ஜீ. எஸ். பி சலுகை கிடைக்காவிட்டாலும் விளைவுகளை முகம்கொடுக்க தயார் – மத்திய வங்கி ஆளுநர் கப்ரால்

ஜீ. எஸ். பி. + சலுகை கிடைக்காமல் போகும் பட்சத்தில் கூட அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

சரியான தயார்படுத்தல்கள், அணுகு முறைகள், கவனம் செலுத்தல் என்பனவற்றின் மூலம் இது சாத்தியமாகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சலுகைகளை உரிய முறையில் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வதுடன் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

ஜீ.எஸ்.பி. + சலுகை கிடைக்கும் என்று நம்புவதாக தெரிவித்த அவர், அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் முழு நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஜீ.எஸ்.பி + சலுகை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

“இடர் முகாமைத்துவ நோக்கிலிருந்து பொதுவாக்கப்பட்ட முன்னுரிமைகளின் முறைமையும் (ஜீ.எஸ்.பி+) இலங்கையையும் பற்றிய ஒரு பகுப்பாய்வு” என்ற தொனிப் பொருளில் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,

ஜீ.எஸ்.பி + சலுகை கிடைக்கும் பட் சத்தில் அது மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். ஆனால் நீக்கப்படும் பட்சத்தில் கூட அந்த சலுகை இல்லாமலேயே முன் னேறிச் செல்வதற்கான தயார் நிலைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரஸ்பர நன்மையற்ற சலுகைகள் எப்போதும் பாரிய இடர்நிலையையே ஏற்படுத்தும். ஜீ.எஸ்.பி + இதுபோன்ற ஒன்றுதான். ஜீ.எஸ்.பி + மூலம் கிடைக்கும் நன்மைகள் வேறுவகையான இடர்களை தோற்றுவிக்கக்கூடியவை.  எனவே பொருளாதார முகாமைத்துவத்தில் தொடர்ச்சியாக இடர் முகாமைத்து வத்திற்கான ஆயத்தங்களை செய்திருக்க வேண்டும். ஐரோப்பிய யூனி யனுக்கான ஏற்றுமதியை பொறுத்தமட்டில் அதற்கான போட்டியில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. நவம்பர் 2008 முதல் ஜனவரி 2009 வரையான காலப்பகுதியில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் இதில் அதிகரிப்பை காட்டியுள்ளனர்.

இலங்கையின் நாணயப் பெறுமானத்தில் ஏற்பட்ட தேய்வும் இதற்கான காரணமாகும். இந்நிலையில் ஜீ.எஸ்.பி + சலுகை நீக் கப்பட்டால் முன்னுரிமை வரிஎல்லை 7 சதவீதமாக இழப்பினை ஏற்படுத்தக் கூடும். ஆனால் இது நாணயத்தின் பெறு மான தேய்வு எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கும். எனவே இந்த சலுகை இழப்பானது ஏற்றுமதிக்கு பாரிய தாக் கத்தை ஏற்படுத்துவதாக அமையாது.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் முன்வைக்கப்படும் சகல தகவல்களையும் கருத்துக்களையும் மத்திய வங்கியின் ஆய்வுக்குழு ஆராய்ந்து அது தொடர்பில் அவ்வப்போது தேவையான நடவடிக்கை களையும் முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டாக்டர் டி.எஸ். விஜேசிங்க, உதவி ஆளுநர் டாக் டர் பி.என். வீரசிங்க, பொருளியல் ஆய்வு திணைக்களத்தின் பதில் மேலதிகப் பணிப் பாளர் திருமதி எஸ். குணரட்ன உட்பட முக்கியஸ்தர் பலர் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *