பயங் கரவாதம் ஒழிக்கப்பட்டமைக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சிறந்த முறையில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தமைக்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேபாளத்தின் முன்னாள் பிரதமர் புஷ்பகமல் பாராட்டியுள்ளார்.இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று நேபாளம் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேபாளத்தின் முன்னாள் பிரதமர் புஷ்பகமல் சந்தித்து பேச்சு நடத்தினார். சுமுகமான முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது நாட்டில் 30 வருடங்களாக நீடித்து வந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைககள் முழு உலகிற்கும் சிறந்த முன்னுதாரணமாகுமென முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.
நேபாளம், இலங்கை ஆகிய இரு நாடுகளிடையே நீண்டகாலமாக நிலவி வரும் கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்புகள் தன்னுடைய இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுப்பெறுமென தான் நம்புவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
நேபாளத்தில் லும்பினி நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “ஸ்ரீலங்கா மஹாவிகாரை”யினை ஜனாதிபதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்படுகிறது.