உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை : பேராசிரியர் சிவத்தம்பி

24prof-karthgesu.jpgதமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர் அரசியல் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான நிலைப்பாடு எதனையும் எடுக்காதது குறித்து,  இலங்கை பலத்த விமர்சனம் இருப்பதாக கூறுகின்ற சிவத்தம்பி அவர்கள்,  இந்த நிலையில் தான் உலக தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வது சிரமமான விடயமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தனது நிலைப்பாடு தொடர்பாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளரான இராஜேந்திரன் அவர்களுக்கு தான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிற கருணாநிதி அவர்கள், இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான நிலைப்பாட்டினை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பயனுள்ளது என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாத போதிலும், அதில் அனைவரும் கலந்துகொள்வதற்கான சூழ்நிலையும் அவசியம் என்றும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறுகிறார்.  ஆனால், தமிழ் ஆய்வு மாநாட்டை அரசியலாக பார்க்கக் கூடாது என்று கூறுகிற தமிழக திட்டக்குழுவின் துணைத் தலைவரான நாகநாதன் அவர்கள், சிவத்தம்பியின் கருத்துடன் முரண்படுகிறார்.

இதேவேளை இந்த மகாநாட்டைப் புறக்கணிப்பது ஒரு தமிழ் அறிஞருக்கு அல்லது பேராசிரியருக்கு ஏற்புடையது அல்ல என கவிஞர் மு. மேத்தா தெரிவித்துள்ளார். எனினும் பேராசிரியரின் முடிவை ஆதரித்துள்ள கவிஞர் இன்குலாப் அவரது செய்தி மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

நன்றி: வீரகேசரி 25.10.2009

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 Comments

  • nadesh
    nadesh

    பேராசியர் உமது அரசியல்த்தீர்வை முன்வைக்காமல் அடுத்த நாட்டுக்காரன்கள் மீது எரிஞ்சு விழாதேங்கோ!

    Reply
  • பல்லி
    பல்லி

    இதுவரை தமிழருக்காய் என்னத்தை செய்து கிழித்து விட்டீர்கள், மகாநாட்டில் கலந்து கொள்ளாமல் எதை கிழிக்கபோகிறீர்கள், பல்லியின் தனி கருத்து நீங்கள் மகாநாட்டுக்கு மட்டுமல்ல தமிழர்பற்றி பேசவோ அல்லது தமிழ் பற்றி பேசவோ தகுதியானவரா என சிலநிமிடங்களாவது சிந்திக்கவும்; புலியின் புகழே உலகம் பூராவும் பரவவேண்டும் என்பதுக்காக புலிகள் செய்த(தமிழருக்கு) நாசவேலை அனைத்துக்கும் துணை போன நீங்கள் இன்று கருனானிதி குப்பற தூங்கி விட்டார் என சுவருக்கு காலால் அடிப்பது தங்களின் தமிழ் திமிரை காட்டுகிறது; ஊருக்கு போவதுக்கான வழியை தேடாமல் வழிக்கான ஊரை தேடியவர்தான் நீங்கள்;

    என்ன எல்லாமே மிகவும் ரகசியமாக புலியின் நிழலில் செய்து விட்டீர்கள், சம்பந்தர் போல் இனியாவது திருந்தவோ அல்லது விட்ட தவறுகளையோ சரிசெய்ய முயலுங்கள்; கிடைக்கும் சந்தர்ப்பம் எல்லாவற்றிலும் கலந்து சிறப்பிக்க தேவையில்லை, எமது மக்கள் நிலையை புரியவைக்க முயல வேண்டாமா?? எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் மிக அரிது அதையும் புலிபோல் உங்களுக்கு சாதகம் இல்லாத எதிலும் கலந்து கொல்ல மாட்டேன் என்பது ஒரு அறிவு ஜீவியின் செயலா? நீங்கள் கலந்து கொள்ளாததால் மகாநாட்டுக்கோ அல்லது ஏற்பாட்டாளர்க்கோ எந்தவிதமான பாதிப்போ அல்லது நஸ்ற்றமோ இல்லை என்பதை பல்லியாய் சொல்லுகிறேன்,

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பாவம் தனக்கும் “துரோகி”ப்பட்டம் கட்டிடுவாங்களோ என்ற பயத்திலை இப்படி அறிக்கை விடுகின்றார். முன்பு கூத்தமைப்பினரும் இப்படித்தான் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள மாட்டோமென தினாவெட்டா அறிக்கை விட்டு, இப்ப மகிந்தவிடம் பின் கதவால் போய் கூப்பிடுங்கோ உடனே வாறம் என்று கெஞ்சிக் கொண்டிருக்கினம். கவுண்டமணி சொன்ன மாதிரி அரசியலில் இது ரொம்ப சகசம்தான். ஆனால் சிவத்தம்பி பிழைப்புக்காக அரசியல் பண்ணுகின்றார்.

    Reply
  • mano
    mano

    தம்பிக்கு உசுப்பேத்தி பப்பாவில் ஏற்றி நந்திக்கடலில் தள்ளியவர்களில் இவரும் ஒருவர் அதுமாத்திரமா? தமிழ் சனங்களையும் புதுமாத்தளனில் புதைத்து தமிழினத்தின் விடுதலைக்கே புதைகுழி தோண்டியதற்கு இவருக்கும் பங்குண்டு. வன்னியில் எல்லாம் சரியாக இருக்கு> கட்டமைப்பெல்லாம் சுப்பர் இனி தமிழீழம்தான் என்று அறிவுஜீவிகளின் மூளைகளையும் மழுங்கடித்த அதிபுத்திஜீவி இவர். இவர் அங்க போய் தமிழையும் குழப்பி தமிழ் இனப்பற்றாளர்களையும் குழப்பிறதுக்கு போகாமல் இருப்பதே மேல்.

    Reply
  • மாயா
    மாயா

    இவர் ஒரு சுயநலவாதி. இவர் என்னவோ இலங்கை தமிழர் மட்டுமே தமிழர் என நினைக்கிறார் போலும். இவரை ஒதுக்கி விட்டு உலக தமிழர்கள் , தமிழுக்கான பணியை செய்ய வேண்டும். இவரால் தமிழுக்கும் பிரயோசனமில்லை. தமிழருக்கும் பிரயோசனமில்லை. பார்த்திபன் சொல்வது போல இவர் அச்சப்படுகிறார்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பேராசிரியர் சிவத்தம்பி தான் கலந்து கொள்ளாததற்கு காரணம் சொல்லி இருக்கிறார். இதில் முதன்மையானதும் மூலமானதுமான காரணம் ‘உலகத்தமிழினத்தலைவராக தன்னைக்கொள்ளவேண்டும்’ என நினைக்கும் கருணாநிதி ஈழவிவகாரத்தில் எடுத்த நிலைப்பாடு பற்றியது. அந்நிலைபாடு தனக்கு ஏற்புடையதாக இல்லை என்பதனால் அவர் கந்து கொள்ள மறுத்திருக்கிறார். மேலும் உலகில் வாழும் ஈழத்தமிழர்கள் கருணாநிதியின் ‘ஈழ நிலைபாட்டை’ வரவேற்கவில்லை என்பதே உண்மை. நியாயமாகப்பார்த்தால் சிவத்தம்பியின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

    இதில் ஏன் ‘குத்துமதிப்பாக’ சிவத்தம்பியைத் தாக்க வேண்டும் என்பதனை பல்லிதான் சொல்ல வேண்டும். அத்துடன் சிவத்தம்பி போகாமல் விட்டால் நட்டம் மாநாட்டுகோ அல்லது ஏற்பாட்டாளருக்கோ இல்லை என்பதை பல்லியாகச் சொல்வதாக வேறு! சிவத்தம்பி எப்போது தான் போகாமல் விட்டால் நட்டம் வரும் எனச் சொன்னார்? நட்டம் சிவத்தம்பியால் வராது மாறாக நடைபெறும் நாடகங்களைப்பார்த்தால் கருணாநிதியாலேயே வரும் போல தெரிகிறது.

    இம்மாநாட்டுக்கு ஆரம்பத்தில் ஆதரவளித்த இந்திய தமிழருடம் பேசிக்கொண்டிருந்தபோது, சிவத்தம்பியை மாநாட்டின் செம்மொழி ஆய்வரங்கம் ஒன்றுக்கு தலைவராக கருணாநிதி நியமித்திருந்தார் என்றும் அவர் அதை கருணாநிதி சிவத்தம்பியை திருப்பி அனுப்பிய ஜெயலலிதாவை ‘மட்டம்தட்டும்’ வேலைகளுக்கு பயன்படுத்தும் முகமாகவும் (ஒரேகல்லில் இரண்டு மாங்காய்) செய்திருந்தார் என்பதையும் தெரிவித்தார். மேலும் இம்மாநாடு கருணாநிதியின் பழிவாங்கல் அரசியலின் ஒரு முகமோ என தான் எண்ணுவதாகவும் சொன்னார். அதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவ்வமைப்பின் காரியதரிசியாக இருக்கும் சிவத்தம்பியை ‘செம்மொழி’ மாநாட்டுக்கு இழுப்பதன் மூலம் தமிழாராய்ச்சி அமைப்பின் முகத்தில் கரியைப்பூசுவது.(’ஐயகோ சகோதர யுத்தம்’ என அவர் கூறும் வசனங்களில் ஒன்று ஞாபகம் வருகிறது). மேலும் அவர் சொன்ன மாநாட்டின் ’அரசியல்’ விடயங்கள் மிகவும் அருவருக்கத்தக்கவை. மாநாட்டிற்கான ஆதரவு குறைந்து வருவதாகவும் அதனை நிறுத்திப்பிடிக்க தற்போது, வழமையாக சுவிஸில் நடந்துவரும் தமிழ் இணைய மாநாட்டையும் அழைத்திருப்பதாக தான் அறிவதாகவும் சொன்னார். இணையத்தமிழ் (நவீன) மாநாட்டுக்கும் ‘செம்மொழி’க்கும் என்ன சம்பந்தம் என தனக்கு விளங்கவில்லை என்றார். அதுவும் கடந்த இருமாதங்களுக்கு முன்னரே சுவிசில் தாம் கூடியதாகவும் அதற்குள் ஏன் மீண்டும் கூடவேண்டும், அதனால் தான் இம்மாநாட்டில் பங்களிக்கப் போவதில்லை எனவும் சொன்னார்.

    Reply
  • மாயா
    மாயா

    //தமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார்.//

    நான் அப்படிச் சொல்லவேயில்லை. என் உடல் நலத்தைப் பொறுத்து போவதும் , போகாததும் என பீபீஸீயில் இன்று பல்டியல்ல, மல்லாந்து படுத்து விட்டார். வார்த்தை பிழைகள் நடந்திருக்கலாம் என்று வேறு கதை விட்டுள்ளார் பேயாசிரியர்.

    Reply
  • Thakshan
    Thakshan

    சிவத்தம்பி இதையும் புகழுக்காகவே செய்கிறார் என்பது புரியாமல் சிலர் விமர்சிக்கினம். வாறன் எண்டு சொல்லி கலந்திருந்தால் சிவத்ம்பியும் கலந்து கொண்டார் என்று அது ஒரு சிறு செய்தியாக வந்திருக்கும். வரேல்லை என்றதால் இன்று சிவத்தம்பி பேசப்படுகிறார். புலியின் அழிவோடு உவை தரவளிக்கு எப்பிடி பத்திரிகைகளில் இடம்பிடிக்கிறதென்பதே பெரிய கவலை. சரியப்பா… உமக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும். அதில யாருக்கும் மறுப்பிருக்காது. ஆனால் உங்கட அரசியலில் தான் சிக்கல்.

    Reply
  • raw boy
    raw boy

    சிவத்தம்பி கலைஞர் மீது கொண்ட கோபங்களுக்கு முன்பு தான் சொல்லட்டும் புலிகளால் சகோதர யுத்தம் நடந்தபோது சிவத்தம்பியின் நிலைப்பாடு என்ன? பிரபாகனின் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தபோது சகோதரப் படுகொலை பற்றிய தமது அபிப்பிராத்தை பிரபாகரனுக்கு சொன்னாரா அல்லது பிரபாகரனை பிராயச்சித்தம் ஏதும் பண்ணச் சொன்னாரா அல்லது பிரபாகரனால் செய்யப்பட்ட அட்டூழியங்களுக்கு இவர் எப்ப சரி கண்டனம் செய்தாரா? ஆட்சிக்கு மாறி மாறி வந்த கட்சிகள் செய்த அட்டூழியங்கள் கணக்கில் அடங்காது இவற்றுக்கெல்லாம் என்ன சொல்லியிருந்தார்

    இவர்கள் தாங்கள் எல்லாம் புத்திஜீவிகள் என்ற நினைப்பு சொல்லுங்கள் உங்கள் புத்தி ஜீவித்தனத்திற்கும் இன்று தமிழர்கள் இருக்கும் நிலைக்கும் எப்படி தொடர்பு படுத்துகிறீர்கள். புத்திஜீவிகள் சமூகத்தில் செய்த கடமைகள் என்ன? அல்லது ஏன் செய்ய முடியாத போனது.

    நீங்கள் கொழும்பில் இருக்க தடையில்லாமல் இருக்க அரசை கண்டிக்கமாட்டீர்கள். புலியை கண்டித்தால் மாவீரர் ஆகியிருப்பீர்கள் என்ற எண்ணத்தை விட வேறு என்ன?

    தயவு செய்து புத்திஜீவிகள் என்று சொல்லிக்கொண்டு தமிழர் மாநாட்டுக்கு போகாதீர்கள் – வன்னி புத்தளம் மூதூர் அகதி முகாமில் உள்ள சில இளைய தலைமுறையினரை தமக்கு நடந்த கொடுமைகளை பேசவிடுங்கள் இந்த மாநாட்டில் அது தான் இலக்கியம் நிஜ இலக்கியம் சிவத்தம்பி விளங்கிக் கொள்ளட்டும்.

    Reply
  • Naane
    Naane

    சிவதம்பி மட்டுமல்ல, எங்களில் பல அறிவுஜீவிகள் எந்த மேடையில் ஏறுவதென்று அலைந்து திரிந்தார்கள், திரிகின்றார்கள். ஆரம்பத்திலேயெ புலிமேடையில் ஏறிய சிவத்தம்பியை சிறிது மன்னிக்கலாம். புலி எதிர்ப்பு கோசம் போட்டு பின் பிழைப்பு படுத்திடும் என்று ஒரு வித மௌனமாகி ,பின் புலி ஒரு காலமும் தோற்காது போலிருக்கு என்று புலிமேடையில் ஏறிய அறிவுஜீவிகள் தான் பாவம். கேட்டால் காலத்தின் தேவை, தேசியம் முக்கியம். அதுவும் பாலசிங்கம் சுகமில்லாமல் வர இவர்களில் சிலர் வன்னியில் இருந்து அழைப்பு வரும் என்று பட்டபாடு இருக்கே சொல்லிமாளாது. இப்ப‌ அடுத்த‌ பாய்ச‌லுக்கு ப‌ல‌ர் ஆயுத்த‌ம் எந்த‌ முகாம் என்றுதான் யோசிக்கின‌ம்.

    க‌ருணாநிதி சிவ‌த்த‌ம்பியைக் கேட்காம‌லெ செம்மொழி மகாநாட்டிற்கு வ‌ருவார் அறிவித்திருக்கின்றார்? அதுதான் க‌ருணாநிதி. எத்த‌னை சிவ‌த்தம்பிக‌ளைக் க‌ண்ட‌வ‌ர்.நேற்று பீ பீ சி க்கு கொடுத்த‌ பேட்டியை மறுத‌லிக்க‌ வேண்டிக்கிட‌க்குது. பாவ‌ம் ஒதிக்கி வைக்க‌ப்ப‌ட‌ப் போகின்றேனோ ப‌யந்து விட்டார். சிவ‌த‌ம்பிக்கு இல‌ங்கைத் தமிழ‌‌னைப் ப‌ற்றித் நன்கு தெரியும்,(எல்லாரும் த‌ன்னைப் போலதானே என்று)அதே மாதிரி க‌ருணாநிதிக்கும் சிவ‌த்த‌ம்பியைப் ப‌ற்றித் தெரியும்.
    க‌டைசிக் கால‌ம் என்ன‌த்தையாவ‌து செய்ய‌ட்டும் விட்டுவிடுங்க‌ள்.அங்கு போயும் அவ‌மான‌ப்ப‌டாம‌ல் இருந்தால் ச‌ரி.

    குறிப்பு; பலருக்கு தெரியும், சி‌ல‌ருக்கு யார‌ப்பா அந்த‌ க‌டைசிநேரத்தில் மேடை ஏறிய அறிவுஜீவிகள் என்று அறிய ஆவலாக இருக்கும்.இனி என்ன படங்களும் நாடகங்களும் வ‌ராமலா விடப்போகுது.

    Reply
  • பல்லி
    பல்லி

    சாந்தன் தயவுசெய்து பல்லியின் பின்னோட்டத்தை திரும்ப திரும்ப படிக்கவும், அப்போதாவது பல்லியின் பலன் சாந்தனுக்கு புரியகூடும்; அதைவிட்டு ஓணான் பிடிக்க ஓனாயை வீட்டுக்கு அனுப்பு என்பதுபோல் பின்னோட்டம் விட்டால் பல்லி கடுப்பேறாது; ஆனால் உங்கள் பகுத்தறிவு செயலிளக்க அதுவே ஆரம்பமாகி விடும்;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // இம்மாநாட்டுக்கு ஆரம்பத்தில் ஆதரவளித்த இந்திய தமிழருடம் பேசிக்கொண்டிருந்தபோது, மேலும் அவர் சொன்ன மாநாட்டின் ’அரசியல்’ விடயங்கள் மிகவும் அருவருக்கத்தக்கவை. மாநாட்டிற்கான ஆதரவு குறைந்து வருவதாகவும் அதனை நிறுத்திப்பிடிக்க தற்போது, வழமையாக சுவிஸில் நடந்துவரும் தமிழ் இணைய மாநாட்டையும் அழைத்திருப்பதாக தான் அறிவதாகவும் சொன்னார். இணையத்தமிழ் (நவீன) மாநாட்டுக்கும் ‘செம்மொழி’க்கும் என்ன சம்பந்தம் என தனக்கு விளங்கவில்லை என்றார்.- சாந்தன் //

    சாந்தன்,
    அந்த அவருக்குப் பெயரில்லையோ?? தங்களின் கற்பனைப் புலம்பல்களைப் புகுத்துவதற்கு அவர் என்றொரு பதம் தேவை போல. கதையளப்பதற்கும் நம்பகத்தன்மை வேண்டாமோ?? இணையத்தமிழ் மாநாடு சுவிசில் நடந்ததாக தங்களுக்கு யார் கதையளந்தது. இணையத்தமிழ் மாநாடு நடந்தது சுவிசிலல்ல, ஜேர்மனியில். எனிமேலாவது கதையளக்கும் முன், தகவலையாவது சரியாகத் தெரிந்து கொள்ளப் பாருங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //நான் அப்படிச் சொல்லவேயில்லை. என் உடல் நலத்தைப் பொறுத்து போவதும் , போகாததும் என பீபீஸீயில் இன்று பல்டியல்ல, மல்லாந்து படுத்து விட்டார். – மாயா //

    இதைத்தானே நான் ஏற்கனவே இவரைக் கூத்தமைப்பினருடன் ஒப்பிட்டு, அவர்கள் மகிந்தவிடம் பின்கதவால் சென்று பிச்சை எடுப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இன்று தமிழக முதல்வர் “கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வார் என்றும், ஆய்வரங்க பணிக்காக முன்னதாகவே வருவதாக சிவத்தம்பி தெரிவித்திருப்பதாகவும், மேலும் விவாதப்பொருட்களாக எடுத்துக்கொள்ள ஐந்து விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார்” என்றும் சொல்லி சிவத்தம்பியின் இரட்டை வேசத்தை வெளிக்காட்டி விட்டார்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘…அந்த அவருக்குப் பெயரில்லையோ?? தங்களின் கற்பனைப் புலம்பல்களைப் புகுத்துவதற்கு அவர் என்றொரு பதம் தேவை போல…..’

    அவர் எனது தனிப்பட்ட நண்பர். எனக்கு எத்தனையோ இந்தியத்தமிழ் நண்பர்கள் உள்ளனர். அவரை உங்களுக்கு தெரியுமா? இங்கு பலர் மின்னஞ்சலில் வந்த கடிதங்களை பெயர்களை எடுத்துவிட்டு இணைப்பர். ஆனால் அவர்களின் பெயர்களை நாங்கள் கேட்பதில்லையே! கற்பனைப்புலம்பல்கள் என சொல்வதில்லையே? பாம்பின்கால் பாம்பறியுமோ?

    ‘…இணையத்தமிழ் மாநாடு சுவிசில் நடந்ததாக தங்களுக்கு யார் கதையளந்தது. இணையத்தமிழ் மாநாடு நடந்தது சுவிசிலல்ல, ஜேர்மனியில். எனிமேலாவது கதையளக்கும் முன், தகவலையாவது சரியாகத் தெரிந்து கொள்ளப் பாருங்கள்…’

    நாம் புலம்பெயர் இலக்கியம் பற்றிப் பல விடயங்கள் பேசினோம். அவ்விடயங்கள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நடந்தவை. உதாரணமாக பெண்கள் சந்திப்பு, இலக்கியச்சந்திப்பு, தலித் முன்னணி எனப் பல. இவை சுவிஸ், ஜேர்மனி, பிரான், யூ.கே என இருந்தன. நான் இதில் குழம்பி இருக்கலாம். அல்லது அவர் எனக்கு தவறாக சொல்லி இருக்கலாம்.
    இங்கே பொயின்ற் என்ன என்றால் நவீன இணையத் தமிழுக்கும் செம்மொழி (கிளாசிக்கல்)க்கும் என்ன தொடர்பு, ஏன் அவசரமாக இன்னொரு இணையத்தமிழ் மாநாடு என்பவையே. ஆனால் உங்களுக்கு அது எங்கே நடந்தது அல்லது அவரின் பெயர் என்ன என்பது தான் முக்கியம் எனில் நான் என்ன செய்வது?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பேராசிரியர் சிவத்தம்பியிம் பேட்டியை இன்று பி.பி.சியில் கேட்டேன். அதில் அவர் இன்னொன்றையும் சுட்டிக்காட்டுகிறார். அதாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு உலகத்தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் காரியதரிசி என்றவகையில் தன்னை கேட்ட கருணாநிதிக்கு தான் அம்மாநாட்டை (தமிழாராய்ச்சி மாநாட்டை) தற்போதைய சூழலில் ஜூன் அளவில் பின்போடுமாறு கேட்டதாகவே சொன்னார். அத்துடன் அவ்வமைப்பின் தற்போதைய தலைவர் திரு.நொபுரு கொரசிமா கூட கால அவகாசம் போதாது எனச் சொல்லி அனுமதி மறுத்துவிட்டார். ஆனால் எங்கள் ‘கலைஞர்’ அதை ஒரு சலஞ்ச் ஆக எடுத்து பெயரை மாற்றி செம்மொழி மாநாடு என பெயர் வழங்கி அதில் சிவத்தம்பியின் கருத்தையும் போட்டு ‘கதைவசனம்’ எழுதி விட்டார்.இப்படித்தான் முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒருகடையின் பங்காளர்கள் பிரிந்து ‘நியூ’ என அடைமொழியுடன் புதுக்கடை தொடங்குவார்கள்.

    மேலும் சிவத்தம்பி செம்மொழி மாநாட்டுக்குக்கூட தான் வருவதாகச் சொல்லவில்லை என்றும் ‘ஐந்து விடயங்கள்’ விவாதப்பொருளுக்கு எடுத்துக்கொள்ளலாம் என மட்டுமே சொன்னதாகவும் சொல்லி உள்ளார். ஆனால் எதிர்ப்பு வலுவடைகிறது என்று தெரிந்த கருணாநிதி இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்த இணயத்தமிழ் மாநாட்டைக்கூட இழுக்கிறார். காழ்ப்புணர்ச்சியின் வடிகாலாக தினகரனில் ஒரு கடிதம் வரைந்துள்ளார். அக்கடிதத்தினை வாசிப்போர் தமிழின் ‘செம்மொழி’ தன்மை அவ்வளவு கேவலமனதா அல்லது ‘கலைஞர்’ தனது காழ்ப்புணர்வால் தமிழை அந்த லெவலுக்கு தாழ்த்துகிறாரா எனத்திகைப்பர். அதில் தனது அரசியலையும் நன்றாக காட்டியுள்ளார். (உ+ம் :நெடுமரம் – நெடுமாறன்)!

    http://www.newlankasri.com/ta/link.php?33o6C332dS

    ஜெயலலிதா சிவத்தம்பியை தனது அரசியல் காரணங்களுக்காக உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் இருந்து வெளியேற்றினார். கருணாநிதி மாறாக தனது புகழுக்காக அவரை வரவழைக்கப்பார்க்கிறார். சிவத்தம்பியின் ஒரு மகள் இந்தியாவில் இருக்கிறார் என நினைக்கிறேன் அத்துடன் தனது மருத்துவத்துக்கு இந்தியா செல்ல வேண்டிய தேவை உண்டு. கருணாநிதியின் நற்குணம் அறிந்தது தானே!பாவம் சிவத்தம்பி முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்.

    Reply
  • பல்லி
    பல்லி

    இங்கே பிரச்சனை மகநாடா?? அல்லது சிவத்தம்பியா??
    இவருக்கும் (சிவத்தம்பி) அவருக்கும்(கருனானிதி) என்ன உறவு வேண்டுமாயினும் இருக்கட்டும், அதுக்காக இவரது சேவையோ அல்லது பார்வையோ அவருக்கு தெரியபடுத்த இவருக்கு உரிமை உண்டு, ஆனால் ஈழதமிழர் சார்பாய் இவர்தான் இலக்கியவாதி அதனால் இவருக்கு கம்பளம் விரிக்குது தமிழகம் என்பதான பேச்சே எமக்கு தப்பாகபடுகிறது; சிவதம்பி ஈழதமிழர் வாழ்வில் புலிகள் போல் ஒரு இலக்கிய கரும்புள்ளி; அதுக்கான கரணங்களை அறிய விரும்புபவர்கள் சிவதம்பியின் 1986பின்னான தமிழ் சேவையை கவனிக்கவும்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி,
    நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. அதாவது இங்கே பிரச்சினை மாநாடு வைப்பது சரியா இல்லையா என்பதே. என்னைப் பொறுத்தவரை சரியில்லை என நினைக்கிறேன். ஆனாலும் நீங்கள் சொன்னது போல “..ஈழதமிழர் சார்பாய் இவர்தான் இலக்கியவாதி அதனால் இவருக்கு கம்பளம் விரிக்குது தமிழகம் என்பதான பேச்சு” எங்கே வந்தது. சிவத்தம்பி சொன்னாரா இல்லை கருணாநிதி சொன்னாரா? இங்கே பலர் தாமே இழுத்துப் போட்டுக்கொண்டு குத்துமதிப்பாக தாக்குகிறர்கள்.

    அதேபோல நீஙகளே தான் ‘…. நீங்கள் மகாநாட்டுக்கு மட்டுமல்ல தமிழர்பற்றி பேசவோ அல்லது தமிழ் பற்றி பேசவோ தகுதியானவரா என சிலநிமிடங்களாவது சிந்திக்கவும்….” என வலிந்து தமிழர்பற்றி/ தமிழ் பற்றி பேசுவதற்கு தகுதியானவரா எனக்கேட்டுவிட்டு யாரோ செங்கம்பளம் விரிக்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறீர்கள்! ‘.. சிவதம்பி ஈழதமிழர் வாழ்வில் புலிகள் போல் ஒரு இலக்கிய கரும்புள்ளி…” என்பது உங்களின் கருத்து அதைச் சொல்ல உங்களுக்கு உள்ள உரிமையை நான் மறுக்கமாட்டேன்.

    Reply
  • jeeva
    jeeva

    //சிவதம்பி ஈழதமிழர் வாழ்வில் புலிகள் போல் ஒரு இலக்கிய கரும்புள்ளி//

    ஈழத்தமிழ் கரும்புள்ளியை உலகத்தமிழ் கரும்புள்ளி வருந்தி அழைக்கிறது எனச் சொல்லலாமா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    சுவிசில் இணையத்தமிழ் மாநாடு நடந்ததாக கதையளந்து, கடைசியில் தமிழ் இலக்கியச் சந்திப்புகள் பற்றி வந்து முடித்துள்ளீர்கள். இலக்கிய சந்திப்புகள் நாடு நாடாக நடக்கும் போது இணையத் தமிழ் பற்றிய கருத்தரங்கமும் உலகத்தமிழர்களின் 80 வீதத்திற்கு அதிகமான தமிழர்கள் வாழும் தமிழகத்திலும் நடப்பதில் தவறு என்ன ?? பிபிசியில் சிவத்தம்பி வழங்கிய பேட்டியையே நீங்கள் உங்கள் வசதிக்கேற்றவாறு மாற்றப் பார்க்கின்றீர்கள். சிவத்தம்பியின் பல்டி பற்றி வேறொரு இணையத்தளத்தில் வந்த பதில்க் கருத்தை இங்கு இணைக்கின்றேன். உங்கள் கருத்திற்கும் பதிலாக அது பொருந்துவதால்;

    சிவத்தம்பி இரு தினங்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழர்களின் நிலையையே காரணமாகக் கூறி, தான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேனென்பதை உறுதியாக மாநாட்டுப் பொறுப்பாளர்களுக்கு கூறிவிட்டதாக பிபிசி பேட்டியில் சொல்லியிருந்தார். ஆனால் நேற்றைய தமிழக முதல்வரின் செய்தியின் பின், சிவத்தம்பி அப்படியே பல்டி அடித்து, தான் சொன்ன செய்தி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், தான் கலந்து கொள்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லையென்றே கூறியதாகவும் பிதற்றியுள்ளார். இவரது குரலிலேயே ஒலிபரப்பிய செய்தியை இவரே தனது செய்தி தவறாக விளங்கிக் கொள்ளப்படுவதாக பிதற்றுவது வேடிக்கையிலும் வேடிக்கை (ஒரு தமிழ்ப்பேராசிரியராக இருந்து கொண்டு).

    தனது உடல்நிலை பற்றிய எந்தத் தகவலையும் முன்னைய பேட்டிகளில் சொல்லாத சிவத்தம்பி, நேற்றைய பிபிசி பேட்டியில் மட்டும் தான் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனால் அதற்கு தனது உடல் நிலையே காரணம் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் சிவத்தம்பி இலங்கைத் தமிழர்களின் நிலையினாலேயே மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டாரென, வந்த செய்திகள் அனைத்தையும் பொய்யாக்கி விட்டார்.

    சிவத்தம்பி இப்படி பல்டி அடித்து அறிக்கைகள் விடுவதே, நிச்சயம் மாநாட்டில் இவர் கலந்து கொள்வாரென்பதை கட்டியம் கூறுகின்றது. அதை உறதிசெய்வது போலவே மாநாட்டில் என்னென்ன விடயங்களை ஆராயலாம் என்ற தனது கருத்துகளையும், இவர் அப்பப்போ மாநாட்டு குழுவிற்கு தெரிவித்தும் வருகின்றார். மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால், அன்றைய தினம் தான் ஏன் மாநாட்டில் கலந்து கொள்கின்றேனென்பதற்கும் சாதகமான ஒரு அறிக்கையை விட்டுவிட்டு ஓடிப்போய் கலந்து கொள்வார். ஏனெனில் மாநாட்டில் சிவத்தம்பி கலந்து கொள்ளாது விட்டால், மாநாட்டிற்கு எந்தவித இழப்புமில்லை, இழப்பு சிவத்தம்பிக்குத் தானென்பதை அவர் அறியாதவருமில்லை.

    Reply
  • santhanam
    santhanam

    தமிழன் ஆழப்பிறந்த பரம்பரையல்ல தம்மினத்தையே ஆட்டிபடைக்க உருவான இனம்.

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    தமிழன் என்ற திமிர் மட்டும்தான் எங்களிடம் உண்டு. அடுத்தவனுக்கு அடிமையாக இருக்கவும் நம்பிவருகிற சகதமிழனை முற்றுமுழுதாக ஏமாற்றி ஏப்பம் விடுவதிலும் நாங்கள் வல்லவர்கள். பகுத்தறிவு எள்ளளவும் இல்லாத வெள்ளி பார்க்கிற வெங்காயங்கள் நாங்கள். முள்ளிவாய்காலில் வெள்ளி பார்த்த வெங்காயதலையர் எல்லாம் கூண்டோடு அழியப் போகிறார்கள் என்பதே எங்களுக்கு விளங்காத அளவுக்குதான் எங்களுக்கு அறிவு இருந்தது. இதற்கு சிவத்தம்பியோ சிவசேகரமோ, பாலசுந்தரமோ விலக்கல்ல.
    வெங்காயதலையனுடன் இருப்பதை விட வெடிகுண்டை கட்டிக்கொண்டு வெடித்து சாவதே நல்லது என்று புத்தியுள்ள பல போராளிகள் வீரச்சாவு அடைந்ததும் எங்கள் மண்ணில்தான். எம் தலையில் நாங்களே மண் அள்ளிப் போடுவதில் எங்களுக்கு நிகர் நாங்களே!!!

    Reply
  • பல்லி
    பல்லி

    :://ஈழத்தமிழ் கரும்புள்ளியை உலகத்தமிழ் கரும்புள்ளி வருந்தி அழைக்கிறது எனச் சொல்லலாமா?//
    சொல்லலாம் ஆனால் உங்கள் மாண்புமிகு உசுபேத்தி சிவதம்ப்பி உலகதமிழை நயாண்டி(உங்கள் கணிப்பில் கருனானிதிதானே உலகதமிழ்)பண்ணியுள்ளாரே?

    // உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிற கருணாநிதி அவர்கள்,// இது சிவதம்பியின் வாக்குமூலம்;

    //என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார்//
    இவர் இலங்கைதமிழை தூக்கி தோளில் வைக்கும்போது; கருனானிதி உலகதமிழை தூக்கி தலைமீது வைக்க மாட்டாரா?

    சாந்தன் பார்த்திபனின் பின்னோட்டத்தில் சிவதம்ப்பியின் தலைவலியை பார்க்கவும்; எத்தனையோ தமிழரை தமிழரே அழிக்கும்போது தனக்கும் ஏதாவது ஒரு சின்ன பட்டமாவது புலிகள் தரமாட்டார்களா என ஏங்கி கிடந்த சிவத்தம்ப்பி, இப்போது இலங்கை தமிழர் சார்பாய் இலக்கியத்தில் பேச போகிறாரா?? ஏன் உதவிக்கு புதுவையையும் கூட்டி செல்லலாமே; பல்லிக்கும் சிவதம்பிக்கும் எந்தவிதமான பகமையோ அல்லது இலக்கிய போட்டியோ கிடையாது; ஆனால் இவர்கள் பதவி பணத்துக்காய் எதையும் பலிகொடுக்கும் பக்கவாத நோய் உள்ளவர்கள்; இவர்களை அம்பலபடுத்தாமல் விடுவது கூட தமிழருக்கு நாம் செய்யும் துரோகம்;

    Reply
  • பல்லி
    பல்லி

    ://அதேபோல நீஙகளே தான் ‘…. நீங்கள் மகாநாட்டுக்கு மட்டுமல்ல தமிழர்பற்றி பேசவோ அல்லது தமிழ் பற்றி பேசவோ தகுதியானவரா என சிலநிமிடங்களாவது சிந்திக்கவும்….” என வலிந்து தமிழர்பற்றி/ தமிழ் பற்றி பேசுவதற்கு தகுதியானவரா எனக்கேட்டுவிட்டு யாரோ செங்கம்பளம் விரிக்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறீர்கள்//

    இதுக்கு பல்லி பின்னோட்டம் இடுவது நாகரிகமல்ல; அதனால் தேசநண்பர்கள் யாராவது சாந்தனை தூக்கத்தில் இருந்து எழுப்பி புரிய வையுங்கள்;

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி,
    ‘…இங்கே பிரச்சனை மகநாடா?? அல்லது சிவத்தம்பியா??
    இவருக்கும் (சிவத்தம்பி) அவருக்கும்(கருனானிதி) என்ன உறவு வேண்டுமாயினும் இருக்கட்டும், …’

    ‘..எத்தனையோ தமிழரை தமிழரே அழிக்கும்போது தனக்கும் ஏதாவது ஒரு சின்ன பட்டமாவது புலிகள் தரமாட்டார்களா என ஏங்கி கிடந்த சிவத்தம்ப்பி, இப்போது இலங்கை தமிழர் சார்பாய் இலக்கியத்தில் பேச போகிறாரா?? ஏன் உதவிக்கு புதுவையையும் கூட்டி செல்லலாமே; பல்லிக்கும் சிவதம்பிக்கும் எந்தவிதமான பகமையோ அல்லது இலக்கிய போட்டியோ கிடையாது; ஆனால் இவர்கள் பதவி பணத்துக்காய் எதையும் பலிகொடுக்கும் பக்கவாத நோய் உள்ளவர்கள்; இவர்களை அம்பலபடுத்தாமல் விடுவது கூட தமிழருக்கு நாம் செய்யும் துரோகம்…’

    இரண்டும் உங்கள் திருவாய் மலர்ந்தவைதான்!!

    Reply
  • Velu
    Velu

    Always we have to respect, Prof.Sivathamby’s knowledge and his contribution to the Tamil language.His has shown his intellectual capacity in analysising the subuject in the lights of Marxism and Leninism. He has done a great job in criticizing the Tamil literature and upgraded it to a new level which is second to the greatest job done by Com.Prof.Kailasapathy. Both of them are trained by the Communist Party of Srilanka in the field of literature.
    But Com.Pro.Kailasapathy was very storong in his political stand and never ever he has been osilatted like Prof.Sivathamby. Prof.Sivathmby has done a great blunder in his political life by supporting the pro-Imperialist and Mafia LTTE or Tamil Tigers. Because he wanted to safeguard his life from this criminals and he was more afraid of them in those days.
    Still we have to respect him for ever for his contributions to our mother tongue. It is he who has spoiled his name and fame by supporting an anti people and mafia organization like LTTE and its fascist leadership.

    Reply
  • Thaksan
    Thaksan

    புதுவையை ஏனப்பா இதுக்க இழுக்கிறியள்? அவர் அநேகமாக கடவுளாகிவிட்டார் என்றே தகவல். (இருக்கிறார் என்பவர்களுக்கு அவர் இருப்பார்: இல்லை என்பவர்களுக்கு அவர் இருக்க மாட்டார். கடவுள் பற்றி எனக்கு இருக்கும் விளக்கம் இப்போதைக்கு இதுதான்) சூரியத்தேவனின் புகழ்பாடியே தன் கவித்துவத்தை இழந்தவர் அவர். கற்பனை கடந்த சோதியாக கண்டவர்கள் கடைசி தருவாயில் கடவுள் கையுயர்த்துவார் என்பதை கற்பனையிலும் கண்டிலர். எல்லோரும் சமமானவர்கள். ஆயினும் சிவத்தம்பி அதிகம் சமமானவர். (All are equal; But, Sivathamby is more equal)

    Reply
  • பல்லி
    பல்லி

    தக்ச்சன் சிவதம்பியை தனியாகதான் பல்லி பயணம் அனுப்ப (விமர்சிக்க) நினைத்தேன்; ஆனால் அவருக்கு உதவிக்கு யாரும் வேண்டாமா? என்பதுபோல் சாந்தன் சாடியதால் யாரை அனுப்பலாம் என சிந்தித்தேன்; இருவர் என் மனதில் பட்டனர் ஒருவர் புதுவை (இவர் ஆரம்பத்தில் இருந்தே அழிவை விரும்பியவர்,) மற்றவர் சேரன் (இவர் இடையில் தடக்குபட்டு புலிபுகழ் பாடியவர்) ஆக தகுதியின் அடிபடையில் புதுவை மேலோங்கி நின்றதால் அவரை பல்லி முன்மொழிந்தேன்; மற்றபடி சேரன் மீது பகை ஏதும் பல்லிக்கில்லை;

    Reply
  • Rohan
    Rohan

    I urge the director and producer of many Tamil films MR. shankar to commission me to write a comedy script on Sivathamby’s life s like the 23rd Pulikesy. Sivathamby is a perfect clown.

    Movie : Sivathamby and forty evil clowns
    Direction: Shankar
    cast : Sivathamby, Sivasekaram,cheran,Ki.Pi.Aravinthan
    Villain : Brothers mahinda and douglus
    Script :Short Thirunavukkarasu( Wanny)
    songs : Puthuvai Rathnathurai
    producer : Nediyavan ( Norway)
    Heroine : poetess Tamilnathy(VVT)
    Thinai Nadikai: Janany Jananayagam
    Honourary cast :Thirumavalavan

    Reply
  • santhanam
    santhanam

    உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ளும் ஆய்வரங்கக் குழுவுக்குத் தலைவராக பேராசிரியர் கா.சிவத்தம்பி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குழுவின் தலைவராக இலங்கைத் தமிழ் பேரறிஞர் முனைவர் கா.சிவத்தம்பியும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர்

    Reply
  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    தோழர்களே!

    சிந்தனை செய்து பாருங்கள்! இந்தியா என்னும் நாடு இந்து என்னும் ஆறிபோன ஆரிய சித்தாந்ததினை அடிப்படையாகவும், இந்தி என்னும் வடமொழியை செயல்திட்டமாக கொண்டு கண்ணுக்குப் புலனாகாத ஒரு பூணூலால் கட்டப் பட்டுள்ளது. பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்,மார்க்சிய கம்யூனிஸ்டு, அ தி மு க, போன்ற மிதவாத அரசியல் அமைப்புகள்; ஆர் எஸ் எஸ் , இந்து முன்னணி, பஜ்ரங் தளம், பாரதிய சனதா, மா லெ குழுக்கள், மக இ க போன்ற தீவிர அரசியல் பேசும் இயக்கங்கள், இந்திய இராணுவத் தலைமை, மையப் புலனாய்வுத் துறை, இந்திய தலைமை செயலகம், நீதித் துறை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை ஆகிய அனைத்தும் இந்தப் பூணூல் கட்டமைப்பின் ஒவ்வொரு இழைகளாகும்.

    இந்தக் கட்டமைப்பு மிக நுணுக்கமாக, வஞ்சகமாக பின்னப் பட்டுள்ளதால் தமிழக தமிழர்கள் மிக மிக கவனமாக அணுகப்பட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருவருக்கு ஒருவர் அவர்களுடைய வருணா சிரம் தர்மபடி அடித்துகொள்ள நேரிடும் .ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ஒடுக்கப் படும் தேசிய இனங்களும் ஒன்று பட்டு விடுதலைகான போராட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பது, இந்தியா என்கிற பார்ப்பனிய உருவாக்கம் உள்ள வரை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஏன் சாத்தியம் இல்லை என்று கூடக் கூறலாம். இங்குள்ள தேசிய இனங்கள் அடிப்படையிலேயே ஒன்றை ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. கன்னடன் தமிழனின் தனித்துவ முயற்சி கண்டு மனம் பொறாதவனாய் அவன் தன்னை விட தாழ்ந்தவன் எனக் காட்ட முற்படுகிறான். மலையாளி, இந்தியா என்ற கட்டமைப்புக்குள் அங்கங்கின்னாதபடி நிறைந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்துகொண்டு, தமிழனின் தனித்துவ வேட்கை தன் அடிப்படை வாழ்வாதாரத்தை பிளந்து விடும் என எண்ணி தமிழனின் மென்னியை திருகுகிறான். பிகாரியையும் ஒரியாக்காரனையும் மதராசியையும் வட நாட்டவன் வெறுக்கிறான், அவமதிக்கிறான். உறங்கும் எரிமலையான பஞ்சாப், எரியும் காசுமீர், அசாம், வட கிழக்கு மானிலங்கள் என எத்தனை முரண்பாடுகள். இத்தனை முரண்பாடுகளிலும் பார்ப்பனியவாதிகளும், பெரு முதலாளிகளும், அரசியல் அற்பர்களும் மட்டுமே ஒருமைப்பாடு, இந்தியா, இந்தியன் என்று அலறிக் கொண்டிருப்பதை கவனியுங்கள். பார்ப்பனியத்தை ஒழிக்க முற்படுங்கள். நீங்கள் புரட்சியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லாமல் இந்தக் இந்தி கட்டமைப்பு தானே உதிர்ந்துவிடும்!!.

    Reply