அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் இரத்மலானை சிவகுமார் சடலம் மீட்பு; பொலிஸ் காண்ஸ்டபிள் கைது

bambalapitiya.jpgகொழும்பு,  பம்பலப்பிட்டி கடலில் அடித்துக் கொலை செய்யப்பட்டவர் இரத்மலானைப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் நேற்று பம்பலப்பிட்டி கடற் பகுதியில் கரையொதுங்கியது. சடலத்தை மீட்டெடுத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தரான திமுது சொம்னத் என்பவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

இறந்தவரின் சகோதரர் நேற்று பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். இறந்த தனது சகோதரர் அங்கொடை மனநோயாளர் மருத்துவ நிலையத்தில் மூன்று தடவைகள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார். குறிப்பிட்ட நபரை தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரும் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

பம்பலப்பிட்டி கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகளை தனியார் தொலைக்காட்சி யொன்று நேற்றுமுன்தினம் இரவு ஒளி பரப்பியது. இதனையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டனர்.

விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது: கரையோரத்திலிருந்த இளைஞரொருவர் நேற்றுக்காலை முதல் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் ரயில்கள் மீது கற்களை எறிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இறுதியாக ரயில் ஒன்றின் மீது குறித்த இளைஞன் கற்களை வீசி எறிந்த போது அங்கிருந்தவர்கள் கூடி அவனை நையப்புடைத்துள்ளனர்.

அதனையடுத்து கரையோரத்தில் சனக்கூட்டம் அதிகமாகவே அங்கிருந்த ஒருவரினால் இச்சம்பவம் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் கடலுக்குள் வைத்து குறித்த இளைஞனை பொல்லினால் தாக்க முயற்சிப்பதாயும் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்த நிலையில் கடலுக்குள் அமிழ்ந்து போவது காண்பிக்கப்பட்டது.

உண்மையில் இளைஞன் பொதுமக்களினால் கரையில் வைத்து தாக்கப்படும் போது தவறி கடலுக்குள் விழுந்தானா? அல்லது சம்பவ இடத்துக்கு விரைந்த பம்பலப்பிட்டி பொலிஸார் அவனை கைது செய்ய முற்பட்டவேளை தான் தப்புவதற்காக கடலுக்குள் குதித்தானா? என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மெத்திவக்க தெரிவித்தார்.

உயிரிழந்த இளைஞன் புத்தி சுவாதீனமற்றவன் எனத் தகவல்கள் கிடைத்துள்ளமையால் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறிய பொலிஸ் பேச்சாளர், இளைஞன் பொல்லினால் தாக்குண்டதினால் தான் கொல்லப்பட்டானா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

12 Comments

 • பார்த்திபன்
  பார்த்திபன்

  இலங்கையில் மனித மனங்கள் எப்படி மிருகங்களை விடக் கேவலமாக மாறி வருகின்றன என்பதற்கு நல்லதொரு சாட்சி. தாக்கப்படுபவர் தமிழர் என்பதற்காகவே இப்படித் தாக்கி கடல்நீரினுள் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை நான் உணர்ச்சிவசப்பபட்டு எழுதுவதாக எவரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். குறிப்பபிட்ட அந்த இளைஞன் தன்னைத் தாக்குபவவர்களிடம் கையெடுத்துக் கும்பிட்டு ஏதேதோ எல்லாம் சொல்லுகின்றான். ஆனால் அந்த மிருகங்கள் அவனைத் தொடர்ந்து தாக்குவதிலேயே குறியாகவிருக்கின்றார்கள். இதைவிடக் கேவலம் இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கடமையிலிருந்த பொலிசாரும் அந்த இளைஞன் தாக்கப்பட்டு நீரினுள் மூழ்கடிக்கப்பட்டு இறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது. இந்த இளைஞனை 5 மேற்பட்ட நபர்கள் தாக்குகின்றார்கள். அதில் 3 பேர்களே மும்மூரமாக இரும்புக் குழாய்களால் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இதுவரை ஒருவரையே கைது செய்துள்ளனர். இனி நீதி விசாரரணையில் குறித்த இளைஞர் தாக்குதலினால் மரணமடையவில்லை நீரில் மூழ்கி மூச்சுத்திணறலினாலேயே மரணமடைந்தள்ளாரென நீதிபதி தனது பொன்னான தீர்ப்பையும் வழங்கலாம். ஆனால் அந்த இளைஞன் எப்படி நீரில் மூழ்கடிக்கபட்டானெ விசாரணை நடைபெறுமா?? உண்மையில் அவர் தாக்குதலினால் மயக்கமாகியே நீரில் மூழ்குகின்றார்.

  குறித்த இளைஞன் ஆடைகள் களையப்பட்டு உள்ளாடையுடன் மட்டும் தாக்கப்படும் போது தமிழன் என்ற அடையாளம் மட்டுமே அறியப்பட்டுள்ளது. அவர் மனநோயாளி என்பதை தாக்கியவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பொலிசாரிடம் வாக்குமூலமளித்த இறந்த இளைஞரின் சகோதரரின் வாக்குமூலத்திலேயே அது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனி இதனை வைத்தும் தமக்கு சாதகமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள பொலலிசார் முயற்சிக்கலாம். குறிப்பிட்ட இந்தக் கொலைவெறியை ஒளிப்பதிவு செய்தவர் தனிநபர் என்பது தவறான தகவல். இதனை ஒளிப்பதிவு செய்தவர்கள் கடற்கரையின் எதிர்ப்புறக் கட்டிடத்தில் Z மாடியில் இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் தோலைக்காட்சியான TNL தொலைக்காட்சியின் ஊழியர்களே. இது பற்றிய அதிகமான விபரங்களை கொழும்பின் டெய்லிமிரர் பத்திரிகையும் வெளியிட்டுள்ளது.

  Reply
 • மாயா
  மாயா

  ஒரு குற்றவாளியை கைது செய்ய முயல்வதை தவிர்த்து விட்டு, அந்த குற்றவாளியை அடித்துக் கொல்ல முயலும் காவல் துறை ஒரு மட்டமான காவல்துறையாகவே கருத முடியும். குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவரா , பயங்கரவாதியா என்பதல்ல பிரச்சனை. குற்றவாளிகளை தாம் விரும்பிய விதத்தில் கொலை செய்து சாட்டு சொல்லி தப்பித்துக் கொள்ளும் காவல் துறையின் செயல்கள் இனியாவது திருத்தியமைக்கப்பட வேண்டும். காவல்துறை என்பதை விட மாபியாதுறை என அழைக்கலாம்.

  TNL தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களால் ஒளிப்பதிவு செய்து இலங்கை தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பான ஒளிக் காட்சி டெய்லிமிரர் வழி
  http://video.dailymirror.lk/videos/161/ccd-probes-incident-where-man-was-

  படங்கள்:
  http://www.lankaenews.com/Sinhala/files/2144Kochchitaya_Gal_Gasu_Kolla_J.jpg

  இறுதியில் இருக்கும் படம் கொல்லப்பட்ட மனநோயாளி சிவகுமாரின் சகோதரர் கதிர்காமநாதன்

  Reply
 • chandran.raja
  chandran.raja

  கையெடுத்துக் கும்பிடுகிற மனிதப்பிறவியை அடித்துக்கொல்வதை எந்த ஒருமனிதனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இதை யாரும் நியாப்படுத்த முடியாது. மூன்று தரம் பைத்தியகார ஆஸ்த்திரியில் இருந்து வந்தவனை அடித்துக் கொல்லுபவனும் ஒரு பைத்தியக்காரனே!.
  இது நடந்தது இன்னும் எழுபத்திரண்டு மணத்தியாலங்கள் ஆகவில்லை என நினைக்கிறேன். இந்த சிவகுமாரன் புகையிரதத்திற்கும் போகிற வாகனங்களுக்கும் கல்லெறிந்து கொண்டிருந்தாக கூறுகிறார்கள். சரியான செய்திகள் வெளிவர இன்னும் பொறுத்திருக்க வேண்டும். இனவாதத்தை தூண்டி அரசியல் நடத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல தீன். இது சதாரண சம்பவமாக எடுத்துக் கொள்ள முடியாது என கூறமுடியும்.

  Reply
 • அருட்சல்வன் வி
  அருட்சல்வன் வி

  பம்பலப்பிட்டியில் கடலில் மூழ்கடித்துத் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு மாவட்ட அங்கிலிக்கன் ஆயர் பேரருட்திரு டுலிப் சிக்கேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

  மனநோயாளியான ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் வேறு சிலரும் தாக்கியமை தொடர்பில் பக்கச்சார்ப்பற்ற விசாரணையை நடத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

  இந்தச் சம்பவத்துடன், தொடர்புடையவர்களைக் கைது செய்வதை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகும் என பொலிஸ் மா அதிபரிடம் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தைக் காக்கின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கள் உணரப்படவேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்

  பொலிஸ் அதிகாரிகள், இவ்வாறான நிலைமைகளை எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து அறிந்திருப்பது அவசியமாகும். இந்நிலையிலேயே இவ்வாறான குற்றங்களைத் தடுக்க முடியும் என்றும் ஆயர் சிக்கேரா குறிப்பிட்டுள்ளார்.

  ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

  பம்பலப்பிட்டிக் கடலில் மூழ்க வைத்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர் பாலவர்ணன் சிவகுமாரனின் சடலம் நேற்றுக் கரை ஒதுங்கியதையடுத்து அவரது சகோதரர் அவரை அடையாளம் காட்டினார்.

  அவரது சடலம் களனி மலர்ச்சாலையில் இரண்டு மணிநேரம் வைக்கப்பட்டு, அதன் பின்னர் அவரது சொந்த ஊரான மொனராகலை, மாவலகம என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்படவிருப்பதாகவும் நாளை அங்கு இறுதிக் கிரியைகள் நடைபெறும் எனவும் சிவகுமாரனின் தந்தை பாலவர்ணன் தெரிவித்தார்.

  Reply
 • raji
  raji

  தேசம் அன்பர்கள
  இந்த சம்பவம்திட்கும் புலிகளுக்கும் தொடர்பு நீங்கள் இன்னமும் கற்பிக்கவில்லை. தயவு செய்து யாராவது எழுதுங்கோவன். ப்ளீஸ். உங்களது நகட்சுவை நல்லாக இருக்கும். இந்த துன்பத்திலும் நீங்கள் இன்பம் காண்பீர்கள் அல்லவா?
  ராஜி

  Reply
 • BC
  BC

  இனவாதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்களுக்கு இந்த விடயம் புரியாணி சாப்பாடுதான்.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  இவை அனைத்தும் காலங்கடந்த ஞானங்கள் தான். துவேசத்தை வளர்த்துவிட்டு மதம் மதம் என்று மதம்பிடித்து மனிதத்தை அடியோடு அழித்த அரசியலும் அரசியல்வாதிகளும் நாட்டில் உலாவரும் போது இதை விட எதை எதிர்பாக்க முடியும். இதில் எம்தமிழ் அரசியல்வாதிகளும் குறைவில்லை. இந்த ஒரு இலட்டம் தமிழ் மக்களின் அழிவுக்குக் காரணமும் அவர்களே. அரசியலில் இருந்து அங்காடி வரை துவேசத்தில் ஊறியிருக்கும் மக்களிடம் இருந்து எம்மால் எதை எதிர்பார்க்க முடியும்?

  Reply
 • Nantha
  Nantha

  பம்பலப்பிட்டி கடலில் இளைஞன் அடித்துக் கொலை – பொலிஸ் விசாரணைக்கு உத்தரவு http://thesamnet.co.uk/?p=17368
  இப்படி செய்தி தேசத்தில் வெளிவந்தபோது யாரும் பின்னுட்டம் பதியவில்லை ஆனால் பின்னர் செய்தி தமிழன் சிவகுமார் என்ற பெயர் வெளிவந்த பின்பு வெளிவந்த இந்த செய்திக்கு பல பின்னுட்டங்கள் பதியப்பட்டுள்ளது இது நமக்குள் இருக்கும் இனவாத உணர்வையே காட்டுகிறது.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  Nantha,
  தேசம்நெற்றில் செய்திகள் வந்த போதும் அதன் முழு விபரங்களையும் அப்போது அறிய முடியவில்லை. அதன் பின்பு வந்த ஒளிப்பதிவும், பத்திரிகைச் செய்திகளும் தான் விபரங்களை அறிய வைத்தது. அதன் பின்பு தேசம்நெற்றும் இதுபற்றி விபரமாகச் செய்தி வெளியிட்டது. அதனையொட்டி வாசகர்களின் கருத்துகளும் பறிமாறப்படுகின்றன. இதை வெறும் இனவாதமாக பார்த்து விமர்சிப்பதாக தங்கள் கருத்துத் தான் வியப்பானது. அடித்துக் கொன்ற கொலைகாரர்கள் இனவாதமாகச் செயற்பட்டது தங்களுக்குப் புரியவில்லை. ஆனால் இந்தக் கொடுரத்தை விமர்சிப்பவர்கள் உங்களுக்கு இனவாதியாகத் தெரிகின்றார்கள். ஒளிப்பதிவிலுள்ள கொடுமையைப் பார்த்த பின்னும், கொலையை பொதுமக்கள் பொலிசார் உட்பட அனைவரும் வேடிக்கை பார்ப்பதைப் பார்த்தும், இதை சாதாரணமான விடயமாகவே யாராவது எடுத்துக் கொள்வார்களேயானால், ஒரு அடிப்படை மனிதனாக இருப்பதற்கே அவர்கள் இலாயக்கில்லாதவர்கள்.

  Reply
 • விசுவன்
  விசுவன்

  இனவாத உணர்வு என்பதை விட தமிழ் மக்களின் பாதுகாப்பு சம்பந்த பட்ட உணர்வாகவே இதை பாரக்க முடிகிறது. இந்த இடத்தில் ஒரு சிங்கள இளைஞன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? இந்த சம்பவம் தமிழர்கள் பாரம்பரியமாக வாழும் இடத்தில் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? பின்னுட்டங்கள் கூட இந்த சிந்னையின் பின்னாகவே இங்கு வந்திருக்க முடியுமல்லவா?

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  மனித மனங்களின் மாறுதல்களுக்கு பல சம்பவங்களும் சாட்சியங்களும் ஆதாரமாகத் தேவைப்படுகின்றன. அந்த வகையில் இந்த இளைஞனின் பலாத்கார மரணம்கூட ஒரு சமூக மாற்றத்திகான அத்திவாரம்தான்.

  Reply
 • palli
  palli

  பல்லி இந்த விடயத்தில் பின்னோட்டம் ஏன் விடவில்லை என நண்பர்கள் தொலைபேசியில் கேட்டார்கள், எதை எழுதுவது; எதை தவிர்ப்பது, வலிக்கிறது, இருந்தாலும் மகிழ்ச்சிதான் காரணம் புலி எப்படி ஆடி தனது காலத்தை கண்ணீரில் முடித்ததோ; அதை அனுபவமாய் கொண்டு இன்று அரசு செய்யும் அத்துமீறலுக்கு ஒரு எல்லையே இல்லை; ஆனால் அரசின் அழிவுக்கு சில அறிகுறியே இந்த கடல் கொலை, மகிந்தா திருப்பதியில் மொட்டை போடுகிறாரோ இல்லையோ; தனது அரசுக்கு சில பல பாதுகாப்பு நிவாகிகளுடன் கூடி கடசி தம்பி செல்ல தம்பி இன அழிப்பின் மூலம் வழி வகுக்கிறார் என்பது பொட்டர் மீது சத்தியம், வல்லரசுகளே கண்ணீர் விடும் சம்பவங்கள் இலங்கையில் நடக்கிறது; இதே தேசத்தில் பல்லியின் இதை செய்த செய்ய தூண்டியவர்களின் அனுதாப பின்னோட்டம் அட்டகாசமாய் வரும்; வர வேண்டும், அதுதானே நியதி;

  Reply