகரனுக்கு முன்பக்க அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். நரகாசுரனுக்கு வீரவணக்கம் என்று பிரபாகரன் சாயலில் உள்ள ஒருவரின் படம் போடப்பட்டுள்ளது. முழியையும் மீசையையும் பார்த்தால் அது தலைதான்! பறவாயில்லை இப்பவாவது துணிவு வந்ததே!

  Reply
 • பல்லி
  பல்லி

  வாசு வரவு தாமதமாக இருந்தாலும் மிக வித்தியாசமான பார்வையுடன் வந்திருப்பது தேசத்தின் வாசகர் என்பதால் மகிழ்ச்சி,
  //அட முட்டாள் பயலுகளே இந்தியாவில் இப்ப பிரபலமாக விற்கப்படும் பிள்ளையார் சிலைகள் செய்யப்படுவதே சீனாவில்தான்.//
  அது மட்டுமா?? நேற்றய தினம் ஒரு சந்திப்பில் இந்திய பிரதமரும் சீனா பிரதமரும் கைகுலுக்கி நட்ப்பு நாடுகளாக இருப்போம் என நம்பிக்கை தெருவித்தனர்; ஒரு ரஜீவை எதிர்க்க போய் இந்தியாவின் நட்ப்பையே தமிழ்சமுதாயம் இழந்தது போததென்று சீனாவுடன் சேர்ந்து சில்லறை பொறுக்கி திருப்பதியில் மொட்டைபோட நினைக்கும் ஊடகங்களுக்கு எல்லோரும் சேர்ந்து ஓ போடுவோமா?? போடுவோம் போடுவோம்;;
  தொடரும் பல்லி;;;

  Reply
 • பல்லி
  பல்லி

  கோபால சாமி, திரு மணவாளன்; ஜெயலலிதா; கிஸ்னசாமி; சீமான்; பாரதிராசா; சேரன்; டி ஆர்; டாக்குத்தர்; அருவிமணி; பாவாணன்; சுபவீரபாண்டி; அறிவுமதி; இந்த பட்டியல் நீள்கிறது; இவர்கள் இந்தியர்களா? அல்லது ஈழதமிழரா? பல்லிக்கு ஒரு சந்தேகம் யாராவது புரியவைப்பீர்களா??
  காரனம் ஈழ விளக்க கூட்டங்கள் பலதுக்கு இன்றுவரை (புலம்பெயர் தேசத்துக்கு) சிறப்பு புழுகர்களாக வருகைதருவது அல்லது வரவழைப்பது இவர்களைதானே; ஏன் பாலா அண்ணாவின் இறப்புக்குகூட ஜயா நெடுமாறன் தானே சிறப்பு கண்ணீர் விட வர அழைக்க பட்டார், சரி அதை விடுவோம்; இந்த பரபரப்புகாரரின் இந்தியா எதிர்ப்பு விடயத்தில் மேலே பல்லியால் வரவேற்க்கபட்டவர்கள் இந்திய துரோகிகளா? அல்லது பரபரப்பின் மீது ஊடுருவியவர்களா? புலம்பெயர் தேசத்தையும் ஒரு முள்ளிவாய்க்கால் ஆக்காமல் சில சிந்தனையாளர்கள் விட போவதில்லை போல் உள்ளது;
  தொடரும் பல்லி;;

  Reply
 • Iniyavan Isarudeen
  Iniyavan Isarudeen

  வாசுவுக்கு நன்றி.
  வேலுப்பிள்ளையும் தன் மனைவியும் பெற்றெடுத்த நன்றிக்காகப் பிள்ளை பெற்றோருக்கு அவன் நோபல் பரிசு வாங்கிக்கொடுக்க வில்லை. ஆனால் பெற்றோரை சிறையில் அடைத்திருக்கிறான். தன்னினத்தை அழித்து முடித்திருக்கிறான்.தமிழ்க் கருப்பைக்குள் ஒரு வைரசாய் வளர்ந்து மானுடத்திற்கு நஞ்சாய் இருந்திருக்கிறான்.
  இந்திராகாந்தி பாதுகாப்புக் கொடுத்து பயிற்சியும் அளித்ததால்தான் அவரது மகன் ராஜீவ்காந்தியையே கொன்றிருக்கிறான்- ஒரு வேளை வன்னியில் இந்தியப் படை பிரபாகரனைப் பிடித்து மறு நாள் ஏதோ தமிழர்கக்கு நன்மைகள் நிகழ்த்தட்டும் என்ற இரக்கத்தோடு விட்டதற்காகத்தான் இந்தியாவையே எதிரியாக்கினான். ஏதோ கோட்டும் சூட்டும் போட்ட நாகரீக நவமணிகளின் மமதையில் புலம்பெயர்தோர் பித்துப் பிடித்தவர் போல் பிதற்றுகிறார்கள். புதுமாத்தளன்தான் தமிழர் புதைகுழி என்று தெரிந்திருந்தால் புலன்பெயர்ந்தவர்கள் எப்போதோ பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார்கள். இறைவனை மறந்துவிட்டார்கள்.

  இனியவன் இஸாறுதீன்-

  Reply
 • சோழன்
  சோழன்

  உண்மையை ஒத்துக்கொள்ள மறுக்கும் எம்மவர்களின் முகத்திரையை கிளித்திருக்கிறீர்கள். நன்றிகள்!!

  … ஒருபுறம் …
  சில காலங்களுக்கு முன்னம் யாழ் களத்தில் ஒருவர் எழுதினார் …”என்ன, புலிகள் அடித்தாலும் இராணுவ தந்திரோபாயம் என்கிறீர்கள்? அடி வாங்கினாலும் இராணுவ தந்திரோபாயம் என்கிறீர்கள்? … என கேள்வி கேட்டிருந்தார். அப்படி கேள்விகள் கேட்டவர்களை நோக்கி “அவரின் தூர நோக்கும், சிந்தனைகளும் ஒருதருக்குமே புரியாதது. அதை புரியும் ஆற்றல்களும் உங்களுக்கு இல்லை” என்றார்கள். இதுதான் எமது புலம்பெயர் ஊடகம் நடத்தியவர்களின் கூத்துக்கள்.

  புலம்பெயர் தேசங்களில் உள்ள மக்களின் பணத்தை நோக்கி புலிகளின் போராட்டம் மாற்றப்பட்டபின், இங்கிருக்கும் எம் ஊடகங்கள் தங்கள் கற்பனாவாதத்தில் போராட்டத்தை கொண்டு செல்ல தொடங்கினார்கள். ஒரு சாதாரண மனிதனை தூக்கி உச்சத்தில் வைத்ததினால், அம்மனிதனால் இறங்க முடியவில்லை!! முடிபு …. அழிவு!!!

  இந்த ஊடகங்கள் எரிட்ரியாவையும், லெனின் கிராட்டையும் அங்கு எல்லாம் முடியும் தறுவாயில் கூட விட்டு விட்டார்கள். என் போன்றவர்களுக்கு அவைகளே போதுமானவையாக இருந்தன.

  “புலம்பெயர் காஸ்ரோக்களே” இந்த ஓசிப்பேப்பர்களின் பின்னணியில் இருக்கிறார்கள். தமிழ் தேசிய போராட்டத்தை பிரபாகரனுடன் சேர்ந்து அழித்த பெருமை அங்கிருந்த காஸ்ரோவுக்கும், இங்கிருக்கும் இந்த காஸ்ரோக்களுக்குமே சேரும். இவர்களில் பலர் விளம்பரங்களுக்காகவும், பதவிகளுக்காகவும் குறிப்பாக கவுன்ஸிலர் பதவி கனவுகளுடன் கூட திரிந்தார்கள்.

  மறுபுறம் …
  புலி எதிர்ப்பு அரசியலில் மனிதத்தை தொலைத்தவர்கள். இவர்கள் எம் சகோதரிகள் சிங்கள இராணுவத்தினால் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட போது கூட, அச்சகோதரிகளை விபச்சாரி என கூசாமல் கூறினார்கள். அப்படி எம் இனத்தின் அழிவுகளை புலி எதிர்ப்பு பூச்சினால் முடி மறைக்க முற்பட்டார்கள்/முற்படுகிறார்கள்!!

  இன்று போட்டிக்கு புலிகளின் பினாமிகளின் ஊடகங்களும், மாற்றுக்கருத்து மாணிக்கங்களின் ஊடகங்களும் … அங்கு சரி, பிழை சொன்னால் துரோகி என்றும், இங்கு சரி, பிழை சொன்னால் புலி என்றும் பட்டமளித்து கவுரவிக்கிறார்கள். இன்று புலத்தில் இனாமாக நடக்கும் இப்பட்டமளிப்புகளே, அங்குள்ள மக்களின் அவலங்களை வெளிக்கொணருவதிலும் பார்க்க அதீத கவனத்துடன் முன்னெடுக்கப்படுகிறது

  Reply
 • குகபிரசாதம்
  குகபிரசாதம்

  வாசு அண்ணை நீங்கள் என்னத்தை எவ்வளவு கிட்ட கொண்டு வந்து காட்டினாலும் நாங்கள் கண் திறந்து பார்க்கவே மாட்டம். எங்களுக்கு கனவு காண சுகமாக இருக்கு. கானல்நீர் என்றாலும் கனவில் வடிவாக இருக்கு. சிங்கள் எதிர்ப்பு இந்திய எதிர்ப்பு எல்லாம் நம்ம ஆட்களை
  ஆயிரக்கணக்கில் கவர இலகுவான விடயங்கள். இதை விடுத்து உண்மை சொல்லி உள்ளதை சொல்லி எங்கள் மத்தியில் ஏதாவது செய்ய யாரும் வெளிக்கிட, எங்கள் கனவை சிதைக்க முனைய வேண்டாம்.

  வாசு அண்ணை நாங்கள் நித்திரையாகவே இருக்க விரும்புகிறோம் எங்களை யாரும் என்ன சொல்லியும் எழுப்ப முடியாது. நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும்.எங்கள் தலைவரின் நிழலை கூட எதிரியால் தொட முடியாது

  Reply
 • பேராசிரியர் பெக்கோ
  பேராசிரியர் பெக்கோ

  //இன்று போட்டிக்கு புலிகளின் பினாமிகளின் ஊடகங்களும்இ மாற்றுக்கருத்து மாணிக்கங்களின் ஊடகங்களும் … அங்கு சரிஇ பிழை சொன்னால் துரோகி என்றும்இ இங்கு சரிஇ பிழை சொன்னால் புலி என்றும் பட்டமளித்து கவுரவிக்கிறார்கள்.// சோழன்
  வெல் செட் சோழன். இந்த மாற்றுக் கருத்து மாற்று அரசியல் மாணிக்கங்களின்ர தொல்லை தாங்கவே முடியேல்ல. கதைக்க எழுதவிட்ட நிப்பாட்டுறான்கள் இல்லை. மாற்றுக் கருத்து மாற்று அரசியல் எல்லாம் சரியடாப்பா வன்னில உள்ளவனுக்கு மாத்திப் பொட ஒரு செட் உடுப்புக் குடுங்கொ அந்த பிள்ளையல் படிக்க பேனை கொப்பிய வாங்கிக் குடுங்கொ என்டா அதுக்கு ஏதோ புத்தகத்தில ஆரோ சொல்லி இருக்கிறாராம் அப்பிடி செய்யப்பிடாது என்று. நாசமாப் போக எங்கட சனத்துக்கு எல்லாப் பக்கதாலையும் நெருக்கடிதான். சாமி வரம்கொடுத்தாலும் நந்தி விடாதாம் என்ற கதையாப் போச்சு.

  எம்பெருமான் பிரபாவின்ர ஆட்டம் முடிஞ்சு. இப்ப மஹிந்த வந்து ஜங்கு ஜங்கென்டு ஆடுறார். அதுக்கு மாற்று அரசியல் மாணிக்கங்கள் உடுக்கடிச்சு உரு ஏத்தினமாம்.

  ‘சரி பிழை சொன்னால் துரோகி’ என்றது முஸ்லீம் என்றால் கைக்குலி என்றது மக்டோனால் சாப்பிட்டால் ஏகாதிபத்தியத்திடம் நக்கிறது என்றது வன்னில உள்ள மக்களுக்கு கிரிபத் குடுத்தால் சிங்கள அரசிட்ட நக்கிறது என்றது ‘எனக்குத்தான் தெரியும் நான் தான் படைப்பன்’ என்று தம்பி பிரபாவின்ர வழியில சன்னதம் ஆடுறது கேட்டால் இது தான் மாற்று ‘கருத்து’ அரசியலுக்கான உரையாடல் என்று றீல் விடுறது.

  பேராசிரியர் பெக்கோ

  Reply
 • chandran.raja
  chandran.raja

  பேராசியர் பெக்கோ அவர்களுக்கு நீங்கள் சொல்வதில் முழுமையான உண்மையிருக்கிறது. இன்னும் உங்களிடமிருந்து அறிய ஆவலாகவுள்ளோன். கடந்த சிலமாதங்களாக புலிகளையும் பேசிக்கொண்டும் திட்டிக்கொண்டும் ஏதோ ஒரு பக்கத்தில் கரை ஒதுங்குகிறார். ஆய்வு செய்து பார்த்தால் கடந்த காலத்தில் தமது சுயதேவைகளுக்காக புலிக்கொடியைப் பயன்படுத்தியவர்களே! உங்களிடமிருந்து ஒரு கேள்வி தான் என்னிடமிருக்கிறது. மாற்றுக்கருத்து மாற்றுக்கருத்து என்று பலர் அதாவது புலம்பெயர் தமிழர்கள் வாயில்லிருந்து வருவது அதுஎது?
  மாற்றம் இல்லாத கருத்து எது?
  மாற்றம் இல்லாத கருத்து “தமிழீழ தாயகம்”. “புலம்பெயர் தமிழ்….. என்று எடுத்துக் கொள்ளலாமா?
  தயவு செய்து எனது சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா?.

  Reply
 • Naane
  Naane

  வாசுவின் கட்டுரை படித்தேன்.புலம் பெயர் புலிவால் ஆய்வாளர்கள் நினைத்தது ஒன்றும் நடக்கவில்லை, அப்ப‌ யாரையாவது திட்டி ஒப்பாரி வைக்கத்தானேவேண்டும்.இவர்களில் பலரின் எழுத்துக்களையும்,வானொலி,டிவி ஆய்வுகளையும் கேட்டிருகின்றேன்.” இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக‌ இருக்கும்” என்று தம் மனதில் நினைப்பதை அப்படியே எழுத்திலும் வடித்துவிடுவார்கள்.சும்மா சுட்டுக்கொண்டு திரிந்த தலைவரை சுடுகாட்டுக்கு கொண்டுபோனது இவர்கள் தான்.

  நாளைக்கு மீன்கறியா,இறைச்சிக்கறியா என்று படுக்க போகும் முன் மனைவியிடம் கேட்பதுபோல்,நாளைக்கு என்னத்தைப்பற்றி எழுதுவம் என்று நினைப்பவர்கள்.இவர்கள் தாங்கள் கடந்த இரண்டு,மூன்று வருடங்களில் எழுதியதை திரும்ப வாசித்தால் எவ்வளவு தீர்கதரிசனமாக ஆய்வு செய்தார்கள் என்று புரியும். இப்பவும் பக்கம் பக்கமாக கோழிக்கறி வைத்துக்கொண்டே இருக்கின்றார்கள்.

  எங்கள் போராட்டத்திற்கு வந்த மற்றொரு துன்பம் தமிழ்நாட்டு செல்லாக்காசுகள். அங்கு தேர்தலில் கட்டுகாசு எடுக்க வழியில்லாதவர்கள், ஒரு மேடையும் கிடைக்காதவர்கள் ,தன்ரை நாட்டிலேயெ ஒன்றும் சாதிக்க முடியாதவர்கள்களெல்லாம் தமிழ் ஈழ‌த்தை கையில் எடுத்து தான் திட்டித் தீர்க்க வேண்டியவனையெல்லாம் தமிழீழ மேடையில் திட்டி தீர்க்கின்றனர். இதைக்கூட புரிந்துகொள்ளாத எங்கட புலன் பெயர் புண்ணாக்குகள் அவன் நல்லா பேசுகின்றான் என்று இங்குவேறு இறக்குமதி செய்கின்றனர். அவன் திட்டி தீர்த்து விட்டு போய் விடுவான். அது எங்கு போய் அடிக்கும் என்று இவர்களுக்கு இன்னமும் புரியவில்லை

  Reply
 • பல்லி
  பல்லி

  பேராசிரியர் பெக்கோ அவர்களே மாற்றுகருத்து என்றால் என்ன? அதுக்குள் மாணிக்கம் புதைந்துள்ளதாக தாங்கள் நினைக்கிறீர்களா?? எனக்கும் அதில் சந்தேகம்தான்; தகரடப்பாவையே சங்கீதைசையாக பலகாலம் கேட்டதால் எம்காதுக்கு சங்கீதம்கூட தற்ப்போது ஒப்பாரியாக கேக்குது;
  பேராசிரியர் என்பதால் தம்ப்பியை தாக்குமாபோல் தாக்கி தடவி கொடுப்பது தெரிகிறது, மாற்று கருத்தாளர்தான் அனைவரும்; அதுக்காக எனக்கு தலை வலிக்குது என நான் சொன்னால்; இல்லை எனக்குதான் கால் வலிக்குது என நீங்கள் சொல்லுவதுதான் மாற்று கருத்தா? பதிலை சந்திர ராஜாவுக்கு தாருங்கள் அதில் இருந்து நானும் சிலதை புரிய முயல்கிறேன்;

  Reply
 • BC
  BC

  மதிப்புக்குரிய பேராசிரியர் பெக்கோ, உங்கள் பின்வரும் கருத்துடன் 100% உடன்படுகிறேன்.
  1.சரி பிழை சொன்னால் துரோகி’ என்றது.
  2.முஸ்லீம் என்றால் கைக்குலி என்றது.
  3.மக்டோனால் சாப்பிட்டால் ஏகாதிபத்தியத்திடம் நக்கிறது என்றது.
  4.வன்னில உள்ள மக்களுக்கு கிரிபத் குடுத்தால் சிங்கள அரசிட்ட நக்கிறது என்றது.

  பேராசிரியர் பெக்கோ, உண்மை நிலையை புரிந்து கொண்ட உங்கள் வரவு இலங்கை தமிழர்களின் தேவை.

  Reply
 • பேராசிரியர் பெக்கோ
  பேராசிரியர் பெக்கோ

  போய்ஸ் நீங்கள் கேட்டிருக்கிறது ஒன்றும் சாதாரண கேள்வியில்ல. இப்ப ஒரு இருபது வருசமா உந்தக் கேள்விக்கு ஆன்சர் கிடைக்கேல்ல. மாற்றுக் கருத்து பெண்விடுதலை கலை இலக்கியம் ஜனநாயகம் கதைச்சவை எல்லாம் அண்டகிறவுண்டுக்கு போட்டினம். திருவிழா மாதிரி வருசத்தில ஒரு ‘மா’நாடு கூட்டி தங்கடை இருப்பை அறிவிப்பினம்.மாற்று அரசியல் கதைச்சவை பிள்ளையானிட்டையும் சிறி ரெலோவிட்டையும் போய்டினம். அங்க போக கூச்சப்பட்டவை நெற்றில புரட்சி செய்து வன்னிக்கு எக்ஸ்போட் பண்ணப் போயினம். வெயிற் அன்ட் சி.

  இதுகளை பார்த்தால் மாற்றுக் கருத்து மாற்று அரசியல் என்றால் நாகரிகமாச் சொல்றது என்றால் ஒரு வகை பார்க்கின்சன் டிசிஸ் என்று சொல்லலாம் பச்சையாச் சொல்லுறது என்றால் மாறாட்ட வியாதி என்று சொல்லலாம். ஏனென்றால் இவை கனகாலத்திற்கு ஒரு இடத்தில இருக்க மாட்டினம். இடம் மாறினாப் பிறகு முந்தி இருந்த இடம் ஞாபகத்திற்கு வராது. உவங்களோடு சேர்ந்து சேர்ந்து எனக்கும் உந்த வியாதி வந்திடும் போல கிடக்கு.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  வாசு!கட்டுரை அருமை. இதில் ஒரு முக்கியமான விசயம் என்ன வெண்டால் சமயம் சூழல் அறிந்து போராடுவதுதான் கெரில்லாப் போராட்டம். இதை எப்படி இந்தமுட்டாள்கள் 30வருடங்கள் கொண்ட நடத்தினார்கள். புலிகள் முட்டாள்கள் என்பதில் சந்தேகமே இல்லை இவர்களை ஏற்று தேசியத்தலைவராக்கிக் கெண்டாடிய மக்கள் எப்படியன முட்டாள்களான இருப்பார்கள் என்று அறிக. மனிதன் ஒருதரம் ஏமாற்றப்படலாம் எத்தனை தரம் எண்டு ஏமாற்றுப்படுவது. கெடுகிறேன் பிடி பந்தம் என்றால் என்ன செய்ய முடியும்

  Reply
 • chandran.raja
  chandran.raja

  பேராசியர் பெக்கோ. சிலவியாதிகளுக்கு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. உங்களுக்கு இருக்கிற நோய்யை கண்டு பிடித்துவிட்டோம். உடனடி மனஆறுதலை தருவதாக இருந்தால்..ஜிரிவியையும் தீபம் தொலைக்காட்சியையும் பார்த்து தேறிக்கொள்ளவும். குணமடைவீர்கள். கடைசியாக ஒரு கேள்வி இந்த பெயர் உங்களுக்கு அப்பா அம்மா வைத்ததா? நீங்களா சூடிக்கொண்ட பெயரா? கேள்வி தான். பதில் வேண்டாம். இனிமேல் கேள்வியும் கேட்கமாட்டேன். எங்கள் சிந்தனைகளை உயர்த்தி எங்கோ கொண்டுபோய் விட்டீர்கள். நன்றி.

  Reply
 • பல்லி
  பல்லி

  //பச்சையாச் சொல்லுறது என்றால் மாறாட்ட வியாதி என்று சொல்லலாம். //
  நான் சிவப்பாகவே சொல்லுகிறேன், மாறாட்ட வியாதியை விட மரண வியாதி பொல்லாததுதானே, உங்க பேச்சின்படி பார்த்தாலும் மாற்றுகருத்து பரவாயில்லைபோல் உள்ளது; இதுக்குதான் சொல்லுறது பல்லுகுச்சியை காதுக்குள் விடபடாது வாத்தியார், நான் பாடம் பயின்ற வாத்தியாரும் இப்படிதான்தான் தான் வாத்தி என்பார், காரணம் அவருக்கு அடிக்கடி தான் வாத்தி என்பதே மறந்துவிடும், அதுபோல் இங்கு பேராசிரியருக்கும் தான் யார் என்பது தெரியவில்லை, குளம்பி போனார், மாஸ்ற்றர் தேசத்தில் இது எல்லாம் சகசம்தானே; பல்லி சொன்னது அந்த தேசத்தை,

  Reply
 • மாயா
  மாயா

  இது கேபீயின் கைது குறித்த ஒரு வீடீயோ. பலருக்கு தேவைப்படலாம்.
  http://www.sbs.com.au/dateline/story/watch/id/600216/n/The-Tiger-Trap

  Reply