ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான மற்றும் அவசர உதவிகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹொல்மஸ் நவம்பர் 17 முதல் 19 வரையான மூன்று நாள் பயணத்தை மேற்கொள்ள உள்ளாதாக ஐநா பேச்சாளர் நவம்பர் 12ல் அறிவத்துள்ளார். ஜோன் ஹொல்ம்ஸ் பெப்ரவரி ஏப்ரல் மே மாதங்களில் இலங்கைக்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு இருந்தார். தற்போது நான்காவது தடவையாக அவர் இலங்கைக்குப் பயணிக்கின்றார்.
சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பலர் வன்னி முனாம்களுக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் பொதுவாக மக்கள் விரைவில் மீள் குடியெற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். வன்னி முகாம்களில் மக்களுடைய வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.