அம்பாந் தோட்டையில் புதிதாக சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை அமைக்க 200 ஹெக்டர் காணியை ஒதுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா சமர்பித்திருந்தார்.
மஹிந்தசிந்தனையின் கீழ் புதிதாக 12 சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் அம்பாந்தோட்டையில் வர்த்தக வலயம் ஒன்றை அமைக்க குறிப்பிட்ப்பட்ட 200 ஹெக்டர் காணி வழங்கப்பட உள்ளது