யாழ் நகரிலிருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படக் கூடிய முந்திரிகை உட்பட்ட விவசாய விளைபொருட்களின் விலைகள் உயர்ந்தள்ளது. ஏ9 பாதை திறக்கப்பட்டதால் கொழும்புச் சந்தைக்கான வாய்ப்பினை யாழ் விவசாயிகள் பெற்றுள்ளனர். இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் விளையும் பொருட்களுக்கான சந்தை யாழ்ப்பாணத்திலேயே முடக்கப்பட்டதால் அவற்றின் விலை மிகுந்த வீழ்ச்சியைக் கண்டிருந்தது.
யுத்த காலத்தில் முந்திரிகை கிலோ 30 ரூபாவுக்கும் விற்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது கொழும்பிற்கு கொண்டு செல்லக் கூடியதாக இருப்பதால் முந்திரிகை கிலோ 200 ரூபாவிற்கு விற்கப்படுவதாகவும் யாழ் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். அதே போல் கொழும்பில் இருந்து பொருட்கள் ஏ9 பாதையூடாக வர ஆரம்பித்துள்ளதால் யாழ்ப்பாணத்தில் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதாகவும் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாகவும் அவ்வர்த்தகர் தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வீதித் தடைகள் நீக்கப்பட்டு ஏ9 பாதை ழுழுமையாகத் திறக்கப்பட்டாலேயே முழுவீச்சான பொருளாதாரப் பயனை யாழ் மக்கள் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
Thirumalai Vasan
செய்தியாளர் வாணியிடம் சில கேள்விகள்.
1. அண்மையில் வடபகுதி வர்த்தக சம்மேளனம் போர்க்கொடி து}க்கியிருப்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?
2. தென்னிலங்கையிலிருந்து தாராளமனப்பான்மையுடன் லொறிநிறைய சிங்கள வர்த்தகர்களின் சாமான்களை ஏ9 பாதையூடாக அனுப்ப அனுமதிக்கும் இராணுவம். நாளொன்றுக்கு மிகக்குறைவான லொறிகளையே- அதுவும் தமக்கு சாதகமான அரசியல்வாதிகளின் ஆதரவு பெற்ற வர்த்தகர்களின் லொறிகளையே ஏ9 பாதையில் செல்ல அனுமதிக்கிறார்களாம்.
இது பற்றியும் சொல்லி எங்களை செய்தியின் மற்றப்பாதியையும் அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கலாமே?
chandran.raja
குறிப்பிட்ட பொருள்களை வாங்கமுடியாது விற்கமுடியாத நிலையில்லிருந்து யாழ்ப்பாணம் மீண்டுவந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் இந்தநிலை வரப்பிரசாதமாக இருக்கிறது. வெளிநாடுகளில் உறவில்லாதவர்கள் உதவி இல்லாதவர்கள் ஏழ்மை நிலையில் போசாக்கில்லாமலே வளர்ந்து வந்தவர்கள். அவர்களுக்கு பிறக்கும் குழைந்தைகளும் போசாக்கின்மையாலே பிறக்கிறார்கள். அவர்கள் நலன் கருதியே பால்மா விலை கொழும்பு விலையிலும் பத்து ரூபா குறைவாக விற்கப்படுகிறது. இது வியாபாரிகளின் பெரும் குணத்தால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. அரசியல் நடவடிக்கையின் பயனே!
ஒருமாதகாலம் யாழ்ப்பாணம் தங்கிநின்று வந்தவரிடம் கேட்டேன். ஏதாவது கொலைகள் இரத்தம் கண்டது உண்டா? என்றேன். கண்டதுமில்லை கேட்டதுமில்லை என்றார். எமதுமக்கள் எதிர்நீச்சல் அடிக்கக்கூடியவர்கள். யுத்தம் அவர்கள் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டது. விரைவில் முன்னுக்கு வந்துவிடுவார்கள் என்றேன். வன்னி மக்களையும் இன்னும் சிலமாதங்களில் சுமூகநிலைக்கு வந்துவிடுவார்கள் என எதிர்பார்கலாம்.
இரண்டு தற்கொலைகள். ஒன்று இளம்பெண். மற்றது முதியவர். வறுமை தனிமை காரணம் என அறியப்படுகிறது. ஆயுதத்திற்கும் கப்பல்களுக்கும் அள்ளிக்கொடுத்த புலம்பெயர்மக்கள் இதையும் கவனத்தில் எடுக்காமல் அள்ளிக் கொடுக்காமலா? போவரார்கள்!!
அதுபோக திருமலைவாசன் அவர்களே! நீங்கள் வர்த்தகசங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறீர்களா? அல்லது இந்திய- சீனா எதிர்பில் பங்காளர்களாக இருக்கிறீர்களா?
விசுவன்
யாழ் கண்டி பிரதான விதியான ஏ9 வீதி மக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக வட மாகாண ஆழுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இப்பாதையினூடாக மக்கள் சுதந்திரமாக பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் வாகனங்களின் போக்குவரத்துக்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என தெரியவருகின்றது. அத்துடன் இவ்வீதியினூடாக பொருட்களை எடுத்துச் செல்வதில் காணப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளிலும் பல தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.- ilankainet