அவுஸ்தி ரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இலங்கையர் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கென அவுஸ்திரேலிய உயர்மட்டக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
இந்தக் குழு, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு இலங்கைக் குடிவரவு- குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளரையும் சந்தித்துப் பேசவுள்ளது.
குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் பீ. பி. அபேகோன் இதனைத் தெரிவித்தார்.சட்டவிரோதமான முறையில் இலங்கையர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதாக அந்நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. பயிற்றப்பட்ட தகுதிவாய்ந்த தொழில்சார் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பைப்பெற்றுச் சென்றுள்ளனர்.
சட்டவிரோதமாகச் செல்லும்போது பயிற்றப்படாத, அவுஸ்திரேலியாவுக்குள் எதிர்பார்க்கப்படுகின்ற நபர்கள் இல்லாதிருப்பதும் குறையாகக் காணப்படுவதாகவும் இதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதுபற்றி ஆராய்வதற்கும், அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.
அண்மையில் அவுஸ்திரேலியா சென்றிருந்த குடிவரவு- குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப் பாட்டாளர் பீ. பி. அபேகோன் அவுஸ்திரேலிய குடிவரவு- குடியகல்வு முக்கியஸ்தர்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.
Hazan
சட்டவிரோதமாக எல்லாரும் போவது தப்பு. ஆனால் சட்டவிரோதமாக படித்தவர்கள் போனால் தப்பில்லை என்கிறார்களா??