காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாவது இடைக்கால அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென குழுவின் தலைவரான மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மஹாநாம திலகரட்ன தெரிவித்தார்.
ஆணைக் குழுவின் விசாரணைகள் இன்னமும் நிறைவுபெறவில்லையெனக் கூறிய அவர், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால், பொலிஸாரின் விசாரணை அறிக்கைகளை மேலதிகமாக கோரியிருப்பதாகவும் கூறினார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்றுக் காலை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முன்னாள் நீதிபதி இதனைத் தெரிவித்தார்.
திருகோணமலை, கந்தளாய் பகுதிகளில் காணாமற்போனோர் தொடர்பான 134 முறைப்பாடுகள் குறித்து அங்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நேற்று இந்தச் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.
திருகோணமலையில் மேலும் 40 பேர் முறைப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மேலதிகத் தகவல்களை எமக்கு வழங்கினார்கள்.