வெள்ளிக் கிழமை முதல் பொதுமக்களை நேரடியாக சந்திக்க புதிய பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தீர்மானித்துள்ளார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை பொதுமக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண உள்ளதாக பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.
பொதுமக்களை காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை சந்திக்கவே தான் முன்னர் தீர்மா னித்ததாகவும் முஸ்லிம்கள் வெள்ளி க்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக செல்வதால் ஒரு மணி நேரத்தினால் இதனை நீடித்ததாகவும் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார். தேவை ஏற்பட்டால் 2.30 மணிக்குப் பின்னரும் தான் பொது மக்களை சந்திக்க தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.