ஒருநாள் மற்றும் “டுவென்டி -20” போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கப்படும் வகையில் ஆடுகளத்தை தயார் செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கேட்டுக்கொண்டுள்ளது.
சமீபத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த சம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) இந்தியாவில் நடந்த சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20” தொடர்களில் பெரும்பாலான போட்டிகளில் குறைவான ரன்களே எடுக்கப்பட்டன. போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆடுகளத்தில் மாற்றம் செய்ய ஐ.சி.சி. முன்வந்துள்ளது. இதையடுத்து ஐ.சி.சி, அதன் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி) சீனியர் அதிகாரி வாசிம் பாரி உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:-
ஒருநாள் “டுவென்டி-20” போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு வசதியாக அதிக ரன்கள் எடுக்கப்படும் வகையில் ஆடுகளத்தை தயார் செய்யவேண்டும் என ஐ.சி.சி, எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. நாங்கள் அவர்கள் ஆலோசனைப்படி நடப்போம் இதற்கு முன்பாகவே உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் துடுப்பாட்டத்திற்கு உதவும் வகையிலான ஆடுகளத்தை தயார் செய்துள்ளோம் என்றார்.