இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரமாக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை பயன்படுத்தும் நோக்கில் அவரை விசாரிப்பதற்காக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கான அமேரிக்க தூதுவரிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள் பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, நேர்காணல் ஒன்றுக்காக வரும் புதனன்று வருமாறு அழைத்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே அது அவரை அழைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள், ”ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்திருக்கக் கூடிய அனைத்து தகவல்களும் அவர் இலங்கை இராணுவத்தின் தலைவர் என்ற வகையில் அவருக்கு கிடைத்த வசதிகளின் அடிப்படியிலேயே அவருக்கு கிடைத்திருந்தன, ஆகவே அவற்றை அவர் பிறருக்கு சட்ட ரீதியாக கூறுவதானால், அது குறித்து முன்னதாகவே இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த தகவல்கள் இலங்கையினதும் அதனது மக்களினதும் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த தகவல்கள் என்பதால், அவற்றை எந்த சூழ்நிலையிலும், அவர் வெளியிடுவதை இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த விவகாரம் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளினதும், உயர்மட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டிருப்பதால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அது குறித்து, சரத் பொன்சேகா அவர்களை விசாரிக்கக் கூடாது என்றும் தாம் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரிடம் கூறியிருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.
இப்படியான ஒரு விசாரணைக்காக ஜெனரல் சரத் பொன்சேகா அழைக்கப்பட்டிருப்பதை, வைத்துப் பார்க்கும் போது ஜெனரல் பொன்சேகாவுக்கும், பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபாயவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் றோகித போகொல்லாகம அவர்கள், ” நான் அப்படி நினைக்கவில்லை” என்று பதிலளித்தார்.
மாயா
சரத் பொண்சேகா எவ்வித விசாரணையுமின்றி , அமெரிக்காவை விட்டு இன்று பயணமாகியுள்ளார். நாளை இலங்கையை வந்தடையவுள்ளார்.
சாந்தன்
’…சரத் பொண்சேகா எவ்வித விசாரணையுமின்றி , அமெரிக்காவை விட்டு இன்று பயணமாகியுள்ளார். ….’
மாறாக சரத் பொன்சேகா ஏற்கனவே உறுதிகூறியபடி 4ம் திகதி விசாரணைக்கு சமுகமளிக்காமல் அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளார் எனச்சொல்வதே பொருத்தமக இருக்கும் என நினைக்கிறேன்.
பார்த்திபன்
பலபேரின் கனவுகளை சரத் பொண்சேகா பாழடித்து விட்டார்.
சாந்தன்
பார்த்திபன் சொல்வதுபோல பலிரின் கனவுகளை பாழடித்துவிட்டார். அதில் அவரின் சொந்தக் கனவுகளும் அடக்கம். அவருக்கும் வோஷிங்ரனில் உள்ள தூதராலயத்துக்கும் நடந்த ”பேச்சுவார்த்தை” களில் அவரது கனவுகளும் தொலைந்து போனது உண்மை! ஆனால் அவரின் ஸ்ரீலங்கா வாழ்க்கை புதிய ‘கோரக்கனவுகளை’ அவருக்கு கொண்டு வருமா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இன்னும் பல ராணுவ அதிகாரிகளுக்கு புதிய ‘கோரக்கனவுகள்’ தோன்றி இருப்பதாக அமெரிகாவில் வாழும் முன்னைநாள் ஜே.வி.பி தோழர்கள் சொல்கிறார்கள் (தம்மை உண்மையான ஜேவிபி என அழைப்பதையே விரும்பும் அவர்கள் அமெரிகாவில் குடியிருப்பது மிகப்பெரிய முரண்நகைகளில் ஒன்று!!). அவ்வதிகாரிகளின் சொத்துகள் பல அமெரிக்காவில் உண்டென்றும் அவர்களின் பிள்ளைகள் அமெரிக்க கல்லூரிகளில் படித்து வருகின்றனர் என்றும் சொல்லும் தோழர்கள் இம்முறை பல ராணுவ அதிகாரிகள் விடுமுறைக்கு அமெரிக்கா செல்ல மாட்டார்கள் என கூறுகின்றனர்.
மாயா
// மாறாக சரத் பொன்சேகா ஏற்கனவே உறுதிகூறியபடி 4ம் திகதி விசாரணைக்கு சமுகமளிக்காமல் அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளார் எனச்சொல்வதே பொருத்தமக இருக்கும் என நினைக்கிறேன்.//
விசாரிக்க வேண்டுமானால், வெளியேற விடாது தடுக்கலாமே? வெளியே உள்ளவர்களையே பிடித்துச் செல்லும் அமெரிக்கா, போனவரை விட்டதென்றால் அமெரிக்கா பலமற்ற நாடு. இல்லை சரத்தால் வெளியேற முடிந்ததென்றால், சரத் திறமைசாலி.
குகபிரசாதம்
பயங்கரவாதிகளை எவ்வாறு முற்றாக ஒழிப்பது என்று பொன்சேகாவிடம் அறிந்து கொள்ளத்தான் அமெரிக்க முயற்சி பண்ணியது!! ஒன்றுமே சொல்லாமல் பொன்சேகா புறப்பட்டுவிட்டார்!!
பாவம் பொன்சேகா?
அவரும் அநோமாவும் மதர்லாண்டில் சீவியம்.??
பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அதர்லாண்டில் சீவியம்??
மதர்லாண்டிலும் வாய் திறந்தால் பிரச்சனை??
அதர்லாண்டில் வாய் திறந்தாலும் பிரச்சனை??
பேசாமல் பெளத்த துறவியாவதே மேல்!!
chandran.raja
இங்கு சிதறடிக்கப்பட்டது ஐக்கியதேசிய கட்சியின் கனவுகளைத் தான். நாட்டை என்ன விலைக்கும் விற்றுதள்ள தயாராகி வருகிறது. இலங்கை மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம். இவர்கள் விரிக்கும் மாயா வலையில் யாரும் சிக்குபடாமல் இருப்பதற்கு மிகுந்த அவதானமும் கடந்த வரலாற்றை புரிந்திருதலும் அவசியம்.
சாந்தன்
‘…விசாரிக்க வேண்டுமானால், வெளியேற விடாது தடுக்கலாமே?…’ மாயா,
அமெரிக்க சட்டங்கள், குற்றம் சாட்டமுன்னர் ஒருவரை விசாரனை செய்யும் உரிமையை அதிகாரிகளுக்கு கொடுக்காது. அவை ஸ்ரீலங்காபோல் இல்லை என்பது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அதனால் தான் அவர்கள் சரத் பொன்சேகாவை ‘சுயவிருப்ப சந்திப்பு’ (Voluntary meeting) ஒன்றுக்கு அழைத்திருந்தனர். அவர் வேண்டுமாயின் மறுக்கலாம் அதிகாரிகள் ஒன்றும் செய்ய முடியாது. நாட்டை விட்டு ’ஓடினாலும்’ ஒன்றும் செய்ய முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக சரத் பொன்சேகா அரச உயர் அதிகாரிகளுக்கான ராஜதந்திர கடவுச்சீட்டைக் கொண்டிருக்கிறார். அவரை ‘விசாரிக்க’ வேண்டுமாயின் அமெரிக்க ராஜாங்க அமைச்சின் ஒப்புதல் வேண்டும். அவரிடம் கேட்கப்பட்டதாகக்கூறப்படுவது சுயவிருப்பத்தின் அடிப்படையில் சந்தித்து கோத்தபாயா செய்ததாக கருதப்படும் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியுமா என மட்டுமே. இல்லை எனச்சொல்வதற்கு அமெரிக்க சட்டம் இடம் கொடுக்கிறது.இதையும் அவர்கள் சரத் ஒரு நிரந்தர வதிவிட அனுமதி பெற்ர ஒருவர் என்ற அடிப்படையிலேயே கேட்டுள்ளனர். அதற்குப் பதிலாக 4ம் திகதி வருகிறேன் என ஏன் சொன்னார்? அடுத்தமுறை தனது வதிவிட உரிமையைப் புதுப்பிக்க வரும் போது வாக்குறுதி காப்பாற்ற்றாத ஒருவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் விடலாம். மேலும் அவர் அடுத்த வருடம் அளவில் அமெரிக்க பிரஜை ஆகும் தகுதி பெறுகிறார். அவ்விண்ணப்பப்படிவத்தில் ஒரு முக்கியமான் கேள்வி நீங்கள் ஏதாவது நாட்டில் போர்க்குற்றம் புரிந்திருக்கிறீர்களா என்பது. ஆம் என்று சொன்னால் பிரஜா உரிமை இல்லை! அத்துடன் அவரின் நிரந்தர வதிவிட அனுமதியும் ரத்தாகும். இல்லை என்று சொன்னால் ஆதாரங்கள் இருப்பின் விசாரணை ஆரம்பிக்கும்.
‘… வெளியே உள்ளவர்களையே பிடித்துச் செல்லும் அமெரிக்கா, போனவரை விட்டதென்றால் அமெரிக்கா பலமற்ற நாடு…..’
நல்லது. பலம்/பலமற்ற தன்மைகளை உள்ளே/வெளியே லெவலில் மட்டுமே நீங்கள் பார்ப்பீர்கள் எனில் நான் என்ன செய்யமுடியும்.
மேலும் நேற்று ஒரு நல்ல விடயம் இத்தாலி நீதிமன்றில் நடந்திருக்கிறது. அமெரிக்க சீ.ஐ.ஏ ஆட்கள் 23 பேர் குற்ரவாளிகளாக கானப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் யாருமே நீதிமன்றம் வரவில்லை அமெரிக்காவில் தங்கியுள்ளனர். இத்தாலி அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அமெரிக்க அரசு அவர்கள் யாரையும் நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுள்லது. ஏனெனில் மூன்றாம் நாடு ஒன்று இவர்களைக்கைது செய்து இத்தாலியிடம் கொடுத்துவிடும் என்ற பயம். இதே வழிவகை சரத் குற்ரவாளியாக காணப்பட்டால் நடக்கலாம். அதற்குக் காலம் செல்லலாம்.
‘….இல்லை சரத்தால் வெளியேற முடிந்ததென்றால், சரத் திறமைசாலி…’
அமெரிகாவில் ஒரு சாதாரண ராணுவவீரன், சமயத் தலைவர், சட்டத்தரணி, வைத்தியர் போன்றவர்களின் வார்த்தைக்கு மரியாதை உண்டு. ஆனால் ஸ்ரீலங்காவின் ராணுவ அதிகாரி ஒரு அரச சிவிலியன் விசாரணை அமைப்புக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு நாட்டையே விட்டு ஓடுவார் என அமெரிக்க அதிகாரிகள் நினைத்திருக்க மாட்டார்கள். அவ்வாறு ஓடுதல் திறமை உங்கள் மொழியில் ‘அல்வா கொடுத்தல்’ எனின் அது ஒரு ஸ்ரீலங்கனாகவே இருக்கும் என்பதில் எமக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
பார்த்திபன்
சாந்தன்,
என்ன சுயவிருப்பு என்பதற்கெல்லாம் புதுமையான விளக்கம் கொடுக்க முயல்கின்றீர்கள். உண்மையில் சுயவிருப்பென்பதன் அர்த்தம் தங்களுக்குத் தெரியாதா?? ஒருவர் தானாக முன்வந்து விளக்கம் கொடுக்க வந்தால் மட்டுமே அது சுயவிருப்பு. அடுத்தவர்களால் விளக்கமளிக்குமாறு அழைக்கப்பட்டால் அது எப்படி சுயவிருப்பு ஆகும்??
சாந்தன்
‘…அடுத்தவர்களால் விளக்கமளிக்குமாறு அழைக்கப்பட்டால் அது எப்படி சுயவிருப்பு ஆகும்?….’
அவ்வழைப்புக்கு ’இல்லை’ எனப் பதில் கொடுக்க உரிமை வழங்கப்படும் போது அது ‘சுய விருப்ப’ அழைப்பாக கருதப்படும். அமெரிக்காவில் சரத்துக்கு அவ்வுரிமை இருந்தது.
ஒரு திருமணத்துகு உங்கள் ‘நண்பர்’ அழைத்தால் நீங்கள் இல்லை எனச் சொல்வதில்லையா? இவை சாதாரன தமிழ்/ஆங்கில இலக்கனத்துக்குள் வராது. மாறாக சட்ட ‘இலக்கணம்’ கொண்டவை.