நாடளாவிய ரீதியில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இம்மாதத்தில் 2474 பேருக்கு அதிபர் நியமனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.
அத்துடன் கல்வித்துறையில் மேற்கொள் ளப்பட்டு வரும் விசேட திட்டத்தின் கீழ் நாட்டின் சகல மாவட்டங்களிலுமுள்ள அதிபர் வெற்றிடங்களை இவ்வருட இறுதிக்குள் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
கல்வியமைச்சின் கல்வி நிர்வாக அதிபர் மற்றும் ஆசியர் சேவைகளில் நிலவும் குறைபாடுகளைத் தீர்க்கவும் நீண்ட காலமாக நிலவும் வெற்றிடங்களை நிரப்பவும் அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர்:-
2008 ஆம் ஆண்டில் ஆசிரியர் சேவையில் 21,000 பேருக்குப் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் கல்வி நிர்வாக சேவையில் முதலாம் இரண்டாம் தரத்தினருக்கான பதவியுயர்வுகள் இம்மாதம் 6 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. எவ்வாறெனினும் கல்வி நிர்வாக சேவை யில் நிலவும் சகல பதவியுயர்வுக ளையும் துரிதமாக வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆசியாவைப் பொறுத்தவரை இலங்கையில் தொழில் தகைமையுள்ள பட்டதாரிகள் 90 வீதம் கல்வித்துறையில் ஆசிரியர்களாக கடமைகளிலுள்ளனர். மீதமுள்ள பத்து வீதமான ஆசிரியர் களுக்கும் உரிய பயிற்சி கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தவகையில் 12,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இலவச பாடநூல் விநியோகம் இம்முறை உரிய காலத்தில் இடம்பெறுவது உறுதி. எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி நாடளாவிய சகல பாடசாலைகளுக்கும் பாடநூல்களை விநியோகிக்கத் தீர்மானித்துள்ளதுடன் ஜனவரி மாதத்துக்குள் சீருடை வழங்கும் நடவடிக்கையும் இடம்பெறவுள்ளது.