இந்தோனேசிய கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள ஓசியானிக் விக்கிங் கப்பலில் இலங்கையர்கள், உண்மையில் அகதிகளா என அவுஸ்திரேலியாவின் முதலாம் செனட் உறுப்பினர் ஸ்டீவ் பீல்டிங் கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இந்தோனேசியாவில் வசித்ததாகவும், ஜகார்த்தாவின் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
SUDA
போச்சுடா! யாரோ வச்சிட்டாங்கடா ஆப்பு!!
பார்த்திபன்
அகதிகளாக வந்தவர்களின் ஆடைகளும் அந்தச் சிறுமி பேசிய ஆங்கிலமும், இவர்கள் நிச்சயமாக வன்னியிலிருந்து வந்தவர்கள் அல்ல என்பதை அன்றே உறுதியாகக் கூறினேன். இப்போ படிப்படியாக விடயங்கள் வெளிவருகின்றன.
சாந்தன்
அகதிகள் அகதிகள் தான். அவர்கள் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசினால் என்ன அடிநாக்கில் பேசினால் என்ன. அவர்கள் அண்மைய வன்னி அகதிகள் இல்லை என வேண்டுமாயின் நிரூபிக்கலாம். அத்துடன் அகதிகள் எனப்படுவோர் வன்னியில் இருந்துதான் வரவேண்டுமென்பதில்லை. இரண்டு நாட்களின் முன்னர் ஒரு மன நோயாளியை ஸ்ரீலங்கா அரச இயந்திரத்தின் காவலர்கள் போட்டு அடித்துக்கொலை செய்ததனை வீடியோவில் உலகம் பார்த்தது. அவ் அக்கிரமத்தினை அந்நாட்டின் பொதுமக்களும் வேடிக்கை பார்த்தனர். அவ்வாறான நிலமையில் இன்று கொழும்பில் இருந்த்து வரும் ஒருவர் நுனிநாக்கில் ஆங்கிலமென்ன சிங்களம் பேசிக்கூட அகதி அந்தஸ்து கோரலாம். அதற்கு ஐ.நா அகதிகளுக்கான ஜெனிவா உடன்படிக்கையில் வழிவகை உண்டு.
தாய்லாந்தில அகதி அந்தஸ்து வழங்கப்பட்டும் அதை தூக்கி எறிந்துவிட்டு அவுஸ்திரேலியா, அமெரிக்கா சென்று அகதி அந்தஸ்து பெற்று வாழும் வியட்நாமிய, கம்பூச்சிய மக்கள் பலரை எனக்குத் தெரியும். அகதி எனப்படுவது ஒன்றும் நகைப்புக்குரியதுமல்ல, மாறாக அவமானப்பட வேண்டியதுமல்ல. பலர் அந்த மக்களை சினிமா வசனம், நக்கல் கதைகள் பேசிவது வேதனைதான்.
பார்த்திபன்
சாந்தன்,
குறிப்பிட்ட இந்த அகதிகள் தாங்கள் அகதித் தஞ்சம் பெற்ற நாட்டிலேயே, கதைவிட்டு மாட்டியிருக்கின்றார்கள். ஒரு சிறு குழந்தையைக் கூட அழகாக பொய் பேச வைத்தும் மாட்டியிருக்கின்றார்கள். ஒருவர் ஒரு நாட்டில் அகதி தஞ்சம் பெற்றுவிட்டு, திரும்பவும் இன்னொரு நாட்டிலும் போய் அகதியாக விண்ணப்பிக்கலாம் எனவும் ஐ.நா அகதிகளுக்கான ஜெனிவா உடன்படிக்கையில் கூறப்பட்டிருக்கின்றதா?? ஒருவர் ஏற்கனவே ஒரு நாட்டில் அகதிச் தஞ்சம் பெற்றுவிட்டு, அவர் இன்னொரு நாட்டிலும் அகதியாக பதிந்திருப்பது தெரிய வந்தால், அவர் ஏற்கனவே அகதித் தஞ்சம் பெற்ற நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவர். தங்களை அகதியாக ஏற்றுக் கொண்ட நாட்டிலேயே, பொய் சொன்னால் மாட்டிக் கொள்வோம் என்பது கூட தெரியாமல் இப்போ மாட்டுப்பட்டிருக்கின்றார்கள். மொத்தத்தில் இவர்கள் சிங்கள அரசினால் அரசியல் தஞ்சம் கோரியவர்களில்லை, பொருளாதார அரசியல் தஞ்சம் கோருபவர்கள் என்பதையே வெளிக் காட்டியுள்ளனர். தாங்கள் நாடு திரும்ப விரும்பவில்லை, எம்மை ஏதாவதொரு நாடு அகதிகளாக ஏற்றுக் கொண்டாலே போதுமென, அறிக்கை விட்டவர்களால் எனி என்ன சொல்ல முடியும்??
இனி உண்மையில் இலங்கையிலிருந்து புறப்பட்டு அகதித் தஞ்சம் கோரினாலும், அவர்களையும் இந்த நாடுகள் சந்தேகக் கண்ணோடு தான் பார்க்கும். மொத்தத்தில் இலங்கைத் தமிழர்கள் என்றாலே பொய்யர்கள் என்பதற்கு, பல உதாரணங்களில் இதுவும் பட்டியலில் இன்னொன்றாக கூடியிருக்கின்றது. இது சிலருக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம்.
sumithra
சொந்த மண்ணில் மட்டுமே தமிழன் அகதியாக முடியும். அதற்கு வெளியே அவன் அவதிக்குள்ளாகி சகதியாகின்றான். இந்நிலை மாறவேண்டும். அல்லது மாற்றப்பட வேண்டும்.
சாந்தன்
பார்த்திபன்,
முதலில் தலைப்பை கொஞ்சம் பாருங்கள். ‘அகதிகளா” என கேள்வி கேட்கிறது. பதில் ஆம் என்பதே. நீங்கள் நிரந்தரவதிவிட உரிமை பெற்று, பிரஜை ஆகினாலும்ம் கூட நீங்கள் அகதிகளாக வந்தவர்களாகவே அழைக்கப்படுவீர்கள். இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. மாறாக பல முக்கிய, பணக்காரர்,நடிகர்/இயக்குனர்கள், பிரபலமான அரசியல்வாதிகள் இன்றுகூட தாம் அகதிகள் எனச் சொல்வதனை காண்கின்றோம். அதேபோல இவர்களும் அகதிகளே!
’…..ஒருவர் ஒரு நாட்டில் அகதி தஞ்சம் பெற்றுவிட்டு, திரும்பவும் இன்னொரு நாட்டிலும் போய் அகதியாக விண்ணப்பிக்கலாம் எனவும் ஐ.நா அகதிகளுக்கான ஜெனிவா உடன்படிக்கையில் கூறப்பட்டிருக்கின்றதா??…..’
கோரமுடியாது எனக் கூறப்படவில்லை. கோரினால் என்னசெய்வது என அந்நாட்டு அரசு தீர்மானிக்க முடியும். அதேபோல பலரை பல நாடுகள் கருணைகாட்டி ஏற்றுக்கொண்டுள்ளன. இதில் பலநூற்றுக்கணக்கானோரை எனக்குத் தெரியும். பிரான்சில், ஜேர்மனியில் இருந்து அகதியாக வந்து கனடாவிலும் அமெரிக்காவிலும் அகதி அந்தஸ்து கோரியவர்களும் அடக்கம்.
’….ஒருவர் ஏற்கனவே ஒரு நாட்டில் அகதிச் தஞ்சம் பெற்றுவிட்டு, அவர் இன்னொரு நாட்டிலும் அகதியாக பதிந்திருப்பது தெரிய வந்தால், அவர் ஏற்கனவே அகதித் தஞ்சம் பெற்ற நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவர்…..’
அது நாடுகளைப் பொறுத்தது. அண்மையில் ஒருவர் (அவருக்கு பெயர் இல்லையோ, கட்டுக்கதையோ எனக்கேட்கவேண்டாம்)மெக்சிக்கோவில் இறங்கி அமெரிக்காவுக்கு கடந்து கனடா செல்லும் திட்டம் பிழைத்து மெக்சிக்கோ அவருக்கும் மனைவிக்கும் அகதி அந்தஸ்து வழங்கி இருந்தது. ஆனாலும் அவர் ‘சற்றும் மனம் தளராத விக்கிரமன் போல்’ அமெரிகாவுக்கு வந்து சகல உண்மைகளையும் சொல்லி, மெக்சிகோவில் இருக்கும்போது தமக்குப்பிறந்த குழந்தைக்கும் சேர்த்து அமெரிக்க அகதி அந்தஸ்து பெற்றிருக்கிறார்.
பார்த்திபன்
சாந்தன்,
உங்களின் செய்திகளில் எவ்வளவு நம்பகத்தன்மை உள்ளதென்பது பார்ப்பவர்களுக்கு நன்றாகப் புரியும். அதை நான் வேறு கேள்வி கேட்டு புரிய வைக்க வேண்டிய அவசியம் தேவையில்லை. தலையங்கத்தை மட்டும் பார்க்க சொல்கின்றீர்கள். அதன் கீழுள்ள செய்திகள் என்ன என்பது தான் முக்கியமாக நான் பார்ப்பது. ஐரோப்பாவில் கூட பலர் வேறு நாடுகளுக்கு மாறி, தனது தந்தையின் பெயரைக் கூட மாற்றி அகதியாகப் பதிந்த பல குலக் கொழுந்துகளை நான் அறிவேன். இவர்களைப் போன்றவர்கள் தான் கதையளப்பது தான் உண்மையெல்லாம் கூறி பதிந்து விட்டேனென்று. இப்போது நம்மவர்களின் பல சுத்தமாத்துகளைக் கண்டறிவதில் வெள்ளைகள் வல்லவராகி விட்டார்கள்.
சாந்தன்
பார்த்திபன்,
‘….ஐரோப்பாவில் கூட பலர் வேறு நாடுகளுக்கு மாறி, தனது தந்தையின் பெயரைக் கூட மாற்றி அகதியாகப் பதிந்த பல குலக் கொழுந்துகளை நான் அறிவேன். இவர்களைப் போன்றவர்கள் தான் கதையளப்பது தான் உண்மையெல்லாம் கூறி பதிந்து விட்டேனென்று. ….”
நான் மேலே கேசில் சொன்ன அகதி விண்ணப்பத்தினை நிரப்புவதில் நான்தான் மொழிபெயர்ப்பு செய்தேன். இதையும் கதை அளப்பு எனச் சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
முன்னாள் போரளி
//ஐரோப்பாவில் கூட பலர் வேறு நாடுகளுக்கு மாறி, தனது தந்தையின் பெயரைக் கூட மாற்றி அகதியாகப் பதிந்த பல குலக் கொழுந்துகளை நான் அறிவேன். இவர்களைப் போன்றவர்கள் தான் கதையளப்பது தான் உண்மையெல்லாம் கூறி பதிந்து விட்டேனென்று. இப்போது நம்மவர்களின் பல சுத்தமாத்துகளைக் கண்டறிவதில் வெள்ளைகள் வல்லவராகி விட்டார்கள்.//நம்மவர்கள் நிறையபேர் இப்பவும் அகதி அந்தஸ்து இல்லாமல் அலைந்து திரிகிறார்கள் நாம்நம்மினத்தையே தாழ்திட்டுஇருப்போம் அவனவன் நம்மளவச்சு முன்னுக்குவாறான்.