சரத் பொன்சேகா பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்

031109sarathfonseka.jpgஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து  ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பக் கடிதத்தை இன்று பிற்பகல்  ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். இதனை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக களமிறங்கவிருப்பதாக வெளியான தகவலின் மத்தியிலேயே இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 15 ஆந் திகதியோடு நிறைவு பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

23 Comments

  • செல்வன்
    செல்வன்

    வெப்துனியா தமிழ்‘ திங்கள், 9 நவம்பர் 2009( 21:24 IST )

    சிறிலங்கா’வின் இனவெறி அரசியல்

    சிறிலங்க நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து தற்போது அந்நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவுள்ள சரத் பொன்சேகாவை நிறுத்துவது என்று எதிர்க்கட்சிகள் கூட்டணி முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள் தென் இலங்கைக் கட்சிகளின் சிங்கள இனவெறி அரசியலிற்கு அத்தாட்சியாகும்.

    ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரித்து, அதற்கு எதிராகத்தான் சிறிலங்க அரசு போர்த்தொடுத்துள்ளது என்று உலக நாடுகளை நம்பவைத்து, இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் தமிழினப் படுகொலையை நடத்தி முடித்ததை தனது ‘வெற்றி’யாகக் கொண்டாடிய அதிபர் ராஜபக்சாவும் அவருடைய சகோதரர்களும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான தங்களது வெ(ற்)றியை தேர்தல் வெற்றியாக மாற்றிக் கொள்ளும் தீவிரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ராஜபக்சாவின் தேர்தல் வெற்றியைத் தடுத்து நிறுத்த, ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ததில் முன்னணியில் நின்ற இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை வேட்பாளராக்குவதன் மூலம் சிங்கள பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெரும் வியூகத்தை எதிர்கட்சிக் கூட்டணி வகுத்துள்ளது.

    சிறிலங்க அரசியலில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், அந்நாட்டு முன்னாள் பிரதமருமான ரனில் விக்கிரமசிங்கே, ஆளும் சிறிலங்க சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கவுள்ள மகிந்தாவின் வெற்றியைத் தட்டிப் பறிக்க வகுத்த தேர்தல் வியூகமே சரத் பொன்சேகாவை அதிபர் வேட்பாளராக நிறுத்துவது என்பதாகும்.

    ரனில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்க முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்க மக்கள் சுதந்திரக் கட்சியின் தலைவர் மங்கள சமரவீரா ஆகிய கட்சிகள் தலைமையிலான கூட்டணி சரத் பொன்சேகாவை வேட்பாளராக்குவதில் ஒருமித்த கருத்து கொண்டுள்ளன.

    சரத் பொன்சேகா வேட்பாளராக நிறுத்தப்பட்டால் ஆதரிக்கத் தயார் என்று ஈழத் தமிழர்களுக்கு எந்த உரிமையும் அளிக்கக் கூடாது என்று வெளிப்படையாக அரசியல் நடத்திவரும் ஜனதா விமுக்தி பெரமுணா என்றழைக்கப்படும் பொதுவுடமைக் கொள்கை கொண்ட கட்சியும் (!), புத்த பிக்குகளின் அரசியல் அமைப்பான ஜாதிக ஹேல உருமயாவும் அறிவித்துள்ளன.

    “சிறிலங்க சிங்கள மக்களின் தேசம்தான். இதனை இங்கு வாழும் தமிழர்கள் உட்பட மற்ற இனங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களே. ஒப்புக் கொண்டால் இருக்கலாம், இல்லையேல் வெளியேறலாம்” என்று ஊடகங்களுக்கு வெளிப்படையாகப் பேட்டியளித்தவரல்லவா சரத் பொன்சேகா! பிறகு அவரை விட சிறந்த சிங்கள இனவெறியாளரை எங்கு போய் இந்த எதிர்க்கட்சிகள் தேட முடியும்?

    எனவே ஆளும், எதிர்க் கட்சிகளைக் கொண்ட இரண்டு கூட்டணிகளுமே முன்வைக்கும் முக்கிய தேர்தல் முழக்கம் ஈழத் தமிழர்களை அழித்தொழித்த இனப் படுகொலைப் போரில் பெற்ற வெற்றிக்காக ‘பெரும்பங்காற்றிய’ இவருக்கு வாக்களியுங்கள் என்பதே!

    இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள சிங்கள வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை யாருக்கு அளிப்பது என்பதை, தமிழர்களுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றிக்கு காரணகர்த்தா யார்? என்பதை ‘சீர்தூக்கிப் பார்த்து’ வாக்களிக்க வேண்டும்!

    Reply
  • செல்வன்
    செல்வன்

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகளின் சார்பில் போட்டியிட வைக்கும் முயற்சிக்கு இந்தியா கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

    இந்தியாவிற்கு விஜயம் செய்தி ரனில் விக்கிரமசிங்கவிடம் இந்திய தரப்பு தமது அதிருப்தியினையும் எதிர்பினையும் வெளிப்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தானுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள சரத் பொன்சேகா இலங்கையின் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது தமது தேசிய நலன்களுக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகின்றது.

    இதனால் அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முயற்சிக்குமாறு இந்தியா ஐக்கிய தேசிய கட்சி தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இது குறித்து அரசாங்க தரப்புடனும் தாங்கள் கலந்துரையாடுவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    Reply
  • BC
    BC

    தமிழ்நாட்டு வெப்துனியா தானே! இதுவும் முன்னைய புதினமும் படிப்பதற்க்கு ஒன்று தான்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    சரத் பதவிவிலகல் கடிதம் கொடுக்கவில்லை. ராஜினாம கடிதம் கொடுத்தார் என்கிறன எல்லா பத்திரிகை/இணையச் செய்திகள்.
    ரனில் விக்கிரமசிங்கா இந்தியாவில் இருந்து திரும்பிய உடனே இது நடந்திருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று என நினைக்கிறேன்.

    Reply
  • செல்வன்
    செல்வன்

    சாந்தன்
    சரத் பொன்சேகா பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பக் கடிதத்தை தான் இன்று பிற்பகல் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். பதவி விலகல் அல்ல.

    //ரனில் விக்கிரமசிங்கா இந்தியாவில் இருந்து திரும்பிய உடனே இது நடந்திருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று என நினைக்கிறேன்.//

    எற்கனவே காணப்பட்ட திட்டம் இது.

    Reply
  • செல்வன்
    செல்வன்

    விசேட வழிபாட்டுக்கென களனி விகாரைக்கு இன்று மாலை சென்ற சரத் பொன்சேகா அங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தான் இன்னும் இராணுவப் பதவியில் இருப்பதாகவும் சீருடையை கழற்றிய பின்னரே தமது முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    “இதுவரையும் தாய் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செயற்பட்டேன். இனியும் அவ்வாறுதான் செயற்படுவேன். அரசாங்கத்தின் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. எனது சாதாரண பதவிக்காலத்திலும் பார்க்க நான்கு வருடங்கள் அதிகமாக சேவை செய்துள்ளேன். நான் மிகுந்த சந்தோசத்துடனேயே எனது பதவியிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்தேன். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எதுவும் சொல்ல முடியாது. இந்த மாத இறுதியுடன் நான் ஓய்வு பெறவுள்ளதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளேன். அதன் பின்னரேயே எனது எதிர்கால நடவடிக்கைகள் குறித்துக் கூற முடியும் என்றார்.

    பிந்திய செய்தி –

    விசேட வழிபாட்டுக்கென களனி விகாரைக்கு இன்று மாலை சென்ற சரத் பொன்சேகா அங்கிருந்து திரும்புகையில் அவருக்கெதிராக ஒருகுழுவினர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    Reply
  • பிள்ளை
    பிள்ளை

    சரத் பொன்சேகா என்றழைக்கப்படும் கார்டிஹேவா சரத் சந்திரலால் பொன்சேகா இலங்கை பாதுகாப்புத் துறையில் முப்படைகளின் தலைமை அதிகாரி எனும் அதிகாரிகள் தரத்திலான உயர் பதவிக்கு ஜனாதிபதியினால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

    இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் வெற்றித் தளபதி என வர்ணிக்கப்படும் சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை வெற்றிகொள்ள பெரும் பங்காற்றியிருந்தார்.

    அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் கல்வி கற்ற பொன்சேகா சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்துள்ளார். இலங்கை இராணுவத்தில் 1970 ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி இணைந்த சரத் பொன்சேகா 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 18ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டார்.

    2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி பின்னர் ஜூலை மாதம் தமது கடமைக்குத் திரும்பினார். பதவிக்காலத்தில் “பலவேகய”, “ஜயசிக்குரு” ஆகிய இராணுவ நடவடிக்கைகளை சிறப்பாக செயற்படுத்திய பின்னர் இராணுவத்தின் ஒவ்வொரு உயர் பதவிகளில் கடமையாற்றினார்.

    தனது தலைமையில் இராணுவத்தினருக்கு சிறப்பான தந்திரோபாயங்களை வழங்கி, வெற்றிபெறச் செய்தால் இவ்வாண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி விசேட சட்டத்தின் பிரகாரம் கூட்டுப் படைகளின் பிரதானியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    செல்வன்,
    நான் சொன்னது எல்லாப் பத்திரிகை/இணையச் செய்திகளில் வந்த செய்தியையே. நான் அக்கடிதம்/ராஜினாமா/விண்ணப்பம் பார்க்கவில்லை. நீங்கள் அது ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பக் கடிதம் எனச் சொன்னால் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    மேலும் தற்போது வந்த செய்தியின்படி ‘ஓய்வு விண்ணப்பம்’ ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட உடனே சரத் பொன்சேகாவின் மைத்துணரான சரத் முனசிங்கா அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவின் நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு வீதிஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் மேலும் சரத் பொன்சேகாவின் மருமகன் (ஒக்லஹோமா – அமெரிக்கா)வின் தந்தையார் சிசில் பெரேரா பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

    Reply
  • senthil
    senthil

    இங்கு சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் தமிழ் மக்கள் என்ன முடிவை எடுக்கலாம் என்ற ஆரோக்கியமான அரசியல் நிலைப்பாட்டை பின்னூட்டக்காரர்கள் முன்வைக்க தேசம் களம் அமைத்து கொடுக்கவும்.

    Reply
  • Ruban
    Ruban

    சரத் பொன்சேகா உண்மையில் புலிகளை எதிர்த்து அழித்த ஒரு தலை சிறந்த இராணுவ தளபதி. அவர் புலியின் பழைய தலைவர்களான கருணா, பிள்ளையான் போன்றவர்களுடன் தொடர்பில்லாத ஒரு மனிதன். சுருக்காக சொல்லப்போனால் ஓர் அப்பழுக்கில்லாத சுத்தமான புலி எதிற்புவாதி. அவரது கரங்களை பலப்படுத்துவதால் மட்டும்தான் புலி எதிர்ப்பு விஞ்ஞானம் ஒருபடி புதியவடிவம் எடுக்கும். புலிப்பினமிகளுக்கு குளிரெடுக்கும்.
    தேர்தலுக்கு முதலே அதாவது இப்பவே அவருடன் தொடர்பை ஏற்படுத்தினால் போட்டி பொறாமைகளை தவிர்த்து ஜனநாயம் பாதுககப்படலாம். அவரை லண்டனுக்கு அழைத்து சந்திப்பு ஏற்ப்படுத்த வேண்டும்.

    Reply
  • london boy
    london boy

    சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் தமிழ் மக்கள் என்ன முடிவை எடுக்கலாம்//senthil

    /“சிறிலங்க சிங்கள மக்களின் தேசம்தான். இதனை இங்கு வாழும் தமிழர்கள் உட்பட மற்ற இனங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களே. ஒப்புக் கொண்டால் இருக்கலாம், இல்லையேல் வெளியேறலாம்” என்று ஊடகங்களுக்கு வெளிப்படையாகப் பேட்டியளித்தவரல்லவா சரத் பொன்சேகா! பிறகு அவரை விட சிறந்த சிங்கள இனவெறியாளரை எங்கு போய் இந்த எதிர்க்கட்சிகள் தேட முடியும்?//

    இந்த லட்சணத்தில் விவாதக்களமா உதுக்குத் தேவை.

    Reply
  • Thaksan
    Thaksan

    ஆயுத போராட்டத்தின் ஆரம்ப காலந்தொட்டே சிறீலங்கா இராணுவத்தில் கடமையாற்றி வந்த பொன்சேகா புலிகள் பேசிய எந்த விலைகளுக்கும் விலைபோகாத நேர்மையான சிறீலங்கா அரசின் மிகச் சில இராணுவ அதிகாரிகளுள் ஒருவர். ஒன்றிறகு மேற்பட்ட களங்களில் காயமடைந்திருந்தும் தற்கொலை தாக்குதலில் மயிரிழையில் தப்பி மரணத்தின் வாசல்களை தொட்டு திரும்பிய பின்பும் புலிகளுக்கு மண்டியிடாத அல்லது பயந்தொதுங்கிவிடாத வீரன் என்பதில் சந்தேகமெதுவுமில்லை. ஆயினும் ஒட்டமொத்த நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அவர் ஒரு வழிகாட்டியாக தலைவராக இருப்பாரென ஏற்றுக்கொள்ள கூடியவகையில் அவர் பரந்த எண்ணங் கொண்டவர் என நம்பமுடியாதவாறு அவர் நடந்து கொண்டிருந்தார் என நம்பமுடியாது. பல்லின சமூகம் கொண்ட இந்த நாட்டில் அவர் ஒரின வாதியாகவே தனது கருத்துக்களை அரசியல்நோக்கமில்லாத காலங்களில் வெளியிட்டிருந்தார். அது அவரின் அடி>ஆள் மன வெளிப்பாடுகள். தனது கீழிருந்த இராணுவத்தின் முன்னேறுகைக்கு உத்வேகம் தரும் எண்ணத்தில்தானும் அந்த கருத்துக்களை அவர் வெளியிட்டிருந்தாலும் அது அவரது நாட்டின் ஒட்டுமொத்த நன்மைக்கானதாக கருதப்பட முடியாதது. இராணுவத்திற்கு உத்வேகமளிக்க வேறு எத்தனையோ உத்திகளை கையாண்டிருக்கலாம். இன உணர்வு தூண்டுதலை பயன்படுத்த நினைத்தபோதே நாட்டின் ஒருமைப்பாட்டை கூறுபோட்டு விட்டார்.

    Reply
  • santhanam
    santhanam

    சரத் பொன்சேகாவின் யுனிவோமை தூக்கிவைப்பதற்காகதான் அவர் பொதுவேப்பாளர் எனி……1970ல் பயணத்தை ஆரம்பித்த பொன்சேகா 39 வருடமுடிவில்தான் புலிகளை அழிக்க முடிநதது இத்துடன் இவரது பயணமும் முற்றுபெறுகிறது ஏன் என்றால் சர்வதேசத்தினால் நடத்தபட்ட யுத்தத்திற்கு இவர் உரிமையாளன் அல்ல எனிதான் இவர் கஷ்ரபடபோகிறார் முக்கிய போர்குற்றவாளியாக இவரும் கோத்தபாயவும் வலம் வருவார்கள் பொறுத்திருங்கள்.

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    சரத் பொன்சேகா ராஜபக்செயினை சந்தித்துவிட்டு புறபட்டு கதவை நோக்கி நடக்கும்போது ராஜபசே சொன்னார். “சரத்! அரசியலில் தோற்றுபோனால் நீ எப்பவம் என்னிடம் திரும்பி வரலாம்” சரத் திரும்பி பார்த்து ஒரு சிறு புன்னகையுடன் நடையை தொடர்ந்தார்

    Reply
  • palli
    palli

    சரத் பொன்சேகாவின் வரவில் நாம் பெரிதாக அலட்டிக்க தேவையில்லை என நான் நினைக்கிறேன்; காரணம் அமெரிக்கா என்றுமே தனது செல்லபிராணி ஒன்றை எந்த நாட்டிலும் வழப்பது எழுதபடாத சட்டம், ஆனாலும் இதுவரை இலங்கையில் வளர்த்த பிராணிகள்(பல) அமெரிக்காவின் சண்டிதனத்துக்கு சரியானதாக இல்லை,(இதில் பாலாவும் அடக்கம்) ஆனால் பொசேகா அப்படி அல்ல ஒரு சரியான அளை இனம்கண்டு அமெரிக்கா மகிந்தா என்னும் மல்யுத்த வீரனுக்கு எதிராக களம் இறக்குகிறது, இது மகிந்தாவுக்கும் தெரியும், அதனால் தான் இந்தியாவின் காலை மகிந்தா குடும்பம் மிக கெட்டியாக பிடித்துள்ளது, ஆனாலும் பொன்சேகா ஒரு ராணுவ அதிகாரிதான், அவரையே ஒரு அரசியல்வாதியாக்கி மக்கல் ஜக்ச்சன் போல் மிகபெரிய பாடகனாக்கி அந்த இசையில் இலங்கை மக்கள் மயங்க வேண்டும், அதை தமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்பதே உலகநாயகனின் கனவு, இது பலிக்க பல வாய்ப்பு இருந்தாலும் இதை இந்தியா ஏற்றுகொள்ளுமா என்பதே எனது கேள்வி, இது விடியலுக்காக சேவல் கூவுகிறதா? அல்லது செவல் கூவுவதால் விடிகிறதா? என்பது போலும் ஒரு குளப்பமான விடயமே, ஆனாலும் இதில் தமிழருக்கு ஏதும் நன்மை கிடைக்குமாயின் நாமும் சத்தம் போட்டு வாழ்க பொன்சேக என கத்தலாம்;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பொன்சேகாவிற்கு 2004 ற்கு பிறகு பதவி நீடிப்பு வழங்கப்பட்டு வருகின்றது. நான் நினைக்கின்றேன் இந்த பதவி நீடிப்பென்பது, ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்படுவது. அப்படியிருக்க அரசாங்கம் இந்த வருட இறுதியில் அவரது பதவியை நீடிக்காது விட்டால், அவர் தாமாகவே ஓய்வு பெற வேணடி வந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் அது பொன்சேகாவிற்கு அவமானமாக இருந்திருக்குமென்பதால், அவர் தானாகவே ஓய்வு பெற முன் வந்திருக்கலாம்.

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    யூஎன்பீயோடு சேர்ந்தால் பொன்சேகா பிசுபிசுத்து போவது தவிர்க்க முடியாது. பொன்சேகாவின் வாழ்வும் தாழ்வும் பொன்சேகாவின் பதவி ஆசையில் தங்கி உள்ளது. இத்தனை வெளி நாடுகளின் அழுத்தங்களுக்கும் மத்தியிலும் கையில் பணம் இல்லாத சூழலிலும் ராஜபக்சேயின் பேச்சை நம்பி நாட்டுக்காக இராணுவத்தில் சேர்ந்த வாலிபர்களால் ராஜபக்சே போரை வென்றார். பொன்சேகா இல்லாவிடில் இன்னொரு பொன்னையாவால் கூட கோத்தபயவினதும் முப்படை தளபதி, கடற்படை தளபதி, விமானப்படை தளபதி, சக ராணுவ அதிகாரிகளின் வழி காட்டலில் போரை வென்றிருக்க முடியும். எந்த ராணுவ நடவடிக்கைகளின் பின்னும் அரசியல் தான் மிகுதியை வழிநடாத்தி மக்களுக்கு சுபீட்சத்தை பெற்று கொடுக்க முடியும். இனவாதிகள் பொன்சேகாவை ஒரு போர்த்துக்கீசராகவோ அல்லது தமிழரின் எதிரியாகவோ பார்ப்பார். பொன்சேகா ஒரு துட்டுகெமுனு. அல்ல. ராஜப்கசெதான் துட்டுகெமுனு.என்பதை இலங்கை மக்கள் பொன்சேகாவுக்கு விரைவில் சொல்லி வைப்பார்கள்

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பல்லி,
    நீங்கள் சொல்லும் உலகநாயகனின் விடயம் உண்மைதான். அது உலக நாயகனுக்கு மட்டுமல்ல ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் ‘உலக்கை’ நாயகனுக்கும் பொருந்தும். வங்கம் தந்த பாடம் படித்திருப்பீர்கள் தானே!
    ஆனால் உங்கள் கருத்து முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதா இல்லை எல்லாப் பக்கத்தையும் கவர் பண்ண எழுதுப்பட்டதா தெரியவில்லை.
    முதலில் ‘அலட்டிக்க’ தேவை இல்லை என்கிறீர்கள், பின்னர் ’பொசேகா அப்படி அல்ல ஒரு சரியான ஆளை’ இறக்கி இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். மகிந்தா மல்யுத்த வீரன் என்கிறீர்கள் பின்னர் அவர் இந்தியாவின் காலைப்பிடிப்பதாக சொல்கிறீர்கள். மைக்கல் ஜக்சனை அமெரிக்கா வளர்க்கவில்லை மாறாக அவர் தனது சொந்த முயற்சியில் வளர்ந்தவர். அமெரிக்கா வலிந்து வளர்த்திருந்தால் அவர் அமெரிக்க ஆதரவு நாடுகளில் மட்டுமே புகழ் பெற்றிருப்பார்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பொன்சேகா ஒரு ராணுவ அதிகாரிதான், அவரையே ஒரு அரசியல்வாதியாக்கி மக்கல் ஜக்ச்சன் போல் மிகபெரிய பாடகனாக்கி அந்த இசையில் இலங்கை மக்கள் மயங்க வேண்டும். – பல்லி //

    சாந்தன், மேலே பல்லி எழுதியதன் அர்த்தம் தங்களுக்குப் புரியவில்லையா?? அல்லது வழமைபோல் தங்களுக்கு ஏற்றவாறு கருத்துகளை மாற்றப் பார்க்கின்றீர்களா?? மைக்கல் ஜாக்சன் போல் பொன்சேகாவையும் பிரபலப்படுத்த அமெரிக்கா விரும்புவதாக பல்லி எழுதினால், மைக்கல் ஜாக்சனை அமெரிக்கா தான் பிரபலப்படுத்தியது என்றா அர்த்தம்?? புதுப்புது அர்த்தங்களோ??

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘….அப்படி நடந்திருந்தால் அது பொன்சேகாவிற்கு அவமானமாக இருந்திருக்குமென்பதால், அவர் தானாகவே ஓய்வு பெற முன் வந்திருக்கலாம்…..’

    மகிந்தாவுக்கு எழுதிய ‘ஓய்வு விண்ணப்பம்’ இப்போ வெளிவந்திருக்கிறது. அதில் அவர் தனது அவமானங்களை வரிசைப்படுத்தி இருக்கிறார். அதில் ஒன்று தன்னை கூட்டுப்படை அதிகாரியாக ‘பதவி உயர்த்தி’ ஒரு கட்டளை அதிகாரமும் தராமல் செய்தது மட்டுமல்ல படைத்தளபதிகளின் முன்னிலையில் வைத்தே ‘கூட்டுப்படை அதிகாரிக்கு கட்டளை அதிகாரம் வழங்குவது ஆபத்தானது’ என கோத்தபாயா கூறினார் எனச்சொல்லி உள்ளார். அதனையும் விட ஒரு ராணுவ சதிப்புரட்சிக்கு தான் தயார் செய்கிறேனோ எனப் பயந்து இந்தியாவிடம் உதவி கேட்டிருந்ததாகவும் இதன் மூலம் ஒட்டுமொத்த ராணுவத்துக்கே களங்கம் ஏற்படுத்தியதாகவும் சொல்லி இருக்கிறார்.

    இதனை விட அவர் பதவிக்காலம் முடியும் வரை காத்திருந்து பெறும் ஓய்வு ‘அவமானம்’ ஒன்றும் பெரிதல்ல.

    எவ்வாறாயினும் இவர் இப்போது தான் எவ்வளவோ சொல்லியும்” தமிழர் இதயங்களை வெல்ல” மகிந்தா தவறிவிட்டார் என்ற பம்மாத்தினை யாரும் நம்பத்தயாரில்லை.

    Reply
  • BC
    BC

    //இவர் இப்போது தான் எவ்வளவோ சொல்லியும்” தமிழர் இதயங்களை வெல்ல” மகிந்தா தவறிவிட்டார் என்ற பம்மாத்தினை யாரும் நம்பத்தயாரில்லை.//
    ஆனால் பொன்சேகா அமெரிக்காவின் நம்பிக்கையை பெற்றவர் என்றபடியால் அவரை தான் ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.

    Reply
  • palli
    palli

    சாந்தன் பல்லி எப்போதும் பாமர மக்களுக்கும் விளங்க வேண்டும் என்பதுக்காகவே நடைமுறை தமிழிலில் எழுதுவேன், ஆனால் அது சாந்தனுக்கு புரியவில்லை எனில் எனது எழுத்தே பிழையென நான் நினைக்கிறேன், அந்த குறத்தையும் ஏற்று கொள்கிறேன்; சில குடும்பங்களில் மாமிசம் சமைக்கும் போது சிலருக்காகவே (மாமிசம் உண்ணாதவர்க்கு) ஒரு சைவசமையலும் இருக்கும்; அதுபோல் நம்ம சாந்தனுக்காக இனி பல்லி ஒரு சைவ சமயலை ஒழுங்கு செய்கிறேன், அதன்படி எனது பின்னோட்டத்தை சாந்தனுக்காய் இதோ,

    // ‘உலக்கை’ நாயகனுக்கும் பொருந்தும்//
    முடியாது என நான் எங்கே சொன்னேன்,

    //வங்கம் தந்த பாடம் படித்திருப்பீர்கள் தானே!//
    இல்லையே அது என்ன சமையல் குறிப்பா? அல்லது சாந்தனின் சுயகாவியமா?

    //எல்லாப் பக்கத்தையும் கவர் பண்ண எழுதுப்பட்டதா தெரியவில்லை.//
    உங்களுக்கே தெரியாத போது பல்லிக்கு எப்படி???

    //முதலில் ‘அலட்டிக்க’ தேவை இல்லை என்கிறீர்கள், //
    அது ஒரு தவறா?? இல்லை அதுதான் தவறா,?

    //ஒரு சரியான ஆளை’ இறக்கி இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள்//
    எழுதினேன்; யார் இறக்கி இருப்பதாக எழுதினேன் என கவனிக்கவில்லையா,,? எதுக்கெடுத்தாலும் அவசரமா??

    //மகிந்தா மல்யுத்த வீரன் என்கிறீர்கள் //
    ஆமா அதுக்கென்ன கேடு இப்போ;

    //இந்தியாவின் காலைப்பிடிப்பதாக சொல்கிறீர்கள்//
    மல்யுத்தமே பார்த்ததில்லையா? இது பல்லியின் தவறல்ல;

    //மைக்கல் ஜக்சனை அமெரிக்கா வளர்க்கவில்லை //
    அப்போ யார் தேசம்னெற் வளர்த்ததா??

    //அவர் தனது சொந்த முயற்சியில் வளர்ந்தவர்//
    நீங்க சொன்ன சரியாய் தான் இருக்கும், ஆனால் வங்கம் தந்ததை படித்தது போல் யக்ச்சனின் சகோதரியின் யக்ச்சன் பற்றி நான் என்னும் தகவலையும் படித்திருந்தால் இன்று இப்படி பல்லியை காமடியனாய் நினைத்திருக்க மாட்டியள்,

    //அமெரிக்கா வலிந்து வளர்த்திருந்தால் அவர் அமெரிக்க ஆதரவு நாடுகளில் மட்டுமே புகழ்//
    அதுதான் அமெரிக்காவின் மக்டோனாஸ், அமெரிக்காவின் ஆதரவு நாட்டில் மட்டும் கொடிகட்டி பறக்குதோ,

    இதைவிட என்னால் புரியவைக்க முடியாது, முடிந்தால் தேசத்திடம் நேரடி தொடர்பை தொடுத்து பல்லியின் பற்றாகுறையை நிவர்த்தி செய்யுங்க;

    Reply
  • Jeeva
    Jeeva

    //அது பொன்சேகாவிற்கு அவமானமாக இருந்திருக்குமென்பதால், அவர் தானாகவே ஓய்வு பெற முன் வந்திருக்கலாம்.//

    அவரின் பதவிக்காலம் டிசம்பர் 15 இல் முடிவுக்கு வர இருந்தது. அவமானத்தை தடுக்க அவர் தானாகவே டிசம்பர் முதல் திகதி ஓய்வுபெற முன்வந்தார் என்கின்றர் பின்னூட்டக்காரர்கள் . ஆனால் அரசு டிசம்பர் வரை பொறுக்கத்தேவையில்லை இன்றே போய்விடு எனச் சொல்லி விட்டது!
    Presidential Secretary Lalith Weerathunga said the general should leave his post before his preferred departure date of 1 December.
    An official confirmed to the BBC a letter had been sent to the general.

    Reply