சிங்களப் படத்தில் சூர்யா நடிக்கக் கூடாது: பழ. நெடுமாறன்

0511nedu.jpgஇலங் கையில் சிங்கள இயக்குநரின் இயக்கத்தில் தயாராகும் சிங்கள திரைப்படத்தில் தமிழ் நடிகர் சூர்யா நடிக்கக் கூடாது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சிங்கள திரைப்படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டிருப்பதாக வெளியான செய்தி தமிழர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கலைஞர்கள் நாடு, இனம் கடந்தவர்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், அண்மையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்து, 3 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து கொடுமை செய்யும் நாட்டில் சிங்களரால் தயாரிக்கப்படும் சிங்களப் படத்தில் தமிழர் ஒருவர் நடிப்பதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மிகக் கொடுமையான படுகொலைகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட புறப்பட்ட இந்தியக் குழுவை மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு தடுத்து நிறுத்தியது. எனவே, தமிழ் மக்களின் கோபத்திற்கு ஆளாகாத வகையில் நடிகர் சூர்யா சிங்களப் படத்தில் நடிப்பதைக் கைவிட வேண்டும் என நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    முதலில் நெடுமாறன் ஒரு நல்ல மனநல வைத்தியரை அணுகுவது நல்லது. எல்லாவற்றையும் அரசியலாக்கி அறிக்கை விடுவதே பிழைப்பாக போய்விட்டது இப்படியானவர்களுக்கு.

    Reply
  • Naveen
    Naveen

    Nedumaran and Vaiko are danger for decent and civilised society. Both got tiger brain in their head and they don’t know what they are talking. They always try to put fuel on fire to keep alive their dirty politics.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    எனது இந்திய நண்பர் ஒருவர் நடிகர் சிவகுமாரை (சூரியாவின் தந்தை) அழைத்து இதுபற்றிக் கேட்டதாகவும் அதற்கு சிவகுமார் சிங்களத் திரைப்படத்தில் நடிக்க தம் குடும்பம் ஒன்றும் பைத்தியக்காரர்கள் இல்லை தாம் எப்போதுமே ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் என்று பதில் அளித்துள்ளதாக கூறினார். அது மட்டுமல்ல இச்செய்தியை பதிப்பித்த இண்டியன் எக்ஸ்பிரசுக்கு மறுப்புத்தெரிவிக்க வேண்டி அறிவித்தல் அளித்துள்ளதாகவும் கூறினாராம். இன்றைய அல்லது நாளைய இண்டியன் எக்பிரசில் மறுப்பு வரும் எனவும் கூறினாராம்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    நண்பர்களே இப்படியான துரோகத்தனங்களை நாம் முறியடிக்க வேண்டும் மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள் தமிழன் சிங்களவன் என்ற இனக் குரோதத்தை தட்டிவிட. முடியுமான வரையில் இன உறவுகள் வளர்க்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்.

    இதுவும் ஒருவழியான இனஉறவு விரிவுக்கு உதவும் என்பதை இவர்கள் விளங்குவதில்லை.

    அரசுடன் எமது அரசியல் உரிமைப் போராட்டத்தை இம்மாதிரியான விடயங்களுடன் குதப்பக் கூடாது. நாம் முற்போக்காக ஒத்தாசை வழங்குபவர்களிடம் மட்டுமே கூட்டு சேர்ந்து எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புகிறோம்

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    எங்கள் அரசியல்துறை தலைவன் போலீஸ் நடேசனின் மனைவி சிங்களம்தானே
    1915 ஜெர்மனி பிரித்தானிய யுத்தம் உக்கிரமமாக நடந்து கொண்டிருந்த வேளை தனது மோசமான உடல்நிலையிலும் பிரித்தானிய கப்பல்களை கடலில் ஜெர்மனி மூழ்கடித்து வரும் வேளையில் ராமநாதன் கப்பலில் இங்கிலாந்து சென்று இலங்கையில் இங்கிலாந்து அனுப்பிய இந்திய பஞ்சாப் படையினர் செய்த அநியாயக் கொலைகளை விவரித்து இலங்கையில் கைது செய்யப்பட்ட சிங்கள் தலைவர்களை விடுவித்தார்.
    அனாகரீக தர்மபாலாவின் இனவாதபிரச்சாரத்தால் ஏற்பட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் 86 மசூதிகளும் 4,075 கடைகளும் நாசமாக்கப்பட்டன 35 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
    1971 கிளர்ச்சியை அடக்க வந்த இந்திய படைகளும் கண்மூடித்தனமாக சுட்டு தள்ளினர்.

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    எங்களுக்கு யார் எதிரி?
    சிங்களவரும் முஸ்லீம்களுமா?
    தனிய சிங்களவரா?
    அல்லது கொழும்பில் இருக்கும் அரசாங்கமா??
    அல்லது இனதுவேசம் மிக்க இனவாதிகளா??

    Reply
  • palli
    palli

    //எங்களுக்கு யார் எதிரி?//
    முப்பது வருடமாய் இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் தமிழன் தடுமாறுகிறான்;
    பல்லி நினைக்கிறேன் நாமேதான் என;

    Reply
  • palli
    palli

    மகிந்தா போன திருப்பதிக்கு இனி யாரும் (தமிழர்) போய் மொட்டை போட கூடாது எனவும் ஒரு அறிக்கை விடலாமே,

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    இலங்கைத் தமிழன் மொட்டை போட ஏன் திருப்பதி போக வேண்டும்?? அதுதான் நெடுமாறன், வைகோ, சீமான் என ஒரு கூட்டமே இலங்கைத் தமிழனை மொட்டையடிக்கின்றதே போதாதா??

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இதோ எனது இந்திய நண்பர் சொன்ன செய்தி…இன்றைய இந்தியன் எக்பிரஸில் வந்தது….
    http://epaper.newindpress.com/NE/NE/2009/11/06/INDEX.SHTML

    Chennai/Colombo, November 5
    KOLLYWOOD actor Suriya on Thursday denied that he has been roped in to act, along with south Indian actress Simran, in a film directed by a Sinhalese,
    Suresh Kumarasinghe, and said that he had no idea that he was acting in any Sinhala movie.
    “I am doing films only in Tamil and Hindi,” he told Express and that he had not been approached by any Sinhala filmmaker. He said these days he was shooting only for Tamil film ‘Singam’ by director Hari. In his statement, issued after Sri Lankan Tamil Protection Movement coordinator Pazha Nedumaran made an appeal to
    the actor to “reconsider” as the people of Tamil Nadu were “shocked” , Suriya said he, too, was “shocked”.

    He said the news emanating from Colombo was wrong and gave a list of projects that he has been signed up for including a Hindi film by Ram Gopal Varma
    plus a film to be directed by A R Murugadoss. But talking to Express in Colombo, Kumarasinghe said all plans were afoot for Suriya to act in the film and that Indian film director Balu Prakash was to come to Sri Lanka on November 5/6, but that he has postponed the visit to November 12 because there “might be some
    political problems”.

    Kumarasinghe said if Suriya backed out, they would be on the lookout for another actor. Actress Simran, who was also named by the Sinhala director,quoted in the report, owever, was not “reachable”.

    Reply
  • sumi
    sumi

    பிரபாகரனை வைத்து பணம் சம்பாதித்த நெடுமாறன் தற்போது சூரியாவை மிரட்டி பணம் சேர்க்க ஒரு புதிய வழியை கண்டு பிடித்துள்ளார் போலும்.

    Reply
  • BC
    BC

    தமிழ்நாட்டில் உள்ள புலி தமிழர்களின் உணர்வுகளை மதித்து சிங்களவர் படத்தில் நடிப்பதை நடிகர் சூர்யா கைவிட்டுள்ளார். பிழைக்க தெரிந்தவர் நடிகர் சூர்யா.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ’…தமிழ்நாட்டில் உள்ள புலி தமிழர்களின் உணர்வுகளை மதித்து சிங்களவர் படத்தில் நடிப்பதை நடிகர் சூர்யா கைவிட்டுள்ளார்…’

    இல்லை பி.சி. அவர் முதலில் அப்படி ஒரு படத்தில் நடிப்பதாக தன்ன்னே தெரியாது என்கிறார். (said that he had no idea that he was acting in any Sinhala movie) தயவு செய்து கருத்தைத் திரிக்க வேண்டாம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    இயக்குனர்; சூர்யாவின் ஒப்புதல் இல்லாமலா படப்பிடிப்பை கொழும்பில் இம்மாதம் 6ம் திகதி முதலில் நடத்தவிருந்தார். சரி அவர்களின் கதையை விடுங்கள்: ஒரு சிங்களத் திரைப்படத்தில் ஒரு தமிழ் நடிகனோ, நடிகையோ நடிப்பதைப் பற்றிய தங்களின் அபிப்பிராயம் என்ன?? அதைச் சொல்லுங்கள் முதலில்…

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ’…இயக்குனர்; சூர்யாவின் ஒப்புதல் இல்லாமலா படப்பிடிப்பை கொழும்பில் இம்மாதம் 6ம் திகதி முதலில் நடத்தவிருந்தார்….’
    அவ்வாறுதான் சூரியா சொல்கிறார். தனக்கு அப்படி ஒரு படப்பிடிப்பு நடக்க இருப்பதே தெரியாது என.

    ”… ஒரு சிங்களத் திரைப்படத்தில் ஒரு தமிழ் நடிகனோ, நடிகையோ நடிப்பதைப் பற்றிய தங்களின் அபிப்பிராயம் என்ன?? அதைச் சொல்லுங்கள் முதலில்…’

    தாராளமாக நடித்துவிட்டுப் போகட்டும். எனக்கென்ன கவலை. சொல்லப்போனால் கடந்த 10 வருடத்தில் பார்த்த தமிழ்ப்படம் மூன்று அல்லது நான்கு இருக்கலாம். ஆனால் இந்த நடிப்பை வைத்து அது இன ஒற்றுமையை பறைசாற்றுகிறது, மனிதாபிமானம் மேலோங்குகிறது, நட்புப்பாலம் போடப்படுகிறது என பெரிய கதைகள் விடும்போது தான் சிக்கலே வருகிறது!

    Reply
  • BC
    BC

    சாந்தன், நீங்கள் சொன்ன மாதிரி சிங்கள திரைப்படத்தில் நடிக்கும் நோக்கம் கிடையாது என்று தான் சூர்யா சொல்லியுள்ளார்.
    அப்படி நோக்கமே இல்லாத சூர்யாவை சிங்களரால் தயாரிக்கப்படும் சிங்களப் படத்தில் நடிக்க கூடாது என்று நெடுமாறனும், இந்து மக்கள் கட்சியும் எதற்க்கு எச்சரிக்கை விட்டார்கள் என்பது தான் விளங்கவில்லை!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பி.சி,
    ’…எதற்க்கு எச்சரிக்கை விட்டார்கள் என்பது தான் விளங்கவில்லை…

    இண்டியன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தியை இணைதேனே. அதில் இரண்டாவது பந்தியில் பதில் இருக்கிறது.

    Reply