அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக் கறிக்கை இன்று 3ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரச வருவாய்த்துறை அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமான ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க இந்த இடைக்கால கணக்கறிக்கை யைச் சமர்ப்பிப்பார் எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடும் இவ்வேளையிலேயே பிரதமர் இக்கணக்கறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், அடுத்த வருட த்தின் முதல் நான்கு மாதங்களுக்கு மென பத்தாயிரத்து 600 மில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும்.
இன்றும், நாளையும், நாளை மறுதினமும் இக்கணக்கறிக்கை மீது விவாதம் நடாத்தப்படும்.
நாளை மறுதினம் மாலை இந்த இடைக்கால கணக்கறிக்கை மீது வாக்கெடுப்பு நடாத்தப்படும். இந்த இடைக்கால கணக்கறிக்கை அதிகப்படியான மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவுறும் என்றார்.